
அந்தக்ககவி வீரராகவ முதலியார் இயற்றிய
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
cEyUr murukan piLLaittamiz
of antakakkavi vIrarAkava mutaliyAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this literary work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
Anbu Jaya, R. Navaneethakrishnan, P. Thulasimani, V. Ramasami,
V. Jambulingam, K.S. Kesavanathan, V. Devarajan, S. Subathra & P. Sukumar
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2014.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
"சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்"
அநதகக்கவி வீரராகவ முதலியார் இயற்றியது
"சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்"
அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றியது
கல்குளம் - குப்புசாமிமுதலியார், பி. ஏ. பதிப்பித்தது.
சென்னை : மினெர்வா அச்சியந்திரசாலை
1902
All Rights Reserved
PRINTED BY THOMPSON AND CO.,
AT THE "MINERVA" PRESS, BROADWAY, MADRAS.
-----------------
சிறப்புப்பாயிரம்
கும்பகோணம் காலெஜ் தமிழ்ப்பண்டிதர் பிரமஸ்ரீ
உ. வே. சாமிநாத ஐயரவர்கள் சொல்லிய கட்டளைக் கலித்துறை.
கண்ணுடை யென்னுங் குறட்கிலக் காகிக் கவின்றிலங்கும்
பண்ணுடைச் செல்வன் கவிவீர ராகவன் பாடியசீர்
அண்ணுடைச் செய்கை முருகன்பிள் ளைக்கவி யாய்ந்துபதித்
தெண்ணுடைக் கல்குளம் வாழ்குப்பு சாமிநன் றீந்தனனே.
--------------
தஞ்சாவூர் பிரமஸ்ரீ. சதாவதானம் சுப்பிரமணிய ஐயவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
அகக்கண்ணொன் றேகொண்டு கவிவீர ராகவனன்றளித்தான் சேயூர்க்
குகற்கண்பிள் ளைத்தமிழை யின்றதனைக் கல்குளத்துக் குப்பு சாமி
முகக்கண்க ளிரண்டுகொடு நோக்கியகத் தாய்ந்தச்சில் முயன்று தந்தான்
சகக்கண்ணிப் புலவனையு முக்கண்ண னெனப்புகழ்ந்து சாற்ற லாமே.
--------
சென்னைக்கிறிஸ்டியன் காலெஜ்தலைமைத் தமிழ்ப்பண்டிதர்
பிரமஸ்ரீ வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரவர்கள் சொல்லிய
முடுகு வஞ்சி விருத்தம்.
சந்தமிக்குறழ் செந்தமிழ்த்திறல் சான்றொளிர்ந்
தந்தகப்பல நூல்கள்கூறிய வண்ணலா
மந்தகக்கவி வீரராகவ னார்செயூர்க்
கந்தனுக்கொரு வண்பிளைக்கவி கண்டனன். (1)
முடுகு கலிநிலைத்துறை
அன்ன நூலை யன்பொ டாய்தந் தச்சினி
னன்னர் யாரு மேற்று வப்ப நாட்டினன்
பன்னு கல்வி செவ்வ னுற்ற பண்பினான்
மின்னு நம்பி குப்பு சாமி வேளரோ. (2)
--------------------
மகாவித்துவான் புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் அவர்கள் மாணாக்கரும்
கவர்ன்மென்டு தமிழ் ட்ரான்ஸ்லேட்டர் முனிஷியுமாகிய மகா ராஜ ராஜ ஸ்ரீ
தண்டலம்-பாலசுந்தர முதலியாரவர்கள் சொல்லிய
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
அருள்பெறுமான் பாற்கன்றி யருந்துபல
கறிப்பொருட்கு மஞ்சு வைச்செய்
பொருள்விளையுஞ் சேயூரிற் பொலிந்திலகு
மெழிற்குடிலைப் பொருளா யோங்கும்
தெருள்வளர்வை நெட்டிலைவேற் செவ்வேளி
னிணைக்கமலச்சேவ டிக்கு
மருவளர்செந் தமிழ்ப்பிள்ளைக் கவியறிஞ
ருளத்துவகை மருவு மாறே. (1)
பொன்னகரு மகத்திலிறும் பூதுகொளத்
தொண்டைவயின் பொன்வி ளைந்த
நன்னகர்பு கழுங்களந்தை நகர்க்கோட்டப்
பூதூரினண்ணி வாழ்வோன்
பன்னருஞ்சீ ரந்தகனாங் கவிவீர ராகவமால்
பரிந்தி யற்ற
அன்னதனைக் குகரமிசை யமர்ந்திலகும்
வளைக்குலங்களலர்ந்து மேய. (2)
கற்குளக்கண் மருவுகுளக் கண்ணவன்றா
ளிணைக்குளக்கண் கவினு மன்புஞ்
சொற்குளுயர் முத்தமிழோ டாங்கிலஞா
னமுநிரம்பத்துதைந்து ஞாலத்
திற்குளிளம் பூரணரென் றியம்புறு
கலாப்பட்ட மியலுஞ் சைவ
நற்குலவே ளாளனறி வீகையொழுக்
கங்களெலா நண்ணி வாழும் (3)
எத்தரையும் புகழுறுஞ்சீர்க் குப்புசா
மிக்குரிசிலெழுது வோரின்
கைத்தலத்தா லுறும்வழூஉக் களைக்களைந்தே
யதன்கணுறுங் கருப்பொ ருட்கும்
ஒத்தவுரை நயங்காட்டி யெழுதுறா
வெழுத்ததனி லுறுவித் தென்றும்
பத்திநெறிப் பயனடையப் பரிந்துகொடுத்
தனனிந்தப்பாரு ளோர்க்கே. (4)
------------------
திருநெல்வேலி ஜில்லா சேற்றூர் சமஸ்தான வித்துவான்
மகா ராஜ ராஜ ஸ்ரீ மு. ரா. அருணாசல கவிராயரவர்கள்
சொல்லிய விருத்தக்கலித்துறை.
- உறவி யந்தக வூறல்போ லுளத்துளன் பூற
உறவி யந்தக ரூர்செயூர் முருகனுக் குயர்பாப்
பிறவி யந்தக வீரரா கவன்சொலப் பெற்றும்
பிறவி யந்தகன் கொள்வரோ கற்றுணர் பொரியோர். (1)
அன்ன பாவனந் தமும்பிள்ளைத் தமிழென வாகச்
சொன்ன பாவனந் தருமவன் புகழையான் சொலேனேல்
என்ன பாவனந் தமிழறி யானிவ னென்பீர்
முன்ன பாவனந் தனுஞ்சொல முடியுமோ மொழிமின். (2)
இவைய னைத்துமோர்ந் திதைவெளிப் படுத்துவ மென்று
சிவைய னைத்துதி செயவருள் புரிந்தவன் சினங்கொண்
டவைய னைத்துய ருறப்புடைத் தவனள கத்தாற்
குவைய னைத்துயர் வள்ளிநா யகனருள் கொண்டு. (3)
நெற்கு ளத்திரண் மணிவிளை தருசெறு நெருங்குங்
கற்கு ளத்தினன் னீர்முகந் தெழுபெருங் கனவான்
நற்கு ளத்திரு முனிநிகர் கலையுணர் நல்லோன்
எற்கு ளத்தினம் பற்பல வுதவிசெய் திடுவோன் (4)
குப்பு சாமியென் றிடுமியற் பெரும்பெயர்க் கொண்டல்
ஒப்பு சாமிய லுறுநரும் புகழ்குண முள்ளோன்
அப்பு சாமிரு விழியினார்க் கங்கச னானோன்
செப்பு சாமிகண் மூவரின் னருள்பெறீஇச் சிறந்தோன்.. (5)
நச்சி யற்றிர ளுருக்கொடு வந்தன நமனார்
உச்சி யற்றிளைப் புறவுதை வீரமா ரொருவன்
மெச்சி யற்றிரு வடியினை யுபாசிக்க மேலோன்
அச்சி யற்றியா யிரமுறை யளித்தன னன்றே. (6)
------------------
பெங்களூர் சென்ட்றல் காலெஜ் தமிழ்ப்பண்டிதர்
மகா ராஜ ராஜ ஸ்ரீ தி. கோ. நாராயணசாமி பிள்ளையவர்கள்
சொல்லிய நிலைமண்டில ஆசிரியப்பா.
மணிநெடுந் திரைய வார்கடல் வளாகத்
தணிநிகர் பாலி யாரந் துயல்வரு
வளங்குலாந் தொண்டை மண்டலங் குழீஇய
சான்றோர் திலகத் தகையன் சீர்சால்
பொன்விளை களந்தைப் பொற்பதி யண்மு 5
கண்விளை கரும்புஞ் நெந்நெலுங் கஞலும்
பூதூ ரெனப்படும் பொருவறு மாண்பதி
மீதூர் வேளாண் மிளிர்மர புதித்த
வடுக நாத வள்ளல் தவமே
படிகொண் டிங்குற் பவித்த பான்மையன் 10
வீர ராகவப் பேரா லுலாவி
வானக் கண்ணென வண்பொருள் விளக்குவான்
ஞானக் கண்கொடு நவின்முத் தகைய
எண்பொரு ளகத்த வின்றமிழ்க் கடற்கண்
மாண்பொருள் யாவும் வகைபெறத் தெரீஇத் 15
தண்டமி ழெல்லைத் தாரணி வளைந்து
கொண்டல்போற் கவிமழை குளிர்ப்புறச் சொரிந்தோன்
நீர வேணி நெடுந்தகை யளித்த
தீயூர் பொறியாற் றிகழ்தரு தேவனாஞ் 20
சேயூர் முருகன் செவ்விய பிள்ளைத்
தமிழெனும் ப்ரபந்தஞ் சதிருற வருளினன்
அதனையந் நாட்டி லளப்பற வளத்த
கல்குளப் பெயரிய மல்குசீர்ப் பதியான் 25
கந்தசாமி கருதரு தவத்தால்
வந்த சாமி யெனுமதிப் புடையான்
ஆங்கிலஞ் செந்தமி ழாய்ந்த நிபுணன்
பாங்குறு சுகுணன் பழகுறு மன்பினன்
மெய்ப்புகழ் சான்ற விவேக சீலன் 30
குப்புசாமி விற்பன சேகரன்
கல்வெட்டு முதலிய கருவிக ளாலறி
கால முதலிய கண்டா ராய்ந்து
எழுத்துச் சொற்பொரு ளியல்புறு கரவழு
அறுத்திங் கெழுதா வெழுத்திற் செறித்து
மன்பதை யோர்க்கு வழங்கினன் மாதோ. 36
------
மதுரை ஜில்லா கொட்டாம்பட்டி மகா ராஜ ராஜ ஸ்ரீ எம். கருப்பையாப்பாவலரவர்கள்
சொல்லிய அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
உருத்தொண்டை வளைவிழிக ளுவரிமுலை
நகையென்ன வுரைக்கக் கற்றோர்
கருத்தொண்டை யலரியலுயர் கலைமகணே
ரவைசான்றோர் கடங்குஞ் சீர்த்தி
இருத்தொண்டை முன்வசுவா கியதாலிந்
நாட்னினுக்கே யெந்த நாடுந்
திருத்தொண்டை நாடென்ற சிறப்பினா
லப்பெயரே திகழு நாட்டில். (1)
சொற்களைந்தைத் தியர்மயலாற் சுதையை
மறந்திடச்செய்மினுந் தோற்குஞ் சங்கம்
நற்களந்தை வீகமுறு நறுமேனி குழலென்று
நலிவி லாத
அற்களந்தை வருமடிபஞ் சரிவையர்க்கென்
றறையுமெழில் அதிக மார்ந்த
பொற்களந்தைக் கணித்தான பூதூரே
பிறப்பிடமாப் புகல வாய்ந்தோன். (2)
தாரணியம் புயவரைமா தவன்வடுக
நாதமுகிறவத்தின் றோன்றல்
ஆரணியம் புகப்பஞ்ச வரைவிடுத்தோன்
றந்தைவிழியமைந்தோன் கல்விச்
சீரணியம் புயலென்னக் கவிவீர
ராகவன்பெய் திடச்சேர் நூலின்
நீரணியம் பதியாக நிறைந்ததெனி
லிவன்பெருமை நிகழ்த்தற் பாற்றோ. (3)
திருவாரூர் தனத்தாரூர் திருவாரூர்ப்
பரற்கினிய திருவு லாவும்
கருவாரா விதமன்பர்க் கணித்தருள்கீழ்
வேளூரன் கவியு லாவும்
பொருவரார் கழுக்குன்றப் புராதனற்கு
வழுவின்றிப் புராண நூலுந்
தருவாரார் கொள்வரெனத் தான்றுருவி
னுங்கிடையாத் தகைமை வாய்ந்து. (4)
கற்றவரை யேற்றபிரான் கழற்கன்பு
மறவாது கருதக் கல்வி
கற்றவரை யாதரித்து கற்பகமஞ்
சினமென்னக்கலித்துன் பைய
கற்றவரை யின்றியருள் கொடையினரைப்
புலப்பகையைக் கடிந்து முன்னி
கற்றவரைத் தன்னகத்தே கைவிடா
துயர்த்திவருகவினார் செய்யூர். (5)
முருகனுக்கோ ரிலம்பகமாக் கலம்பகமுஞ்
செழுஞ்சுவைகண் முதிருஞ் செஞ்சொல்
தருகவினுங் கற்பனையு மணிநயமும்
பொலிந்துகற்றோர் தங்க ளுள்ளம்
உருகமுத லித்தமிழென் றுரைத்திடப்பிள்
ளைத்தமிழுமுரைத்தா னின்னும்
பெருகவுஞற் றியநூல்கள் பலவுலகிற்
பனையோலைப் பிரதியாக. (6)
இருந்தவந்த நூல்களில்யாப் பியைந்தபிள்ளைத்
தமிழிரதமென்ன வாய்ந்துந்
திருந்தவந்த வச்சின்றி வையமிசை
நடைபெறாத் திறத்தை யோர்ந்து
தருந்தவந்தன் னுடையதெனக் கணித்துயர்ந்த
வச்சிட்டுத்தால மெல்லாம்
பொருந்தவந்த னம்புரிந்து புகழவுலாப்
போந்துவரப்புரிந்தான் யாரேல். (7)
வேறு.
சந்தவன மாதிபுரி பாலபதி யழகார்
தாமரைப் பதிகுளந் தாபுரி யெனமி
குந்தவன நாமமைந் தொடுமதன் முயலின்
கூடுதரு மன்பதஞ் சலிமழ முனிவன்
தந்தவன முற்றவருள் காமீச ரடியிற்
றவமருச் சனைபூசை தனிசெய்த தவனாய்க்
கந்தவன சங்களன முறவளர்தல் வெளிய
கலைமகளைக் காட்டுமெழிற் கல்குளந கரம்வாழ் (8)
வேறு.
கள்ளலையா வொழுகுமுலைக் கண்ணிபுனை
யம்புயத்தான் கவிஞோர் நெஞ்சம்
உள்ளலையா வலிற்றீர்க்கு முவகையுள
முறனோக்கி யுனுமூ வேழு
வள்ளலையார் கண்டவரன் னாருருவே
யோருருவாய் வந்தோ னென்ன
விள்ளலையார் துயர்கந்த சாமிதரு
கான்முளையா மேன்மைக் கொண்டல். (9)
புத்தகவா ராய்ச்சியையே பொருளெனக்கொண்
டெஞ்ஞான்றும் புரப்போன் மிக்க
வித்தகவாய் மையிற்சிறிதும் விலகாதன்
கண்ணோட்டமேய கண்ணான்
மத்தகவா ரணமுகனை மயிலவனைக்
கனவினிலு மறவா னுற்றேற்
குத்தகவாக் கிடைத்தநண்பன் குப்புசா
மிக்கீர்த்திக் கோமான் மாதோ.
---------------------------
"அத்துவித சித்தாந்த மதோத்தாரணரும் மாயாவாத தும்சகோளரியுமாகிய"
யாழ்ப்பாணம் – மேலைப்புலோலி மகா ராஜ ராஜ ஸ்ரீ
நா. கதிரைவேற் பிள்ளையவர்கள் சொல்லிய
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
பொன்னமரு மணிமார்பப் புத்தேளுந்
தேறரிய பொருவி றாணு
முன்னமரு மோரெழுத்தின் பொருள்கேட்ப
விரித்துரைத்த முதல்வ னெற்கு
முன்ன வருந் திருவருளை யளித்தருள்சே
யூர்ச்சேய்க்கு முன்னர்ஒப் பாவா
னென்னவரும் வியக்கவொரு முளைத்தமிழைப்
பூதூரினெழிலாய் வந்தோன். (1)
கண்ணானெண் கண்ணானு மற்றையபல்
கண்ணாருங் காணாக் காதற்
பண்ணாருந் தென்றமிழின் பரப்பெல்லா
மகக்கண்ணாற் பார்த்து மேலா
மெண்ணாருங் கவிச்சிங்கக் கவிவீர
ராகவனிங்கியற்றவத்தை
விண்ணாரு மண்ணாரும் புகழ்ந்திடவாயந்ந்
தளித்திட்டான் வியனின் மாதோ. (2)
அன்னவன்யா ரெனிற்கேண்மின் பல்குளமுங்
கற்குளமா வலர்ந்த மேலோர்
மன்னுபெருங் கற்குளத்துப் பழிப்படாத்
தொழிற்குலத்தின் வந்த கீர்த்தி
யின்னினிய குணக்கந்த சாமிதவத்
தீன்றருளு மினியான் கல்வி
மின்னொளிரு நலக்குப்பு சாமியெனு
நூலளிக்கு மெய்யோன் மன்னோ. (3)
------------------------------
திருமாகறல் மகா ராஜ ராஜ ஸ்ரீ வித்துவான் கார்த்திகேய முதலியாரவர்கள்
சொல்லிய நேரிசைவெண்பா.
கல்விநிதி பூதூர்க் கவி வீர ராகவன்றான்
சொல்விழியி ராதிருந்துநந் தூயதமிழ்-நல்விழியாற்
பெற்றிதிகழ் சேயூரன் பிள்ளைத் தமிழ்கண்ட
மற்றெவர்க்கு மீந்தான் மகிழ்ந்து. (1)
கட்டளைக் கலித்துறை.
பான்முதிர் முல்லயுமெல்லே விரும்பும் பயன்கொள் செய்கை
வேன்முதற் செல்வன் முருகன் பிள்ளைத்தமிழ் மேதினியிற்
றேன்முதிர் கல்குளத் தெங்குப்பு சாமி திறமையினாற்
கான்முதல் பெற்றே யுலாவரக் கற்றதெங் கண்முன்னரே. (2)
---------------------
திருநெல்வேலி மகா-௱-௱-ஸ்ரீ எஸ். அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள்,
எம். ஏ. எல். டி. சொல்லிய பஃறொடை வெண்பா.
முத்தமலி சேயூர முருகன்றன் பொன்னடிக்கே
பத்திகொடு சாத்தினான் பண்பிற்பிள் ளைத்தமிழென்
றெத்திசையும் வீசுமண மேந்து மெழின்மாலை
கத்தனவன் றொண்டன் கவிவீர ராகவன்
முத்தியுனுக் கூறா முதிர்பொருள்கள் நோக்காமை
பொத்தியகண் பெற்றவனென் போன். (1)
நேரிசைவெண்பா
அத்தகைய நூலினை யச்சிலிட் டீந்தோனே
யெத்தகைய னென்னி லியம்புவேன்- மெய்த்தமிழிற்
சத்தாதி கற்றகுப்பு சாமியுயர் வேளாளன்
வத்தாதி தேரும் வரன். (2)
--------------------------
பொருளடக்கம்.
II. நூலாசிரியர் வரலாறு
III.நூல்
1. விநாயக வணக்கம்
2. காப்புப் பருவம்
3. செங்கீரைப் பருவம்
4. தாலப்பருவம்
5. சப்பாணிப்பருவம்
6. முத்தப்பருவம்
7. வருகைப்பருவம்
8. அம்புலிப்பருவம்
9. சிறுபறைப்பருவம்
10. சிற்றிற்பருவம்
11. சிறுதேர்ப்பருவம்
IV. செய்யுண் முதற்குறிப்பகராதி
V. அநுபந்தம்
------------------------------------------------
I. முகவுரை
==============
பிள்ளைத்தமிழ் தமிழிலுள்ள தொண்ணூற்றாறு பிரபந்த வகைஞகளில் ஒன்று. அது ஆண்பாற் பிள்ளைத் தமிழென்றும் பெண்பாற்பிள்ளைத்தமி ழென்றும் இருவகைத்து.
*"சாற்றரிய காப்புச்செங் கீரைகால் சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை- போற்றரிய
அம்புலியே யாயந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து"
என்தற் கியையக் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர், இவற்றை முறையே அகவல் விருத்தத்தினாற் கூறுவது ஆண்பாற் பிள்ளைக்கவி. இவ்வுறுப்புகளில் கடை மூன்றாகிய சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்னுமிவைகளை யொழித்து, கழங்கு, அம்மானை, ஊசல் என்பவற்றைப்ச் சேர்த்துக்கூறுவது பெண்பாற் பிள்ளைக்கவி. இம் மூன்றினையும் அடியோடே நீக்கி, முதலேழு பருவத்தை மாத்திரம் பெண்பாற் பிள்ளைக் கவிக்குத் கொள்வர் ஒரு சாரார். அதற்கிலக்கணம்:-
‡ "முறைதருமூன் முதிமூ வேழீருந் திங்கள் அறைகநிலம் பத்துமண் டைந்தேழ்- இறைவளையார்க்
* வெண்பாப் பாட்டியல்: ; "சாற்றரியகாப்புத்தால் செங்கீரை" எனவும் பாடம்.
‡ வெண்பாப்பாட்டியல், செய்யுள் -7
கந்தஞ் சிறுபறையே யகத்தியர் மூன்றொழித்துத்
தந்தநில மோரேழுஞ் சாற்று.
இரண்டாமாதத்திற் காப்புக் கூறுதலும், ஐந்தா மாதத்திற் செங்கீரை கூறுதலும், ஆறாமாதத்திற் சொற்பயில்வு கூறுதலும், ஏழா மாதத்தில் அமுதூட்டலும், எட்;டா மாதத்திற் றாலாட்டுக் கூறலும், ஒன்பதா மாதத்திற் சப்பாணி கூறுதலும், பதினோராவது மாதத்தில் முத்தம் மொழிதலும், பன்னிரண்டில் வாரானை சிவருதலும்*, பதினெட்டா மாதத்திற் சந்திரனை யழைத்தலும், இரண்டாமாண்டிற் சிறுபறை கொட்டலும், மூன்றா மாண்டிற் சிற்றில் சிதைத்தலும், நான்காமாண்டிற் சிறுதே ருருட்டலும் என்று சொல்லப்பட்டனவும் பிறவும் பிள்ளக்கவி தனக்கு உறுப்பாகப்பெறும். பெண்பாற் பிள்ளைக்கவிக்கு, அம்புலி இறுதியாய்நின்ற பருவங்களுடன், மூன்றாமாண்டிற்றான் விளையாடும் பாவைக்கு மணம்பேசுதலும், குளிர்ந்தநீராடலும் பதுமை வைத்து விளையாடலும், அம்மனை யாடலும், கழங்காடலும், பந்தாடலும், சிறுசோ றடுதலும், சிற்றிலிழைத்தலும், ஊசலாடலும் என்று சொல்லப்பட்ட இவற்றுள் ஏற்பனவற்றைச் சேர்த்துக்கூறப்படும். இஃதன்றியும் இரண்டாவது மாதத்திற்குப் பதிலாய் மூன்றாமாத முதலாகவு முரைக்கப்படு மென்பது வெண்பாப் பாட்டியலிலுள்ள மேற் குறித்த வெண்பாவாற் றெரியவரும். இவ்விருவகைப் பிள்ளைத்தமிறிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகள், முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், திருப்போரூர்ச் சுப்பிரமணிய பிள்ளைத்தமிழ், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலிய ஆண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களினாலும், மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் முதலிய பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களினாலும் எளிதில் அறியக்கூடியன.
இச்சேயூர்க் கந்தர் பிள்ளைத்தமிழ் பலவிஷயங்களில் மற்ற ஆண்பாற்பிள்ளைக் கவிகளைப் போன்றிருந்தும் காப்புப் பருவத்திற்கூறிய துதிகளைக் கவனிக்கும்போது மற்றெவற்றினும் சிறப்புற்றிருக்கிறதாகக் காணப்படும். இதனைப்பாடியோர் பொற்களந்தை அந்தகக்கவி வீரராகவமுதலியார். சேயூர் என்ற பதத்திற்கு முருகனுடைய ஊர் என்பது பொருள் . காரணப்பெயராயிருந்து பிறகு காரண இடுகுறியாய் அவ்வூரைமாத்திரம் உணர்த்தி நிற்றலின் "சேயூர்க் கந்தர்" , "சேயூர் முருகன்" என்பனவற்றில் இரண்டாவது மொழி கூறியது கூறல் என்னும் குற்றத்திற் கிலக்காகாது. இந்நூலிற்குச் சேயூர்க்கந்தர் பிள்ளைத்தமிழ், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ், என்று மூன்று பெயரிருப்பினும் வழக்காற்றை நோக்கும் போது, முதறபெயர்தான் முதலில் ஆசிரியர் கொடுத்திருந்திருக்க வேண்டும் என்று புலப்படுகிறது.
இவ்வூர்க்குச் சேயூர் என்றும், செய்கையம்பதி என்றும் *வளவநகர் என்றும் பெயர். வளவநகர் என்பதற்குச் சோழனுடைய நகரமென்பது பொருள். அவ்வூர் வேளாளர்க்குத் தொண்டைமண்டல வேளாளரென்றும் கொண்டைகட்டி வேளாளரென்றும் பெயர். கி.பி. பதினோராம் நூற்றாண்டி னிறுதியிலும் பன்னிரண்டாவது நூற்றாண்டின் முதலிலும், அதாவது சுமார் 800 வருஷங்கட்கு முன்பு அரசாண்ட *குலோத்துங்க சோழன் புத்திரனாகிய ஆதொண்டைச் சக்கிரவர்த்தி சோழமண்டலத்தைவிட்டுக் காஞ்சி மண்டலத்தைப்பெற்று அக்காலத்துச் செங்கற்பட்டு (செங்கழுநீர்ப்பேட்டை)க் கருகிருந்த அடங்கா முடிகளாகிய குறும்பர்களை ஜெயித்து எதிர்த்துநின்றவரைத் தொலைத்துத் தன்னுடன் கொணர்ந்த வேளாளரைப் பற்பல இடங்களிலும் குடியேற்றினன்† என்பது ஒரு கொள்கை. இதற்குப் பிறகுதான் இவ்வேளாளர்க்குத் தொண்டை மண்டல வேளாளர் என்னும் பெயர் வழங்கிவந்தது.
