![](pmdr0.gif)
சபாபதி முதலியார் இயற்றிய
ஸ்ரீகாஞ்சீபுரம் "குமரகோட்டக்கலம்பகம்"
kumarakOTTak kalampakam
of capApati mutaliyAr i
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India
for providing us with scanned image version of this work .
This work has been prepared via Distributed Proof-reading implementation
of Project Madurai and we thank the following volunteers for their
assistance in the preparation of this work:
Aravind, S. Karthikeyan, Lakshmi Subramaniyan, Mithra
R. Navaneethakrishnan and K. Ravindran
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
இயற்றிய
குமரக்கோட்டக் கலம்பகம்
Source:
ஸ்ரீகாஞ்சிபுரம் "குமரகோட்டக்கலம்பகம்"
இஃது மஹாவித்வான் புரசை - அஷ்ட்டாவதானம்
சபாபதிமுதலியாரவர்களால் இயற்றி
மேற்படி முதலியாரவர்கள் மாணாக்கர்
திரு - சின்னசாமிப்பிள்ளையவர்களால் பார்வையிட்டு
திருப்பத்தூர்-ஸ்டேஷன்மாஸ்டர்
புதுவை - நாராயணசாமிபிள்ளை
குசப்பேட்டை - தங்கவேலுசெட்டியார்
இவர்கள் உதவியைக்கொண்டு
மேற்படி முதலியார் தமையனார் குமாரர்
பு- த. குப்புசாமிமுதலியாரால்
சென்னை
ஆதிகலாநிதி அச்சுக்கூடத்திற் பதிப்பித்தது
1892-ம் ஆண்டு சூன் மாதம்
இதன் விலை அணா - 1 1/2.
-------------------------
சாத்துகவிகள்.
இந்நூலாசிரியர்மாணாக்கர் திரு. சின்னசாமிப்பிள்ளையவர்கள்
பாடிய விருத்தம்.
தலம்பலவற் றுட்சிறந்த தகைமைசெறி திருக்கச்சிக்
குமர கோட்டக்
கலம்பகப்பா மாலையெழிற் கந்தவேள் கழலிணைக்கே
புனைந்தான மன்னோ
நலம்பயிலும் புரசைநக ரிறைகங்கை குலதிலக
னாளு மனபால
நிலம்பரவு மஷ்ட்டாவதானச் சபாபதிமால்
நெடிது வந்தே.
குன்றுதோ றாடுமுயர் குமரவேள் குரைகழற்கே
யன்பார் கோமான்
நின்றசீர்க் கலையாழி நெடும்புலவ ருளத்தரசு
வீற்றி ருக்கும்
என்றுநே ரட்டாவ தானச் சபாபதிமா
லெந்தை கச்சி
யொன்றுமாக் குமரகோட் டக்கலம்ப கத்தையினி
துரைத்து ளானே.
மேற்படி முதலியார் மாணாக்கர்
திருமயிலை சண்முகம்பிள்ளைபாடிய
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நிதிபூத்த மணிமாடக் கச்சிநக ரெஞ்ஞான்று
நிலவப் பூத்த
விதிபூத்த மணிமாலை கமண்டலக்கை யொருவிசா
கன்பூந் தாட்குத்
துதிபூத்த கலம்பகப்பா மாலையொன்று செய்தணிந்தான்
சோவார் சென்னைப்
பதிபூத்த புரசைவரு சபாபதிசற் குருமணிமெய்ப்
பரிவின மாதோ.
திருக்கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறையாதீன
மஹாவித்துவான் - திரிசிரபுரம் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளையவர்கள் மாணாக்கரும்,
காஞ்சிபுரம் - பச்சையப்பமுதலியார் கல்விச்சாலைத்
தமிழ்ப்பண்டிதருமாகிய தி-சு. வேலுசாமிபிள்ளையவர்களியற்றிய
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
பருகுமரக் கோட்டமட வார்நடமா டுங்கச்சிப்
பதிவேட் கன்பு
தருகுமரக் கோட்டகக லம்பகத்தா மம்புனைந்தான்
றனைச்சார்ந் தோர்க்குத்
திருகுமரக் கோட்டநிகர் மனந்திருத்திக் கலைபயிற்றுந்
திறலோன் செந்தேன்
பெருகுமரக் கோட்டயிலோன் பேரருள்கொள் சபாபதிப்பேர்ப்
பெருநா வல்லோன்.
------
திருஎவ்வுளூர் இராமசுவாமிசெட்டியாரவர்களியற்றிய
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
குலம்பகமெண் கல்வியிரு வகைச்செல்வ மோங்குகச்சிக்
குமர கோட்டக்
கலம்பகமொன் றியற்றிமிகக் கற்றுணர்ந்த புலவரெலாங்
களிப்பத தந்தான்
சிலம்பகங்கொள் குகனருளு மட்டாவ தானஞ்செய்
திறலும் உள்ளாம்
விலம்பகமுற் றாமதிப்பும் பெறுபுரசைச் சபாபதியா
மேலோன் றானே.
உ
முருகன் துணை
சபாபதி முதலியார் இயற்றிய
ஸ்ரீகாஞ்சீபுரம்
குமரகோட்டக்கலம்பகம்.
---------
விகடசக்கர விநாயகர் காப்பு.
நேரிசைவெண்பா.
புகழ்வாய்ந்த காஞ்சீ புரிக்குமர கோட்டக்
குகனார் கலம்பகத்தைக் கூற - நகமா
முகடசக்க ரக்கரியை மொய்ம்பிறுத்தோ னீன்ற
விகடசக்க ரக்கரியை வேண்டு (1)
ஏகாம்பரநாதர்துதி.
ஏத்திப் பணிந்துகுறி யேற்ற பெரும்புகழைச்
சாத்திப் பதிந்தனமால் சார்ந்துபிறர் - தேத்தியைந்து
நச்சியே கம்ப னலமுதவு மாவடிக்கண்
கச்சியே கம்பன் கழல். (2)
காமாக்ஷியம்மைதுதி.
கட்டளைக்கலித்துறை.
உருகாமக் கண்ணிய மத்தொழு கோம்புல்லி யோரகந்தைத்
திருகாமக் கண்ணிய கத்துட் படோங்கொடுந் தீவினையாற்
கருகாமக் கண்ணிய மாலைய ரேகம்ப வாணர்கச்சி
வருகாமக் கண்ணியம் மைக்கன்பு செய்து வணங்கினமே (3)
நேரிசைவெண்பா
மன்னர் திருவு மகளி ரெழினலமும்
பொன்னுலகர் போகமுநெஞ் சேபொருந்த - வுன்னுவதோ
விச்சிப் பலதளியுங் கேத்துதலே யிச்சிப்பாங்
கச்சிப் பலதளியுங் கண்டு. (4)
நால்வர்முதலானார்துதி.
கலித்துறை.
பொற்காசு பொற்றிரள் வாங்கிய மூவர் பொலங்குடுமி
விறகா சுகநெடு மாலெனக் கொண்டவர் வேட்டருளுஞ்
சொற்காசு தீரபொற் குவைதந்து வாசகத் தூய்மறையாம்
நற்காசு நல்கி னவர்நாயன் மார்பத நாடுதுமே. (5)
அகத்தியமுனிவர்-நக்கீரதேவர்-அருணகிரிநாதர்துதி.
எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
சந்தனப் பொதியத் தடவரை பயினமுத்
தமிழ்த்தவ நிதியைமா தேவ
ரிந்தனப் பொதிமுன் பகர்ந்ததென் கூட
லியற்றமிழ் மேருவை வடிவேற்
கந்தனப் பொருட்பே றருளது பூதி
கடவுளவான் றிருப்புகழ்ப் பனுவ
லெந்தனப் பொருப்பி னுதவுமா மணியை
யிறைஞ்சியெம் மகத்திருத் துதுமே. (6)
நூன்முகம்.
வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா.
பூமருவுமாமகளும் போதன்மகிழ்நாமகளுந்
தேமருவுசிவஞானத் திருமகளுங்களிசிறப்பத்
திருக்காமக்கோட்டியெல்லாஞ் செகுத்துயிர்கட்கறம்வளர்க்குந்
திருக்காமக்கோட்டியம்மை சினகரநாப்பணவிளங்க
மோனசிவநிட்டைபுணர் முத்தரும்வந்தாதரங்கூர்*
ஆனபலவிம்மிதங்கள் ஆங்காங்குவியப்புறுத்த
எத்தேவருமிறைஞ்சி யேத்துமயன்மாலரனாம்
முத்தேவருந்தொழுது முன்னிநிதம்போற்றிசைப்ப
மாகம்பெட்புறுகாஞ்சி வைப்பினொருமாமூலத்
தேகம்பப்பெருமானா ரின்னருட்செங்கோனடத்த
அமரகோட்டத்தினுமீ தாரியசீர்மேயதெனுங்
குமரகோட்டத்துமணிக் கோயிலிடையமாந்தருள்வோய்
தந்தைசொலின்மிக்கதொரு மந்திரமின்றெனுந்தகைமைக்
கெந்தையவணெய்தியநின் னின்னிசைச்சீரேத்துதுமே
முன்படைப்பினெல்லாம் முறைபிறழவென்றோதடுத்து
நின்படைப்பினெவ்வெவையு நோநிறுத்தநினைந்தனையால்
வீறுமுகமொன்றுடனே மெய்த்தவம்பூண்டாயெனினும்
ஆறுமுகனல்லையென்றிங் கியாருரைக்கவல்லாரே
சேனாபதீச்சரத்திற் சேர்ந்துதனிநின்றிடினும்
ஆனாஞானக்கிரியை யன்றியொன்றுசெய்ததுண்டோ
அம்மையப்பரேசாலும் ஆருயிர்கட்கென்றிருப்பத்
தம்மையெப்போழ்தும்பிரியாய்தம்மொடும்வீற்றிருந்ததென்னே.
இவை தரவு.
பலபல சமயிகள் பணிதனி முதலென
நிலவிய வுனதரு ணிலையறி பவரெவர்
பொலனுறு பொதிகையின் முனிபுக லுதியென
உலைவற வருளிய வுயர்பொருள் வடிவினை
இரவொடு பகலுள திலதென லறிவரு
பரசுக முறுமொரு பதியெனு நிலையினை
மறைகளி னடிமுடி மருவிய குடிலையை
இறையவா வினவலு மினிதென வருளினை
இவை நான்கும் ஈரடியராகம்.
சொல்லெனப் பொருளெனத் தொடர்ந்துநின்றனை
சொல்லினும் பொருளினுந் தொடர்பகன்றனை
காலமுங் கணக்குமாக கலந்துதோயந்தனை
காலமுங் கணக்குமேற கடந்துவாயந்தனை
இவை இரண்டும் நாற்சீரடி யம்போதரங்கம்
அருமறை முதல நொடித்தனை
யடியவர் நினைவ முடித்தனை
வரைதொறு முலவி நடித்தனை
வளர்தமிழ் மழைவ ருடித்தனை
திருவள மலிவு கொடுத்தனை
சிறைதப வயனை விடுத்தனை
அறுவாத முலையை மடுத்தனை
அடைகுநா பிறவி தடுத்தனை
இவை எட்டும் முச்சீரோரடி யம்போதரங்கம்.
அலைசுவற்றினை, மலைகவற்றினை
அன்புனோக்கினை, துன்புநீக்கினை
பரையளித்தனை, தரைகளித்தனை
பரரைவாட்டினை, சுரரைநாட்டினை
இருள்செகுத்தனை, தெருள்பகுத்தனை
இன்புசீர்த்தனை, வன்புதீர்த்தனை
மறைதெரித்தனை, துறைவிரித்தனை
மயிலடுத்தனை, யயிலெடுத்தனை.
இவை 16-ம் இருசீரோடி யம்போதரங்கம்.
எனவாங்கு தனிச்சொல்.
தேவதேவநின் றிருப்புகழ்போற்றி
யாவுமானா யல்லாய்போற்றி
காவறகடவு ளாதியகடவுளர்
மூவர்க்குமூவுர் முதல்வபோற்றி
உன்பதமென்னுளத் துன்பணித்தொண்டர்தாள்
ஒன்றியதுகளென் றன்சிரமேல
துன்பெயர்நந்தமு மென்றனாவகத்
துன்றனைத்தொழுத லென்றுணைக்கைத்தலத்
துன்னுருக்காண்ட லென்னிருகண்ணகத்
துன்னைநினைத லென்னெஞ்சகத்து
ளென்றுமென்னா நின்றுநெக்குருகிப்
பாடிப்பணிந்து பரித்துக்கணித்து
நாடியஞ்சலித்து நனிதரிசித்து
வாழ்த்திமதிக்கு்ம் வழியடியேனை
யூழ்த்திறனலியா தொருநினைப்பற்றினன்
அறியாய்போன்று சிறிதுநீகேட்டியேல்
பழையதோர்கருணை பாராட்டிப்
பிழைதபுத்தருணமதி பெம்மானெனவே. (1)
இவை பதினெட்டடி நேரிசையாசிரியச்சுரிதகம
நேரிசை வெண்பா.
எனதியா னெனல்தீர்த் தெழிற்குமர கோட்டந்
தனதா விருப்பான தடுத்து--நனிகாக்கும்
வாழ்த்து மடியர்களை வன்பிறப்பாம் பௌவத்துட்
டாழத்து மடியர்களைக் தான்.
(2)
கட்டளைக்கலித்துறை
தானவச சோர ருடனசூர் தடிந்தவன் றாள்சரணென
றூனவச சோயவதன முன்மணி வெள்ளிபொன் னொண்மழைபெய
வானவச சோலை செறிக்கச்சிக் கோட்டகத்தை வாழ்த்தவிரு
ளானவச சோக மிலாஞானங் கூடுநன் றாயந்திடினே.
(3)
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
ஆயுந் தவமென வெனசெய்தீ ரணிகும ரக்கோட்டத் தெய்தீர்
தீயும் வனமுந் தலமாகச் சென்றே யழல்வீர் நலமாக
உறுகணடியார்க்ககல வருளுமபயாத்தமுட
னுதவுமவாதாத்தமொடு கூடிச்சிறந்தன
ஒருபிரணவார்த்தமவின வியபகலிலாட்சிபெற
உலகைநிலைநாட்டியுயிர் பாரித்தமாநதன
உரியதினைகாக்குமவள தருநிழலிலவாழ்க்கைமகள்
உவகையினராயத்தழுவ மோகித்துவந்தன
உததியிடைமாததருவை யெறியவிடுவேறபலகை
உவைமுதலவேறறுலகு காவற்கிசைந்தன
மறுவிலபரமார்த்தநிலை பெறுபுநிதர்பாற்பரவு
மருவுசிரமேற்பெரிது சூடித்திகழ்ந்தன
வடசொல்தமிழமூதா தியெனும் அருணகிரிவாக்கிலெழு
மதுரமொழியாறகவிதை பாடக்கனிந்தன
வளைகடலினூற்றுமத கரிமுகவனாற்கிளைய
வரசரவணோற்பவர மோகச்சவுந்தர
வடிவழகுபாற்கரனை நிகாகுமர கோட்டநிலை
வருமிறைவரமாட்சிதரு வாகைப்புயங்கனே (10)
நேரிசை வேண்பா.