------------
*"வளவநகரின் வடதெருவின் முருகனைக் காக்கவே" - பக்கம், 4, வரி 19.
* Kulottunga chola Deva. I (1070 Ad. to 1118) See South Indian Inscription's, Vol. II Part' ii, page 153. Chingleput District Manual, Page 88.
சைவசமயாசாரியர்களாய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு (அப்பர்) நாயனார் இவர்கள் காலத்தில் செழிப்புற்றிருந்த சமணமதம் இவர்களுடைய முயற்சியினால் க்ஷீணதிசையடைநந்ததாகவும், தெரியவருகிறது. இவர்களிருந்தகாலம் கி. பி. 7-வது நூற்றாண்டு (அதாவது சுமார் 1250 வருஷங்களுக்குமுன்) என்று § நிச்சயிக்கப்டிருக்கிறது. அக்காலத்திலும் சேயூரில் வேளாளரிருந்தனர் என்பதும் அவர்களிற்சிலர் சோழராஜனுக்குப் பிரதி நிதியாயிருந்து சேயூர்க் கோட்டத்தையும் மற்றும் பல கோட்டங்களையும் ஆண்டு வந்தனர் என்பதும், சமணருடைய காலத்தில், காலத்திற்கேற்பத் தாங்களும் அம்மதத்தை அநுசரித்துத் திருநாவுக்கரசு நாயனார் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் இவர்கள் காலத்தில் அம்மதம் க்ஷீணதிசை அடைந்தபோது அவ்வூர் வேளாளர்களும் தங்கள் புதுமதத்தைவிட்டுத் தங்கட்குரிய சைவ மதத்தையே திரும்பவுங் கைக்கொண்டனர் என்பதும் மற்றொரு கொள்கை. அக்காலத்தில் இவர்கட்குக் கொண்டைகட்டி வேளாளர் என்பது பெயர். இப்பெயர்க்குரிய காரணம் சரியாய்ப் புலப்படவில்லை. இவர்கள் சோழ அரசர் வமிசத்தைச் சார்ந்தவர்க ளென்பது, "வளவதிரையர்" என்னும் இவர்களுடைய கோத்திரப் பெயரான் நன்கு விளங்கும்.
------
§ Madras' Christian College Magazine, January 1896, page, 396
The History of Southern India before the Eleventh Century A.D. by Mr. V. Venkayya M.A. of (Pulikesin II, 609-642 A.D.)
"சேயூர்" என்னும் பதத்தால், அவ்வூர் முருகக் கடவுள திருப்பிடம்என்றும், கடவுளால் அவ்வூர்க்குப் பெயரேயன்றி ஊரினால் கடவுட்குப் பெயர் வந்ததன்று என்றும், புதிதாய்
ஊர் உண்டாக்கியபோது முருகக்கடவுள் கோயில் இருக்கக்கண்டு அவ்வூர்க்குச் சேயூர் எனப் பெயரிட்டிருக்க வேண்டுமென்றும் தோற்றுகிறது. ஒருவேளை சோழவம்சத் தரசர்களால் ஊர் உண்டாக்கப்பட்டிருக்கலாம். *"வளவநகர்" என்பது இக்கொள்கையை வலியுறுத்துகின்றது. ஆதியில் நன்னிலையிலிருந்த ஆலயம் காலக் கொடுமையினால் நிலைதளர்ந்துபோகவே பிற்காலத்தார் அதை ஜீர்ணோத்தாரணம் செய்து வைத்ததாகவும் தெரியவருகிறது.
------
* சோழனுடைய நகர்.
"வைவத் துரந்தாடு முரகக்கு லேசன்மகன்
மகனாகு மொருதொண்டைமான்
வாரிதித் திரைநல்கு மன்னன் பெரும்பேர்
வரம்பெற்ற வொற்றிகொண்டான்
சைவத் தவப்பயனை யொத்தவன் வழிவந்த
தநயன் கழுக்குன்றனாந்
தக்க செம்பிய வளவன் வந்துனக் காலயம்
சகலமுந் தந்ததற்பின்
பௌவத் தலத்தெழு சகாத்தமோ ராயிரத்
தொருநாலு நூற்றின் மேலும்
பயிலுநாற் பத்துமூ வருடமாம் விடுவருட
மகரம் பகுத்ததிருநாள்
தெய்வத் திருத்தே ருருட்டியது போலவிச்
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய் சரவணப் பொய்கையாய்
தோகையாய் சிறுதே ருருட்டியருளே"
என்ற சிறுதேர்ப்பருவத்து* ஆறாவது செய்யுளினால், தொண்டைமான் வமிசத்தைச்சார்ந்த சைவ சிரோமணியாகிய† ஒற்றிகொண்டான் என்பவருடைய தநயனாகிய கழுக்குன்றன் என்பவர் அவ்வூர்ச் சுப்பிரமணியர் ஆலயத்தை ஜீர்ணோத்தாரணம் செய்தாரெனவும் அப்போது முதற்றிருவிழா (1443 சகம்=
1443+78= 1521-கி.பி. அதாவது 380 வருஷங்களுக்குமுன்பு) ‡ விஷு௵ தை௴ ஆரம்பிக்கப்பட்டு நடந்த தெனவும் தெரியவருகின்றது,
----------------
* 76-ஆம் பக்கத்திற்காண்க.
† "வெற்றி கொண்டான்" எனவும் பெயர். இப் பெயர்கள் சிதைவுற்று இக்காலத்தில் 'ஒத்தி கொண்டான்' 'கழுக்குண்டான்' என்றாயின. அவ்வூர் உப்பளத்திற் சில பாகத்திற்கு இப்பெயர்கள் இப்போதும் வழங்கிவருகின்றன.
‡ இதன் விவரங்கள் 76-ஆம் பக்கத்திறுதியிற் காண்க.
இவ்வாலய உற்சவங்களிற்சில செவ்வனே நிறைவேறும் பொருட்டுக் காஞ்சீபுரம் முதலிய நகரங்களிலிருந்த செங்குந்த மரபினர் சில மனியங்களும் கட்டளைகளும் ஏற்படுத்தி யிருக்கிறதாக அக்கோயிலிலுள்ள ஒரு தாமிர சாசனத்தால் தெரியவருகின்றது. கலி 4755, சாலிவாகன சகம் 1576 (1554 ?) க்குச்சரியான கி.பி. 1653௵ (அதாவது 248 வருஷத்திற்குமுன்) விஜய வருடம் சித்திரை மாதம் பூர்வபக்ஷம் துவாதசி, அஸ்தம், சுக்கிரவாரதினம் , இந்தத் தாமிரசாசனம் ஏற்பட்டது. இது அக்காலத்து தருமகர்த்தாவாயிருந்த *கழுக்குன்றமுதலியாருடைய பிரயத்தனத்தினா லுண்டானதாகவும் தெரியவருகிறது.
---------------------
* [See line 117, copper plate grant referred to above ] இவர் (1653-1521= 132) முதற்றிருவிழா ஏற்படுத்திய 'கழுக்குன்றன்' என்பவர்க்கு 132 வருஷத்திற்குப் பின்னிருந்தவராதலின் இவ்விருபெயரும் ஒருவரையே குறித்ததன்று என்பதும் ஒருவேளை முன்னவருடைய சந்ததியாரா யிருந்திருக்கலாமென்பதும் உத்தேசிக்கலாம்.
இம் முருகக் கடவுள்பேரில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இப் பிள்ளைத் தமிழும்., கலம்பகம் ஒன்றும் பாடியுளர். இப் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றிய காலத்து அவ்வூரில் கல்விச் செல்வத்திலும் பொருட் செல்வத்திலும் பிரசித்தி பெற்றிருந்த விஷ்டினர் அம்மையப்ப முதலியார் என்பவர், "வடதெரு முருகனைக் காக்கவே" என்று காப்புப்பருவத்துக் கங்காதேவி துதியில் கவிராயர் பாடியிருப்பதைக் கேட்டு, அதனால் வடக்குத்தெரு சிறந்து விட்டதென்றும், தாமிருந்த தெற்குத்தெருவின் புகழ் குறைந்ததென்றுங்கொண்டு கவிராயர்மீது சினங்கொண்டு தம்முடன் வந்தவரையும் உடன்கொண்டு அரங்கத்தை விட்டெழவே, கவிராயர் அவரது கோபத்தை ஆற்றிப் பிறகு அவரைத் திருப்திசெய்யும்வண்ணம் அவர்மீது ஒரு பிள்ளைத்தமிழ் பாடியதாகவும் தெரியவருகிறது. அதற்கு * "விட்டினர் அம்மையப்பன் பிள்ளைத் தமிழ்" என்று பெயர்.
கவிராயப்பிள்ளை யென்பவரொருவர் கந்தர்மீது ஓருலாப் பிரபந்தம் இயற்றியுள்ளார். இதுமுன்னிரண்டிற்கும் முந்தியதென்பதும், மிக்கச் சிறப்புடைத் தென்பதும் இப் பிள்ளைத்தமிழ் நூலாசிரிய ராலேயே தெரிய வருகிறது.§
------
* அது ஒவ்வொரு பருவத்திற்கு அவ்வைந்தாக ஐம்பது பாக்கள் அடங்கியுள்ள நூல். அந்நூலில் (காப்புப்பருவம்) அவரை "வளவரதிபதி" யென்றும், "நயினமகிபதி" யென்றும் "திரசையரரசு" என்றும், (செங்கீரைப்பருவம்) அவர் "பதினெட்டு வட்டத்திற் கதிபதி" யாயின ரென்றும், (முத்தப்பருவம்) "தொண்டைவள நாட" னென்றும், (வருகைப்பருவம்) "செய்கை நகராதிபதி" எனவும், "வீரராஜேந்த்ர சோழவளவேசனா மேகவீரன்தந்த சத்தவடிவாள் வீரன்" எனவும் "சோழவளவக்குலேசன்" எனவும், (அம்புலிப்பருவம்) "தொண்டீர தேச" னெனவும், குறிக்கப்பட்டுள்ளது.
§ 55-ம் பக்கம் 6-வது வரியிற் காண்க.
சென்ற சில்லாண்டுகட்குமுன் காலஞ்சென்ற திருப்புகழ்ச்சாமியென்றும், முருகதாச சுவாமியென்றும், தண்டபாணி சுவாமியென்றும் பேர் பெற்றிருந்த ஒருவர் "சேயூர்க் கந்தர் திருப்புகழ்" என்னு நூலொன் றியற்றியதாகவும் தெரியவருகிறது.
இப்பிள்ளைத்தமிழினை அச்சிடும்போது எமது நண்பர்களாய ம-௱-௱-ஸ்ரீ திரு.த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள், பி.ஏ., எஸ். அநவரத விநாயகம் பிள்ளை யவர்கள், எம்.ஏ., யாழ்ப்பாணம். கதிரைவேற்பிள்ளை யவர்கள். ஆகிய இவர்கள், உடனின் றுதவியது ஒருகாலும் மறக்கத்தக்கதன்று.
இது இனிது முடியுமாறு தோன்றாத்துணையா யுதவி புரிந்துநின்ற எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை மனமொழி மெய்களிற் றொழுகின்றனம்.
------------------------
II. நூலாசிரியர் வரலாறு.
------------------------------
இந் நூலாசிரியராகிய அந்தகக்கவி வீரராகவ முதலியாரென்பவர், செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள பொன்விளைந்த களத்தூர் (பொற் களந்தை) க்கருகிலுள்ள பூதூரிலிருந்த வடுகநாத முதலியார்க்குப் புத்திரரா யுதித்தனர். அவர் பூர்வகன் மத்தின்பலனாற் பிறவிக்குருடராயிருந்தும் கல்வியில் ஆதிசேடனையும் அகத்தியனையும் போன்று பிரசித்தி பெற்றவராயினார். இவர்காலத்தில் இவர் குடும்பத்தார் பூதூர் நீங்கிப் பொற்களந்தை குடிபுக்கனர். இவர் காஞ்சீபுரஞ்சென்று கல்வி பயின்றனர் என்பதும் பிறகு கல்வியிற்சிறந்து விளங்கினர் என்பதும் "தமிழ் நாவலர் சரிதை" * யிலுள்ள பின்வரும் அடிகளாற் றெரியவரும்.
------
* இது ஏட்டுப்பிரதியிலுள்ளது, இன்னும் அச்சிடப்படவில்லை. ம-ள-ள-ஸ்ரீ திரு கனகசுந்தரம் பிள்ளை யவர்களிடமுள்ள பிரதியினின்று சில செய்யுட்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
"கவிவீரராகவன் காஞ்சிபுரத்தில் படித்தபோது கந்தபுராணங் + கச்சியப்பர் பாடியது :-
+ இவர் கந்தபுராண நூலாசிரியராய கச்சியப்ப சிவாசாரியசுவாமிகளாயிருந்தாலு மிருக்கலாம். கந்தபுராணத்திற் றேர்ந்த வேறொருவராயிருந்தாலு மிருக்கலாம். முன்னையோரெனச் சொல்லின் முரணுவார் சிலருளர்.
'பொங்குதமி ழயோத்தியில் வாழ் தசரதனென்
போனிடத்தும்பூதூர் வேந்தன்
துங்கவடு கன்னிடத்தும் வீரராக வரிருவர்
தோன்றி னாரானால்
அங்கொருவ னொரு + கலைமா னெய்திடப்போய்
வசைபெற்றானவனி பாலன்
இங்கொருவன் ++ பல் கலைமா னெய்திடப்போய்க்
கவியினாலிசைபெற் றானே.
"ஏடாயி ரங்கோடி $ யெழுதாது தன்மனத்
தெழுதிப் படித்த விரகன்
இமசேது பரியந்த மெதிரிலாக் கவிவீர
ராகவன் விடுக்கு மோலை
சேடாதி பன்சிர மசைத்திடும் புகழ்பெற்ற
திரிபதகை குலசே கரன்
தென்பாலை சேலம் புரந்துதா கந்தீர்த்த
செழியனெதிர் கொண்டு காண்க
#பாடாத கந்தருவ மெறியாத கந்துகம்
பற்றிக் கொலாத கோணம்
பறவாத கொக்கனற் பண்ணாத கோடைவெம்
படையிற் †றொடாத குந்தம்
சூடாத பாடலம் பூவாத மாவொடு
தொடுத்து முடியாத சடிலம்
சொன்னசொற் சொல்லாத கிள்ளை யொன்றெங்குந்
துதிக்க வாவிடல் வேண்டுமே"
------
* (1) ஸ்ரீ இராம்பிரான் (2) அந்தகக்கவி வீரராகவன்.
+ கலைமான் = மாரீனசனாகிய மாயமான்.
++ பல்கலைமான் = சரஸ்வதி (கல்வி).
$ 'ஏடாயிரங்கோடி எழுதுவன் றன்மனத் தெழுதிப்படித்த விரகன்' எனவும் பாடம்.
# கந்தருவம் = இசை; குதிரை. கந்துகம் = பந்து; குதிரை. கோணம் = வளைந்தவாள்; குதிரை. கொக்கு = ஒருபறவை;குதிரை. கோடை = வேனிற்காலம்; குதிரை. குந்தம்=சூலம்; குதிரை. பாடலம் = பாதிரிப்பூ; குதிரை. மா = மாமரம்; குதிரை. சடிலம் = சடை; குதிரை. கிள்ளை = கிளி; குதிரை. இப்பதங்கட்கு இங்குரைத்த இரு பொருள் உளவேனும் தத்தம் அடைமொழியால் முன்னைய பொருள் நீங்கப்பின்னைய தாகிய குதிரை யென்னும் ஒன்றனையே குறித்து நின்ற தென்க.
† 'படையாய்த் தொடாத குந்தம்' எனவும் பாடம்.
இச்சீ்ட்டுக் கவியின் முதலடியினால் இவர் கல்வி கற்ற அருமை இவ்வளவின தென்பது ஒருவாறு தெரியவரும். காஞ்சீபுரத்தில் கல்விகற்றுப் பிறகு தன்னூராகிய பொற்களந்தை நகர் போந்து தன்மனையாவோடு வாழுநாட்களில் ஒருநாள் தாம் வெளிச்சென்று திரும்பிவருவதை அருகிருந்தவர்களி லொருவர் அவர்தம் மனைவிக்குத் தெரிவிக்க, அவள் இவரது பெருமையைக் குறியாது அங்கவீனமாகிய சிறுமையைக்
குறித்து 'இவர் விதவத்திறமையினால் யானைக்கன்றும் வள நாடும் பெற்று வந்தனரோ?' என்று மிக்க அலக்ஷியமாய்ச் சொல்ல, அதனைச் செவியுற்ற நம்புலவர்,
"அருளில்லார்க் கவ்வுலகமில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லா கியாங்கு"
என்பதை மனத்திற்கொண்டு, மனைவியிகழ்ந்ததன் காரண மறிந்து உடனே பொருள் தேடு நிமித்தம் வீட்டைவிட்டுப் புறப்பட்டு ஒரு சிஷ்யனைத் தன்னுடன்கொண்டு தேசயாத்திரை சென்றனர். இதற்கிடையிற் பல சிறு நூல்களையும் பெரு நூல்களையும் விடுகவிகளையு மியற்றினர்.
அவ்வாறு போம்போது ஒருநாள் கவிராயர் தம் சீடனுடன் ஒரு குளக்கரையில் தங்கியிளைப்பாறிக் கொண்டிருக்கையில் அவர் கொண்டுவந்த கட்டமுதை நாய் தூக்கிக் கொண்டு போய்விட்டது. அப்போது அவர் பாடிய செய்யுள்:-
*"சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி
நாரா யணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே"
* வயிரவன் வாகனம் = நாய். நான்முகன் வாகனம் = அன்னம். நாராயணன் வாகனம் = கருடன் (பருந்து) மைவாகனன் = ஆட்டுக்கடாவை வாகனமாக உள்ளவன் = அக்கினி.
அவர் பிறகு மேற்சென்று சோழநாட்டையடைந்து அங்குச் சில நாளிருந்து அதன்பிறகு ஈழ நாட்டிற்குச் சென்றனர். அதன் வடபாகத்தை அக்காலத்தில் பரராசசிங்கம் என்னுந் தமிழரசன் ஆண்டுகொண்டிருந்தான். அவ்விடஞ்சென்று அவர் அரசனுடைய பேட்டிக்குப் பலநாள் காத்திருந்தார். அப்படிக் காத்திருந்தும் அரசனைக்காணும் சமயம் சீக்கிரத்தில் வாய்க்கவில்லை. அரசனைத் தவிர மற்றெல்லோரும் நாளடைவில் கவிராயருடைய கல்வித்திறத்தினையும் யாழ்வாசிக்கும் திறத்தினையுங்கண்டு களித்தனர். ஆயினும் அரசன் சபையிலுள்ள வித்துவான்களும், பாவலரும், காவலரும் அவருடைய வரவை அரசற்குத் தெரிவித்திலர். அவர் பலநாளாக அரசனுடைய பேட்டி தேடிவந் திருக்கின்றனர் என்பதும், யாழ்வாசிப்பதில் மிக்க திறமையுடையவரென்பது மொருநாளறிந்த அரசன்மனைவி அரசன்மீது கோபம்கொண்டு அன்றிரவு அவன் பள்ளியறைக்கு வந்தபோது வழக்கப்பிரகாரமிராது கடுகடுத்த முகத்துடன் ஒதுங்கி நின்றனள்.
இக்கோபத்திற்குக் காரணம் இன்னதென அறிகிலாது அரசன் அவள் கோபத்தை ஆற்றமுயன்றும் முடியவில்லை. மறு நாட்காலையில் அரசனது சிங்காரவனத்தி லிருந்த ஒரு மரப்பொந்தில் கிளிஒன்று வெளியே வருவதும் பயந்து உள்ளேபோவதும் மறுபடியும் வெளியேவருவதும் உள்ளே போவதுமாயிருந்தது. இதையுற்று நோக்கிக் கொண்டிருந்த அரசற்கு இதன் காரணம் இன்னதினப் புலப்படவில்லை. முன்னரே மனைவியின் கோபத்திற்குக் காரணமும் இன்னதெனத் தோன்றவில்லை. அதனால் அரசனுக்கு மனக்கவலை அதிகமாய் விட்டது. அரசன் கொலுமண்டபத்திற்கு வந்தவுடன் அவ்விடத்துள்ள புலவர்களை நோக்கி, "என் மனத்துள கவலை யின்னதெனவும் அதற்குக்காரணம் யாதெனவுங் கண்டு உரைமின்" என்னலும் 'கண்டசுத்தி' பாடும் புலவர்களும் ஒன்றுந்தோன்றாது விழித்தார்கள். அவர்கள் விழிக்கும் விழிக்குத் திக்குகள் எட்டும் போதாவாயின. அவர்களில் ஒருவர் அரசனுடைய மனக்கவலையை எப்படியாயினும் நீக்கவேண்டுமென்னும் எண்ணங்கொண்டு அந்தகக் கவிவீரராகவ முதலியாருடைய ஆற்றலையும் குணத்தையும் அரசற்கு எடுத்துரைத்து அவர் அதன் காரணத்தை உரைக்கவல்லவர் எனலும் அரசன் அவரை வரும்படி உத்தரவுசெய்தான். அவர் வந்தபோது அவர் அந்தகராயிருத்தலால் இராஜபார்வைக்குரியவரல்லர் என்னுங் காரணம்பற்றி ராஜசபையில் குறுக்கே ஒருதிரை போடப்பட்டிருந்தது. கவிராயருடன்வந்த கற்றுச்சொல்லி தானு மவரும் கொலுமண்டபத்தை அணுகினவுடன் குறுக்கேயிருந்த திரையைக் கண்டு, † "திருச்சிற்றம்பலம்" என்னவே, குறிப்பறிந்த குரவர் "முத்துத்திரை இற்றுவிழ" என்றனர். உடனே திரை அறுந்துவிழுந்தது.
----
†'சிவசிதம்பரம்' என்றான் எனவும், அவர் 'அது அண்ணாமலை யாகாதோ' என்றார் எனவும், உடனே திரை அக்கினிக்கிரையாயதெனவும் சொல்வர் சிலர்.
அதைக் கண்டோர் அச்சமும் பக்தியும் பெருகி அவரை அரசற்கு அருகேகொண்டு போய்
ஓரிருக்கையில் உட்காரவைத்து உபசரித்தனர். பிறகு அவரை இன்னும் பரீக்ஷிக்க வேண்டி அரசனுடைய கையில் ஒரு வில்லு மம்புங் கொடுத்து 'அரசனுடைய கோலம் எம்மாதிரியானது?' என்று மந்திரிமார் கோட்க, அவர்,
*"வாழு மிலங்கைக்கோ மானில்லை மானில்லை
ஏழு மராமரமோ விங்கில்லை- ஆழி
அலையடைத்த செங்கை யபிராமா வின்று
சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு"
என்று சொல்லிப் புத்திசாதுரியமாக அரசன் கோலத்தைப் போர்க்கோலமாக்கி உத்பிரேக்ஷித்துக் காட்டினார். பிறகு அவரை வருவித்ததின் காரணத்தைத் தெரிவிக்க, அவர் அரசனுடைய உட்கருத்தையுங் அதன்காரணத்தையுமறிந்து பாடியசெய்யுள்:-
†"வடவைக் கனலைப் பிழிந்துகொண்டு
மற்று மொருகால் வடித்தெடுத்து
வாடைத் துருத்தி வைத்தூதி
மறுகக் காய்ச்சிக் குழம்புசெய்து
புடவிக் கயவர் தமைப்பாடிப்
பரிசு பெறாமற் றிரும்பிவரும்
*'இலங்கைக்கரசனாகிய இராவணன் இப்போதோ இவ்விலங்கையில் இல்லை. மாரீசனாகிய மானுமில்லை. ஏழுமராமரமும் இவ்விடத்தில்லை. சேது பந்தனஞ்செய்த ஸ்ரீராமனைப்போன்று விளங்கும் ஏ! அபிராமா! கையில் வில்லுங் கணையுங் கொண்ட காரணம் யாது?' என்பது இதன் பொருள்.
†(1) மனைவி சினங்கொண்டதற்குக் காரணம் கவிராயர்க்கு அரசன் பேட்டி கொடாதிருந்தது.
புலவர் மனம்போற் சுடுநெருப்பைப்
புழுகென் றிறைத்தாற் பொறுப்பாளோ
† அடவிக் கதலிப் பசுங்குருத்தை
நச்சுக் குழலென் றஞ்சியஞ்சி
அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்
டகலா துறையு மகளங்கா
திடமுக் கடவா ரணமுகைத்த
தேவே தேவ சிங்கமே
திக்கு விஜயஞ் செலுத்திவரும்
செங்கோ னடாத்து மெங்கோவே"
† (2) கிளிவெளியே செல்லாததற்குக் காரணம் காற்றிலசையும் வாழைக் குருத்தை நச்சுக்குழலென்று பயப்பட்டிருந்தது.
அரசன் தானினைத்திருந்த இரண்டு விஷயங்களும் அதற்குத் தக்க காரணங்களும் இப்பாட்டாற் புலப்படப்பெற்றுக் கவிராயர்க்குப் பற்பல பரிசளித்தனன்,. அவற்றில் யானைக்கன்றும் பொற்பந்தமும் முக்கியமானவை. அவர் தாம் பொற்பந்தம் பெற்றபோது பாடிய வெண்பா:-
"பொங்குமிடி யன்பந்தம் போயதே யென்கவிதைக்
கெங்கும் விருதுபந்த மேற்றதே- குங்குமந்தோய்
வெற்பந்த மானபுய வீரபர ராசசிங்கம்
பொற்பந்த மின்றளித்த போது"
யானை பெற்றதற்குப் பாடிய விருத்தம்:-
"இல்லென்னுஞ் சொல்லறியாத சீமையில்
வாழுதானனைப்போய் யாழ்ப்பாணன் யான்
பல்லைவிரித் திரந்தக்கால் வெண் சோறும்
பழந்தூசும் பாலியாமற்
கொல்லநினைந்தே தனது *நால்வாயைப்
பரிசென்று கொடுத்தான் பார்க்குள்
தொல்லையென †தொருவாய்க்கும் நால்வாய்க்கு
மிரையெங்கே துரப்புவனே"
இவ்வாறு சொன்னபோது அரசன் அவ்யானைக் கன்று வளரும்படியான நாடுங்கொடுத்தான். பிறகு சிலகாலம் அவர் அந்த அரசனிடத்திருந்தார். ஈழ நாட்டுப் புலவர்கள் கவிவீரராகவ முதலியா ரவர்கட்கு விடுத்தவினாக்களும் அவர் பகர்ந்த விடைகளும் வருமாறு:-
வினா:- உதிரமுண்ணும் பறவை யாது;
விடை:- துக்கம்.
வினா:- 'பசும்பால்' என்னும் பண்புத் தொகைக்குப் பொருளென்ன?
விடை:- கார்காலத்து வெள்ளாட்டுப்பால்.
வினா:- "பங்கமின் மாது பசுமஞ்ச ணன்றிழந்தும் மங்கலமு நன்கலமு மற்றிழக்காள்"
பின்னிரண் டடியும் யாவென,
விடை:- --சங்கை யென்ன
"மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கட் பேறு"
என்று அவர்கள் கேட்டதற்கேற்பத் தனிச்சொல் தான் இடைப்பெய்து திருக்குறளி லொருகுறளைக் கொண்டு விடை கொடுத்தார். ‡
---------
*நால்வாய்=தொங்குகின்ற வாயையுடையது (யானை)
† ஒருவாய் நால்வாய் என்பதாற் பெறப்படு நயமுங்காண்க.
‡ இவ்வினாக்கள் மொத்தம் ஐந்தென்றும், அவற்றிலிரண்டு தனக்கு ஞாபகமில்லை யென்றும், அந்தகக் கவிராயர் மரபிற்றோன்றிய காலஞ்சென்ற கவி வீரராகவ- முத்துசாமி முதலியார் சொல்லத் தாம் கேட்டதாக வித்வான் மகா ராஜ ராஜ ஸ்ரீ மாகறல் - கார்த்திகேய முதலியார் தெரிவித்தனர்.
இவர் இராமாயணம் அவதானித்துச் சொன்னபோது அரசன் (பரராசசிங்கம்) பாடியது:-
"இன்னங் கலைமகள் கைமீதிற் புத்தக மேந்தியந்தப்
பொன்னம் புயப்பள்ளி புக்கிருப்பா ளென்ன புண்ணியமோ
கன்னன் சயந்தன் கவிவீர ராகவன் கச்சியிலே
தன்னெஞ்ச மேடெனக் கற்றான் கனமுத் தமிழையுமே"
இக்கவியினாலும் இவர் கற்றறிந்த அருமை தெரியவரும்.
இவர் அரசன்மீது வண்ணம் பாடியபோது அதன் சொன்னோக்கும் பொருணோக்குந் தொடைநோக்குங் கண்டு களித்து இவருடைய கல்வித்திறத்தை அரசன் வியந்த செய்யுள்:-
"விரகன்முத் தமிழ்க்கவி வீர ராகவன்
வரகவி *மாலையை மதிக்கும் போதிலாம்
†உரகனும் வாணனு மொப்பத் தோன்றினாற்
சிரகர கம்பிதம் செய்ய லாகுமே"
* இது இவரியற்றிய கழுக்குன்ற மாலையைக் குறித்த தென்பாரு மளர்.
† சிரக்கம்பிதம் செய்ய ஆயிரந்தலைகளை யுடைய ஆதிசேடனும் கரக்கம்பிதம் செய்ய இரண்டாயிரம் கைகளையுடைய பாணாசுரனும் வேண்டு மென்பது.
இவரியற்றிய ஆரூருலாவைக் கேட்டு ஆனந்தமடைந்து பரராசசேகரன் (பரராசசிங்கம்) பாடியது:-
* "புவியே பெறுந்திரு வாரூ ருலாவைப் புலவர்க்கெல்லாஞ்
செவியே சுவைபெறுமாறு செய்தான் சிவஞானமனு
பவியே யெனுநங் கவிவீர ராகவன் பாடியநற்
கவியே கவியவ னல்லாத பேர்கவி கற்கவியே"
பிறகு இவர் யாழ்ப்பாணத்திற் சின்னாளிருந்து தான் பெற்ற பல்லக்குமுதலிய பரிசுகளுடனும் பரிவாரங்களுடனும் தன்னூர்க்குத் திரும்பிவந்தனர்.
இஃதிப்படியாக 'யாழ்ப்பாண வைபவம்' என்னு † நூலில் ஈழநாட்டை அரசாண்ட உக்கிரசிங்க ராஜனுடைய குமாரன் வாலசிஙக ஜயதுங்க வரராஜன் காலத்து இவர்
யாழ்ப்பாணத்திற்குப் போனாரென்பதும் இன்னுஞ் சில விஷயங்களும் தெரிய வருகின்றன.:-
"இரண்டு கண்ணு மிழந்த கவிவீரராகவ முதலியா ரென்பவர் யாழ்ப்பாண வாலசிங்க மகாராஜன் பேரில் பிரபந்தங்க ளியற்றிச் செங்கடக நகரிக்குப்போய் ராச ச*முகத்தில் யாழ்வாசித்துப் பாடிவ ருங்காலத்தில் அரசன் மிகச்சந்தோஷப்பட்டு இலங்கையின்வட திசையிலுள்ள மண்திடல் என்னும் நாட்டை அவருக்கு உபகாரமாகக் கொடுத்தான். இந்நாட்டுக்கு அவர் யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு இவ்விடம் வந்து சேர்ந்து வட திசையிலிருந்து சில தமிழ்க் குடிகளை யழைப்பித்து அக்காலத்திற் சிங்களவரையும் மற்றும் பிறரையும் அரசாளக் கருதித் தமிழ்க் குடிகளையு மங்கிருந்த சிங்களவருடன் குடியேற்றிச் சிலகாலம் அரசாட்சி செய்து வயோதிகராய் இறந்தார்"
---------------
* ஆருருலா ஆசிரியர் இவர்தாமோ வெனச் சரியாய் அறியும் பொருட்டுக் கும்பகோணம் காலெஜ் தமிழ்ப்பண்டிதர் பிரமஸ்ரீ உ. வே. சுவாமிநாத ஐயரவர்கட்கு எழுதிக் கேட்டபோது அவர் "ஆரூருலா கவிவீரராகவ முதலியார் செய்ததே. வேறெவருஞ் செய்யவில்லை. இவ்வுலாவை யான் பலமுறை படித்திருக்கிறேன். விரைவிற் பதிப்பிக்கவுங்கூடும்" என்று இவ்வாறு எழுதியதைக்கண்டு களிகூர்ந்தேன்.
† பக்கம் 11-14
"இப்படி யிருக்குங்காலத்துப் பொன்பற்றியூர் வேளாளனாகிய பாண்டிவளவ னென்னும் பிரபுவின் முயற்சியால் திரை உக்கிர சோழன் மகன் சிங்ககேதுவுக்கு மருகனாகிய சிங்கையாரியன் என்பவன் பிறகு யாழ்ப்பாணத்திற்கு அரசனாயினான். அவன் அப்போது பற்பல இடங்களிலிருந்த வேளாளரைக் கொண்டுவந்து இவ்விடம்
குடியேற்றினான். அவர்களில் உயர்குல வேளாள மரபினராகிய தொண்டை மண்டலத்து மண்ணாடுகொண்ட முதலியாரை இருபாலையிலும், செய்யூர் இருமரபு துய்ய தனி நாயக னென்னு வேளாளரை நெடுந்தீவிலுங் குடியேற்றினன். *** சிங்கையாரியன் காலத்துப் புவனேகவாகு என்னும் மந்திரி அங்குள்ள கந்தசாமி கோயில் திருப்பணி சாலிவாகன சகம் 870- ஆம் (870+78=948.கி.பி.) வருஷத்தில்
நிறைவேற்றினான்"
'யாழ்ப்பாண வைபவம்' என்னும் நூலிலுள்ள இவ்விஷயம் முழுதும் உண்மையென நம்புவதற்கிடமில்லை. அவரங்கேயே யிருந்திறந்தா ரென்பதும் யாழ்ப்பாணத்திற்கு அரசராயிருந்து ஆண்டனர் என்பதும் அவரிருந்த காலம் கி.பி. 948-வது வருஷத்திற்கு முற்பட்டது என்பதும் பொருத்த முற்றனவாகத் தோற்றவில்ல. அவர் தமிழர்களை அவ்
விடங் குடியேற்றி யிருக்கலாம். மற்றவை எவ்வளவு உண்மை யென்பது மேலே தெரியவரும். இவர் பரிசுபெற்றுத் திரும்பித் தன்னூர்க்குப் போம்போது திருநெல்வேலியிலுள்ள கயத்தாற்று அரசன்பேரில் ஒருலாப பிரபந்தம் பாடினர்.
அதனைக் கேட்டுக்களித்த கவிகளிலொருவர் அப்போது இவரைப் புகழ்ந்து பாடிய வெண்பா:-
"ஒட்டக்கூத் தன்கவியு மோங்கியகம் பன் வலியும்
பட்டப் பகல்விளக்காய்ப் பட்டவே- யட்டதிக்கும்
வீசுங் கவிவீர ராகவனாம் வேளாளன்
பேசுங் கவிகேட்ட பின்"
இக்கவியினால் இவர் கம்பர்க்கும் ஒட்டக்கூத்தர்க்கும் பிந்தினவரென்று ஏற்படுகிறது. ஒட்டக்கூத்தரும் கம்பரும் குலோத்துங்கசோழன் காலத்திருந்தவர்கள். *அவனிருந்தது
பதினோராம் நூற்றாண்டினிறுதியில். ஆகவே யாழ்ப்பாண வைபவத்திற் கூறுங்காலம் சரியான தன்றென்பது எளிதில் விளங்கும்.
---------------
* Kulottunga Chola Deva I (1070- 1118) See South Ind[an Inscriptions, Vol II Part ii,Page 153.
"மின்னு மாளிகை யனந்தை யாதிபதி
சந்த்ரவாண மகிபாலன்முன்
வீரராகவன் விடுக்கு மோலைதன்
விருப்பினால் வலியவேயழைத்
துன்னுகாவிய மதிற்பெருத்ததொரு
கோவை யோதுகெனவோதின
னோதி மாதமொரு மூன்று போகியொரு
நாலுமாத மளமாகவு
மின்னமுந்தனது செவியிலேறவிலை
யென்னிலென்ன வுலகெண்ணுமோ
விராசராசர் திறைகொள்ளு மென்கவிதை
யிங்குவந்து குறையாகுமோ
தன்னையென் சொல்வரென்னை யென்சொல்வர்
தான்தமிழ்க்கு மணமல்லவோ
தன்பு கழ்க்குமிது நீதியோ கடிது
தானின்னே வரவேணுமே"
என்னுஞ் சீட்டுக்கவியினால் இவர் அனந்தையாதிபதி சந்திர வாணன் மீது ஒரு கோவை பாடியதாகத் தெரியவருகிறது.
இனிதினிதெனச்சேரசோழபாண்டியர் மெச்சுமிச்சி தமதுரவாக்கி
யீழமண்டலமளவுத்திறை கொண்டகவி வீரராகவன் விடுக்குமோலை
வனிதையர் விகாரமன் மதராஜ ரூபன்மயி லையாதி பதிசக்கிர
வாளத்தியாகிநங்காளத்தி கிருஷ்ணப்பவாணனெதிர்கொண்டுகாண்க
கனதமிழ்த் துறையறி மரக்கலங் கன்னிகாமாட நன்னூற்
கட்டுபேர் கொட்டாரம் வாணி சிங்காதனங் கவிநாடகஞ் செய்சாலை
வினவுசிவகாதையிற்சர்க்கரையெனத்தக்க வினையேனுடம்புநோயால்
மெலியுமோ மெலியாத வகைபால்பெருத்ததொருமேதிவரவிட வேணுமே"
இந்தச் சீட்டுக்கவியினால் இவர் ஈழமண்டலஞ் சென்று பரிசு பெற்ற விஷயம் தெரியவருகின்றது. அங்கேயிருந்து இறந்தனர் என்னுங் கொள்கையை இது குலைத்து விடுகின்றது.
இவர் செங்கற்பட்டிலிருந்த திம்மய்ய அப்பய்யன் என்பவருடைய வேண்டுகோட் கிணங்கித் திருக்கழுக்குன்றப் புராணம் பாடினார். அது பின்வருஞ் சீட்டுக்கவியாற் றெரியும்:-
"இந்நாளிருந்த பேர்புதிய பாகம் பண்டிருந்த பேர்பழையபாக
மிருபாகமும் வல்ல லக்கணக் கவிவீரராகவன் விடுக்குமோலை
அன்னாதிதானப் பிரவாசன் பிரசங்கத்தனந்த சேடாவதார
னகிலப்பிரகாசன் திம்மய்ய வப்பய்யன் மகிழ்ந்துகாண்க
தன்னாளு மோலையும் வரக்கண்டுநாம் வேத சயிலபுராணத்தையித்
தனைநா ளிருந்தோதி னோமரங்கேற்றுவது தான் வந்தலாமலில்லை
நன்னாவலோருடனிதைக்கேட்டெனைச்சோழநாட்டுக்கனுப்பவேணும்
நலிலோலை தள்ளாமலே சுக்கிரவாரத்து நாளிங்கு வரவேணுமே"
இதனால் திருக்கழுக்குன்றப் புராணம் பாடியபிறகுதான் இவர் தெற்கே சென்றனர் என்று ஊகித்தற்கிடமுண்டு. ஆயினும் இவர் யாழ்ப்பாணத்திற்குப் போனது இதற்குப்பின்னேனும் முன்னேனு மிருக்கலாம். பின்னெனக் கொள்வதே சிறப்புடைத்து. இவருடைய சீட்டுக்கவியின் சிறப்பை அக் காலத்துள்ள நிரஞ்சனநாதர் என்பவர் ஒருவர் எடுத்தோதியிருக்கின்றனர்.
"சீட்டுக் கவியென்று சொல்வார் சிலரந்தத் தீட்டுக்கவி
காட்டுக் கெறித்த நிலவாகிப் போம்செங்கனகரத்னச்
சூட்டுக் கிரீட முடிவேந்த ருற்பத்தி குறைகொள்ளும்
நாட்டுக் கிலக்கியங் கவிவீர ராகவ னற்கவியே"
இப்படிப் பல்வேறிடங்கள்சென்று பாடிப்பரிசுபெற்றுத் திரும்பித் தன்னூர் சேர்ந்தபோது தன் மனைவி தான் பெற்றுவந்த பரிசு யாதெனக் கேட்டதும் அதற்கிவர் கூறிய உத்தரமும் பின்வரும் பாத்தெரிக்கின்றது.
"இம்பர்வா னெல்லை யிராமனையே பாடி
யென் கொணர்ந்தாய் பாணா நீயென்றாள் பாணி
வம்பதாங் * களப மென்றேன் பூசுமென்றாள்
மாதங்க மென்றேனாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழ மென்றேன்றின்னு மென்றாள்
பகடென்றே னுழுமென்றாள் பழனந்தன்னைக்
கம்பமா வென்றே னற்களியா மென்றாள்
கைம்மா வென்றேன் சும்மா கலங்கினாளே."
இவர்தன் மனைவியுடனிருந்து பலநாளில்லறம் இனிது நடாத்தி அந்தத்திற் †சிவசாயுச்சிய முற்றனர்.
------------------------------
* களபம் = யானை. வாசனைத்திரவியம். மாதங்கம்=யானை; பொன். வேழம் = யானை;கரும்பு. பகடு=யானை; எருது. கம்பமா=யானை.; மா. கைம்மா = யானை. இவற்றை இவர் யானை யென்னும் பொருளில் உபயோகிக்க இவர்மனைவி அதை யறியாது போன்று நடித்து வேறு பொருளைக்கொண்டதாகக் குறிப்பித்தனள் என்பது.
† இவர்பாடிய நூல்களாலும் இன்னுஞ் சில ஆதாரங்களாலும் இவர் சைவரெனத் தெரியவருகிறது. இவர் சந்ததியிற் பிற்காலத் திருந்து "திருவேங்கடக் கலம்பகம்" பாடிய முத்தமிழ்க் கவிவீரராகவ முதலியார் வைணவர். இவர் பெண்வழி வந்தோர். இவர் வழிவந்தவர்களும் வைணவரே. இப்போதிருக்கும் மகா ராஜ ராஜ ஸ்ரீ ஸ்ரீநிவாச முதலியாரும் வைணவர்.
இவர் இறந்ததைக் கேள்வியுற்றுக் கவிராஜர்களும் புவி ராஜர்களும் ஏக்கமடைந்தனர். அப்போது கயத்தாற்று இராஜா பாடிய கையறுநிலை:-
"இன்னமுதப் பாமாரி யிவ்வுலகத் திற்பொழிந்து
பொன்னுல கிற்போய்ப் புகுந்ததான்- மன்னும்
புவிவீர ராகமன்னர் பொன்முடிமேற் சூட்டுங்
கவிவீர ராகவமே கம்"
"தோற்றா தொழிந்திருந்த தூலக் கவிகளெல்லா
மேற்றா ரகையின் விளங்கியவே- யேற்றாலுங்
கன்னாவ தாரன் கவிவீர ராகவனாம்
பொன்னாருஞ் செங்கதிரோன் போய்"
"முன்னாட்டுத் தவமுனியுஞ் சேடனும் வான்மீகனு முன்முன்னில்லாமற்
தென்னாட்டு மலையிடத்தும் பாரிடத்தும் புற்றிடத்தும் சென்று சேர்ந்தார்
இந்நாட்டுப் புலவருனக் கெதிரிலையே கலிவீர ராக வாநீ
பொன்னாட்டுப் புலவருடன் வாதுசெய்யப் போயினையோபுகலுவாயே"
------
*இக்கோவையைப்பற்றிய கதை ஒன்று உண்டு:- அந்தகக்கவி வீரராகவமுதலியார் இக்கோவையைக் காஞ்சீபுரத்தில் ஒருகால் அரங்கேற்றியபோது அவ்வூரில் வித்வத்திறம் பெற்றிருந்த 'அம்மைச்சி' என்னும் ஒரு தாசி ஆங்குப்போந்து, கவிராயர் தம் கோவையின் முதற் பிரிவாகிய களவியலில் "பெருநயப்புரைத்தல்" என்னும் துறையின்பாற்படும்,
"மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே
பாலேரி பாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்
டாலே யெருவிட முப்பழச் சேற்றி னமுதவயன்
மேலே முளைத்த கரும்போ விம்மங்கைக்கு மெய்யெங்குமே"
என்னுஞ் செய்யுளைச் சொன்னதும், அவள் "கவிராயர்க்குக் கண் தான் கெட்டது; மதியங்கெட்டதோ" என்றாள். அவர் ஒன்றுந் தோன்றாது சற்றசைவற்று நிற்கக்கண்டு அவள், "ஐயா, கரும்பு புன்செய்ப்பயிராயிற்றே. 'சேற்றில் முளைத்த கரும்பு' என்று சொன்னீர்களே. பொருந்துமா?' என்னலும் அவர் "வேண்டுமாயின்மாற்றி விடலாம்," என்ற சொல்லி ஏட்டைப் பார்த்துப்படித்துக் கொண்டு வருபவரை நோக்கி "ஐயா, கொம்பை வெட்டிக் கால்கொடும்" என்னலும் கவிராயருடைய அபிப்பிராயமறிந்து அவர் உடனே "பழச்சாற்றினமுதவயன் மேலே முளைத்த கரும்போ" என்று வாசித்தார். இருவருடைய புத்திக் கூர்மையை அங்குளார் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
மறுநாள் பிரசங்கத்திற்கு அம்மைச்சி தனது பல்லக்கிலேறி வருவதையறிந்த கவிராயர்,
"கலைமகளு நாணிநின்று கைகட்டிப் போற்றச்
சிலைமதவேள் முன்கணையே தாங்கக்- குலமருவு
கொம்மைச்சிங் காரமுலைக் கோதி றிருப்பனங்காட்
டம்மைச்சி வாறா ளதோ"
என்று பாடயதை யவளறிந்து அன்று முதல் இவர்களிருவரும் வித்வத்தன்மையினால் சிநேகிதரானார்கள்.
இவ்வாறிருக்கும் நாளில் அவ்வூர்ப் பிராமணர்கள் 'இவள் வித்யாகர்வங் கொண்டிருக்கிறாள். இவளை எவ்விதத்தினாலாவது அவமானப் படுத்தவேண்டும் ' என்றெண்ணி, வரதராஜப் பெருமாள் இரதோற்சவத் தினத்தன்று இரதத்தை அவள் வீட்டில் முட்டச் செய்து, வீட்டையிடித்துத் தள்ளிப் பிறகு தேரைச் செலுத்தவேண்டு
மென்று பிராமணர்கள் அவட்குத் தெரிவிக்க, அவள் அதனைத் தன் மித்திரராய கவிராயர்க்குத் தெரிவித்தாள். அவர் பிராமணர்களை யழைத்து, "ஐயன்மீர். வீட்டை யிடிக்காது வேறுபாயந் தேடலாகாதோ தேர்செல்வதற்கு?" என்ன, அவர்கள் வீட்டையிடித்தால்தான் இரதம் எளிதிற் செல்லும் என்றார்கள் . கவிராயர் அவர்களுடைய உட்கருத்தறிந்து அவர் தம் தீக்குணத்துக்குப் பரிதபித்து,
"பார்ப்பார் குரங்காய்ப் படையெடுத்து வந்தீரோ
தேப்பெருமா ளேகச்சிச் செல்வரே-கோப்பாகக்
கொம்மைச்சிங் காரலங்கைக் கோட்டையென்று வந்தீரீ
தம்மைச்சி வாழு மகம்"
என்று இப்பாட்டைப்பாடியதும் வீட்டை யிடிப்பதற்கில்லாது தேர்சென்று விட்ட-தெனவும் சொல்வர், இக்கதையைச் சிலர் இன்னும் வேறுவிதமாய்ச் சொல்லுதலு முண்டு.
--
இவரியற்றிய நூல்களாவன:- திருக்கழுக்குன்றப் புராணம், திருவாருருலா, *சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசனுலா, சேயூர்க்கந்தர் பிள்ளைத்தமிழ். சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றமாலை, "கந்தரந்தாதியைப் பாராதே கழுக்
குன்றத்து மாலையை நினையாதே" என்னும் பழமொழியினால் இம்மாலையினுடைய அருமையும் பெருமையுமினிது விளங்கும். ஆயினும் இவர்தான் கழுக்குன்ற மாலையாசிரிய ரென்பது ஒரு தலையாக்கொள்ள முடியவில்லை.
"மாடேறு தாளு மதியேறு சென்னியு மாமறையோ
னோடேறு கையு முடையார் தமக்கிட மூருழவர்
சூடேறு சங்கஞ் சொரிமுத்தை மட்டையென் றேகமலக்
காடேறு மன்னஞ் சிறகா லணைக்குங் கழுக்குன்றமே"
இச்செய்யுளும் அக்கழுக்குன்ற மாலையிலுள்ளது தான் இவர்தம் சீட்டுக் கவிகளிற் குறித்துள்ள ஈழநாட்டரசனாகிய பரராசசிங்கம் (பரராசகேசரி), சந்திரவாணன், திருக்க
ழுக்குன்றப் புராணம் பாடச்செய்த திம்மய்ய அப்பய்யன் என்பவர்களுடைய கால மின்னதெனத் தெரியவரின் இந்நூலாசிரியர் காலம் இதுவென உறுதியாய்க் கூறலியலும். பரராசகேசரி பதினேழாம் நூற்றாண்டின் முதலிலிருந்ததாகத்
தெரியவருகிறது. அனந்தையாதிபதி சந்திரவாணனுடைய வரலாறு ஒன்றும் இன்னும் புலப்படவில்லை. அனந்தை என்பது திருவனந்தபுர மன்றென்று தெரியவருகிறது.*
---------------
*"திரு அனந்தையாதிபதி சந்திர வாணன்" என்பதில் உள்ள திருவனந்தை தற்காலத்திய திருவனந்த புரத்தைக் குறிக்குமென்று கொள்வது இயல்பேயாகும். ஆயினும் அது அந்நரைக்குறித்ததாகக் காணவில்லை. ஏனெனின் திருவனந்தபுரத்து அரசர்களுக்கெல்
லாம் ரவிவர்மா என்றம் ஆதித்யவர்மா என்றும் பேரிருந்ததே யன்றி இப்பெயரைக் காணோம். [The History of Travancore, by P. Sankunni Menon , pp. 98-110.: Kings from' 1502-1728]
திம்மய்ய (திம்மப்ப?) † என்னும் பேருடைய கனவான்கள் சிலர் செங்கற்பட்டில்
பூர்வீகத் திருந்திருக்கிறார்கள். இது யாரைக் குறித்து நிற்கிறதென்பது தெரியவில்லை. விஜயநகர ராஜ்ஜியத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் (1509-1530) காலத்து மந்திரியாயிருந்த திம்மராஜா என்பவர் (1526) செங்கற்பட்டிற்குவந்து அதற்குக் கிழக்கிலுள்ள திருவடீசுரம் என்னும் கோட்டையிலிரு்ந்த குறும்பர் தலைவராகிய
காந்தவராயன் சேதுராயன் என்பவர்களைத் தந்திரத்தாற்றொலைத்துச் செங்கற்பட்டை இராயருடைய ஆளுகைக்கு உள்ளாக்கினார். மேற்குறித்த செய்யுளிற் குறிக்கப்பட்டவர் இவர்தாமென்ற சொல்வதற்கில்லை. ஒருவேளை இவர் சந்ததியாராக விருந்திருக்கலாம். தலைக்கோட்டையுத்தத்தில் (1565-கி.பி.) தோல்வியுற்று விஜயநகர ராஜ்ஜியம் க்ஷீணதிசை யடைந்த காலத்து அக்குலத்தவர் அவ்விடம்வி்ட்டுச் சந்திரகிரியிலும், பதினாறாம் நூற்றாண்டிறுதியில் செங்கற்பட்டிலொரு கோட்டை
கட்டிக்கொண்டு அவ்விடத்திலும் சிலகாலந் தங்கியிருந்தார்கள். இராயரக்கு மந்திரியாயிருந்த திம்மராஜா அந்த இராயராலேயே அவமதிக்கப்பெற்றுத் தன்னிலையிழந்தனர்.
-----
† திம்ம +ஐய=திம்மைய=திம்மய்ய; திம்மராஜகுளம் என்று ஒருகுளம் இப்போதும் செங்கற்பட்டிலிருக்கிறது. See' pages 83 88, Chingleput District Manual.