புயல்போன மணிவண்ணன் போந்துறைவ தெனனே
உயர்குமர கோட்டத்தி லுனனோ - டயிலோய
மருகனென நிற்பிரிய மாட்டாமை யோதான
உருகுமுள்ளத் தானென றுவந்து. (11)
கலித்துறை.
உவரிக் கண்ணே நின்றாய் வந்தா யுலகெங்கும்
துவரச செலவா யன்றோ திங்காள துயர்செய்தார்
அவரெப் பாலே சென்றார் கண்டா யோசொல்லாய
தவமெய்க குமரக் கோட்டத் தவர்சொல் தவநன்றே. (12)
கட்டளைக் கலித்துறை.
தவாநில மேற்பெரி தாச்சிர மத்திது தானெனவுள்
ளவாநில வும்பெரி யோர்தவ வாழ்க்கைய தாகுநிரம்
பவானில நந்த மதிதா ரகையிற் பணிலமுத்தங்
குவானிலவீனும் தடஞ்சூழகுமரன்பொற் கோட்டமொன்றே. (13)
நேரிசைவெண்பா.
கோவிருக்குங் கோவிருக்குங் கோபுரஞ்சூழ கோயிலிலோர்
மாவிருக்கு மாவிருக்கும் வாழ்விருக்கும் - மூவருக்கு
நாட்டமிருக் குமமறமெண் ணானகிருக்கும் வேளகுமர
கோட்டமிருக் குங்கச்சிக் குள. (14)
கட்டளைக்கலிப்பா.
கச்சி றுக்கும்பொற் கொங்கைக் குடம்பெரு
கச்சி றுக்கும ருங்குனல லாயுனை
இச்ச கத்தில் விடுத்த விதியினை
இச்ச கத்திற் புகழவல் லேனலேன
அச்ச னைத்துந் தரச்சிறை நீத்தருள
அச்ச னைத்துதிப் பேன்பெரும் பேறுளேன்
மெச்சு கத்தன குமரகோட் டப்பிரான்
மெய்ச்சு கத்தன்பு மிக்கவாக கொப்பலே. (15)
எழுசீர்க்கழிநெடில்வண்ணவிருத்தம்.
கவரமனத் தரிவைமார ஒருபுறத் தவர்கணாற
கவலைகூட டிடினுநண் பொருண்மேலே
இவாவிருப் பமதொர்பா னிலமிசைப் புரிவொர்பா
லிவைகளேற றிடினுமவந் தொருபாலே
நவவகைச் சுவையினா லெவாமயக் கினுமுனே
நவிலுமவேட் கையிலயாந தறியேமால
குவலயத் தொடையலார் நிகழுமெய்த் திருவநீள்
குமரகோட் டமதைவண் டமிழாலே. (16)
நேரிசைவெண்பா.
வண்டே யளியே யெனவழுத்தி னேனுனையத்
தண்டே மொழிப்பொருளைத் தானுணர்ந்து - கொண்டேகிச்
செவ்வேளைத் தென்குமர கோட்டத்திற் சேவித்திங்
கிவ்வேளை நீவருக வென்று. (17)
கொச்சகக்கலிப்பா.
என்றனா னெப்பொழுது மென்றனாகத் துளனால்
ஒன்றிடா வெண்மையரோ டொன்றிடா வண்மையெல்லா
மன்றவாஞ் சோலையிற்சோ மன்றவா மாதணிகைக்
குன்றுளான வண்குமர கோட்டத் தனுதினமே. (18)
இடையூறுகிளத்தல் - கட்டளைக்கலித்துறை.
அனங்காட்டி நல்லமு தங்காட்டி யானநத மன்பருக்குத்
தினங்காட்டியகும ரன்கோட்ட மால்வரைச் சேயிழைமோ
கனங்காட்டிக் காதலுங் காட்டிய வாறு கனத்தபெருந்
தனங்காட்டியென்னகண்ணோட்டமுங்காட்டிடிற்சாலநன்றே. (19)
நேரிசையாசிரியப்பா.
நன்றிகொன்றாருக் கின்றோருயவெனாக்
கூரியர்கட்டுரை யாரியங்கேட்டுந்
தத்தங்கனம வித்தினையொழிப்பான்
தனுமுதனானகு மினிதளித்தவற்றை
நுகாவித்திடுங்காற் பகாபற்பலசிற்
றின்பத்தமிழந்து தன்றன்வரவைச்
சிறிதுமுணராத தறுகணாளா
தீர்விலாவவிச்சைச் சார்பினிற்கொட்புற்
றுழல்குநரனறிப் பொழில்வரிவணடினம
மூசொலியடங்கா வாசநீள கச்சியிற்
குமரகோட்டத் தமரர்நாதநிற்
பழிச்சும் பேறிலாப்பதகர்
தெழிக்குமாறெவன் றிமிரத்தொடக்கே. (20)
வண்ணத்தாழிசை.
திமிரத்தாற்சித் தசனைப்போற்றித்
திருவிற்காட்சிக் கினியாராய்த
திகழ்பொற்பார்க்குப் பொருளைத்தோற்றுத்
திறலற்றேககத தினிலாழாச்
சுமைமிக்காற்றிப் பிறவிக்காட்டிற்
சுழலக்கோட்பட் டுழலாமே
சுடர்பொற்றாட்குற் பலமிட்டேத்திக
தொழுமெயப்பேற்றைத் தரவாராய்
அமரர்க்கூட்டச் சிலைமத்தாச்சாப்
பமதைப்பூட்டிக் கடலூடே
அமுதத்தேட்டைத் தருபொற்சூட்டத்
தரவச்சேக்கைப் புயலோடேய
குமுதப்பூக்கட் கயல்கட்டேக்கிக்
குலவப்பார்த்ததுக் குருகோவாக்
குளனுற்றாப்புப் பணிலச்சோபபக்
குமரக்கோட்டத் துறைவாழ்வே. (21)
கலிவிருத்தம்.
வாழ்வை முற்றுநம் பாமற் புரிமுக
வேழநி லைத்தேவ சேனாப தீச்சரஞ்
சூழுமின் போற்றுமின் தொல்லைவி தித்தநாள்
பாழ்ப டாம லிருந்துநீர் பையவே. (22)
வெறிவிலக்கல் - கட்டளைக்கலிப்பா.
பையிட் டாடர வப்பணி பூண்டது
பார்த்தி ளம்பிறை யாயமதி சூழசுகங்
கையிட் டோங்கிய வேணியர் கோயிலுங்
கச்ச பேசமு நீளகச்சி தன்னிற்பூ
சையிட் டுப்பொங்கல் தானிட்டித் தெய்வதஞ்
சாதிக கும்மெனத் தையலகண் ணோய்கசிந்த
மையிட் டென்ன குமரகோட் டப்பிரான்
மாலை யிட்டிடின மையல்விட் டேகுமே. (23)
மேகவிடுதூது - சந்தததாழிசை.
ஏகு கின்ற மேக நிவி ரெத்தி சைக்க ணேகுலீ
ரெங்க ணாதா குமர கோட்ட விறைவா தந்தி ருத்தணி
நாக மீது லாவி யங்கு நண்ணு வீர்க ளாதலா
னாடி வேலா தோளி னுற்ப லத்த லங்கன மேல்விருப்
பாக நின்ற வாக்க னந்த கோடி வந்த னஞ்செய்தே
னதுபு கன்று மீள விங்க ணைந்தோ ருத்த ரஞ்சொலின்
வேக மாற மாலெ னாவிவ் வுலகு வாழ மழையினால்
விளைவு றப்பு ரக்கு முங்கள வளந யந்து புகழ்வனே. (24)
நேரிசைவெண்பா.