* ஆயினும் அவர் பெயர்கொண்ட இவர் அந்தச் சந்ததியிற்றோன்றிய பிற்காலத்தவரா-யிருக்கலாம். சிறுதேர்ப்பருவம், 6-வது செய்யுளினால் ஆசிரியர் 1521-வது † வருஷத்திற்குப் பின்னிருந்தவர் என்றேற்படுகிறதே யன்றி இன்ன வருஷத்தி லிருந்தா-ரென்பது சரியாக அகப்படவில்லை.
1680௵ திம்மய்யநாய்க்கன் ‡ என்னுமொரு கனவான் செங்கற்பட்டிலும் சென்னையிலுமாக இருந்ததாகத் தெரியவருகிறது. மேற்குறித்த பாட்டிலுள்ள பெயர் இவரைக் குறிக்கினும் குறிக்கலாம்.
---------
*See Sewell's For'gotton Empire (Vijayanagar ) pp. 158, 359.
† அவ்வருஷத்தி லிருந்திருக்கக் கூடாதோ எனின் இருந்திருக்க முடியாது. அக்காலத்தே இந்நூ லெழுதியிருக்கும் பக்ஷத்தில் "மகரம்பகுத்ததிருநாள்" என்றுமாதத்தைமாத்திரம் எடுத்தெழுதாது வாரம், நக்ஷத்திரம், திதி, யோகம், கரணமுதலியவற்றையுங்கூட்டி எழுதியிருப்பார். அதற்குக் கொஞ்சக்காலத்திற்குத் தான்முந்தியதாயின அவ்வூராராயினும் அதனையவர்க்குத் தெரிவித்திருப்பார். இது எழுதியது (1521 திருவிழா) ஏற்பட்டதற்கு அநேக வருஷகாலம் பிந்தியதென்று தெரியவருகிறது.
‡ See Page 121. Madras in the Olden Times by J. Talboys Wheeler.
கவி வீரராகவ முதலியார், இலக்கண விளக்கம் செய்த வைத்தியநாத நாவலரைப் பற்றிப் புகழ்ந்திருக்கின்றனர்:-
§" ஐம்பதின்மர் சங்கத்தா ராகிவிடா ரோநாற்பத்
தொன்பதின்ம ரென்றே யுரைப்பரோ-இம்பர்புகழ்
வன்மீக நாதனருள் வைத்திய நாதன்புடவி
தன்மீதந் நாட்சரித்தக் கால்"
'தொண்டை மண்டல சதகம்' பாடிய படிக்காசுப்புலவர் இந்நாவலருடைய மாணாக்கர். இப் படிக்காசுப்புலவர் இராமநாத புரத்தில் அரசாண்டுவந்த இரகுநாத சேதுபதி (1685-1723 கி. பி) யின் சமஸ்தான வித்துவான். 1685ஆம் வருடம் வரையும் அரசாண்ட சேதுபதியின்பேரில் அக்காலத்திலிருந்த அமிர்த கவிராய ரென்பவர் ஒருதுறைக் கோவை யென்னும் ஒரு நூல் செய்திருக்கின்றனர். அமிர்த கவிராயரும் அந்தகக்கவி வீரராகவமுதலியார் காலத்தவார்.
------
§ இலக்கண விளக்கப் பதிப்புரை.
படிக்காசுப் புலவர் சுமார் 200 வருஷங்கட்கு முன்னிருந் திருப்பதாய்த் தெரியவருவதனால் அவராசிரியர் காலத்திருந்த அந்தகக் கவிவீரராகவமுதலியார் அதற்கு முன் இருபது அல்லது முப்பது வருஷங்கட்குமுன் னிருந்திருக்கலாம் *. அதாவது இற்றைக்குச் சுமார் 240 வருஷங்கட்கு முன்னிருந்திருக்கலாம். திம்மய்ய அப்பய்யன் (1680) மேற் குறித்த நாய்க்கராக இருக்கலாம். இவ்வந்தகக் கவி வீரராகவ முதலியார் வம்சத்தில் இப்போதிருக்கும் கவிராயர் ம-ள-ள-ஸ்ரீ ஸ்ரீநிவாச முதலியார் அவர்க்கு எட்டாவது சந்ததியார் என்ற தெரிவருதலால், மேற்குறித்த காலமே (1661?) அந்தகக் கவிவீரராகவ முதலியார் காலமென்றுகொள்ளலாம்.
இவர் இன்ன வருஷத்தில்தா னிருந்தா ரென்பது இதனினும் விவரமாய் இனித் தெரியவரின் இவரியற்றிய +கலம்பகத்தை அச்சிட்டு வெளிப்படுத்தும்போது, இதன் விவரமும்அதன் முகவுரையிற் கூறப்படும்.
சென்னை, பிலவ வருஷம் தை மாதம் 28ஆம் தேதி.
க. குப்புசாமி முதலியார்.
--------
* இலக்கணக்கொத்து நூலாசிரியராகிய சாமிநாததேசிகர், நன்னூல் விருந்திரை யெழுதிய சங்கர நமச்சிவாயப் புலவருடைய இயற்றமிழாசிரியர். இந்தத்தேசிகர் வைத்தியநாத நாவலர்காலத்துச் சிறுவயதினராக விருந்திருக்கின்றனர். சங்கர நமச்சிவாயப் புலவர் 180 வருஷத்திற்கு முன்னிருந்திருக்கின்றனர்.
+ அம்புலிப்பருவம், செய்யுள் 10. பக்கம் 55.
----------------------
சிவமயம் :: திருச்சிற்றம்பலம்.
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
விநாயகவணக்கம்.
பேறாய கீரன்முற் பகருமுரு காறெனப்
பெருகாறு கண்டுமுலகிற்
பேரருண கிரிதிருப் புகழ்கண்டு நாணாது
பெறுமவத் துறுமாசையா
லேறாய வாகன்க் கடவுடன் மைந்தனுக்
கெமதுசெய் கைக்கந்தனுக்
கிளமைவள மைப்பிள்ளை யங்கவிதை நூலெழுத
வென்கரத் தாமரைதொழு
மாறாயி ரத்துமுக முடையது சடைக்கா
டமைத்தநா யகன்வருவிலா
மந்தமா மேருவிற் பந்தவே தங்குறித்
தறிவியா தன்கூறுநா
ணூறாயி ரத்தின்மே லிருபதை யாயிரங்
கவிதைநூ லகலமுழுது
நுதிமருப் பாலெழுது மொருவா ரணத்தினிரு
நூபுரத் தாமரையுமை.
----------
முருகாறு எனப் பெருகு ஆறு = திருமுருகாற்றுப்படை யென்னு நூல். செய்கை - சேயூர் என்பதன் முரூஉ. நூபுரத் தாமரை யென்றதறெகேற்ப, "கரத்தாமரை" யென்றார். ஆயிரத்து முகமுடையது = கங்கை. பந்தவேதம் = சாகைகளையுடைய வேதம், கவிதை
நூல் = பாரதம். அவற்றுறுமாசையால் எனவும் பாடம்.
-----------------------------------------------------------
முதலாவது : காப்புப் பருவம்.
திருமால்.
உலகமார் பலகோடி யுயிருமுயிர்த் துடையா
ளுபயமுலைத் தலையமுதி னொழுக்கருந்துங் குருந்தைத்
திலகமார் மகுடமிசைக் கடம்பலரு மரசைச்
செய்கைவளம் பதிதெய்வ சிகாமணியைப் புரக்க
விலகுமார் பகலமெலாங் கமலையிடைக் கொடுத்து
மெழுந்துவிழும் பரிதிமதி யிருகைவிடா தெடுத்தும்
பலகமார் படிசுமந்த பாப்பமளிப் படுத்தும்
பாற்கடன்மேல் விழிவளருங் கார்க்கடன்மே னியனே. (1.1)
வன்மீகநாதர்.
வேறு.
பூநாறு பொற்பிற் கடம்பன் றனைப்புங் கவர்க்காகவே
போராடு சத்தித் தடங்கஞ் சனைப்புன் சொலைத்தீருமால்
பானாறு முத்தப் பரங்குன் றனைபண் டுமைத்தேவியார்
பால்வாய னைப்பச் சிளங்கந் தனைப்பண் பளித்தாளுமால்
கானாறு பக்கத்தி லெங்குங் குதிக்குங் கயற்பாவிலே
காவாயி ரத்துப் பசுங்கொம் புதிர்க்குங் கனிக்கோடிபாய்
தேனாறி ரைத்துக் குரம்புங் கரைக்குந் திரைப்பாலிசூழ்
சேயூர் தனிற்புற் றிடங்கொண் டிருக்குந் திருத்தாதையே. (1.2)
முத்துவாளியம்மையார்.
வேறு.
மகரமெறி கடல்சுவற விடுசத்தி வீரனை
வடவரையி னருவிபுரை வடவச்ர மார்பனை
மருவிலறு முகனைநறு மதுமிக்க நீபனை
மதுரையிறை யவர்பொருளை யளவிட்ட தூயனை
யகரமுத லெழுதலென வகிலத்து மூலனை
யனலிபெறு மனைவிதன தருமைக்கு மாரனை
யருணகிரி சொரிகவிதை யமுத்தி னேயனை
யரன்மகனை யரிதன்மரு கனைநட்பி னாள்பவ
ணிகரசல வசலமக ணிருதப் புராதனி
நிமலையநு பவகமலை வனதுர்க்கை மாலினி
நிலவலய முழுதுயிரை நிருமித்த காமினி
நியமவறு சமயநெறி நிறுவிட்ட மாயினி
சிகரகிரி விலின்வலவர் தெரிசித்த மோகினி
சிவபாமை தருமையுமை திலதத்தி லானனி
திருபரிதிமதிமுளரி யொருமுக்க ணாயகி
திரையர்புரி வருகௌரி திருமுத்து வாளியே. (1.3)
கங்காதேவி
வேறு.
முதியதிரி புவன பதவி புதைதரப் போர்த்தவண்
முனிவர் முனிவினெரி சகரர் கதிபுகச் சேர்த்தவண்
முதல்வன் முதல்விகர வியர்வி லொலிகெழப் பூத்தவண்
முழுகு மனைவரையு மொழுகும் வினையறத் தீர்த்தவள்
குதிகொ ளருவியிம கிரியின் மகளெனச் சீர்த்தவள்
குலவு சதமொருப திலகு முகமெடுத் தார்த்தவள்
குழகர் சடிலகுல மவுலி குடிகொளத் தாழ்த்தவள்
குமரி முதனதியி னரசி பதமெடுத் தேத்துதும்
விதியின் முடியுடைய விறல்கொ டறைசிறுத் தாக்கனை
வெளிறு முடுமகளி ரறுவர் முதுமறைத் தேக்கனை
விரியு முவரிமிசை வெயிலின் மயின்மிசைத் தோற்றனை
விமலர் செவியினொரு மொழியை மொழிபகர்த் தேற்றனை
மதியை மதிதவழு மதுரை முதுதமிழ்க் கூட்டனை
வலிய தணிகைதனில் வளர்கு வளைமலர்ச் சூட்டனை
வழுவி லருணகிரி புகழு முதுதமிழ்த் தூக்கனை
வளவ நகரின்வட தெருவின் முருகனைக் காக்கவே. (1.4)
சித்தி விநாயகர்.
வேறு.
மருவரு சுருப்பொலி கலித்ததார் நீபனை
வடபகி ரதிக்கொடி வளர்த்தவா காரனை
வரைபக வெடுத்தெறி தடக்கைவே லாளனை
மகிதல மிமைப்பினில் வளைத்துமீள் வீரனை
வெருவரு பணிக்குல மலைத்தபோர் மாவனை
விமலைதன் முலைக்குட மடுத்தபால் வாயனை
விபுதர்தொகு திச்சிறை யறுத்தபூ தேசனை
விதிபகை ஞனைத்தனி புரக்,குமோர் காவல
னிருவரை யொருத்தரென வைத்தகோ மான்மக
னெழுகடன் மடுத்திடர் படுத்ததாண் மூடிக
னிரணிய பொருப்பெழுதி யிட்டமா பாரத
னிதுபவள வெற்பென வெறித்தநீண் மேனிய
னருவரை யெடுத்தென வெடுத்தபான் மோதக
னவல்பயறு முப்பழமொ டப்பமா மோதக
னளகைகன கப்பதி நிகர்த்தசே யூரினி
லவரவர் நினைத்தது முடித்தமால் யானையே (1.5)
சரவணப் பொய்கை.
வேறு.
ஆலைக்கே கரும்பொழியப் பொழிசாறு வழிதோ
றாறதிரும் வயற்செய்கை யாறுமுகத் தரசைப்
பாலைக்கேயடை கொடுத்து மொழிந்த பொய்யா மொழியைப்
பழிக்குமொரு தமிழ்க்குதலைப் பசுங்குருந்தைப் புரக்க
காலைக்கே மலர்க்கமலத் திடைக்கமல மாட்டிக்
கடும்பகற்கே பசித்ததெனக் கார்த்திகைப்பா லூட்டி
மாலைக்கே திரைக்கரத்தா லம்புலியுங் காட்டி
வைகறைக்கே சுருமபோட்;டி வளர்த்தசர வணமே (1.6)
வேலாயுதம்.
வேறு.
மருங்கடுத்தவர் பராவாய் வணங்கு மெயத்தவர் தயாவாய்
மகிழ்ந்த முக்கண ரவாவாய் வழங்கு முற்கருதி வாழ்வா
யொருங்கு கற்றவர் வினாவா யுகங்களிற் பெரியதேவா
யுயர்ந்தமற்றெமது சேயூ ருறைந்த பொற்குகனையாள்வா
யருங்கடற் சுவறு தீயா யகன்புவிக் குதவு தாயா
யகழ்ந்து வெற் புருவு கூரா யறந்த ழைத்தபழ வேரா
யிருங்கிரிக் குமரி கூறா யிறைஞ்சுமப் பகைவர் பேறா
யெழுங்கதிர்ப் பரிதி போலா மிவன் றிருக் கைவடி வேலே. (1.7)
வைரவக்கடவுள்.
வேறு.
நிலைது றந்தவஞ் சகர கம்புகா
நிமலர் மைந்தனைக் கமலர்தோ
ணெரிப டத்தொடுத் தொருசி றைக்குள்வைப்
பவனை நீபமா லிகையனைத்
துலைது றந்தவண் டரள வாணகைத்
தோகை வள்ளிபொற பாகனைத்
துய்ய செய்கையாள் பவனை யாள்பவன்
கையி னாககங் கணமொடுங்
கொலைது றந்தவித தகர்வி ழிப்புலங்
குளிர ஞாளியந் திரளொடுங்
குவல யப்பிதா வொருத லைக்கலத்
தொடுமி டித்துடிக் குரலொடுங்
கலைது றந்தவத் திரும ருங்குடுத்
துடைய மேகலைக் கலையொடுங்
கழலசி லம்பொலித் திடவ ருந்தனிக்
கரிய கஞ்சுகக் கடவுளே. (1.8)
கார்த்திகைத்தாயார்.
வேறு.
நாட்டுப் பிறையூர் வளநாட்டு
நயங்கூர் சேயூர் நறுங்கடம்பி
னேட்டுப் பயனைத் தினம்புரப்பா
ரிவனுக் கமுதீந் தினிதிருப்பா
ராட்டுக் கொருகால் புகவகுப்பா
ராட்டுக் கருகா மருங்கணித்தா
மாட்டுக் கொருமுக் காலகொடுப்பார்
வானத் துடும் மடவாரே.. (1.9)
பிரணவப் பொருள்
வேறு.
முறங்காது கடுத்தகடக் களிற்றயிரா வதத்தன்
முதற்பதவிக் குதவியென முளைத்ததெய்வ முளையை
மறங்காது வேலிலையிற் றழைத்தெழுகற் பகத்தை
வளவர்வளம் பதித்தோகை வாகனனைப் புரக்க
விறங்காத சடைமகுட மிறக்கியொரு செவிதாழ்த்
திருநாலா யிரமுகத்துக் கொருக்காலென் றிருக்கா
லுறங்காத வெண்கணனைச் சிறைவிடுக்க வுலகுக்
கொருபொருளா மவன்கேட்டு மோரெழுத்தின் பொருளே. (1.10)
காப்புப் பருவம் முற்றிற்று.
--------------------
காப்புப்பருவம் :-
அதாவது பாட்டுடைத் தலைவனாய குழவியைத் தேவர் கொலையகற்றிக் காக்கவெனத் தாயர்கூறுங் கூற்றாகப் பாடும் பகுதியதென்க. இது மூன்றாந் திங்களிற் கூறப்படுவது. இரண்டாமாகமென்பாருமுளர்.
1. கடம்பு :- ஆகுபெயராய் மாலையை யுணர்த்திற்று. எழுந்து விழும்=உதித்து மறைகின்ற. பரிதி மதி - என்பன உவமையாகு பெயராய்ச் சூரியன்போன்ற சக்கராயுதத்தையும், சந்திரன் போன்ற சங்கினையுங்குறிக்க நின்றன. பலகம் = ஆயிரந்தலை. பாப்பமளி = சேஷசயனம்.
2 கஞ்சன் = (கரமாகிய) தாமரைமலரையுடையவன்.
3. குரம்பு=வரம்பு. பாலி=பாலியாறு (பாலாறு)
4. நீபன்=கடப்பமாலையை யுடையவன். இறையவர் பொருள்=இறையனார் அகப்பொருள், களவியற்பொருள். சுவாகாதேவியினிடத்து ஓர் கற்பத்துத் தோன்றினாராகலின், "அனலி பெறுமனைவி தனதருமைக் குமாரன்" என்றார்.
5. முனிவர்=கபிலமுனிவர். பார்வதி தேவியார் இறைவன்றனிரு கண்களை மூடலும் அந்தகார முலகின் மூடவே, அவன் தனது நெற்றிக்கண்ணைத் திறப்ப, இறைவி அஞ்சுதலினாலுண்டாகிய அவளது திருக்கரத்து வியர்வையே கங்கையாகப் பரந்தோடியதென்று கந்தபுராணங் கூறிற்றாகலின், "கரவியர்வி லொலிகெழப் பூத்தவள்" என்றார். சிறுத்தாக்கன்=குட்டினவன்
6. கோமான்=அர்த்தநாரீசுரர். சித்தி விநாயகரை, நினைத்ததை முடிக்கும் விநாயகர் எனவுங்கூறுப. மா=சூரபன்மனாகிய மாமரம்.
7. "பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே-யென்பேதை செல்லற் கியைந்தனளே- மின்போலு- மானவேன முட்டைக்குமாறாய தெவ்வர் போங்- கானவேன முட்டைக்குங் காடு" என்று பொய்யா மொழிப்புலவர் புகல, வேடனாய்ப் போந்த பெருமான், புலவீர்! உலர்ந்தகாலத்தும் அக்கினி பற்றுதற்கரிய சதுரக்கள்ளி யெரிந்து பொறிபறக்கின்ற பாலைவனத்தில், வேலமரத்து முட்களெரியாது தைத்தல் யாங்ஙனம் என்று பழித்து, "விழுந்த துளி யந்தரத்தே வேமென்றும் வீழி-னெழுந்துசுடர் சுடுமென்று மேங்கிச்-செழுங்கொண்டல்- பெய்யாத கானகத்தே பெய்வளையும்
போயினளே - பொய்யா மொழிபகைஞர் போல" என்று பாடியருளினர். என்னுஞ் சரித மிருத்தலின் "பாலைக்கே யடைகொடுத்து மொழிந்த பொய்யா மொழியைப் பழிக்குமொரு தமிழ்க்குதலைப் பசுங்குருந்தை" என்றார். கமலம் ஆட்டி=நீராட்டி.
8. குவலயப் பிதா=பிரமன். துடி=உடுக்கை. கரிய கஞ்சுகம் = விஷ்ணுவின் தோலாகிய சட்டை.
9. ஆட்டுக்கு=மேடராசிக்கு. ஒருகால்=காற்பாகம். மாட்டுக்கு=இடபராசிக்கு. ஒருமுக்கால்=முக்காற்பாகம். கார்த்திகை முதற்காலில் மேடராசியினும், பின்முக்காலில் இடபராசியினுஞ் சந்திரன் சஞ்சரிக்கு முண்மை கூறியவாறு. கார்த்திகேயக் கடவுளின் வாகனமென்று முரிமைநோக்கி ஆட்டினுக்குத் தங்காற்பாகத்தையும், அவரது தந்தையின் வாகனமென்னும் பெருஞ்சிறப்பு நோக்கி மாட்டினுக்கு முக்காற் பாகத்தையும் கொடுத்தார் என்னும் பொருணயமுந் தோன்றுதலறிக.
10. வளவர்வளம்பதி=சேயூர். இரு நால் ஆய் இரு அம்முகத்துக்கு எனப்பிரித்து பெரிய நான்காகிவிளங்கும் அழகிய முகத்தினுக்கு என்றும், ஆயிரஞ் சதுர்யுகம்கொண்டது பிரமாவிற்கு ஒரு பகலாகலின், நாலாயிரம் உகத்துக்கு என்றும் பொருள்கொள்ளக்
கிடத்தல் காண்க.
-----------------------------------------------------------
இரண்டாவது : செங்கீரைப் பருவம்.
வேயாயி ரங்கோடி சூழ்கின்ற வெற்பெங்கும்
வீழ்கின்ற மேகத்துவாய்
வெள்ளம் பரந்துபல வுள்ளம் பெருஞ்சோலை
வேரித்த மாலந்திளைத்
தோயாது சாரற்க லங்கருவி யைப்புதைத்
தொளிர்வச்சி ரக்குவைசிதைத்த
துழுவைமரை யிரலையரி வழுவைகர டிகள்வருடை
யொழுகச் சுமந்து வழிபோய்த்
தூயாறு மூன்றுமா முத்திப் பெருக்கைத்
துரக்கும் பெருக்க மிதெனச்
சுரிமுகத் திரையும்வெண் ணுரையுங் கரைப்புறந்
தோறும் புரண்டு பெருகுஞ்
சேயாறு பாலாறு செறிதொண்டை வளநாட
செங்கீரை யாடி யருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடி யருளே. (2.1)
இந்தூர் வரைக்குழா மொன்றொடொன் றெதிர்கின்ற
தென்னக் கலோலக்குலத்
தெதிருந் திமிங்கில திமிங்கில கிலங்கோடி
யிகலிப் பொரப்போதலுங்
கொந்தூர் துழாய்மவுலி முதன்மத் திடப்படு
குரைப்பெனப் பகிரண்டமாங்
கோளமும் பூச்சக்ர வாளமும் வெடிதரக்
குடிபோய் நிணச்சுறவெலா
நந்தூர் கரைக்கேற வகில்சந் தனப்பிளவு
நக்கபவ ளக்குவாலு
நகைநித்தி லத்தொகையு மிப்பியு மிதந்தோடு
நரலையிற் சீரலையின் வாய்ச்
செந்தூர திருவாவி னன்குடிப் பெயருர
செங்கீரை யாடி யருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே. (2.2)
இலைக்கோடு சதகோடி கற்பகா டவியோ
டிணங்கிப் பிணங்கு மகிலா
மீரப் பெருங்காடு மாரப் பெருங்காடு
மிவரும் பனிச்சா ரலவா
யலைக்கோடு பொருவுந்தி திரியக் கிராதர்தம்
மரிவை யர்குழாம் விழிபுதைத்த
தலமந்து திரிதரப் பலமந்தி பெருமரத்
தவயம் புரக்க வலமாக்
கலைக்கோடு மொருமுக் கடாசலக் கோடுங்
கறங்கிறால் குத்தி யவிழுங்
கவிழுங் கொழுந்தாரை யாயிர முகங்கொடு
கடற்கிரு மடங்கு பொங்கிச்
சிலைக்கோ டிழிந்தோடு செங்கோடை யங்கடவுள்
செங்கீரை யாடி யருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடி யருளே. (2.3)
பெருவாய் மகோததி யனைத்துந் திறப்பப்
பிறங்க க்ரவுஞ்ச கிரியும்
பேரண்ட மும்புரி மகேந்திரப் புரிசையும்
பிளவுறா வெளி திறப்பக்
கருவாயின் மேகத்து வாகனன் புதல்வனைக்
கடவுளோ ரைச்சி றையிடுங்
காவலன் கூடங் கபாடந் திறப்பக்
கடைக்காலை வேலை யெழுநாட்
பெருவா யகம்புகப் பரிகரித் தேவிதன் ***
புணர்முலையு மாறு மீனப்
பூவையர் டாமுலையு மமுதந் திறப்பப்
புனற்கொழுந் தொழுகு பவளத்
திருவாய் திறந்தழுங் குதலைமத லாய்வாழி
செங்கீரை யாடி யருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடியருளே (2.4)
கறையடிக் கயமெட்டு மிதயந் திடுக்கிடக்
கடலேழு மகடுகிழியக்
கதறிமே கம்பல கலங்கவுடு வுதிரவெங்
காரரா மவுலிசுழலத்
தறையடிப் பெயரவப் பாதலந் தெருமரச்
சக்ரபூ தரமுநெளியத்
தமரமூ தண்டக் கடாகங்க டப்பத்
தயித்தியர் தருக்கி னார்தரப்
பிறையடிச் சிகழிகைச் சசிநா யகன்பதம்
பெறநிறக் கவிர நவிரப்
பேரழ கெழுஞ்சிர நிமிர்த்திரு பதத்துப்
பெரும்பா ருடைந்து புடையச்
சிறையடித் திருள்கெடக் கூவுசே வற்கிறைவ
செங்கீரை யாடி யருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடி யருளே. (2.5)
புவிக்கே யிடந்தந்த சடரத்து நாபிப்
புலத்தா மரைத்த லைமகன்
புகழும் பழஞ்சுருதி திகழுந் தனிப்பரம
பொருண்மாறு பட்ட வளவிற்
றவிக்கே பிடித்திடுஞ் சிறைவிடுத் தருள்கெனச்
சகலப் பெருந்தே வருஞ்
சரணம் புகப்புகப் பிரமன் கிளத்தவுந்
தள்ளாத பொருளோது நாட
கவிக்கே தெரிக்கின்ற தமிழின் சுவைக்கே
கலைக்கே தமக்கிணையிலாக்
கடலே குடித்தோர் செவிக்கேயு மக்கடற்
கடுவே குடிததோர் திருச்
செவிக்கேயு முமைமுலைப் பானாறு கனிவாய்
செங்கீரை யாடி யருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடி யருளே. (2.6)
அக்காட வோநச்ச ராவாட வோமிடற்
றாலங் கிடந்தாடவோ
வாறாட வோமதிக் கூறாட வோதோட்டுக்
கடிதிருச் செவிகடோறு
நக்காட வோபுயக் கொன்றைநின் றாடவோ
நளினக்கை மலராடவோ
நவியாட வோநவி யங்கொதித் தாடவோ
நாலடித் துடியாடவோ
மிக்காட வோகொடு வரித்தோல் கரித்தோல்
விசைந்தாட வோநூபுரம்
வேதாள மொத்தெழுந் தாடவோ வறிகிலேன்
விண்ணாட மண்ணாட வெண்
டிக்காட வாதாடு புக்காடு வான்முருக
செங்கீரை யாடி யருளே
சேயூர வீராறு கேயூர புயவீர
செங்கீரை யாடி யருளே. (2.7)
வேறு.