வனிதையரைக் காதலித்து வாடாம னெஞ்சே
புனிதரிணைப் பாதத்தைப் போற்றி - யினிதி
னுருகுமரக் கோட்டத்தி னுள்ளுருகாய வென்றி
தருகுமரக் கோட்டத்திற் சார்ந்து. (25)
கட்டளைக்கலித்துறை.
சார்பு நமக்குப் பிறரெவ ருண்டுண்மை சாற்றுமறை
சோபு னவர்க்கு மகளான வல்லிதெய் வப்பிடியோ
டோபு நமர்கக்கண் டானந்தப் பேற்றை யினிதளிக்கும்
வார்புனற் பண்ணையஞ் சேனாப தீச மயூரனென்றே. (26)
சந்தவிருத்தம்.
மயிலூர தியனா முனமோர் கனிமேல்
வருமா சையினா லுலகே ழினையூ
தையிலோர் நொடியே வருவா னொருமா
தரைமே வியநாள் பணிவான் மலைதோ
றியலா டலவா வினனே னுமளா
வியமா நிழலார் குமரே சனெனா
வயிலவே லனுமா பதிவாழ நிலையூ
டடைவார் தமையா ணடுநாயகமே. (27)
மடக்கு- எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
நடுநி லைக்க ணானுங் கொடுநி லைக்க ணானுங்
நாத்தி யானத் தானும் மாத்தி யானத் தானும்
மடிவி லாற்ற லானும் முடிவி லாற்ற லானும்
மன்னு வேற்கை யானும் உன்னு வேற்கை யானும்
கடும ருட்பற் றானும் இடும ருட்பற் றானும்
கருணைக் காட்சி யானும் அருணைக் காட்சி யானும்
அடிய னாட்டத் தானும் துடிய னாட்டத் தானும்
அமர கோட்டத் தானும் குமர கோட்டத் தானே. (28)
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
கோட்டுப்பூ வகைமூன்று மலர்ந்துமுன்னோ
ராலமரங் குலவு மென்று
நாட்டுபபூ தலஞ்சொல்கச்சிக் குமரகோட்
டத்தின்றோ நறுந்தண காவில்
தோட்டுபபூ வகைநான்கும் பூத்ததொரு
கொடிபொலிநது தோன்றக் கண்டோம்
வேட்டுப்பூ சனைமுன்செய் பயன்போல
விதுபுதுவிம் மிதமா நெஞ்சே. (29)
அம்மானை.
மாவினிழல் வள்ளல்சொன்ன வாறுகும ரக்கோட்டம
மேவிவடி வேலாதவ மேற்கொணடா ரம்மானை
மேவிவடி வேலாதவ மேற்கொணடா ராமாகில
பூவிலவிதி தபபாமற் போற்றினரோ வம்மனை
போறறினது முன்விதியைப் போக்காம லம்மானை. (30)
எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருததம.
அம்மை யப்பா நடுவி ருப்ப னமையு மாட்கொள் வானிதம்
வெம்மை மிக்க வினைவ லத்த நம்ம னத்தை வேட்குமேல்
செம்மை பெற்ற திதுவு மொய்த்த திமிர் நீத்த தாகலாற்
கொம்மை சுற்று மதிலு டுத்த குமர கோட்ட மாகுமே (31)
கட்டளைக்கலித்துறை.
மாகா தொழுங்கும ரக்கோட்ட மால்வரை மங்கைநின்வாய்
ஆகங்கண மூரல் துகிரமணி நீலமுத தம்பதும
ராகமு கங்கை யென வகுத் துன்னெஞ்சை நல்வயிர
மாகப் படைத்தது வஞ்சமன் றோமறை வாயயனே. (32)
சம்பிரதம்-எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
அயன்படைபபி லதிசயமா காயத்தைத்
ததுவாக்கி யரம்பை மாத
ரவனிமிசை வரப்புரிவோங் கன்னியாக்கே சொர்க்கமென
யார்க்குஞ் சொல்வோம்
கயங்குளத்தை விழுங்கப்பார்ப் போமதரி லயங்கள்பரி
யாகக் காண்போம்
காய்கதிர்சொல் வயலில்வரக் காட்டுவோங் ககனங்கா
டெனச்சா திப்போம்
பயங்கொள்மே கங்களைச்செல் லாக்குவிப்போங்
கடகத்தைப் பருத்த யானை
பன்னிரண்டாய்த் தொகுப்பமிவை வித்தையல்ல
வமராதொழும் பரமா கச்சி
வியன்றலத்தி லுயாதவத்தா லோங்குசெல்வ வளம்பெருக
விளங்கு சீர்த்தி
மிகுங்குமர கோட்டத்தார் தாரகமெ னாவேத
விதிவேண் டோமே. (33)
நேரிசைவெண்பா.
வேண்டா விருப்பும் வெறுப்பு மிவற்றாலே
யாண்டாண் டெழுபிறப்பு மாகுமா - லீண்டாமுன்
னேறிய வுட்கோ ளெழிற்குமர கோட்டத்தான்
கூறியவுட் கோள்குறிக்கொண் மின். (34)
கட்டளைக்கலித்துறை.
கோட்டத்துட்சீர்த்தம்மை கோட்டமடுத்தநின் கோட்டமெழில்
ஆட்டத்துட்சீர்த்து மணிக்குடையன்பர்கொண் டாட்டமுயர்
தேட்டத்துட் சீர்த்துன் றிருவருட் டேட்டஞ் சிவகுமர
நாட்டத்துட்சீர்த்துன்னடியினல்லோர் வைத்த நாட்டமொன்றே. (35)
எழுசீர்க்கழிநெடிலாசிரியரியவிருத்தம்.
ஒன்றா யிரண்டாகி மூன்றாகி நான்காகி
யோரைந்தொ டாறு மேழெட்
டொன்பதாய்ப் பத்தாயொர் பதினொன்று பன்னிரண்
டோங்குமுடி நடுவாதியாய்
இன்றாகி நேற்றாகி நாளையாய்ப் பெரியோ
ரிலக்கா யிலக்கல்லையாய்
இப்பாலு மெப்பாலு மப்பாலு நிறைநின்
னிருக்கையா னந்தபூர்த்தி
தொன்றாகி யழிவின்றி யாற்றல்பல வுடையதாய்த்
துறுமலக் கங்குலவிலகில்
தோன்றிடு மதற்குநின் னருள்வேண்டு மதுதூய
வினையொப்பு மலபாகமும்
நன்றா யடுக்கிலுண் டாமதற் கிதுகாறு
நாயினேன் யாதுநோற்றேன்
நவிலதற குயர்கச்சி யிறகுமர கோட்டமுறு
நம்பநின் றிருவுள்ளமே. (36)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
உள்ளது மெய்ம்மைபொய் யில்லதென்
றுய்த்துணர் வாய்மை கிடைத்திடாக்
கள்ளம னத்தின ரெங்ஙனங்
கண்டுன தாணிழ லண்டுவார்
அள்ளல வயற்கயல் பாயவெள்
ளன்னம் வெரீஇத்தண் டலைபுகத்
தெள்ளிசை வண்டின மீக்கிளா
சேனாப தீசகு கேசனே. (37)
நேரிசையாசிரியப்பா.