கரைதொறும் வருவன கருநிற மேதிகள்
கண்டே விண்டோடக்
கடைசியர் கடையர்கண் மடையி னிலாம
லெங்கே னும்போதக்
குரைதொறு முழவெனு மதகுழி கோடிகள்
கம்பா யஞ்சாயக்
குழுமிய வறுபத ஞிமிறுகள் பாய்போ
தும்போ தம்போதித்
தரைதொறு மொளிவிடு சுடரவ னோடு
திண்டேர் திண்டாடச்
சகரர்கை தொடுமடு நிகர்மடு வாவி
யெண்கா தம்போதத்
திரைதொறு மெறிகயல் பொருத செயூரா
செங்கோ செங்கீரை
திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
செங்கோ செங்கீரை . (2.8)
குவைதரு துகிரொளி நிகரொளி மேவுங்
குன்றே குன்றேய்நங்
குழகர்த மடிநடை பழகி யுலாவுங்
கன்றே கன்றேயஞ்
சுவைதரு மழலையின் மொழிமறை நாறு
மெந்தா யெந்தாயென்
றொடுபரி புரவொலி செவிகலி தீர
வந்தாய் வந்தாய்பண்
டவைதரு முனிவரு மமரரும் வாழ
நின்றாய் நின்றாயென்
றகமனன் மெழுகென வுருகி விடாமன்
முன்போ டன்போடுஞ்
சிவைதரு முலையமு தலையெறி வாயா
செங்கோ செங்கீரை
திரைசையர் தொழுகெழு கிரிசை குமாரா
செங்கோ செங்கீரை. (2.9)
கிளைபடு முடுகுல மொடுமுகில் போலு
மென்பூ வுங்காவுங்
கிளிபல குயில்பல வளிபல பேடுட
னுங்கூ டுங்கூடுந்
தளைபடு கழனியி லுழுநர்கை யார
வுந்தே ரும்பாறுஞ்
சததள மலர்குவ ளைகண் மலர்கொடி
சங்கோ டுங்கோடுந்
துளைபடு மதகுழி பொழிமுலை மேதியி
னம்பா லுஞ்சேலுஞ்
சொரிமத களிறென வருமிள வாளைக
ளுஞ்சே ருஞ்சாருந்
திளைபடு வளமழ கொழுகுசெ யூரா
செங்கோ செங்கீரை
திரைசையர் தொழுதெழு கிரிசைகு மாரா
செங்கோ செங்கீரை. (2.10)
செங்கீரைப்பருவம் முற்றிற்று.
--------------------------
செங்கீரைப்பருவம்:-
அஃதாவது ஒருகாலை முடக்கி, ஒரு காலை நீட்டி இருகைகளையும் நிலத்திலூன்றித் தலைநிமிர்த்தி முகமசைத்தாடும் பருவம். இஃதைந்தாமாதத்து அறையப்படுவது.
1. தமாலம்=பச்சிலை மரம். உழுவை=புலி. வழுவை=யானை வருடை=ஆடு. தூய்= தூவி. ஆறும் மூன்றும் ஆம்=ஒன்பதுவகை இரத்தினங்களாகிய, உத்திப்பெருக்கு=சமுத்திரவளப்பம். சுரிமுகம்= சங்கு. கலோலம் =கடற்பெருந்திரை.
2. திமிங்கில கிலம்-திமிங்கிலத்தை விழுங்குமீன். குரைப்பு= ஒலி. நரலை=கடல். திருவாவினன்குடி=பழநி. சித்தன்வாழ்வு என்பர் நச்சினார்க்கினியர். திரு=இலக்குமி, ஆ=பசு, இனன்=சூரியன், இம்மூவரும் பூசித்தலின் அப்பெயர்த்து.
3. கடாசலம் = யானை. இறால் = தேன்கூடு. அலைக்குஓடு = கடற்கு ஓடுகின்ற, பொருஉந்தி = மோதிச் செல்லும் ஆறு, திரிய = ஓட. செங்கோடை = திருச்செங்கோடு என்னுந் தலம்
4. புதல்வன் = சயந்தன். காவலன் = சூரபன்மன். கடைக்காலை வேலை = ஊழிப்பிரளயம். கரித்தேவி = தெய்வயானை யம்மையார். படாம் = உத்தரியம்.
5. கார்அரா= ஆதிசேடன். தரை தறை என நின்றது. சக்கிரபூதரம் = சக்கிரவாளகிரி. கடாகங்கள் தப்ப எனப்பிரிக்க. சிகழிகை=மாலை. கவிரநவிரம்=சூட்டென்னும் அணிவிளங்கும் உச்சி.
7. தோட்டுக்கடி=தோடாகிய ஆபரணம். தோட்டுக்கு=தோட்டினைச் செருகுதற்கு, அடி=பாதம், நக்காட எனவும் கொள்ப. நவியம்=மழு. வாதாடு=காளியுடன் சண்ட தாண்டவஞ்செய்தற்கு.
9. குன்று ஏய் நம் குழகர் தம்மடி=கயிலைமலைக்கண் வீற்றிருக்கும் எமது கடவுளாய சிவபெருமானது மடியின்கண். அம் சுவை எனப்பிரிக்க. சிவை=உமாபிராட்டியார்.
10. அளி=வண்டு. தளை=பயிர். சத்தளமலர்=தாமரைப்பூ. திரைசையர்=சோழராசர். கிரிசை=கிரியின்மகள், பார்வதிதேவியார்.
-------------------------------------------
மூன்றாவது: தாலப்பருவம்
வேறு.
மகரப் பரவைத் திரையிற் பாய்திரை மானப் புனிதச்செவ்
வானீ ரிதழித் தேனீ ரலையின் மலையப் பலகாலு
முகரக் கனகக் கனகிங் கிணிநா முரலத் தழுவுநிலா
முறுவற் செம்முக மாறினு மைம்முக முத்தம் பெறுநேயா
சிகரத் திகிரிக் கிரியுந் திசையிற் கிரியுஞ் சரியக்கார்
திரியப் பொருவோ ரிரியப் புவியுஞ் சேடர் படாடவியுந்
தகரக் கடவுந் தகரே றுடையாய் தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா தாலோ தாலேலோ. (3.1)
வாளுஞ் சங்கு மிளங்கொடி வள்ளையும் வள்ளப் பவளமும்வால்
வளையுங் கிளையும் மிளைய குரும்பை வடமும் டமுந்தூ
சாளுங் கொம்பு மரம்பையு மலவனு மம்பய முந்தலைநா
ளன்பிற் கனலொறு மென்பிற் குதவி யழைக்குங் கவிநாவாய்
தோளுந் தொங்கலு மாறிரு கரமுந் தொடியுஞ் சிறுமுறுவல்
சொரி கனி வாயுந் திருவரை வடமுந் தொடுகிங் கிணியொலியுந்
தாளுந் தண்டையு மழகிய பெருமா டாலோ தாலேலோ
சமர மயூரா குமர சியூரா தாலோ தாலேலோ. (3.2)
காலைத் துயிலைப் பெடையோ டொருவிக கடிமறு கிறசிறகைக்
கஞலக் காயிள வெயிலிற் கோதிக் கழனித் தலைபகலே
பாலைக் கவுரி தரப்பரு கிப்புன லாடிக் களியன்னம்
பனிமா லைச்சோ லைக்கிடை யடையும் பாலித் திருநாடா
வாலைக் கமலத் தவரைப் பிரியா வரிபிர மாதியரோ
டண்டமொ ராயிர கோடியு முண்டுண் டாரவ ளர்க்குமறச்
சாலைத் தலைவி தவக்குல மணியே தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா தாலோ தாலேலோ. (3.3)
பாயா றெனுமத் தொகுதிக் கிறைவிப் பகிரதி செவ்விமுகப்
பனிமதி மண்டல மாயிர மிசையிற் பசியகொ டிக்கமையாப்
போயா றடியுந் துவையா வனசப் போதீ ராயிரமும்
பூவொடு பூவைத் தென்ன வழுத்தும் பொலிதண் டைத்தாளா
தீயா றும்படி யேழ்கடன் மொண்டு திரண்டெழு கொண்டலெனத்
தெள்ளமு தப்பெரு வெள்ள மடிக்கடி திருமுலை யீராறாய்த்
தாயா றும்பொழி வாயாறுடையாய் தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா தாலோ தாலேலோ. (3.4)
கைத்தடி கொண்டுறி பாற்குடி கொண்ட கடம்புரை செய்துபுரைக்
கால்வழி யிற்பொழி பால்வழி யிற்கக னத்து நிலாவழியே
கொத்தடி விண்ட மலர்க்குமு தத்திதழ போலிதழ் விண்டளவிற்
கோவியர் கண்டிரு கரவி சிவந்து கொணர்ந்துரல கட்டியநாண்
மத்தடி பட்டவர் தங்கை குயத்தினும் வைகை நதிக்கரைவாய்
மாறடி பட்டவர் வீறு புயத்தினு மாறி யடிக்கடி போய்த்
தத்தடி யிட்ட சதங்கை யடித்தல தாலோ தாலேலோ
சமர மயூரா குமர செயூரா தாலோ தாலேலோ. (3.5)
வேறு.
ஈர மனத்தவர் வாழ்வாய் நோவாய் வீழாமே
யேம புரத்திரு வானா ரானா ரானாமே
தூர விடக்கட னீர டேசூ ரோடாமே
சோரி யுறப்பொரு வேலா தாலோ தாலேலோ
பார வயற்றுயி னாகூர் கால்வாய் பால்பாயப்
பாயெரு மைக்கதி யாலே மேலே சேலேபோ
யார முழுக்கழி சூழ்சே யூரா தாலேலோ
வாறு முகப்பெரு மானே தாலோ தாலேலோ. (3.6)
சோலை வனக்கர னோடே தேர்கா லாளோடே
தோளெனும் வெற்பிரு பானா னானான் மானானான்
வேலை யுரத்தெறி கோலே மாலே போலாவான்
மேன்மரு கப்பெரு வேலா தாலோ தாலேலோ
மாலை யெனத்திரி மீனா மீதே னானாமே
வாரி யலைத்தலை சாறே றாமே மாறாமே
யாலை பலப்பல பாய்சே யூரா தாலேலோ
வாறு முகப்பெரு மானே தாலோ தாலேலோ (3.7)
வேறு.
வருண னுக்குலக நிகர்தரக் கமல மலர்மடுத்
தமடு மாநீர்போய்
வயல்புகப் புகுது கயல்களித் துகள
வயமருப் பெருமை காவூடே
கருண முக்காட களிறெனச் சிதறு
கதிபடக் கதலி தேமாவீழ்
கனிகு வித்தபல குவைது வைத்தளறு
கமழு மிக்கபிறை யூர்நாடா
தருண முத்தமுலை மலைக டுத்தமதி
சயில புத்திரித னோர்பாலா
சலதிவட்டமுழு தலற நெட்டவுணர்
சமரில் விட்டெறியும் வேல்வீரா
வருண வப்பரிதி கிரண மொத்ததிரு
வழகு டைக்கடவு டாலேலோ
வறம்வ ளர்த்தருளு மிறைவி பொற்புதல்வ
னறுமு கக்குரிசி றாலேலோ (3.8)
மடையை முட்டுவன கரைநெ ருக்குவன
மடுவு ழுக்குவன மாநீர்போய்
வயல்க லக்குவன கதிர்வ ணக்குவன
வளைது ரத்துவன தேனேசூழ்
தொடையை யெற்றுவன வளெயெ ழுப்புவன
சுவைவி ழுத்துவன வானூடே
சுடர்வெ ருட்டுவன வெழிலி தத்துவன
துளியி றக்குவன கீழ்கால்வா
யிடையை யெட்டுவன கமுக லக்குவன
வெருமை மொத்துவன சேலேபா
யிருபு றத்துவள மையுமி குத்தளகை
யெனநி காத்தவொரு சேயூரா
வடையு மப்பரிதி கிரண மொத்ததிரு
வழகு டைக்கடவு டாலேலோ
வறம்வ ளர்த்தருளு மிறைவி பொற்புதல்வ
னறுமு கக்குரிசி றாலேலோ. (3.9)
இமர விக்கிரண மெனநி லத்துமிடி
யிடிப டுத்துவெளி மீண்மினா
லெறிதி ரைத்திரளு மிருக ரைப்புரள
விளம ரப்பொழிலு மேயாமே
பமர வர்க்கமல கரிமு ழக்கிவிழு
பலம லர்க்குவையு நீரோடே
படுக டற்பெரிய மடும டுத்துரக
படநெ ளித்தொழுகு பாலாறா
தமர நெட்டுவரி மகர மச்சமொடு
தடந திப்படுக ராறாயே
தவழு மிக்கசுரி முகமு கத்துவிடு
தரள வெக்கரிடு சேயூரா
வமரர் பொய்ச்சிறையு மவுணர் மெய்ப்பொறையு
மறவ றுக்குமுனி தாலேலோ
வறம்வ ளர்த்தருளு மிறைவி பொற் புதல்வ
னறுமு கக்கடவு டாலேலோ (3.10)
தாலப்பருவம் முற்றிற்று.
---------
தாலப்பருவம்:-
அஃதாவது ஐவகைத்தாயரும், மடித்தலத்தும் மணி்த்தவிசினுந் தொட்டிலினுங் கிடத்தி நாவசைத்துப் பாடும் பகுதியைக் கூறும் பருவம். தால என்னு மோசையோடு தொட்டிலை யாட்டிப் பாடும் பருவம் எனவுங் கூறுவாருமுளர். தால்= நா. இஃது எட்டா மாதத்தில் இயம்பப்படுவதாம்.
1. இதழி=கொன்றை. திகிரிக்கிரி= சக்கரவாளகிரி. தகரேறு= ஆட்டுக்கடா. சமரம்= போர்.
2. கொடிவள்ளி= வள்ளைக்கொடி (காது) சங்கு=நெற்றி, வள்ளப்பவளம்=(வாய்) வாலவளை=சங்கு (கழுத்து) கிளை=மூங்கில் (தோள்) வடம்=ஆலிலை (வயிறு) கொம்பு=(இடை) அரம்பை= வாழைத்தண்டு (தொடை) அலவன் =ஞெண்டு (முழந்தாள்). 'என்பிற் குகவியழைக்கும்' என்பது முருகப்பிரான் திருஞான
சம்பந்தமூர்த்தி நாயனாரா யவதரித்துத்; திருமயிலையில் எலும்பைப் பெண்ணாக்கிய சரிதத்தை உணர்த்திற்று. கவி=தேவாரத் திருப்பதிகம். அரைவடம்= அரைஞாண். 3 பெடை=பெண் அன்னம். ஒருவி= நீங்கி.
3. கமலத்தவர்= இலக்குமியும் சரஸ்வதியும். அறச்சாலைத் தலைவி= முப்பத்திரண்டறங்களையும் நடத்தற்காக காஞ்சியில் தரும சாலை வைத்திருந்த காமாக்ஷியம்மையார்.
5. தடி= கோல். சடம்புரை செய்து= (பாற்) குடங்களைத் துளைசெய்து, காவி= நீலோத்பலம்; இங்கு கண்ணக்கு உவமையாகு பெயர். மாறு= பிரம்பு.
6. ஆனாமே=அழியாமல். நாகு=சங்கு. ஆரம்=முத்து.
7 இருபானான் ஆனான்= இருபதானவன் (இராவணன்)
8. தருணம்= இளமை. அருணம்= மிக்க சிவப்பு. உருக்கு வனம்=எஃகினிறம். வணக்குவன=வளைப்பன. துளி=மழை.
10. ரவிக்கிரணம் =சூரியனது கிரணம். பமரவர்க்கம்=வண்டுகளின் கூட்டம். மலகரி= தேவராகம் முப்பத்திரண்டனுள் ஒன்று. தமரம்= ஒலி. எக்கர்=குவியல். படுகர்= பள்ளம்.
--------------------------
நான்காவது : சப்பாணிப் பருவம்.
பாரங்க மீரேழை யுஞ்சுமக் கின்றவப்
பணிராச ராச மகுடப்
பந்திபெய ரத்திசைத் தந்திபெய ரப்பருப்
பதகோடி கோடி பெயரச்
சூரங்க மாவடிப் பெயரவீ ரைந்துமா
ருதஎமுந் துரந்து வீசச்
சுடராழி் யும்பெயர வந்துபே ரமரரொடு
தொல்வரைக் கரசு பெயர
வோரங்க மாயிரமு கப்பாணி தலைக்கொண்
டுலாவு சூலப் பாணிதன்
னுவகைக்கு மாரமுற் கரகபா ணிக்குமுடி
யுடையப் புடைக்கும் வீரா
சாரங்க பாணிதன் மருகசே யூர்முருக
சப்பாணி கொட்டி யருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டி யருளே. (4.1)
வங்கக் கடற்சூழு மெழுதீ வையுந்தெய்வ
மாவின்க னிக்காவலாய்
வலம்வந்த செந்தா மரைப்புலத் தண்டையும்
வயிரச் சதங்கை நிரையுந்
திங்கட் கதிர்ப்பரிதி வெங்கதிர் வெருண்டண்ட
கூடந் திருக்கிடுமணித்
திருவரைக் கிங்கிணியு மொருபோது மாறாது
செய்கைநகர் வைகு மதலாய்
துங்கத் திருக்கூட லாடிறைவ னார்முனந்
துறைபெறச் சொற்றபொருளின்
றொன்மையுரை யேழேழி னன்மையுரை யீதெனுஞ்
சோதனைக் குலகு காணச்
சங்கத் தமிழ்ப்பலகை யேறுபுல மைத்தலைவ
சப்பாணி கொட்டி யருளே.
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டி யருளே. (4.2)
பேழைத் திரட்கொண்ட வெண்டரள பந்தியைப்
பெய்யக் கவிழ்த்த பரிசிற்
பெருமுத்து குத்தவெண் சங்கு நூறாயிரம்
பின்பிடித் தொருவாளைபோய்க்
கூழைப் பிறைக்குவளை சூடுமக் கடைசியர்
குழாங்கண்டு விண்டு வெருவக்
குழுமிக் கரைச்சென்று தவழத் துரக்கின்ற
கொள்ளைக் குளத்த ருகெலாம்
வாழைக் குலைக்குலமு மஞ்சளிஞ் சிக்காடு
மதுரக் கருப்படவியும்
வளவயற் சாலியும் வேலியுஞ் சதகோடி
மடியப் படிந்து சிதறத்
தாழைக் குலக்கனி கனிந்துசொரி சேயூர
சப்பாணி கொட்டி யருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டி யருளே. (4.3)
நீளவட் டப்பரவை யோரேழை யுந்தனது
நிழலே கவிப்பவிருபா
னீலக் கலாபம் பரப்பியிப் புவியெலா
நெளியநின் றகவிநேமி
வாளவட் டத்தையு மெட்டுநா கத்தையும்
மதநாக மொரெட்டையும்
வைக்கும் பணாமவுலி நாகமிரு நாலையும்
வாய்கொண்டு மூதண்டமாங்
கோளவட் டக்கிரண மாயிரமு முதுகிடக்
கொத்துமா ணிக்கமுதிரக்
கோபத்தொ டுதறியுஞ் சாபத்தொ டெழுகின்ற
கொண்டலைக் கண்டளவிலாத்
தாளவட் டத்தினடி மாயூர சேயூர
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே. (4.4)
ஒப்பாரு மற்றகொற் றப்பரவர் பேதைய
ருவப்பினொரு வர்க்கொ ருவர்போ
யுவரிக கரைத்தலைச் சிற்றிலை யிழைத்தந்தி
யூருழைப் போது போகிற்
கப்பாரு முத்தரும் பியபுன்னை காள்கரும்
பனைகாண் மடற்கை தைகாள்
காணா தெமைத்தேடி னாலெங்கண் மகவுங்கள்
கையடைக் கலமா கையான்
மெயப்பாணி மஞ்சனமு மிடுமின்வெண் ணீறிடுமின்
விழுநிலக் காப்பு மிடுமின்
மெத்துமுத் தங்கொடுமின் வருகவென் றெதிருமின்
விரும்புமம் புலியை யழைமின்
சப்பாணி கொட்டுமி னெனுஞ்செய்கை நகராளி
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டி யருளே. (4.5)
மதகோடி யாயிரங் கோடுசெஞ் சேல்புகுத
வயமருப பெருமைக்குழாம்
வயலிற் கிடந்தனவு மாடவீ திக்கடைய
வரவிறா லைப்பொருதுபோய்
விதகோடி கண்டலை யலைக்கின்ற சேயூர
வெய்யகன லித்தேவனும்
வெண்ணிறக் கங்கையில் விடுத்தலுஞ் சரவண
மிசைச்சென்று வளர்கின்றநாட்
பதகோடி வேதங்கண் மணநாறு மாறுசெம்
பவளத்து ளாறுமீனப்
பணைமலைத் துணைமுலைப் பாலருவி பாயப்
பசுந்தாம ரைத்தொட்டில்வாய்ச்
சதகோடி பானுவொத் தழகெழத் துயில்குழவி
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே. (4.6)
பௌவத் திறங்காத வைகைப் புனற்கும்
படுங்கனற் குங்கவுரியன்
பாதகக் கூனுக்கும் வெப்புக்கு மரசைப்
பதிக்கே பனைக்குமுனிவிற்
கௌவத் துரக்கின்ற வெவ்வரா வின்கொடுங்
கடுவுக்கு மக்கடுவினாற்
காயத்து ளார்விடக் காயத்தை வெந்தழல்
காயவே மென்பினுக்குந்
தெய்வப் பெருஞ்சுருதி யடவியிற் கதவுக்கு
நெறியிலாச் சிறுபுத்தனார்
திண்சிரத் திற்குமுமை திருமுலைப் பாலறாத்
திருவாய்ப் பசுந்தமிழினைச்
சைவத்தை யறிவித்த கவிவீர சேயூர
சப்பாணி கொட்டியருளே
சத்தியே வற்பாணி குத்துசே வற்பாணி
சப்பாணி கொட்டியருளே. (4.7)
முகடுகிழி வித்தழுத சிறுகுரல் செவிப்புகுது
முற்றரள மொத்தெழுநிலா
முறுவல்பொலி யக்குறுகு மறுவர்முலை யிற்சுதக
முப்போதும் விட்டொழுகுபா
லகடுநிமி ரப்பருகி யொருசரவ ணத்தமரு
மக்கால முக்கணுடையா
ரமலையை யெடுத்தியென மலைமகளெடுத்துவள
ரத்தாவ ருத்தியரசே
பகடுகண் மருப்பொடிய வடமதுரை யிற்பொருது
பற்றாத றப்பொருதுநேர்
பணைமரு தறப்பொருது துணைபெறு பிறைக்குநிகர்
பற்பேயி னைப்பொருதுவோர்
சகடுபொரு சிற்றிடையன் மருகமுருகக்கடவுள்
சப்பாணி கொட்டியருளே.
தவளமதி யக்கவிகை வளவநக ரிக்குமர
சப்பாணி கொட்டியருளே. (4.8)
வேறு.
மகாசல திப்படியின் மலரடி நினைப்பவர்
மனத்தா மரைப்பரிதியே
மறமகள் விழிக்குவளை கயமகள் விழிக்குவளை
மைப்போ தினுக்குநிலவே
நிகரவச லப்புதல்வி முகிழ்முலை முகட்டிடு
நிறத்தர வடத்தரளமே
நிருதரென நெட்டுலகு பொருதுகவ ரத்திகிரி
நெருப்பா றுவித்தபுயலே
சிகரகிரி விற்கைகொடு திரிபுரமெ ரித்தவர்
திருக்கூ டுவிட்டசுடரே
திகிரியன் வயக்குலிச னிரணிய கருப்பனிவர்
செப்பா ரணத்துமுதலே
சகரமடு வைக்கனலு சுடர்விடு மயிற்கடவுள்
சப்பா ணிகொட்டியருளே
தவளமதி யக்கவிகை வளவநக ரிக்குமர
சப்பா ணிகொட்டியருளே. (4.9)
வளைபடு கடற்புவியி னுயிர்படு பிறப்பொழி
வழிக்காக வைத்த துணையே
மதுரமுரு கக்கவிதை மகிழ்தரு திருப்புகழ்
மலர்க்கே மணத்த மணமே
திளைபடு தமிழ்ச்சுவையி னிருபதம் வழுத்திய
திறப்பா வலர்க்கு நிதியே
திசைமுகனை யெற்றியவன் மகனை யடிமைக்கொடு
செவிக்கே தெளித்த பொருளே
களைபடு துயர்ப்புணரி யினுமமர ரைக்கனக
கரைக்கேற விட்ட கலமே
கைலையர சற்கரசி பகிரதி யிவர்க்கினிய
கட்டாம ரைக்குண் மணியே
தளைபடு கடப்பமல ரளிகுல முழக்குபுய
சப்பாணி கொட்டி யருளே
தவளமதி யக்கவிகை வளவநக ரிக்குமர
சப்பாணி கொட்டி யருளே (4.10)
சப்பாணிப்பருவம் முற்றிற்று.
-----------------
1. சப்பாணிப்பருவம். :-
அஃதாவது காலை மடக்கிக் கையுடனே கை கொட்டும் பருவம். இது ஒன்பதா மாதத்திற்கூறப்படுவது. வரைக்கரசு=மேருமலை. ஆயிரமுகப்பாணி=கங்கை. கரகபாணி = பிரமன்.
2. தெய்வமாவின் கனி = நாரதராற் சிவபெருமானிடத்துக் கொடுக்கப்பட்ட தெய்வத்தன்மையுடைய மாம்பழம். உரை ஏழேழில்=சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர் இறையனாரகப் பொருட்குச் செய்த உரைகளுள்.