குகனைப் போற்றுமின் குகனைப் போற்றுமின்
ககனத் தளவுங் கடிகெழு நீணமதிற்
செம்மணி நாஞ்சில வெம்மைசெய் வான்போல
வானொளி விரித்தலிற் கோளிலா மதிபோல
மரகத வெழுதகம் துரகபா கன்போல்
மேனிலைத் துகிர்க்கால மானிலை மகன்போல்
வச்சிரப் பொதிகை நச்சுறு புகாபோல்
நீனிற விளிம்பு வான்கதிர் மகன்போல்
பொன்னவி ரடுக்கல அன்னமன்னவன்போல்
குவிவுர நிவநத கொடிமுடித் தசும்பின்
நவமணி குயின்ற சவிதவழ் புரிமுகம்
உலகுரு வென்ன னவில்புரு டன்போல்
ஒருமா நீழல் வருவான் சோதிப்
பேரொளி துளும்புஞ் சீரிய சினகரத்
தொண்டரு முரசொலி கணபடை யறியாக்
கச்சியம் பதியிடை மெச்சியந் தணர்தம்
வேதமு ழக்கமுந் தீதிலாத் தொண்டர்
பழிச்சுஞ் சும்மையு மொழிப்பருந் தூரியக்
கம்பலை யியக்கமு மும்பரு முணாவருங்
குமர கோட்டத் தமைதரு கருணைப்
பிழம்பென நிலைஇய பழம்பொரு ளிருக்கை
சேயமைத் தன்றால் வாயமைத் தாய
திருப்புகழ்ப் பனுவல் விருப்பின் மனமொழி
யொருமையிற் கூறி யருமையா றக்கரங்
கணித்திடி னெயதுந் தணிப்பருஞ் செல்வமுஞ்
சிவபுண் ணியமுந் தவமெய் யுணர்வும்
அதனால்
சனிப்பிறப் பெதிரா மனிததரிவ் வாற்றை
நினைக்கிற றிலரே னெடிய
வினைப்பற் றெவாகொல் விலக்கவல் லுநரே. (38)
பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
விலகவரு நெறியினிடை மிகுபரல்கள் படநலியு
மெலியபத மலர்வனிதையே
வெயிலினியல் குறைவரிய சுரமிதுவொர் கடிகையுள்
விரைசெலவி னகலுமினிமேல்
சொலவுளவி ரிருகடிகை யுளம்வெருவ னமதுகுறை
தொலையநமை யடிமைகொளுமோர்
துணையடி யை யருமைமறை மொழியினனு தினமுநனி
துதிசமய குரவாதமிலோ
நிலவுகட னிகர்பரவை கணவா்விழி பெறவுதவு
நிலவுதவழ் சடையரொருமா
நிழலிலுறை தருகனக சினகரமு முயர்தரும்
நிலைபெறமு னருளுமுமையாள்
குலவுபரி முகசிகர சினகரமு முழுகுமவர்
கொடியவினை வெருளுநெடுநீர்க்
குளிர்தடமு மிபமுகனொ டமராபல தளியுநிறை
குமரகோட்டமுமணிபதே. (39)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவண்ணவிருத்தம்.
அணிக லன்க ணேசெவிக்கு மாமதிச்ச டாமுடி
யம்மையப்பா கம்பவாண ரரியவேத மாநிழற்
கணிக போக மறுமைவீடு களைகணாகி யடியாதங்
கைக்கொளப்ப ணிக்குநல்ல கச்சிவாசா செய்திருப்
பணிக ளால் வாக்குவேண் பதநிதங்கி டைத்திடப்
பார்த்தருள் சுரக்குநன்கு பயிலுமுன்ன வாககிளந்
திணிக லாப வூர்திகுமர கோட்டமிங்கி ருக்கவும்
செலவா பலபொ ருட்கிதென்ன சேயதேய நாடியே. (40)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
நாடுவ துன்னரு ணாடொறு நல்குவ துன்பணிக் கேற்பது
பாடுவ துன்புகழ்ப் பாசுரம் பன்னுவ துன்றிரு மந்திரம்
சூடுவ துன்றிருத் தாட்சிரளு சொல்லுவ துன்பல நாமங்கள்
கூடுவதுன்னடி யாருடன்குமர கோட் டத்துறையெந்தையே (41)
பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
என்பு மாலையுரி யத்தி யாடைமனை
தோறு மேற்றிடுவ தோடுகா
டின்ப மாகநட மாடி டந்தனது
தந்தை வாழ்க்கையென வெண்ணிடேல்
முன்பு மாலையவ னிடவ ருந்துணைவி
முதிய சயிலமக ளென்றிடேல்
முரனை வீழ்த்தியதன் மாமன் வெண்ணெய்தயிர்
மொண்ட கள்வனென முன்னிடேல்
தனபெ ருந்தமையன் விகட சக்கர
னெனக்கொ ளேலிவாக டகைமை கேள்
தந்தை யுண்மையறி வின்ப ரூபிதன
தன்னை மாதரும நாயகி
அன்பு மாமனுல குயிர்பு ரக்குமவ
னண்ணனd விக்கினம் கற்றுவானd
ஆத லாற்குமர கோட்ட வள்ளலை
யடுத்த னன்பெருமை கருதியே. (42)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கரும்பெனிலோ கணுவிருக்குங் கற்கண்டோ
கரைநதிடுமுக் கனிநா ளேற
விரும்புசுவை வேறாஞ்செந் தேன்வண்டி
னெச்சிலெதை லிளம்ப வல்லேன்
அரும்பொருள்க டருங்குகனார் குமரகோட்
டப்பதிக்க ணலாபூ வாசந்
தரும்பொழிலி லெனக்கொழியா வின்பவிளை
வாயணைந்த சரச மானே. (43)
கலிநிலைத்துறை.
மானெய் தேனார் கலையெய்தேன்மத மாவெய் தேனென்பா
ரேனெய் தார்விண் மதிகற்றவரிந் திராபா லெய்தினவோ
டானெய் தேனோ தேமொழி யேசூர் படவேவைத்
தானெய் தேவன் கோட்டஞ் சூழ்பொற் சயிலத்தே. (44)
கட்டளைக்கலித்துறை.
சயிலத்த னைப்பு லவைக்குட்ப டார்நெஞ் சகத்தனைக்கார்
மயிலத்த னைப்பு னகையாற் புரம்பொடித் தார்மகவை
யயிலத்த னைப்புன வள்ளி வரனை யடைமின்விண்ணுற
கையிலத்த னைப்புனரச் சன்மங் கடக்குங் கதிவருமே. (45)
சிந்து-பதினான்குசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
வருதுறவா சூழ்குமர கோட்டமுறை குரவாபத
மறவாத சித்த ரெங்கண்
மகிமைசொலி னேகம்பா மருவுமா மரமுழுது
மாழையென வேபு ரிந்தோம்
ஒருவரிய வறமெலாம் போற்றுகா மக்கோட்டி
யுமையைவட வால மாந்த
யோகிகைப் பற்றுவேட் டகமதைக் கலியாண
வுயாகிரியெ னப்ப ணித்தோம்
கருநறவ நீபமணி முறுகற்கோர் மலையைமுன்
சாமிமலை யாநி றுவினோம்
சங்காழி மால்கொளச் சிறுகணா கத்தைமா
தங்கவரை யாயி சைத்தோம்
திருமருவ வட்டதிக் குப்பால கர்க்குள்ள
திசையெலா மாசை யாகச்
செய்தன நமக்குக் கருத்தெலாங் கஞ்சியிற்
சேர்ந்த கம்பன சோற்றிலே. (46)
இதுவுமது-நேரிசைவெண்பா.
கம்பமதயானை கனிட்டாகும ரக்கோட்ட
நம்பாபதம் போற்றுசித்தா நாங்கண்டீ-ரும்பரெனத்
தங்கநக மாப்புலவர் சார்மந் தரமெனச்செம்
புங்கநக மாப்பொருத்தி னோம் (47)
மலர் வியந்துரைத்தல்-கட்டளைக்கலித்துறை
பொருகாமச் சூர்க்குஞ் சிறுகான் மடங்கற்கு மம்புலிக்கு
முருகா மதனம்பு ராசிக்குந் தந்தவிவ வுறபலங்கான
தருகா மருகும ரக்கே ட்டத தாரதனி வேலையொக்கு
மருகா மலர்க்கண மணிபோன்ற தாலொ ரயாவிலையே. (48)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
அயனைக் கடலிற் கண்டுயிலுற்
றவனைப் பொருமிக கொளியகணிச்
சியனைத் தருகா மககோட்டத்
திருவிற் கொருபா கத்துறைநித்
தியனைச் சுரர்மெய்த தவாபரவிச
செறிகச்சியினிற் பெரியதவப்
பயனைக் குமரக் கோட்டமதிற்
பணியப் பிறவிப் பிணியிலையே. (49)
கட்டளைக்கலித்துறை.
பணித்தானை யாவும் பணியானை யூர்தி பகையனைத்துந்
தணித்தானைக் காட்சி தணியானைத் தண்கச்சிக் கோட்டத்திற் பொன்
னணித்தானை யாளாக் கணியானை வேதிய ராறெழுத்தாற்
கணித்தானைவெட்சிக் கணியானைக் கோடியெக்காலுநெஞ்சே. (50)
ஒன்பதின்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
கானறா நீப மாலைதான் வீறுதோளாக மீதி லோர்
காசுலா மேரு நாகமேல
வானறா வாறு சூழ்வபோல் வாகைகூர் வேலர் கோயினீர்
வாய்மையோ டேவி னாவினால்
மீன்றா வானி லாவைநோ கூனல்வார் கோடு சூலுறா
மேவுவா ரீச வாவிசூழ்
தேன்றா தூறு சோலைவாய் காமர்பூ வாசம் வீசுமா
தேவசே னாப தீசமே. (51)
நேரிசைவெண்பா.
ஈசனரு ளுங்குமர கோட்டத் திறைவனயன்
வாசவன்முன் னோர்க்கரிய னென்றுமறை பேசினுங்கண்
ணம்பெருமா னென்னப்ப னங்கனையார் தங்கொழுநன்
எம்பெருமா னென்னப்ப னாம். (52)
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
அப்பனொரு மாவடியி லம்மையொரு
பிலத்திலண்ணனாயி ரக்கால்
வைப்புள்மண் டபத்தொருபா லம்மானோ
ரத்தியின்மே லயனோர் கம்பத்
தொப்பில்கும ரக்கோட்டத் தெந்தைபரி
சனமங்கங் குவந்துற் றாலுஞ்
செப்புமன்பாக் கொருகாலுங் கஞ்சிக்குக்
குறையில்லை தேறுங் காலே. (53)
கொச்சகக்கலிப்பா.
காலரைமுக் காலும்வென்றா ரொன்றுமதிக் கண்ணிரண்டு
காலரைக்க ணப்போழ்துங் கைக்காது வைப்பார்வான்
பாலரையன் வாழ்வும்விரும் பார்திருவே கம்பரருள்
பாலரையன் பாற்சேனா பதீசமன்னிப் போற்றுநரே. (54)
மறம் - பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியச்சந்தவிருத்தம்
மன்னிய குமரக் கோட்டத் தவர்வாழ்
மலைவன வாழ்க்கைகொளும்
மறவரி யாம்பெறு குமரிப் பெண்ணை
மணஞ்செய மன்னன்விடும்
அன்னதொர் நிருபமொ டேவரு தூதமு
னரசர்கள் பட்டதுகேள்
அடலறி யேறென வந்தவர் கரிபரி
யத்தியு மாவுமென்ப
பன்னவொ ழிந்தன ருங்களை யானர
பாலனவி ருப்பொடுவாழ
பட்டின மணுகுக டற்கரை தனினீ
பகர்தரு குமரியெனத்
தன்னிகர் பெண்ணைவி ரும்பிடி லங்கே
தகையொடு போந்துறையுந்
தக்கப டிக்கொள் வதுநன் றாமத்
தலையினி யெய்துமினே. (55)
எண்சீர்க்கழி நெடிலடி யாசிரியச்சந்தவிருத்தம்.
எய்யாமத னாவுன்றிற லெனசொல்லவுன் வேழக்
கினைநுங்குவ துன்வெண்குடை யிபமவில்லை யொடிக்கும்
கையிற்கணை குணமாமளி காலாலுழ நலியும்
காலாமிர தமுமோரொரு காலம்வட திசையே
பயச்செலு மிவையுன்பரி சனநீயும னங்கன
பலவேழைய ரொடுபோர்செயல் பலியாவலி யோர்பால்
வயத்தொளிர் கச்சிக்கும ரக்கோட்டவை வேலோன்
வந்தென்னைம ணந்தாலென வாமுன்கர வடமே. (56)
பனிக்காலம்-எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
வடவையணு கிடினுந்தன் தன்மைகுன்றுங் காலம்
வருணனுமேல் நினைக்கிலமன மெலாங்குளிருங் காலம்
துடவைதவழ் தென்றலுமுன் வெளிப்படாக் காலஞ்
சொலிற்கேட்கில் வாய்செவியுந் தவநடுக்குங் காலம்
நடவைவருந் தேர்தகைய வந்தபனிக் கால
நன்பொருளீட் டிடச்செலவு நயந்ததனிக் காலம்
குடவையினவெய் யோன்விரைந்து குறுகியிடுங் காலங்
குமரகோட் டத்தனென்பாற் குறுகியிடாக் காலம். (57)
நிலமண்டிலவாசிரியப்பா.
காலான மூலக் கனலை யெழுப்பி
மேல தார வியனிலத் தூடு
பிரம நாடியாற பெயர்ந்தாங் கணுகிப்
பரம பதியைப் பனிமதி யமிர்தமவாய்
மடுத்துக் குளத்தில் வரிசையிற் குறித்துத்
தடுப்பருந் தன்னுருத் தகக்கொளு மகத்துவா
கண்டபே ரொளியாந் தண்டருஞ் சிறப்பின
விந்துவின் மேலாய் விளங்குநின் கருணை
பைந்தளிர் மாந்தருப் பணைநிழ லிருக்கைப்
பரமா கச்சிப் பதியிற் குமர
கோட்டந் தனிலெக் கொள்கை யோர்க்குங்
காட்சிக் கெளிதாய்க் கலந்துறை தருநின்
னாட்சி யுறுதவ வதிசய முடைத்தே.. (58)
நேரிசைவெண்பா.
தேடியெனை யின்னானென் றின்னந் தெளிந்திலே
னாடியுனை யெவ்வகையா னாணுணாவே--னீடியபுட்
கூட்டத் திருந்தாள்வாய் கோகனக நீர்க்குமர
கோட்டத் திருந்தாள்வாய் கூறு. (59)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கூற்றினு மிக்ககொ டுங்கணான்
கொங்கையு நுண்ணிடை யும்பனந்
தாற்றினு மிக்கதினி ன்சொலுந்
தாழ்குழ லுங்கண்ட னைகொலோ
சேற்றினு மிக்கக லாதசே
னாபதீ சத்திறை வெற்பில்யா
ராற்றினு மிக்கவை யாறுமோ
வாண்டடைந் தோர்க்குநீ நண்பனே. (60)
களி-நேரிசைவெண்பா.
நண்பா்கும ரக்கோட்ட நாடுங் களியர்யா
மூண்டமது வான்மயக்க முற்றிலமோர்--பெண்பொருட்டு
வாகாரந் திராமன வருசாபம் வீழ்த்ததன்றோ
மாகாந்த மாமன்ன வா (61)
இதுவுமது-கொச்சகக்கலிப்பா.