3. பேழை=பெட்டி. கூழை=வளைந்த.
4. அகவி=கூத்தாடி. எட்டுநாகம்=அட்டதிக்குமலை. மதநாகம் = அட்டதிக்குயானை. மௌலிநாகம்=முடியையுடைய அஷ்ட சர்ப்பங்கள். சாபம் = வில். மயில்கொண்டலைக்கண்டு நடித்தலை,
"என்னையூர்ந்தருள் சுடர்வடி யிலையவேற் பெருமான்-றன்னை நன்
மரு கெனப்படைத் தவன்றன தூர்தி-யன்ன தாமெனுங் கேண்மை
யா னளிமுகிற் குலத்தைக் - கன்னி மாமயில் காண்டொறும் களிசிறந் தகவும்"
எனப் பிற்காலத்தவராய ஆசிரியர் சிவஞானயோகிகளுங் காஞ்சிப் புராணத்துட் கூறியவாற்றானறிக.
5. அந்தி=மாலைக்காலம். போதுபோது = போகின்றகாலம்.
கப்பு=கொம்பாகள். கைதை=தாழை.
6. மதகுஓடி என்க.
7. வைகை, கடலிற் கலக்காத சிறப்புநோக்கி, பௌவத்திறங்காத வைகை யென்றார். காயத்தை=பூம்பாவையின் உடலை. சுருதி யடவி=வேதாரணியம். புத்தனார்=புத்தநந்தி. இந்நூலாசிரியர் தந்நாமமுந் தோன்ற, ஞானசம்பந்த மூர்த்தியாய்வந்த முருகனைக்
"கவிவீர" என்றார்.
8. அறுவர்=கார்த்திகைப் பெண்கள். சுதகம்=முலைக்கண். பகடு=குவலயாபீடம் என்னும் யானை. மருது= மணிக்கிரீவன் நளகூபரன் என்னும் குபேர புத்திரர்கள் நாரதரின் சாபத்தால் மரமாய் நின்ற வரலாற்றைக்குறித்து நின்றது.
9. மறமகள்=வள்ளி யம்மையார். கயமகள்= தெய்வயானை யம்மையார். நிலவு=சந்திரன். திருக்கு ஊடு= நெற்றிக் கண்ணிடத்தினின்றும். அத்திகிரி= அந்தக்கிரவுஞ்ச மலை. கனலுதல்=வறளச் செய்தல்.
---------------------
ஐந்தாவது : முத்தப்பருவம்
நத்துக் கொத்துத் திங்கட் கொத்து
நகுந்தள வுக்கொத்து
நற்கீ ரத்துக் கொத்துக் குந்த
நறுந்தா திற்போதிற்
கொத்துக் கொத்துப் பொலிவாள் கொழுநற்
கொத்தும் பைந்துளவக்
கோவிற் கொத்துக் குலிசற் கொத்துக்
குலவுந் திருவுருவாய்ச்
சித்துக் கொத்துப் பத்துத் திக்குஞ்
செறியவி ருள்பொதுளச்
திண்சூ தத்துக் கோத்துப் பொருவோன்
சிதறப் பொரும்வீரா
முத்துக் கொத்துப் பத்திக்கனிவாய்
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன மருகா
முத்தந் தந்தருளே. (5.1)
வித்தே வித்தும் பழனத் தளையின்
வெள்ளிக் குறுமுளையின்
வெண்சிறை யன்ன மிதிக்குந் தோறும்
வெருண்டெழ வாணர்குழாம்.
பத்தே யெட்டே யொருகைக் கேனும்
பணில மெடுத்தெறியப்
பால்வெண் டரள மேல்விண் டுதிரும்
பாலித் திருநாடா
வத்தே வர்க்குந் தொன்முனி வர்க்கு
மனந்தற் கும்புவனத்
தட்ட திசைக்கா வலவர்க் கும்வே
றசல சலத்திற்கு
முத்தே வர்க்குந் தேவன் புதல்வா
முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா
முத்தந் தந்தருளே. (5.2)
பாவாய் குதலைக் குயிலே மழலைப் பசலை மடக்கிளியே
பவளக் கொடியே தவளத் தரளப் பணியே கண்மணியே
பூவா யெனவந் திமயத் தரசன் புகழத் திகழுமிளம்
புதல்விக் கருமைப் புதல்வா பெருமைப் புவனத் தொருமுதல்வா
தேவா திபனே கருணா லயனே சிவனே யத்தவனே
சேயே சுருதித் தாயே தமிழின்றிருவே யொருபோது
மூவா முதலே மூவிரு முகனே முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதன் மருகா முத்தந் தந்தருளே. (5.3)
கொற்றத் துழவா புயத்தி லுழத்தியர் கொங்கைக் குவடுபொரக்
கூடிக் கூடிப் புலவிக் கலவிக் குலாவி யுறங்குதலு
நிற்றப் புலரி யெழுப்பி யழைக்கு நீர்நிறை யோடையினு
நீலத் தகழி யினுங்கரை யேறி நிலாவெண் சங்கமெலாஞ்
சுற்றப் புரியின் புரிசையும் வீதித்தொகுதியு மாவணமுந்
தொடுகா வணமும் பிறங்கிட டாங்கவா தோரண மணிவாயின்
முற்றத் ததிருந் தொண்டைநன் னாடா முத்தந் தந்தருளே
முருகா செய்கை முராரிதரன் மருகா முத்தந் தந்தருளே. (5.4)
வேறு.
நவக்குஞ் சரமே செறிவனத்து நறிய முருக்கே பசுங்காந்த
ணனைத்தண் போதே மாதளையே நாறுங் குமுதச் சீரிதழே
யுவக்குங் கொடித்தா மரைத்தோடே யுருவத் திலவே பருவத்தா
லுடலம் பழுத்த வீர்விழியே யொழியாக் கொவ்வைக் கொழுங்கனியே
நிவக்கும் பொருப்பி லசோகமே நிறக்குங் குலிகக் குழம்பழகே
நெறிசெம் பவளத் தொளியேயென் றிவைக ளனைத்து நிரைத்தொன்றாய்ச்
சிவக்கும் படியே சிவப்பொழுகுந் திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக் கரசே மயிற்கரசே திருவாய் முத்தந் தருவாயே. (5.5)
எஞ்சா முகிற்கு ளிரண்டுமுகி
லெறிதேன் கடலும் பாற்கடலு
மிருபக் கமும்போய் முகந்துமுகந்
திறைப்ப நறைப்பைந் துழாய்மௌலிப்
பஞ்சா யுதனென் றொருகேழ
லுழும்பே ரண்டப் பழனத்துப்
பழைய வேதச் சுவையைவிதைக்
கரும்பா யமைத்துப் பணைத்தெழலும்
விஞ்சா ரமுதப் பிறைவாட்கொண்
டிறையோ னறுப்ப வெடுத்துவட
மேருச் செக்கூ டிருநான்கு
கரியால் வெய்யோன் றிருப்பவிழுஞ்
செஞ்சா றிழைத்த தெனுமழலைத்
திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக் கரசே மயிற்கரசே
திருவாய் முத்தந் தருவாயே. (5.6)
காம்பான் மலரப் படுங்கடவுட்
கமல மிரண்டென் றதிசயிப்பக்
கஞலுந் தடந்தோ ளுடன்கடகக்
கரத்தா லிருமுத் திருமேனி
யாம்பா லகரா முனைப்புனைப்பூ
ணாகத் தெடுத்தாங் கொருகுழவி
யாகத் தழுவி யவளுங்கை
யடங்கா வகையோ ரொழுகியநாட
பாம்பா லனைய வணைத்துயிலும்
பரஞ்சோ தியைவிட் டிங்குமொரு
பசும்பாற் கடலோ குடப்பதெனப்
பனிமா லிமயத் துமைமுலைக்கட்
டீம்பான் மணக்குஞ் சரவணத்தாய்
திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக்கரசே மயிற்கரசே
திருவாய் முத்தந் தருவாயே (5.7)
மருவாய் வனசத் திறையவனைச்
சிறையுட் பிணித்த பருவத்தே
மகரக் கடலே ழுடுத்தபெரும்
புவனக் குருவாய் வருவார்க்குங்
குருவா யம்பொற் செவிதாழ்த்துக்
குடிலை யுரைக்கும் படியுரைத்த
கொற்றங் கேட்டெம் பெருமாட்டி
நித்தங் களிக்குங் குலவிளக்கே.
யருவாய் மதனைப் பொருவார்க்கு
மறியாப் பொருளை யறிவித்த
வமி்ர்தப் பவள மிதுவோவென்
றருகே தனது முகநீட்டித்
திருவாய் முத்தந் தருவாட்குத்
திருவாய் முத்தந் தருவாயே
செய்கைக்கரசே மயிற்கரசே
திருவாய் முத்தந் தருவாயே (5.8)
வேறு.
பூமாவின் மனையனைய கனைகடலி லளறுபடு
புலவினொடு பயில்வனவு முத்தமோ
போராட வுபயவிட வரவமவை தொடரவுடல்
புலருமதி பொதிவனவு முத்தமோ
வாமாயி தெனவமரர் பதிமருவு முகிலிடியின்
மடுவிலெரி பொரிவனவு முத்தமோ
மாறாத வஞ்சரண ஞிமிறுகளின் முளரிநறு
மலரின்மிதி படுவனவு முத்தமோ
வாமாவி னவனையொரு குழவியென வுமிழ்கழையி
னடவியனல் கடுவனவு முத்தமோ
வானாது மருவினவ ரெவரெனினு மவருயிரை
யடுகரியில் வருவனவு முத்தமோ
தேமாவி னொருகனியை நுகரநிலம் வலம்வருகை
செயுமெனது குகதருக முத்தமே
சேயூர வரிமருக கிரிவனிதை தருமுருக
திரிபதகை சுத்தருக முத்தமே (5.9)
பூவாதி யுலகடைய வடையுமிரு ளுடையவொளி
பொழியுமரு கமலமலர் வத்திரா
போகாத திருவதிக மருவுமக பதிபுகுத
புகலுமிள நிலவுசொரி சத்திரா
கோவாதி விடைவலவர் படைமழுவின் வலவர்கிரி
குமரியொரு தலைவரவர் புத்திரா
கோடாத வறநெறியி னறவகைமை லிபியைநவில்
குணநிபுண ரருணகிரி மித்திரா
மாவாதி யதிகதியி னிரதவித மிககரட
மதவுததி விகடமத மத்தமா
மாறாத வனிகமுட னவுணர்கட லெதிரவதிர்
மறிகடலி னடுவுமொரு முத்தமா
தேவாதி பதிகுமர னமரரிவர் பலருமுறை
சிறையைவிடு துரைதருக முத்தமே
சேயூர வரிமருக கிரிவனிதை தருமுருக
திரிபதகை சுததருக முத்தமே. (5.10)
முத்தப்பருவம் முற்றிற்று.
-------------------------------
முத்தப்பருவம்:-
அஃதாவது குழவியினது வாய்முத்தத்தை அவாவி தாயர் கூற்றாகக் கூறும் பருவம். இது பதினோராவது மாதத்திற் கூறப்படுவது.
1. கீரம்= பால். களவு= முல்லைப்பூ. குந்தம்= குருந்தமரம். பொலிவாள்= (சரசுவதி) பொருவோன்= போர்;செய்த சூரபன்மன். பைந்துளவக்கோ=திருமால். குலிசன்=இந்திரன்
2. பழனம்=கழனி. தரளம்= முத்து. அசலசலம்= மலையுங்
கடலும். முத்தேவர்= பிரமன், விட்டுணு, உருத்திரன்.
4. நித்தம் என்பது எதுகை நோக்கி நிற்றம் என்றாயது.
ஆவணம்= கடைத்தெரு; காவணம்= நடைப்பந்தர்.
5. விழி= வீழிப்பழம். குலிகக்குழம்பு= சாதிலிங்கக்குழம்பு.
6. பணைத்து எழலும்= வளர்ந்து எழுதலும். வெய்யோன்= சூரியன். முகிற்குள்= ஏழுமேகங்களுக்குள்; இரண்டு முகில்= சம்வர்த்தம். புட்கலரவர்த்தம். இருமுகில்களும் பாற்கடலையுந் தேன்கடலையு மொண்டு பெய்ய, திருமாலாகிய ஏனம் உழுத அண்டமாகிய வயலுள் வேதச்சுவையாகிய கரும்பை நட்டு, அந்தக்கரும்பு வளராநிற்க, பிறையாகிய அரிவாள் கொண்டு இறைவன் அறுத்துவிட அதனையெடுத்துச் சூரியன் மேருமலையாகிய செக்கிலிட்டு அஷடதிக்கு யானைகளை அதிற்கட்டி ஆட்ட, அதனின்று மொழுகுகின்ற இனிய சாற்றைப்போன்ற மழலைச் சொற்களை வசனிக்கும்
வாய் என்பது கருத்து.
8. புவனக்குருவாய் வருவார்= சிவன். குடிலை= பிரணவப் பொருள். கொற்றம்= வெற்றி. மதனைப்பொருவார்=சிவன்.
9. புலவு= புலால். உபயவிடவரவம்= இராகு கேது. முளரி= தாமரை. ஆமாவினவனை= சிவபெருமானை.
10. அறுவகைமை லிபி =ஆறெழுத்து (நம:குமாராய) என்
னும் சடக்கர மந்திரம் என்பர் நச்சினார்கினியர் (பத்துப்பாட்டு-
பக்கம் 28 - திருமுருகாற்றுப்படை.)
---------------------------
ஆறாவது; வருகைப்பருவம்.
மிக்கே ருழும்பொற் பகடடித்துங் கயலைத் தடிந்துங் குருகடர்ந்தும்
வேலிப் புறத்து வெறுத்துவெறுத் தெறியக் கிடந்த சதகோடி
யிக்கே நெரித்துஞ் சுரிமுகங்க ளெருமைக் கருந்தாட் படவுடைந்து
மெய்ப்பாய் வாளைக் கமுகலைத்து மிலைப்பூங் கமுகான் மதியலைத்துந்
தொக்கே மழைப் பொழில்கழித்துஞ் சுரும்பாற் கமலக் களைகளைந்துஞ்
சுடருஞ்செந்நெற் காடறுத்துஞ் சொரியச் சொரியக் கடையர்குழாஞ்
செக்கே தரளக் குவைகுவைக்குஞ்செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாண் மயிற்பெருமா டெய்வப் பெருமாள் வருகவே. (6.1)
பம்பிற் கழியே செழியவித்திப் பாயும் புனலு மெனக்கொணர்ந்து
பகடுங் கொழுவுந் தொடராமே பலபுள் விலங்கும் படராமே
யம்பொற் களையுங் களையாமே யருங்கண் டகத்தால் வளையாமே
யலைக்குங் குறும்பொன் றிலாவுலகிலரசன் பரிசில் கரவாமே
யும்பர்ப் புயல்வேட் டுழலாமே யுமண ரமைத்த வுப்பினமு
முழவர் விளைப்ப விளைசெந்நெற் குவையும் வெள்ளி யொளிக்கிரியுஞ்
செம்பொற் கிரியு மெனப்புரஞ்சூழ்செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாண் மயிற்பெருமா டெய்வப் பெருமாள் வருகவே. (6.2)
பரியாற் கரடக் கடகரியாற் பார்க்குந் தரனா விளையாடும்
பருவச் சிறார்சிற் றடிப்பொடியும் பசும்பொற் றொடியார் பலகோடி
பிரியாத் தெருவிற் சொரிசுண்ணம் பிறங்குந் துகளு மகிற்புகையும்
பெருங்கா ரகிலா வியுங்கரும்பிற் பிழிந்த பொழிசா றடுங்குய்யு
மரியாற் குயிலப் பயின்மாடத் தாடுந் துவசக் குலத்துகிலு
மண்டத் தளவும் பிறபொதுளியமரா வதிக்கொத் திரவுபக
றெரியாப் பெரிய வளங்கிளருஞ் செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாண் மயிற்பெருமா டெய்வப் பெருமாள் வருகவே (6.3)
ஆணிக் கனகத் தொருதிகிரி
யருக்கன் பெருந்தேர்ப் பசுங்குதிரை
யலங்குங் கூல மயிர்க்கற்றை
யடவித் தழையென் றுடல்வெருண்டு
வேணிப் புரமே பறந்தெழுந்து
விழுந்தே னீகண் டருகணைந்து
வெவ்வா னரங்க ளிறால்பொதுத்துத்
தாமும் பருகி மிகுந்த தெலாம்
பாணித் துணையிற் கதலிமடற்
படுத்துப் பிணவுக் குணவிடுத்துப்
பசிக்குங் குருளை கொளக்கொடுத்துப்
பசிய பலாக்காய் மிசையுறங்குஞ்
சேணிற் புயலிற் கரங்கழுவுஞ்
செய்கைப் பெருமாள்ண வருகவே
செவ்வேற் பெருமாண் மயிற்பெருமா
டெய்வப் பெருமாள் வருகவே (6.4)
நிறையோ டரிக்கண் மடமாதர்
நீலக் கமலத் தடங்குடைய
நெகிழ்ந்தே விழும்பூண் மாணிக்க
நீருட் கஞலக் கனியென்னத்
துறையோ டகலாக் கயல்கவரத்
திரியும் சிரலுங் குருகினமுந்
தொகும்போ தாவு மிருந்தாராத்
தொகையுந் திகைத்துக் கரைபுகலும்
பிறையோ முகிலிற் புகுவதெனப் பெடையும்
பார்ப்பும் புடையணைத்துப்
பேரண் டமுங்கொண் டரவிந்தந்
துரந்து சுரும்பு பறந்தார்ப்பச்
சிறையோ திமம்போய்ப் பொழில்புகுதுஞ்
செய்கைப் பெருமாள் வருகவே.
செவ்வேற் பெருமாண் மயிற்பெருமா
டெய்வப் பெருமாள் வருகவே. (6.5)
பரம்பிற் குமுறுங் கடற்படுவிற்
பரவரிழைத்த கழைத்தூண்டிற்
படுமுட் கயிறு வயிறு புகப்
பதைத்து வெடிபோய்ப் பரியசுறா
நிரம்பிப் பெருகும் பெருங்கழிக்குள்
விழுந்தே நிமிர்ந்து வநற்கேறி
நீலக் கயத்து ளிழிந்துகயக்
கரையிற் பயிரா நீங்காத
கரும்பிற் கரிய நிழற்புனற்கே
கண்டே வெருண்டத் தூண்டிலெனக்
கலங்கித் திசைநான் கினுமோடிப்
பிறிதோ ரிடமுங் காணாது
திரும்பிப் பழைய வழிக்கேகுஞ்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமாண் மயிற்பெரும்
டெய்வப் பெருமாள் வருகவே. (6.6)
கன்னற் குலமும் பலபொதும்பிற்
கறங்கு மிறாலும் பிறங்கியமுக்
கனியும் பொழிந்த கொழுஞ்சாறுங்
கழனி மடுப்பக் கழனிபடும்
பன்னெற் கதிரும் பசுந்தாளும்
பசுந்தாண் மேய்ந்த பான்மேதிப்
பைம்புற் கொளுவுங் கடைவாயும்
பருவத் தரிந்த பிறையிரும்பு
முன்னற் கரிய பெரும்போரு
ம்ப்போர் விளைத்த மள்ளாகையும்
முதிரும் வருக்கைச் சுளையழித்துக்
குவித்த களம்போன் முதன்மொழிந்த
செந்நெற் களமு மளியலம்புஞ்
செய்கைப் பெருமாள் வருகவே
செவ்வேற் பெருமான் மயிற்பெருமா
டெய்வப் பெருமாள் வருகவே. (6.7)
வேறு.
குரைகழ லடியை யடியவ ரிருகை
கொடுதொழு துருக வருகவே
குவலய முழுது மலமற வறிவு
குணநெறி பெருக வருகவே
யரைவட மணிய மணிபரி புரமு
மலைகள் பெருக வருகவே
யவுணர்த முயிரு முதிரமு மறலி
யலகைகள் பருக வருகவே
வரைமுக டிடிய மழையுடல் கிழிய
வரிமுது குரக நெளியமேன்
மகிதல மதிர வுடுகுல முதிர
வலம்வரு பரிதி யிரியவேழ்
திரைகட லகடு தெருமர முருக
சிறைமயி லிறைவ வருகவே
தெரிதமிழ் வளவ னகரியின் முருக
தருமகண் மருக வருகவே. (6.8)
பதறிய கலப மறவெறி யுலவை
படவட குவடு மிடையவேழ்
படுகட னடுவு கிழிதர வுரக
படமுடி யிடிசெய் துலவுவா
யுதறிய வருண மணிகண கிரண
முலகிருள் கடிய முடியவே
றுழிதரு மயிலின் மரகத துரக
முகையறு முகவ வருகவே
கதறிய விரலை கடகரி வருடை
கவிமரை கரடி யிடறிவீழ்
களபமொ டகிலு மடியற நெடிய
கழைபொழி தரள முருளநீர்
சிதறிய வருவி யொழுகிய பழனி
திகழ்மலை முதல்வ வருகவே
தெரிதமிழ் வளவ னகரியின் முருக
திருமகண் மருக வருகவே. (6.9)
கரிபுரம வெளிறு மகபதி ககன
கனபதி புகுக வெகினனார்
கருதுற வரிய வுபநிட வறிவு
கலையறி குறிய நறியநீள்
பரிபுர மழலை யிருபத விமலை
பணைமுலை யமுத மொழுகவோர்
பகிரதி நயன பதுமமு மிதய
பதுமமு மலர வருகவே
யரிபுர நிகரு முகிலிடி வயிறு
மறைபட விடியு மலறவே
யலைகடல் பலவு மகிலமு முடுக
வடுபகை பொதுளி யிருளமா
திரிபுர மெரிய வொருவிசை முறவல
செயுமவன் மதலை வருகவே
தெரிதமிழ் வளவ னகரியின் முருக
திருமகண் மருக வருகவே. (6.10)
வருகைப்பருவம் முற்றிற்று.
--------------
வருகைப் பருவம் :-
அஃதாவது குழந்தையை வருகவென்று தாயர் அழைக்குங் கூற்றாகப் பாடும் பகுதி. இது பன்னிரண்டா மாதத்திற் கூறப்படுவது.
1. மிக்க ஏர் என்பன மிக்கேர் எனநின்றன. பகடு=எருமை. குருகு=பறவை. இக்கு=கரும்பு. மழை=மேகம்.
2. பம்பு=ஆரவாரம். செழியவித்தி=செழிக்கும்படி விதைத்து. கண்டகம்=முள்வேலி. பரிசில்=ஆறிலொரு பங்கானவரி. உமணர்=உப்பு விளைப்போர். உப்பு அம்பாரம் வெள்ளி மலையாகவும், செந்நெற்குவியல் மேருமலையாகவுங் கொள்க. "வேதண்ட,
மொப்ப வுயர்த்த வுயருப்புக் குவான்மீது, வெப்ப மறுமதிய மெய்யுரிஞ்ச-" என்று சிவப்பிரகாச சுவாமிகள் நெஞ்சுவிடுதூதில் இவ்வூர் வளத்தை எடுத்துக் கூறியதைக் காண்க.
3. காரகில் ஆவி= காரகிற்புகை. குய்= புகை
4. பசுங்குதிரை=பச்சைநிறக்குதிரை. ஏழ் என்னம் பெயருடைய ஓர் குதிரை யென்றும், எழுவகைப்பட்ட நிறத்தையுடைய குதிரை யென்றும் கூறுப, ஏழென்னுந் தொகையுள்ள
குதிரைகள் என்பது மதுரையாசிரியர் பாரத்துவாசி முதலாயினோர் கொள்கையிற்கண்ட துணிபு. கூலம்=வால்; வேணி=ஆகாயம் இறால்= தேன்கூடு. பாணித்துணை=இருகை. பிணவு=பெண்மந்தி. குருளை=குட்டி.
5. பரம்பு=விசாலம். பரவர்= மீன்பிடிப்போர். இவரைப் பட்டினவர் என்ப. கழைத்தூண்டில்= மூங்கிலாற் செய்யப்பட்ட மீன்பிடிகருவி. நீலக்கயம்= குவளையோடை. கரும்பின் கருநிழலை நீரிற்கண்டு தூண்டில் என்றோடும் சுறாமீனென்க.
6. உலவை = பிரசண்டமாருதம்; அயில் = வேலாயுதம். மரக ததுரகம் = மரகத ரத்தினம் போன்ற (மயிலாகிய ) குதிரை. உகை = செலுத்துகின்ற. இரலை = கலைமான். வருடை = ஆடு. கவி = குரங்கு. பழம் + ஈ = பழன் + ஈ = பழனீ = பழனி என்றாயது. இதனைப்பற்றிய கதையினை உற்று நோக்குக. "பழம்நீ" என்பது பழநீ என்றாகி, அது பழநி என நின்றது என்பாருமுளர்.
7. நிறை=கற்பு. கஞல= பரந்துதோன்ற. சிரல்= சிச்சிலிப் புள். குருகு= நாரை. போதா= பெருநாரை. தாரா= ஓர்வகைப்பறவை. அரவிந்தம்= தாமரைப்பூ.
8. பொதும்பு=சோலை. மடுப்ப=நிறைய. மேதி=எருமை. முன்னல்=நினைத்தல். போர்=நெற்போர். வருக்கை=பலா.
9. *மலம்= ஆணவம், கன்மம், மாயையென்னும் பாசங்கள். தெருமர=சுழல.
10. கரிபுரம் வெளிறு எனபகை வெளிறுபுரக் கரியென இயைத்து வெள்ளையுடலை-யுடைய ஐராவதயானை எனப்பொருள் விரிக்க.
-----------------------------------------------------------
ஏழாவது: அம்புலிப் பருவம்.
வீதிப் படுஞ்சக்ர வாளமு மிவன்றோகை
வெம்பரிச் செண்டுவெளிகாண்
விடநாக பாதாள மிவனப் பரிக்கிடும்
வெங்கவள சாலையேகாண்
மோதிப் பொரும்பெருங் கடலேழு மிவன்வேல்
முனைக்கே யடக்குபுனல்காண்
முடியா யிரத்துவட மேருவு மிவன்றரையின்
முன்கட்ட நட்டதறிகாண்
சோதித் திசாமுகக் கிரியடங் கலுமிவன்
றொடுகையிற் பம்பரங்காண்
சுரராஜ ருஞ்சுரரு மிவனேவ லைத்தலைச்
சூடும் படைச்சேனைகா
ணாதித் தலோகமிவ னாறிரு மதாணிகா
ணம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.1)
இரணிய கருப்பன்வீ டென்றென்று முன்னையே
யிகழ்ந்தழைக் குங்கொடுமைபாரத்
திக்குற்ற மெண்ணிப் பிறர்குற்ற மேபோல
வேறுமவனைச் சீறினான்
தரணியை யொழித்துனக் குறவா யிருக்கின்ற
தன்மையிற் கருணைபொங்கித்
தணிகையங் குவளையிற் போதுமுப் போதினுந்
தன்புயத்தே புனைந்தான்
முரணிய வரக்கர்க் கிடந்தந்த தானாலு
முதலுன் பிறப்பதினினான்
மோதுசீ ரலைவாயின் மீதிருந் தருளினான்
மூவர்க்கு மொருதலைவனே
யரணிய வெறுப்பாக நீவெறுப் பாவையே
யம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.2)
பூதலப் பகிரண்ட மாதலத் துள்ளார்
புறத்துளா ரெத்தேவரும்
புகுமினென் றிவன்விளித் தருளினா லமையும்
புகாதிருப் பாருமுளரோ
வோதலிற் கதிரவன் வக்கிரன் னின்சுத
னொருகுருப் புகர்மந்தனா
மோராறு கோளினையு நின்போ லழைத்தழைத்
துவகையிற் பெருகினானோ
காதலிற் சடையிடைக் கங்கையில் வளர்ந்தே
தவழ்ந்தெழுங் குழவிநீயுங்
கங்கையில் வளர்ந்தே தவழ்ந்தெழுங் குழவியிக்
கருணா லயக்குரிசிலு
மாதலிற் றுணைதனக் காமெனக் கருதினா
னம்புலீ யாடவாவே
ய்யில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.3)
மதனான மைத்துனன் கவிகையா யுந்தனது
மாமற் கிருக்கையாயு
மாறாத தன்பிதா மகுடச் சுடர்ச்சிகா
மணியாயு நயனமாயு
மிதநாக நகரா ரெனுந்தம் பதாதியர்க்
கிடுமன்ன சாலையாயு
மிந்த்ராணி யென்கின்ற தன்மாமி பெயருமுன்
பெயராயு மிதுவன்றியு
முதனாரி வள்ளியைப் பெற்றதாய் வடிவமுன்
வடிவின் முயக்கமாயு
முழுதுமிப் படிபடைத் திருவருக் குந்தொன்று
தொட்டுமுன் பெருமைபிரியா
வதனா லழைத்தன னலதுனை யழைப்பனோ
வம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.4)
ஊழியிற் கடவுளா மிவனடைக் குஞ்சிறை
யுறைந்தவன் மெய்க்கூறுநீ
யுலகத் திவன்கொடிக் கூவலுக் கேவெறுப்
போடொளித் தோடுமவனீ
சூழியிற் கரியுரித் தேவர்தந் தேவிசெந்
துகிலிடைக் கிடைபுகாமுன்
றொட்டிலிவ னுக்கிடுந் தாமரைப் போதொடுந்
தொன்மாறு பட்டவனுநீ
பாழியத் திரிமக னீயவன் றம்பிகா
சிபன்மகன் பாரசூரன்
பகையெனக் கருதினுங் கருதுவ னினநீ
பலகா லுதித்துவளரு
மாழியைப் பொருகினும் பொருவனிங் கிவனுட
னம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.5)
தேயவும் பெருகவும் தேவருன் கலைகளைத்
தினமுமோ ரொருவராகச்
சிதறிப் பறித்துண்ப தறிவையே யவரெலாஞ்
செவ்வேள் பெருஞ்சேனைகாண்
டுயவிங் கிவனிடத் தெய்தினா லமையுமச்
சுரருங் கவர்ந்திடார்கான்
டோகைவா கனமொன் திருத்தலா* லரவுனைத்
தொடவும் பயப்படுங்காண்
மாயவன் மருகனுக் கன்பெனக் கிரிமத்தின்
வைத்துனைப் புனைகிலன்காண்
மதலைக்கு நேயமென மதலையந் தாமனடி
மலர்கொண் டரைக்கிலன்கா
ணாயநின் பகைபுகா வரணிவன் சரணிவ
னம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.6)
நெஞ்சா லுகந்துகந் தினிதழைத் தால்வராய்
நீயவன் றிருவு ளத்தே
நிமிரும் பெருங்கோபம் வந்தா லிவன்றோகை
நீலக் கலாபத்தினான்
மஞ்சார் பொருப்பெலா மாருதப் பூளயாய்
வானமுந் தூளின் மறையும்
வடமேரு வுஞ்சேவ லின்கூவ லால்விழும்
வனசத் திருக்கைவேலால்
விஞ்சாலி யேழுங் கனல்கொண்டு புகைமண்டி
வேறிடத் தோடினாலும்
வீரவா குத்தலைவர் முதலாம் பதாதியர்
விடுத்திடா ராகலினுனக்
கஞ்சா தொளித்திடப் பிறிதிடங் கண்டிலே
னம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வாகனக்
கந்தனுடன் னம்புலீ யாடவாவே. (7.7)
கூடன்மே லைப்பரங் குன்றகத் தொருமுழைக்
கொண்டுபோய்ப் பண்டுசங்கக்
குலமுதற் கலைவாண னைக்கரந் திடுபூத
மிடுகையிற் கூறுமாற்றுப்
பாடலா முருகுகேட் டம்முழை திறந்துவிட்
டருளிய பரம்பொரு ளிவன்
படவரா வென்னும் பூதம் வளைத்துவெம்
பகுவாய் முழைக்குளிடுநாள்
நாடெலா முன்னையுங் கலைவாண னென்கின்ற
நாமத்தின் வரிசையதனா
னளினத் திருக்கைவே லாயுதம் வித்டுத்தேனு
ஞாலமே ழுஞ்சூழவந்
தாடலா டும்பரி விடுத்தேனும் விடுவிப்ப
னம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனககந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.8)
மையோத வாரிதித் திரையிற் பிறந்தனன்
வளவன கழுக்குன்றனு
மாறாது நீயுமத திரையிற் பிறந்தனை
வளவன் கழுககுன்றனைச்
செய்யோ னெனப்புண் ணியம் புரிந் தகளங்க
னாதலிற் செவ்வேலவன்
செஞ்சிலம் பிற்சீற டித்தாமை ரைப்போது
சேவிக்க வாழ்வித்தனன்.
றுய்யோ னலாமற்க ளங்கனா கிக்குருத்
தோகைபொற கொங்கைபுணருந்
தொல்பெருந் தீவினை நினைந்துனைச் சேராது
தூரவிட் டானெனவுனக்
கையோ விகழச்சிவரு மக்குறை யெலாந்தீர
வம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனககந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.9)
தவிராத வெவ்வினை தவிர்க்கு முருகாறுந்
தரித்தா றெழுத்தோதலாஞ்
சந்நிதிக் கருணகிரி நாதன் றிருப்புகழ்ச்
சந்தம் புகழ்ந்துய்யலாம்
புவி ராஜன் வளவன் கழுக்குன்றன் வளமைபுரி
புண்ணியந் தரிசிக்கலாம்
பொருஞ்சூ ரனைப்பொருங் கதைமுதற் கந்தப்
புராணக் கடற்காணலாம்
கவிராச னிப்பிரான் மிசைசெய்த திருவுலாக்
கவிவெள்ளை கற்றுருகலாம்
கவிவீர ராகவன் சொற்றபிள் ளைக்கவி
கலம்பகக் கவிவினவலா
மவிராடகக் கோவில் புக்குவிளை யாடலா
னம்புலீ யாடவாவே
யயில்வனச் செய்கையின் மயில்வனக் கந்தனுட
னம்புலீ யாடவாவே. (7.10)
அம்புலிப் பருவம் முற்றிற்று.
---------------------
அம்புலிப்பருவம் :-
அஃதாவது பாட்டுடைக் குழவியோடு விளையாடவருக வென்று தாயர் சந்திரனை சாம பேத தான தண்டங்கூறி யழைக்கும் பருவமாம். இது பதினெட்டாம் மாதத்துக் கூறப்
படுவது.
1. செண்டுவெளி=குதிரை வையாளிவீதி, குதிரை செலுத்துமிடம். கவளசாலை=குதிரைப்பந்தி, உணவூட்டுமிடம். தறி=தூண். மதாணி = பதக்கம்.
2. இரணியகருப்பன வீடு=பிரமனது இருப்பிடமாகிய தாமரைமலர். தரணி=சூரியன். குவளையிற்போது=இந்திரனால் வைக்கப்பட்ட நீலோற்பலம். அரணியம் = (சடையாகிய) காடு. வெறுப்பு=செல்வம்.
3. இது சாமம். வக்கிரன்=செவ்வாய். நின்சுதன்=புதன். புகர்=சுக்கிரன். மந்தன்=சனி.
4. இதுவும் சாமம். கவிகை=குடை. தேவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையை அமுதாகப் பருகுவாரென்பது நூற்கொள்கையாகலின் அன்னசாலை யென்றார். மாமிபெயர்=சசி.
4. தாய் வடிவம்=(மான்).
5. இது பேதம். கொடி=(சேவல்). சூழி=முகபாடாம். அத்திரிமகன்=அத்திரிமுனிவரது புத்திரன் (சந்திரன்). அரவு=(இராகு).
6. இது தானம். மதலை = கொன்றை. ஈண்டு குறிக்கப்பட்டது வீரபத்திர மூர்த்தம். * அரவுவாய் எனவும் பாடம்.
7. இது தண்டம். பூளை = இலவம் பஞ்சு.
8. கலைவாணன் = நக்கீரன். (கலை - கல்வி); கலைவாணன் = சந்திரன் (கலை = அமிர்தகலை). பரி = வாகனமாகிய மயில்.
9. குருத்தோகை = வியாழ பகவான் மனைவி.
10 . ஆறெழுத்து = (நம;குமாராய)
10. கவிராஜன் = கருணீக கவிராசப்பிள்ளை. கவி வெள்ளை=
(உலா); இது வெண்பாயாப்பினாலாயது. கலிவெள்ளை (கலிவெண்பா) என்பதூஉம் பாடம். ஆடகம் = பொன்.
-----------------------------------------------------------
எட்டாவது : சிறுபறைப் பருவம்.
பூநா றுவரிப் பெரிய பரப்பிற்
புதிய மதிக்கதிரே
பொங்குஞ் செங்கதி ரிற்சொரி கின்றது
போலப் பொய்கையின்வாய்
மீனா றுதவும் புத்தமு தத்தின்
வெள்ளரு வித்திரளே
மீதிற் பொழியப் பொழியப் பருகி
விழிதுயிலும் புதல்வா
வானா றளவுங் கிளருங் கமுகினும்
வளரும் வருக்கையினும்
வாழை வனத்துந் தாழை வனத்து
மாவினும் விட்டவிறாற்
றேனா றொழுகுஞ் செய்கைப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே
செந்திற் பெருமாள் கந்தப் பெருமாள்
சிறுபறை கொட்டுகவே. (8.1)
பையிற் கடுகைக் கொடுநா கேசன் பாதா ளத்தளவும்
படுமா ழித்தே ரிற்பெரு மதகிற் பகுத்த புனற்பாயுந்
தொய்யிற் பழனப் பவளச் சாலித் தொகுதிக் கதிர்வானச்
சோதிக் கதிரின் மோதித் தகையுந் தொண்டைத் திருநாடா
மையிற் சொரியக் கிரியிற் பாலி வழிந்தா ழியின்மட்டும்
வாளைக ளெதிரப் பாளைக ளுதிருமடற்கமு காடவியும்
செய்யிற் புகுதுஞ் செய்கைப் பெருமாள் சிறுபறை கொட்டுகவே
செந்திற் பெருமாள் கந்தப் பெருமாள் சிறுபறை கொட்டுகவே. (8.2)
கனையிற் கயமுங் கயமேல் வளருங் கமல மலர்க்காடுங்
கழுநீர் மடுவு மப்பெரு மடுவின் காலும் பலகாலு
நனையிற் குமுதப் புனலும் புனலே நாலு மிகக்கிடையு
நாகிள மேதி முலைப்பால் வழியு நறுங்குழி யுங்கழியு
முனையுப் பளமு மளத்தரு கெங்கணு மொய்த்தெழு கானிழலும்
முன்னும் பின்னு மினத்தொரு கோடிகள் முரல வலம்புரிபோய்
சினைமுத் துமிழுஞ் செய்கைப் பெருமாள் சிறுபறை கொட்டுகவே
செந்திற் பெருமாள் கந்தப் பெருமாள் சிறுபறை கொட்டுகவே. (8.3)
வேறு.
காழிய நகரிற் கவுணிய மரபிற் காதல னாகிமலைக்
கன்னி முலைத்தலை யுண்ட முத்தத்தைக் களையு மரும்பொருளே
தாழியில் வளருங் குவளைப் போதொருதுப்போ துந்தானுந்
தணிகைக் கிரிபுக் கணியுங் களிறே சதுர்ம றையின் பேறே
யாழியு முலகு மெடுக்குஞ் சுடிகை யராவைப் பொருதுகிழித்
தாடுந் தோகையு மாயிர கிரணத்தருணன் வரக்கூவுங்
கோழியு மெழுதுங் கொடியுடை வேளே கொட்டுக சிறுபறையே
குகனே செய்கையின் மூவிரு முகனே கொட்டுக சிறுபறையே. (8.4)
சென்று கராவின் றொகுதி துரப்பச் செழுநீர் நாய்தொடரச்
சிதறிச் சிதறிப் பதறிப் பதறிச் செறுவிற் கரையேறும்
துன்று வராலுக் குடலம் வெருண்டு துவண்டோ திமசாலம்
கோலைக்கிடைபுக் கடையும் பழனத் தொண்டைத் திருநாடா
கன்று விடாமற் பிடியுங் களிறுந் திரியுங் கனசாரற்
காய்வயி ரத்தொகு தித்திரள் பெருகக் கதிரின் பரிபருகுங்
குன்றுதொ றாடுங் குமர பிரானே கொட்டுக சிறுபறையே
குகனே செய்கையின் மூவிரு முகனே கொட்டுக சிறுபறையே. (8.5)
பங்கக் கமலத் தவனைக் கலப் பதத்தளை களைகவெனப்
பரிதித் திகிரிக் குலிசப் பாணிப் பண்ணவ ரிருவருமத்
துங்கத் தவருஞ் சுரரும் பிறருஞ் சொல்லும் வணக்கமொடுந்
தொழுத கரத்தொடும் வந்து நெருங்குந் தொல்கோ புரமுடையாய்
சிங்கக் குருளைத் திரளே களபத் திரளைக் குருகுகொளத்
தேடித் தேடித் திரியும் பிடியுந் திண்களி றுங்களிறுங்
கொங்கப் பழனிக் கொலிமலை முதலே கொட்டுக சிறுபறையே
குகனே செய்கையின் மூவிரு முகனே கொட்டுக சிறுபறையே. (8.6)
வேறு
முதலைகவ ரக்களிறு முதலென நினைக்குமவன்
முதுமகள் விருப்பவழகா
முனிமொழி வழிக்குருகு பெயர்கொடு கிடக்குமொரு
முகடுதொடு வேற்பழநிலா
மதலைமௌ லிக்கரிய கருவிட மிடத்துணியு
மறிகடல் விடுத்தழுவுவார்
வயரதவி தத்துரக சலதியவு ணத்தொகுதி
மரபொடு துடித்தழவரோ.
குதலையமு தச்சுவைக ளறுவர்மக ரச்செவிகள்
குடிகொள வழைத்த முதுநீர்
குரைசரவ ணத்தருகு கவுரிதழு வித்தனது
கொடியிடையில் வைப்பவனையாள்
திதலைமுலை தத்தருவி பருகியழு மெய்க்குழவி
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கியருளே (8.7)
நறியபல விற்பெரிய முடவடி வெடுத்தகனி
நவையற நிறைத்த சுளையோ
நகைமதி முதற்பரிதி தகைபடு மடற்கதலி
நனிபல பலித்த பழமோ
முறியவை சிவப்பொழுகு மழகியன கொக்குவன
முதுகிளை கிளைத்த பழமோ
முகடுதொடு மக்கடலி னெரியநெரி சைக்குளழி
முகிலென வொழுக்கு புனலோ
வுறியமுது துய்க்குமவ னிருகையிலு மத்துழல
வுத்தியி னுதித்த சுதையோ
வுபநிடம றைப்பசுவின் முலைமடி சுரப்படைய
வுலகிடை துளித்த துளியோ
சிறிய மழ லைச்சுவையி தெனமல ரிதழ்ச்சிறுவ
சிறுபறை முழக்கியருளே
திருவளவர் பொற்பதயில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கி யருளே (8.8)
புகைவிடு சுடர்க்கனலி தலைவிமடி புக்கமுது
பொழிமுலை யலைத்த கைகொடே
பொருதிரை குரைத்தொழுகு பகிரதி யுரப்பவெழு
புதுமதி யழைத்த கைகொடே
முகைவிழு மடற்பொதுளு முளரியிடு தொட்டிலினின்
முரலளி விலக்கு கைகொடே
முதலறு வரைப்பருகி விமலையுட லைத்தழுவி
முடிமல ரெடுத்த கைகொடே
நகைவிடு முடிச்சுரரை வெருவன்மி னெனக்கருணை
நயனமொ டமைத்த கைகொடே
நளினனும் விளக்கரிய பொருளையறை யக்குறியின்
நடுகுழை யிழைத்த கைகொடே
சிகைவிடு கதிர்க்கடவுள் வரவறி கொடிக்கடவுள்
சிறுபறை முழக்கி யருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கி யருளே. (8.9)
உரைவிரி திருப்புகழை விழுமியவர் முப்பொழுது
மொலிகெழ முழக்க வழுவா
வுபநிட முதற்சுருதி கருதியமு னிக்குழுவு
மொழிவற முழக்க முழுதே
தரைவிரி வினைத்துரிசு தனையற வறுக்குமுகில்
தருமமு முழக்க வெதிரே
தமதுசிறை யைத்தடியு மதிதவிற லைப்பகைவர்
தகுதியின் முழக்க வருகே.
நிரைவிரி தமக்குறவி னறுவர்தவ சித்தியென
நிழலொடு முழக்க நெடிதே
நிருதருதி ரப்புணரி பருகலை நினைத்தலகை
நிறைகுல முழக்க முறையே
திரைவிரி கடற்குரிய மருகமுரு கக்கடவுள்
சிறுபறை முழக்கி யருளே
திருவளவர் பொற்பதியில் வருகுளவ சத்திதர
சிறுபறை முழக்கி யருளே. (8.10)
சிறுபறைப்பருவம் முற்றிற்று.
------------------------------
சிறுபறைப் பருவம்:-
அஃதாவது பாட்டுடைக் குழவியைச் சிறுபறை கொட்டும்படி வேண்டும் பருவம். இது இரண்டாமாண்டிற் கூறப்படுவது.
1. உவரிற் பெரிய பரப்பு = சமுத்திரம். வருக்கை = பலா.
2. பை=படம். தொய்யில்=உழுநிலம்.
3. மேதி=எருமை.
4. கவுணியமரபிற் காதலன்=சம்பந்தன்.
7. முதலை:-ஊகூ என்னும் கந்தருவன் சாபத்தினால் முதலை வடிவம் பெற்றிருந்தான். களிறு=இந்திரத்தூய்மன்என்னும் அரசன் சாபத்தினால் யானையுருவம் பெற்றிருந்தான்; இவ்விருத்தாந்தத்தைக் கஜேந்திர மோக்ஷக் கதையாலுணர்க.
8. கொக்கு=மாமரம். முகில்= மேகம்
9. அறுவர்=கார்த்திகைத்தாயர். நளினன்=பிரமன். கதிர்க் கடவுள் வரவு அறிகொடி= சேவல்
-------------
ஒன்பதாவது : சிற்றிற் பருவம்
கோவே கொவ்வைச் செழும்பவளக் கொழுந்தே குறவர் பசுங்கிளியுங்
குலிச னளித்த விளங்குயிலுங் குனிக்கு மயிலுந் தனித்தகலாக்
காவே வேதப் பெருங்கடலே கடலிற் கடையாக் கவுத்துவமே
கங்கைப் புனலால் வளர்ந்தெழுந்த கரும்பின் சுவையே சுரும்பிமிராப்
பூவே பூவில் வருந்தேனே பொருங்கோ ளரியே யரியபரம்
பொருளே யுலகுக் கொருபொருளா மவற்கும் விளங்காப் பொருள்விளக்கும்
தேவே தேவக் குலமுதலே சிறியேன் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேன் சிற்றில் சிதையேலே. (9.1)
கானே கமழும் கடம்பவிழ்தார்க் கடவுட் கரசே சுரலோகம்
காக்குந் துணையே யவுணர்குலங்களையுங் களிறே யிளையசிறு
மானே யுலகுக் கொருதிருத்தாய் மகவே மகரா லயங்காயும்
வடவா முகமே யறுமுகமாமதிய முதித்த வானகமே
தானே யுவமை தனக்கலது பிறிதொன் றில்லாத் தனிப்பொருளே
தருமப் பொருளே யெழுத்தாறுந் தரித்தா ரிதயத் தாமரைச்செந்
தேனே தெவிட்டாத் தெள்ளமுதே சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே (9.2)
மருவிற் பசுமைத் துளவோனும் வனசத் தவனுங் காணாத
வடிவிற் சோதி மடிப்புறத்தே மலருந் திருத்தா மரையலவோ
வுருவிற் புவனஞ் சதகோடி யுதரத் துமிழ்ந்த பெருமாட்டி
யுரமுந் தனமுங் கரமுமறந்துறையாச் சிறுபங் கயமலவோ
தருவிற் பெரியார் சிரமனைத்துந் தரிக்குங் கமலக் குலமலவோ
சதுமா மறையின் றலைப்பூத்த தண்டைப் புதுமுண் டகமலவோ
தெருவிற் பொடியும் புகத்தகுமோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே (9.3)
உதயா தவற்கு மிமகரற்கு மொழியாப் பதமு மழைவண்ணத்
தொருவன் புரந்த மாளிகையு மும்பர்க் கரசன் பீடிகையுஞ்
சுதையா தரிக்குஞ் சுரர்வீடு முடுவி னிருப்பும் பெருமுனிவர்
சுருதி கிளைக்குந் திருமனையுஞ்சோரா வுரகப் போகமும்
மதயா னையினெண் டிசைப்பாலர் மணியா லயமும் விஞ்சையர்கள்
வயங்குங் கோயில் பலப்பலவும் மக்கட் குடியும் புக்கவுணர்
சிதையா துதித்த பிரானன்றோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9.4)
உருமே கடுக்குந் திருவரைநாணுடுக்கு மணிக்கிங் கிணிநாவிட்
டொருசற் றொலித்தாற் பகிரண்ட கூடந் திடுக்கிட் டுடையாதோ
மருவே திகழுஞ் செங்கமல மலர்ச்சீ றடியிற் சிறுசதங்கை
வாய்விட் டரற்றிற் கடலேழும் வாய்விட் டரற்றி மறுகாதோ
குருமே தகைய கடகமுங்கைத் தொடியுங் கறங்கிற் புவனமெலாங்
கோலி வளைக்கும் பலகோடிக் குவடும் பிதிர்பட் டுதிராதோ
திருமே னிகுழைந் திடநடந்து சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9.5)
சுற்றின் முழங்குங் கடலேழு முலையாய்ச் சுடுதீ வடவனலாய்த்
தொல்லைத் திகிரிக் கிரியடுப்பாய்ச் சுடர்மா மேரு கடமேயாய்.
முற்றில் பிடித்துக் கொழித்தெடுக்கும் வல்சி முகட்டி லுடுக்குலமாய்
முதிருங் கதிரே திருவிளக்காய் முகிலூர் தியினான் மூதூரும்
பற்றில் வகுத்த பேரளகைப் பதியும் பசும்பொன் னறையேயாய்ப்
பணிப்பா தலஞ்செம் மணிப்பேழைப் படியா யடையும் பகிரண்டஞ்
சிற்றி லிழைப்பா டன்மகனே சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியஞ்* சிற்றில சிதையேலே. (9.6)
நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச சோராதோ
முகைபபுண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞெ சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9.7)
வெய்யோன் பகலை யிரவாக்கும்
விரகிற் பெரிய நின்மாமன்
மேனாட் பொதுவ ரகம்புகுந்து
*வெண்பா லுறியி னடுக்குழிப்பக்
கையோ ரிரண்டும் பிணித்திலரோ
குடவர் மடவார் சகங்காக்குங்
கடவு ளெனத்தான் பயந்தனரோ
கட்டா தகல விட்டனரோ
வையோ புலந்து தமியேமு
மன்னை மார்க்குஞ் செவிலியர்க்கு
மழுது மொழிந்தாற் சீறாரோ
வனைத்து மொருவ னாகிநிற்குஞ்
செய்யோன் மகனென் றஞ்சுவரோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9.8)
---------------
*'வெண்பா லுறியி னடுக்கொழிப்ப' என்பதும் பாடம்.
உவந்து தமியேன் முகக்கமலத்
தொளிவா டுகைக்கு நின்றிருத்தா
ளோரா யிரக்காற் பணிந்துபணிந்
தொழியா திரக்கு மொழியினுக்குங்
கவந்த நடிக்கு மவுணர்செருக்
களத்தே செருக்கு முனதுதகர்
கடவு (ளேத்றன்)ளினத்தின் கொடுமருப்பாற்
கலங்கு நிலைக்குங் கழுநீராய்
நிவந்த கண் சொரிந்தெமது
நிறமுங் கறுத்த கண்ணீர்க்கு
நிலாநித் திலமும் வயிரமுமே
கொழித்துக் கொழித்துக் நிலத்திழைத்துச்
சிவந்த விரற்கு மிரங்காயோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9.9)
எழுத்தாய் நிகரு மிருகரங்கள்
வருந்தி வருந்தி (மயன்)யமன் முதலோர்
இயற்றும் பெருஞ்சூர் மாளிகையோ
விருங்கோ ளரிமா முகனகமோ
முழுத்தா ரகன்றன் சீரகமோ
முதிருங் கதிரா யிரத்தினையும்
முனிந்தோன் முரசும் பேரிகையு (பானுகோபன்)
முழங்கி யெழும்பொற் கோயில்லோ
மழுத்தா மரைக்கை மணிமிடற்றான்
மகரச் செவியுட் பகருமொரு
வழுவாப் பொருளை யறியாது
மயங்கித் தியங்கிச் சிறையுறைந்தான்
செழுத்தா மரைப்பூஞ் சிற்றில்லோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் எருமானே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (9.10)
சிற்றிற் பருவம் முற்றிற்று.