வாழிகும ரக்கோட்ட வள்ளலைப்போற் றுங்களியேம
அமியுல கினமறிமா னாதியினு மெங்களுக்குக்
கோழிபெற்ற முட்டையிலே கொண்டாட்ட மிப்பொருளை
ஊழியலபொய் யாமொழியா லுற்றுண்ர்ந்து கொள்வீரே. (62)
கட்டளைக்கலிப்பா
வீர மாமதி யாதுனக் கெம்பிரான்,
வேணி யின்றேல் சிறுவிதி வேள்வியி
லீர மாமதி யேயொரு வீரன்செய்
திட்ட பாடு மறந்தனை போலினிக்
கூர மாமதி யேயெனை யாளவனக்
கொற்ற வாக்கினை யோனவன் யாரெனி
லார மாமதிற் சேனாப தீச்சரத்
தமர்ந்த ருளும மரா்ம ணாளனே. (63)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
மண்கலந்து வான்கலந்து பாதலமுங்
கலந்துவினை வழியே கற்றிப
புண்கலந்து பிறந்துழல்வீ ரயனுக்கே
னினிவேலை புலவாக் காவன
கண்கலந்த சூர்த்தடிந்த குமரக்கோட்
டக்குகன்றாள் கருத்துட் கொண்மின்
வெண்கலந்தா னடமாடின வேட்கோவா
தொழில்விடுதல் விளம்பற் பாற்றே. (64)
நேரிசையாசிரியப்பா.
பாற்றரும் பிறவிப் பௌவத் தழுந்தி
மீட்பவ ரிலாது வினைச்சுற வனுங்க
வினிப்பிழைப் பெதுகொலென றெண்ணாது மெண்ணிப்
பனித்துத் துனிவுகூர் பரிபவங் கண்டனை
காமக் கடலுட் கலங்கஞ ரெய்தித்
தோமிக் கயர்ந்து தொலைவரு வெந்நோய்
ஒழிவருந் தகைத்தா லொய்யென வாய்விடுந்
துழனியுங் கேட்டனை துணைமத ரளிக்கட்
பொய்ம்மயக் குறுத்தாப் புலவிசெய் வனிதையர்
மெய்ம்முயக் கிற்றென விளம்பவு ணர்ந்தனை
யன்னவர் யாக்கை யரிசனப் பூச்சங்
கினமைத் தாமெனி னெழுதீ நாற்றம்
மோப்பப் படுதிற முழுதுந் தெரிந்துள
கோட்பின ருரைத்த கொள்கையுந் தேர்ந்தனை
முத்துலை விழலுக் கிட்டயா வார்போற்
கைத்தெனிற் குருட்டுக் கங்குல்வாய்க் கரக்குங்
கடப்பா டுடையார் கடைத்தலை யொதுங்கிக்
கிடப்பார் பற்பல கிளப்பினு மவர்பாற்
காட்டை யணுவுங் கைக்கொண் டுதவா
தேககுற் றழுங்கு மிளிவர வோர்ந்தனை
யின்னணம் படுபா டெற்றுக் கன்னோ
பொன்னணி நெடுமதிற் புரிசைச் சூளிகைக்
கோபுர நீணிலைக் குமர கோட்டத்
தாபத வுறவரசூழ் தருமாச் சிரம
மறந்தனை போலு மறந்தனை போலுங்
கறந்தபா லானமுலைக் கட்புகா மீளக
கழிந்தஞான் றினுமோர் காலு மெதிர்படா
இழிந்தவற் றவாவை யிகந்தினி யேனு
மாவயி னணைந்து தேவசே னாப
தீசத் தமர்ந்தருள் வாசவன் மருகனைப்
போற்றிநீ நடாத்து மாற்றலைம் பொறியு
மத்தனி முதல்பாற் பற்றிய வாக்கினை
யாயிற் கனிவுகூர் தாயிற் கருணைவைத்
தெப்புற னுங்காத் தொப்புயர் வரிய
தனபெருங் களைகண் டருமால்
அனபமு தூற வகமலாக் கண்ணே. (65)
கைக்கிளை-மருட்பா.
கண்க ளிமைத்தாலுங் கால்பூப் படிந்தாலு
முண்களிவண் டுங்குழலூ டுற்றாலும் - பெண்களிலிக்
காரிகை போலிது காறுங் கண்டிலன்
கூரிய வேலோன் குமர கோட்டக்
காவகத் தரிதிற் காண்பவர்
பூவர மாத ரெனப்புக லுவனே. (66)
நேரிசை வெண்பா.
புகலுன் சரணமென்ற புங்கவரைக் காப்பான்
றிகழ்குமர கோட்டத்திற் செவ்வேள் - இகலொழியத்
தந்திரசங் கத்திற் றமிழ்தேற்றி னானமர
ரிந்திரசங் கத்தி லிருந்து. (67)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
இருவாதங்க ணாயகரா யிருப்பவரிங் கேதனியா
யிருக்கின் றாரென்
றொருவாசொல்லக் கேள்வியுற்றுக் குமரகோட்டத்தடைந்தே
னுற்றுப் பார்த்தேன்
பொருவருமா தவக்கோலம் பூண்டிருப்பக் கண்டுள்ளம்
புழுங்கி னேன்பால்
வருவாகொலென றெண்ணேனீ தவனென்பான கணவனுமா
மழைக்கண மாதே. (68)
வஞ்சிப்பா.
மாதேவெனா வானவர்களும்
பூதேவரும் போற்றுவாதனித்
தந்தையையொரு தாய்வளது
முந்தியவரு ளெனமொழிகுவ
ரொருபிரணவ வுருவுடையவன்
முன்னவனெனப் பன்னுவருயர்
மாதுலன்மலர் வேதியன்றனை
யுந்தியினருள் செந்திருவான
பற்பலசுரா முற்புகலுயிர்
தம்பரிசன மென்றிறைஞ்சிய
ஏவலாகுழு வாவரதனால்
சீரியருளுஞ் சீரியனெனப்
பேரியலுல கோரறைகுவ
ரெனினின்னருட் டுணைபெறினலால்
வனமனமொரு நன்னிலைகொளல்
அரிதரிதெனா வெருவுதலுறீஇக்
கானமருவிய மான்மகளெழில்
வேட்டகுமரக் கோட்டமுதல்வ
வதுவேட்டதென் னிதயாம்புயந்
தினகரனிகர் நினையுணர்பரி
பாகநின்பர மாகவென்றே. (69)
நேரிசைவெண்பா.
மாகன கக்கு மரக்கோட்ட மாம்பரம
மாகன கக்கு மரக்கோட்டச் - சேகறுக்கு
மைந்தனருட் சத்தியத்தன வாழ்த்துநருட சத்தியத்தன
மைந்தனருட் சத்தியத்தன வாழ்வு. (70)
நேரிசைவெண்பா
வாழைக்குக் கன்னியென்றும் வண்டார் குமரியென்றுந்
தாழைக்கு வந்தபெயர் தான்போலிவ் - வேழைக்கு
மானமா வெனும்பே ரணிகுமர கோட்டத்தார்
மேனமா லுறாத மிகை. (71)
கடைமடக்கு.
கைவண் டின்முந் தங்காவே
களிவண் டின்முந் தங்காவே
கழிவாய்க் குருகா ரங்குளமே
கரைவேற் குருகா ரங்குளமே
மைமேற் றிகழும் பொற்பனையே
வசையேற் றிகழும் பொற்பனையே
வலையே பொருவா னஞ்சுறவே
மதனோ பொருவா னஞ்சுறவே
கொய்மா வம்போ ருகவலரே
கொளவோ வம்போ ருகவலரே
குமரக் கோட்டப் புரியாரே
குறையெற கோட்டப் புரியாரே
பொய்கைக் காவி யிருந்தேனே
புலர்கைக் காவி யிருந்தேனே
புனைதோ றொன்றுங் கொடியீரே
புகலீ ரொன்றுங் கொடியீரே. (72)
நேரிசைவெண்பா.