-------------
சிற்றிற்பருவம்:-
அஃதாவது சிற்றில் இழைக்கும் சிறுமியர் தஞ்சிற்றிலைச் சிதைக்கவேண்டாமென்று பாட்டுடைக் குழவியை வேண்டும் பருவம். இத மூன்றா மாண்டிற் கூறப்படுவது.
2. மகராலயம்=கடல்
4. உதயாதவன்=உதய சூரியன். சுதை=அமிர்தம் உடு= நக்ஷத்திரம்
6. வல்சி=அரிசி. உடு= நக்ஷத்திரம். முகிலூர்தியினான் மூதூர்= அமராவதி.
6. பேழை=பெட்டி.
7. உரம்=மார்பு.
8. பகலையிரவாக்கினமை பாரதயுத்தத்தில்.
9. கவந்தம் = உடற்குறை,முண்டம். தகர் = ஆட்டுக்கடா.
10. சூர் = சூரபன்மன். அரிமாமுகன் = சிங்கமுகன்.
10. செழுந்தாமரை யென்பது எதுகைநோக்கிச் 'செழுத்தா மரை' என்றாயது.
-----------------------------------------------------------
பத்தாவது : சிறுதேர்ப் பருவம்.
வாடை யடிப்பொடு தென்கரை யந்த வசந்த னடிப்பொடுபின்
வடகரை கொண்டன் மடங்கு மடிப்பொடு மேல்கரை மண்டியங்கக்
கோடை யடிப்பொடு கீழ்கரை மோதி யலைந்த சலஞ்சலமும்
கோல வலம்புரி யும்பல கோடி குழாமோ டிக்குடிபோய்ப்
பேடை யனத்திரள் சேவ லெனத்தனி பின்பு தொடர்ந்துசெலப்
பேரக ழிக்குழி யாழ விழுந்து பெருங்கா லுக்குழலு
மோடை யிடத்தை விடுத்த செயூரா வுருட்டுக சிறுதேரே
வுலகை வலம்புரி கலப மயூரா வுருட்டுக சிறுதேரே. (10.1)
துப்பள வுங்கட லைச்சுடு தொன்மை யறிந்தழு தக்கடலுஞ்
சூழ விழுந்து தொழுந்தொழில் போல வெழுந்தம திச்சுடரே
வெப்பள வுங்கை மழுப்படை யாள ரழைத்தன ரன்னவர்சேய்
மெய்ப்பதி சேரின் வராதன வந்தது போலவி திப்பெயரோன்
றப்பள வில்லை விடுத்தி யெனத்தன தன்னமி னத்தொடுபோய்த்
தால மறைப்ப விரித்த சிறைக்கொடு தாழ்வது போலவகுத்
துப்பள மெங்கு நிரப்பு செயூரா வுருட்டுக சிறுதேரே
வுலகை வலம்புரி கலப மயூரா வுருட்டுக சிறுதேரே. (10.2)
பச்சிம திக்குண திக்கு வடக்கொடு தெற்குவி ளங்காமே
பரிதியு மிந்துவும் வழிவில கிப்பல காலுமி யங்குதிருக்
கச்சி கர்க்கரு கிற்பெரு கிக்கவுரிக்கண மாதர்வருங்
கம்பை நதிக்கரை மாவடி வைகிய கங்கைந திப்புதல்வா
நச்சிய ளிக்குல மொய்த்த மலர்க்கமலத்துந டுப்படுவீ
நாகிள வாளை களித்து களித்து நறும்பா ளைக்கமுகத்
துச்சிகு தித்திழி கின்ற சேயூராவுருட்டுக சிறுதேரே
வுலக வலம்புரி கலப மயூரா வுருட்டுக சிறுதேரே. (10.3)
வேறு,
மாவைத் தனிக்கவிகை யெனவைத்த கம்பற்கு
மருணவரு ணாசலற்கும்
வக்கிரே சற்குமக் காளத்தி யீசற்கு
மயிலையங் கத்தையொருபூம்
பாவைத் திறந்தந்த நாதற்கு மொற்றியூர்ப
பகவற்கு மாதிநடன
பதிவடா டவியற்கும் *வேதபுரி யற்குமே
பரம்பரம சூரவற்கும்
கோவைப் பெருஞ்சுருதி நந்திருத் திரர்கோடி
கோதில்சம் பாதியபயன்
குலிசன்மால் கமலனார் முதல்வர்நா லிருவர்மெய்
கொண்டமார்க் கண்டன்முதலோர்
சேவைக் கழுக்குன்ற வாணற்கு மொருமைந்த
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய் சரவணப் பொய்கையாய் தோகையாய்
சிறுதே ருருட்டியருளே. (10.4)
----------
*வேதகிரி எனவும் பாடம்.
நீறெழக் கனகக் கிரவுஞ்சங் கடந்தோடி
நிலம்வெதும் பக்கடலெலா
நிமிடமுற் சுடுவித்து மக்கடற் குழியேழு
நிருதர்குரு திக்கடலினால்
மாறெழப் பழையமடு விற்பெரு மடுக்கண்டு
மாசூரை வேரறுத்தும்
வடமே ருவைச்சூழ வந்துமெதிர் காணாது
வாயிரக் கமையாதுபோய்க்
கூறெழக் கனசக்ர வாளம் பிளந்துமக்
கோபமா றாதுமீதிற்
கொண்டலை யெரித்தணட கூடந்தி ரித்தண்ட
கூடப் புறப்புனலையும்
சேறெழப் பருகித் திரும்புங்கை வடிவேல
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய் சரவணப் பொய்கையாய் தோகையாய்
சிறுதே ருருட்டியருளே. (10.5)
வைவத் துரந்தாடு முரகக்கு லேசன்மகள்
மகனாகு மொருதொண்டைமான்
வாரிதித் திரைநல்கு மன்னன் பெரும்பேர்
வரம்பெற்ற வொற்றிகொண்டான்.
சைவத் தவப்பயனை யொத்தவன் வழிவந்த
தனையன் கழுக்குன்றனாந்
தக்க செம்பியவளவன் வந்துனக் காலயம்
சகலமும் தந்ததற்பின்
பௌவத் தலத்தெழு *சகாப்த மோராயிரத்
தொருநாலு நூற்றின் மேலும்
பயிலுநாற் பத்துமூ வருடமாம் †விடுவருட
மகரம் பகுத்ததிருநாட்
டெய்வத் திருத்தே ருருட்டியது போலவிச்
சிறுதே ருருட்டியருளே
செய்கையால் சரவணப் பொய்கையாய் தோகையாய்
சிறுதே ருருட்டியருளே. (10.6)
----
* சாலிவாகன சகம் 1443=(1443+78=1521. கி.பி.)ல் அதாவது இற்றைக்கு முந்நூற்றெண்பது வருடங்கட்கு முன்னர் முதற்றிருவிழா நடந்தேறியது.
†சில பிரதிகளில் விட வருடமென்றும் விய வருடமென்றும் வேறுபாடங்களுமுள. ஆயினும் விடுவருட மென்பதே சரியான பாடம். 1443-வது சகம் ஆங்கில வாண்டு 1521-ஆம் ௵த்துக்கு சரியாயுள்ளது. இவ்வருஷத்திற்குச் சரியாய் வருவது பிருஹஸ்பதி
வட்டம் விஷு (விடு) வருஷம் என்பது. விய என்பதோ சகம் 1449-க்கும், ஆங்கில வாண்டு 1526-க்கும் சரியாயுள்ளது.
விட என்பது அறுபது வருஷத்தில் ஒன்றாகக் காணப்படவில்லை. ஆயினும் விஷு (விடு) வருஷத்திற்கே வ்ருஷப (**) பிருசிய (**) என்னும் வேறு பெயர்களும் உள. ஆகையால் ஒருவேளை விருஷப என்பது விட என மரூஉ மொழியாய் நின்று
விஷு வருஷத்தைக் குறிக்கலாம்.
மகரம் பகுத்த திருநாள் என்றிருத்தலால் சரியாய்ப் பார்க்குமிடத்து 1521 டிசம்பர் அல்லது 1522 ஜனவரிமுதற்றிருவிழா ஆரம்பித்திருக்கலாம். அஃதெப்படி யெனின்
1521௵ மார்ச்சு௴ 27௳ *விஷு வருஷம் பிறந்ததெனின், அவ்வருஷத்திய தை௴ 1521 டிசம்பர் மாதத்திறுதியும் மறு வருஷம் ஜனவரி மாதத்திற் பெரும்பான்மையுமாம்.
*சென்னை ஹைக்கோர்ட்;டில் உதவி ரிஜிஸ்ட்ராரா யிருந்த கிருஷ்ணசுவாமி நாயுடு அவர்களால் தொகுக்கப்பட்டு ராபர்ட்டு ஸியூவெல் துரையவர்களால் பதிப்பிக்கப்பட்ட தென்னிந்தியா காலக்கிரம அட்டவணை, 62-ஆம் பக்கம் பார்க்க.
*[Vide page 62, South Indian Chronological' Tables prepaired by, W.S. Krishnaswami Naidu, the late Asst. Registrar, High Court and edited by Robert Sewell.}
மருத்தோய் சுருப்பொலி கலித்தகற் பகமாலை
மவுலித் தலைத்தேவரு
மாதவர் களுஞ்சிறை புக்கடிக் கடிமுன்
முறையிட்ட பொழுதுமுழுதும்
பெருந்தேர் துரக்கும் பிரானே வலிற்கலை
பிரிதந்து தென்புலம் போய்ப்
பேரிட்ட சூரனைப் பாரிடத் தானைப்
பெருங்கடற் கொண்டுபொருநாட்
குருத்தேர் மதிக்கின்ற கோட்டுமல கோட்டுடைக்
குருகின் பெயர்க்குன்றமும்
குவலயத் தாழியுந் தூளெழப் பத்துமா
ருதமுமுட் கோல்கடாவுந்
திருத்தே ருருட்டியது கண்டிலார் காணவிச்
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய் சரவணப் பொய்கையாய் தோகையாய்
சிறுதே ருருட்டியருளே. (10.7)
துய்யசெங் கோடையும் பழனியுந் தணிகையுஞ்
சுற்றிய விடைக்கழியுமுற்
சொல்லிய விராலியுஞ் சிகரமுஞ் சகரர்கைத்
தொடுகடற் சூழுமீழத்
தையதென் கதிர்காம மென்னுமலை முதலாய
தாகத் திருப்புகழெனா
வருணகிரி நாதன்பு கழ்ந்தபல மாலையு
மறிவருள மிக்கதமிழால்
வையக மதிக்கும் பரங்குன்றமுஞ் செந்தில்
வந்தசீ ரலைவாயுநீர்
வளவயற் றிருவாவி னன்குடியு மேரகமு
மருவகுன் றுதொறாடலும்
செய்ய பழமுதிர் சோலைமலையு நிலையாயவா
சிறுதே ருருட்டியருளே
செய்கையாய் சரவணப் பொய்கையாய் தோகையாய்
சிறுதே ருருட்டியருளே. (10.8)
வேறு
வீடாம ரப்பெரிய கோடாட முப்பொழுதும்
வீழ்மாம் பழத்தினமுதோ
வீறாலு யிர்க்குலமி றாலாமி னத்தைமன
விழைவோ டலைத்தமழையோ
வோடாவ யப்பகடு கோடாயி ரத்தினடி
யொழியா தொழுக்குமதமோ
வோராயி ரத்துறையி னாராத னைக்குறவ
ரொழியா வளக்குருதியோ
நாடாவி கற்பவினை யாடாமு கத்தினிய
நறுநாக முற்றநறவோ
நானாவி தத்தருவி தானாமெ னப்பரவி
நதிகோடி யிற்பொருதுபாய்
சேடாச லத்தகிரி யூடாத ரிக்குமுகில்
சிறுதே ருருட்டியருளே
சேயூர தத்துபரி மாயூர சத்திதர
சிரு**தே ருருட்டியருளே. (10.9)
வாயே மலர்க்குமுத மாயே சிவப்பொழுகு
மறையே மணக்குமிறையே
வானாறு மக்கடவுண் மீனாற முத்தமலை
வயன்மேல் விளைத்தபயிரே
போயே கதிக்கணுகு தூயார் பிறப்பிரவு
பொரவே யுதித்தகதிரே
போகாலை யத்தமரர் மாகால்வ ளைத்ததளை
புதிதேது மித்தவரமே
சாயேமெ னப்பொருத மாயாவி தத்தவுணர்
தமதா ருயிர்க்குநமனே
தாராத ரப்புரவி வீராக ரக்குலிசா
தருவாழ வைத்தகுருவே
சேயேயெ னக்கினிய தாயேய ருத்திகொடு
சிறுதே ருருட்டியருளே
சேயூர தத்துபரி மாயூர சத்திதர
சிறுதே ருருட்டியருளே (10.10)
சிறுதேர்ப் பருவம் முற்றிற்று.
ஆகப் பருவம் 10-க்கு செய்யுள் 100
*சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
-----------
*'சேயூர்க் கந்தர் பிள்ளைத்தமிழ்', 'சேயூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்' என்னும் பாட பேதமுமுள.
----------------------------------
சிறுதேர்ப்பருவம் :-
அஃதாவது பாட்டுடைக் குழவியைத் தாயர்சிறுதேருருட்டும்படி வேண்டும் பருவம். இது நான்கா மாண்டிற் கூறப்படுவது.
1. வாடை=வடகாற்று. வசந்தன்=தென்காற்று. கொண்டல்=கீழ்காற்று. கோடை = மேல்காற்று. சலஞ்சலம்=வலம்புரி ஆயிரஞ் சூழ்ந்த சங்கு. பெருங்கால்=சூறைக்காற்று.
2. துப்பு=பவளம். கடலைச் சுடுகை=மதுரையில் உக்கிர பாண்டியனாய்க் கடல் சுவற வேலெறிந்தமை. காலம்=பூமி.
3. பச்சிமம்=மேற்கு. இந்து=சந்திரன்.
4. கவிகை=குடை. குலிசன்=இந்திரன்
5. கிரவுஞ்சம்= ஒருமலை. நிருதர்= இராக்கதர்
6. வீ=புஷ்பம். களித்து களித்து:-சந்;தவின்பம் நோக்கி வலிமிகாது போயிற்று
7. பாரிடம்=பூதகணம்.
9. நறவு= தேன்,. முகில்=மேகம்.
-----------------------------------------------------------
செய்யுண் முதற்குறிப்பகராதி.
முதல் வார்த்தை | செய்யுள் எண் |
அக்காடவோ 2.7 | எழுத்தாய்நிகரு 9.10 |
ஆணிக்கனகத் 6.4 | ஒப்பாருமற்ற 4.5 |
ஆலைக்கேகரும்பொழிய 1.6 | கரிபுரம் வெளிறு 6.10 |
இந்தூர் வரைக்குழா 2.2 | கரைதொறும்வருவன 2.8 |
இமரவிக்கிரண 3.10 | கறையடிக்கயமெட்டுங் 2.5 |
இரணிய கருப்பன் 7.2 | கனையிற்கயமுங் 8.3< |
இலைக்கோடு சதகோடி 2.3 | கன்னற்குலமுங் 6.7 |
ஈரமனத்தவர் 3.6 | காம்பான்மலரப் 5.7 |
உதையாதவற்கு 9.4 | காலைத்துயிலை 3.3 |
உருமேகடுக்குந் 9.5 | காழியகநரிற் 8.4 |
உரைவிரி திருப்புகழை 8.10 | கானேகமழும் 9.2 |
உலகமார்பலகோடி 1.1 | கிளைபடுமுடுகுல 2.10 |
உவந்துதமியேன் 9.9 | குரைகழலடியை 6.8 |
ஊழிற்கடவுளா 7.5 | குவைதருதுகிரொளி 2.9 |
எஞ்சாமுகிற்கு 5.6 |
கூடன் மேலைப்பரங் 7.8 | நாட்டுப்பிறையூர் 1.9 |
கைத்தடிகொண்டுறி 3.5 | நிரையோடரிக்கண் 6.5 |
கொற்றத்துழவர் 5.4 | நிலைதுறந்தவஞ் 1.8 |
கோவேகொவ்வைச் 9.1 | நீளவட்டப்பரவை 4.4 |
சுற்றில்முழங்குங் 9.6 | நீறெழக்கனகக் 10.5 |
சென்றுகராவி 8.5 | நெஞ்சாலுகந்துகந் 7.7 |
சோலைவனக்கர 3.7 | பங்கக்கமலத் 8.6 |
தவிராதவெவ்வினை 7.10 | பச்சிம திக்குண 10.3 |
துப்பளவுங்கட 10.2 | பதறியகலப 6.9 |
துய்யசெங்கோடையும் 10.8 | பம்பிற்கழியே 6.2 |
தேயவும் பெருகவும் 7.6 | பரம்பிற்குமுறுங் 6.6 |
நகைத்தண்டரளத் 9.7 | பரியாற்கரடக் 6.3 |
நத்துக்கொத்து 5.1 | பாயாரெனுமத் 3.4 |
நவக்குஞ்சரமே 5.5 | பாரங்கமீரேழை 4.1 |
நறியபலவிற்பெரிய 8.8 | பாவாய்குதலைக் 5.3 |
புகைவிடு சுடர்க்கனலி 8.9 | மடையைமுட்டுவன 3.9 |
புவிக்கேயிடந்தந்த 2.6 | மதகோடியாயிரங் 4.6 |
பூதலப்பகிரண்ட 7.3 | மதனானமைத்துனன் 7.4 |
பூநாறுவரிற் 8.1 | மருங்கடுத்தவர் பராவாய் 1.7 |
பூநாறுபொற்பிற் 1.2 | மருத்தோய்சுருப்பொலி 10.7 |
பூமாவின் மனையனைய 5.9 | மருவாய் வனசத் 5.8 |
பூவாதியுலகடைய 5.10 | மருவரு சுருப்பொலி 1.5 |
பெருவாய்மகோததி 2.4 | மரவிற் பசுமை 9.3 |
பேழைத்திரட்கொண்ட 4.4 | மாவைத்தனிக்கவிகைப் 10.4 |
பேறாய கீரன்முற் 1.1 | மிக்கேருழும்பொற் 6.1 |
பையிற்சுடிகைக் 8.2 | முகடுகிழிவித்தழுத 4.8 |
பௌவத்திறங்காத 4.7 | முதலைகவரக்களிறு 8.7 |
மகரமெறிகடல்சுவற 1.3 | முதியதிரிபுவன 1.4 |
மகரப்பரவை 3.1 | முறங்காதுகடுத்்தகடக் 1.10 |
மகாசலதிப்படியின் 4.9 | மையோதவாரிதித் 7.9 |
வங்கக்கடற்சூழு 4.2 | வித்தேவித்தும் 5.2 |
வருணனுக்குலக 3.8 | வீடாமரப்பெரிய 10.9 |
வளைபடுகடற்புவியி 4.10 | வீதிப்படுஞ்சக்ர 7.1 |
வாடையடிப்பொடு 10.1 | வெய்யோன் பகலை 9.8 |
வாயேமலர்க்முத 10.10 | வேயாயிரங்கோடி 2.1 |
வாளுஞ்சங்கு 3.2 | வைவத்துறந்தாடு 10.6 |
அநுபந்தம்
அந்தகக்கவி வீரராகவ முதலியார், ஈழநாட்டரசனாகிய பரராசசிங்கன் சமுகத்தில், தாமியற்றிய பிரபந்தங்களிற் சிலவற்றை யரங்கேற்றிய பின்னர், ஒருநாள் அரசன் அவரைநோக்கி "ஐய, தாங்கள் கம்பராமாயணம் ஒருநாள் பிரசங்கம் செய்யவேண்டும்" என்ன அதற்கவர் "கம்பராமாயணம் என்னும் ஒருநூல் உளதோ!" வென்றுசொல்ல, அரசன் அங்குள்ள புலவர்களிலொருவரை அந்நூலினைக் கொணரும்படிசெய்து கவிராயருடைய சீடரிடம் கொடுத்து அதனைக் கவிராயர்க்குத் தெரிவிக்க அவர் அதினின்றும் சில பாடல்களை எடுத்துப் படிக்கச்சொல்லி அனைவரும் ஆனந்த பரவசமாம்படி பிரசங்கஞ்செய்த நிறுத்தி, அரசன் அரண்மனை சென்ற பின்னர், கம்பராமாயண நூலினின்றும் ஏடுகளை உருவி அங்கிருந்த புலவர் பலரிடத்தும் பற்பல் ஏடுகளைக் கொடுத்து வாசிக்கச் சொல்லிப் படித்து முடிந்ததும் அவற்றைக் கட்டிவைத்துப்போம்படி செய்து மறுநாட் காலையில் அரசன் பட்டி மண்டபத்துக் கவிராயர் வழக்கப்பிரகாரம் சென்று, மனக்கிலேசத்துடன் இருப்பார்போன்று தன் முகக்குறிப்பால் அரசர்க்குத் தெரிவிக்க, குறிப்பறிந்த குரிசில் குரவரைநோக்கி "ஐயா, இளைப்பும் களைப்பும் அடைந்தோர் போன்று தோற்றுகின்றீர். இதற்குயாது காரணம்?" என, கவிராயர் "ஏ நிருப, நேற்றிரவெல்லாம் இராமாயணப்போர் ஒப்படி செய்தேன். அதனால் வந்த களைப்பு இது" என்ன, அரசன் "அப்படியானால் கண்டு முதல் யாதோ" என்ன அதற்கவர் "ஐயா, அடித்தது பன்னீராயிரம்; கைக்கெட்டியது நாலாயிரம், கல் இரண்டாயிரம் பத ராறாயிரம் என்று சொல்லிப் பண்புடைய-வெனப்பட்ட நாலாயிரம் பாக்களின் கருத்தை எடுத்துப் பண்புடன் தொடுத்து பரராச சேகரன் பரமானந்தங்கொள்ள இராமகாதையை இனிதெடுத்துரைத்தார். இதைக் கேட்டு மகிழ்ந்த பரராச சேகரன் கவிராயரைப் புகழ்ந்து பாடினான். அச்செய்யுளை முகவுரையின் 17-ஆம் பக்கத்தின் முதலிற் காண்க.
கவிராயர் தொடுத்த செய்யுள் இப்போதகப்படவில்லை.
-------------------
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
1.3 | நிறுவிட்ட | நிறுவுற்ற |
1.3 | சிவபாமை | சிவபரம |
1.3 | திலதத்தி | திலகத்தி |
1.4 | விறல்கொடு | விரல்கொடு |
1.4 | முதுமறை | முலைமழை |
1.4 | மதியை மதிதவழு | மதிய மதிறவரு |
1.5 | மோதக | மோதன |
1.9 | நாட்டுப்பிறையூர் | நாட்டுட் பிறையூர் |
1.10 | விடுக்கவுலகுக் | விடுநா ளுலகுக் |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
2.1 | மூன்றுமா | மொன்றுமா |
2.2 | பெயருர | பெயரூர |
2.4 | பிறங்க | பிறங்கக் |
2.4 | காவலன் | காவலின் |
2.4 | பரிகரித்தேவி | பரிகரத்தேவி |
2.5 | தருக்கிரைதரப் | தருக்கரைதரப் |
2.6 | புலத்தாமரை | பொலந்தாமரை |
2.9 | யெந்தாயென் | யெந்தாயுன் |
2.10 | சங்கோடுங் | செங்காடுங் |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
3.2 | சங்குமிளங்கொடி | செங் குமுழுங்கொடி |
3.3 | தவரை | தலரை |
3.4 | கிறைவிப் | கிறைவி |
3.6 | நோவாய் | நோய் வாய் |
3.8 | மதி | விம |
3.9 | மழுவுருக்குவன | மடுவுழக்குவன |
3.10 | வடையு மெப்படியு நொடிவலத்தில் வரு | மதிகதித்துரக தாலேலோ |
3.10 | முகமுகத்துவிடு | முகமுகுத்துவிடு |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
4.2 | புலத்தண்டை | பொலந்தண்டை |
4.3 | கூழை=வளைந்த | கூழை= பெண்மயிர் |
4.5 | நகராளி | நகராள |
4.8 | பற்றாத | பற்றார |
5.1 | கொத்தும் | கொத்துப் |
5.1 | தோறும | தோறும் |
5.2 | வெருண்டெழ | வெகுண்டுழு |
5.5 | நிரைத் | நிரைந் |
5.7 | யவளுங்கை | யவளுவகை |
5.7 | வகையோரொழு | வகையூற்றொழு |
5.9 | முததமோ | முத்தமோ |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
6.1 | புகுத | புகுதப் |
6.1 | மொரு | பொரு |
6.1 | கருந்தாட் | குறுந்தாள் |
6.1 | மழையப் | மழையைப் |
6.1 | கழித்துஞ் | கிழித்துஞ் |
6.1 | சுரும்பாற் | சுரும்பார் |
6.1 | பம்பிற் | பம்பிக் |
6.2 | கரவாமே | காவாமே |
6.3 | பார்க்குந்தரனா | பரக்குந்தூளும் |
6.7 | சாறுங் | சாறு |
6.8 | மலைகள் | மமலைகள் |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
7.2 | நெறி | வெறி |
7.3 | மிவின்கரையின் | மிவின் ற கரை |
7.4 | முதனாரி | முதனாளில் |
7.5 | னினநீ | னின்னநீ |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
8.1 | றுவரிற் | றுவரிப் |
8.4 | யுண்ட முதத்தைக் | யுண்டழு தமணைக் |
8.6 | வேற்பழநிலா | வெற்பழநிலா |
8.8 | தமுதுநீர் | தழுதுநீர் |
8.10 | மதிகவிரலைப்பகைவர் | மதிகவி றலைப்பகவர் |
8.10 | நினைத்தவகை | நினைத்தலகை |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
9.1 | சிறியேன் | சிறியேஞ் |
9.7 | றறிந்து னிடத்திரங்கி | றீந்துநிலத் திறங்கி |
9.9 | கடவுளினத்தின் | கடவுளேத்தன் |
9.9 | யமன் | மயன் |
செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
10.3 | பரம்பரம | பரம் பா |
10.5 | வாயிரக் | வாயிரைக் |
10.5 | கூடத்திரித்தண்ட | கூடந்திறந்தண்ட |
10.6 | மகன் | மகண் |
10.6 | குருத்தேர் மதிக்கொழுங் | கோடுழுங் கோடுடைக் |
This file was last updated on 27 August 2014.
.