*நாங்கதிர் வேணி யிறைகாமக் கண்ணியருள்
கூரங்கதிர்வே லோன்குமர கோட்டத்தைச் - சார்ந்தவர்நாம்
தாந்துதிக்க வாழ்வர்நிதஞ் சாரார்பொய் வாழ்விடையங்
காந்துதிக்க வாழ்வர்நிசங் காண. (73)
ஐயம் - கட்டளைக்கலித்துறை.
சங்கர னார்வில் குணமம்பு சார்தல் மோகற்பகப்
பொங்கர வாமக வானிட மோபொரு கூர்வடி வேற
செங்கர னார்கும ரக்கோட்டஞ் சூழ்கச் சிநகரமோ
கொங்கர றாமலர்க் காவினிற் பார்மகிழ் கூர்பதியே. (74)
நேரிசைவெண்பா.
பதிபுண் ணியமும் பசுபுண் ணியமு
மிதுவிதுவென் னாரியனா லேழை - குதுகலிக்கத்
தாங்குமரக் கோட்டன் றலைப்பாரிடைத்தெரித்தா
னோங்குமரக் கோட்ட னொருங்கு. (75)
வஞ்சித்துறை.
குமரகோட் டத்துவாழ்
விமலாதாட் பத்தியோர்
பிமரமாப் பற்றுவிட்
டமரராய்த் துய்ப்பரே. (76)
கொச்சகக்கலிப்பா.
பரையாதி விருப்பறிவு பகர்தொழிற்குண் டலியெனநின்
உரையாறு முகமுணர்வா ரொளிர்குமர கோட்டநின்றோய்
திரையாவா ரகப்பகைபோய்ச்சீவன்முத்தி யாம்பதியிற்
றரையால்மன் னவர்வெளகத் தனியாளு மன்னவரே (77)
பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
மன்றலவி ழைந்தனை மையல டுத்தனை
வண்டிசை பற்றினைநீள
வம்புசெய் வாரலா கொண்டனை கட்புனல்
வாரவி ருந்தனைதண்
தென்றலவ ரத்தளிர் மேனிந டுங்குதல்
சிறிதுமொ ழிந்திலைமேற்
செம்மலை நண்ணலை கைக்கிளை விட்டனை
திங்களெ னுங்கவிகை
துன்றும னங்கனவ ரத்தலை தந்தனை
சொல்லும லர்ப்பொழிலே
சூளிகை மாளிகை நீடிய கச்சித்
தொல்கும ரக்கோட்டத்
தென்றுமி ருந்தருள பேரழ கன்பர
மேசரி ளங்குமர
னெம்பெரு மானைவி ரும்பினை போலுமி
தென்றிற முன்றிறமே. (78)
ஊசல் - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
திறமலிமூ வுலகில்வினைக் கயிற்றாற் சீவா
செல்கதியூ சலிற்சுழலுந் தியக்க மாற
அறமலியு மன்பரன்பு வடம்பூண் டோரா
றககரமாம் பலகையுட்டா ரகபீ டத்தில்
நிறமணிக்கண் டிகையசைய வாடி ரூசல்
நீபமலாத தாரசைய வாடி ரூசல்
குறமடந்தை குஞ்சரியோ டாடி ரூசல்
குமரகோட் டத்தவரே யாடி ரூசல். (79)
வேற்றொலிவெண்டுறை.
ஊசி முனைக்க ணிருந்து தவம்புரி வோர்காணீர்
வீசிமு ளைப்பவ வேதைவி டுத்துரு வேறாவீர்
தேசியல குமரக் கோட்டச் சேந்தனைப்
பூசிமின் மனம்பதாம் புயத்த ரும்பவே. (80)
நேரிசையாசிரியப்பா.
உயிர்வருக்கமோனை.
அருணை வடகோ புரநெடுங் கோயிலும்
ஆவினன் குடியும் நீள்பரங் கிரியும்
இடைக்க ழியும்பொற் புடைச்செருத் தணியும்
ஈட்டருட் குமரக் கோட்டப் பதியும்
உரக கிரியும் பரிதி புரமும்
ஊழ்வலி கடப்பார் வாழ்போ ரூரும்
எழுமுகிற குடிமிப் பழமுதிர் சோலையும்
ஏரகத் தலமும் சீரலை வாயும்
ஐந்தரு நீழலும் கந்தமால் வரையும்
ஒன்றிய கொடுமுடிக் குன்றுதோ றாடலும்
ஒவா தமாந்தருள் மூவா முழுமுதல்
ஔவிய மிலார்தஞ் செவ்வகச் சுடரொளி
அஃகலில் சத்திக ளிருவர்
தங்க ணாள னெங்குலதெய்வமே. (81)
குறம் - அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
தெய்வயா னைக்குமுன்னென் பிதாமகிசொற் படியவள்செவ்
வேளைச் சேர்ந்தாள்
பொய்படா தெங்கள்குறி கொணர்வாயோர் கைக்கூழும்
புட்டி னெலலும்
உய்வகைநீ கேட்டிடத்தின் றென்பாலோர் பல்லிசொல்லு
முன்னி டத்தோள்
மைவிழியுந் துடிக்குமதாற் குமரகோட் டத்தனுன்பால்
வருவான் மின்னே. (82)
கட்டளைக்கலித்துறை.
மின்னிகர் வாழ்க்கையும் பொன்னில முந்துணை யோவியனூல்
பன்னிக மாதி தொழுந்தேவ சேனா பதீசமுன்னி
வன்னிக லாமதி வேணியா சேயனை வாழ்த்தவரும்
மன்னிகல் வேலு மயிலுந் துணைநம மருங்குறவே. (83)
பாண் - எண்சீர்க்கழிநெடிலாசிரியச்சந்தவிருத்தம்.
குறம டந்தை குலிச பாணி குமரி பாலி ருக்கவிண்
கோதை யர்க்கு மாலை சூட்டு குமர கோட்ட மன்னவர்க்
குறவு கொள்ளு மங்கை வாச லொருவி வந்த பாண கேள்
உலவு பஞ்ச பாண னெய்யி லொருவர் காதி லேறிடா
அறவி சைத்து நினது பாண மைந்து நல்ல செவியினூ
டணுகி யேறு முனது செய்கை யவனி லுங்க டோர்மால்
நிறுவின மற்ற வன்பு ணர்பபி னிலவு மஞ்சு பாணனே
நீவ ரும்பு ணர்பபில மாதர் நெஞ்சு மஞ்சு பாணனே. (84)
கட்டளைக்கலிப்பா.
பாணி லாவிய வண்டுளர் பூம்பொழிற் பரவு சேனாப தீசரருள்பெறின்,
நாணி லாவிள மாதர்த ருமவிட நச்சி லார்நடு நாடி பயிறறிமேல்,
வாணி லாவி னமுத மருந்தியெம் மான டிக்கண் குவிந்த மனத்தரைக்,
காணி லாவி யுருகுநா தம்மையோர் கானி னைக்கினும் வாழ்வரெக் காலுமே. (85)
கார் - கட்டளைக்கலித்துறை.
காலநு நித்துணர் மன்னவர் போலக் கருங்குயிலுங்
கோல மயிலு மடங்கியெ ழுந்திடக் கொண்டலமுந்நீ
ராலமு கந்து பொழிந்தா லரனனறி யார்பொறுப்பார்
சீலமு றுங்கும ரக்கோட்டன் வந்தினனுஞ் சேர்ந்திலனே. (86)
நேரிசைவெண்பா
திலகமெனப் பூமகட்குச் சீர்த்த கச்சிக்கையா
மலகமெனக் காணலாம் வம்மின - உலகமெலாம்
ஆனான் குமரகோட் டத்தி லநவரதம்
ஞானானந் தப்பொருளை நாம். (87)
கட்டளைக்கலித்துறை.
ஞானமொர் தேவி கிரியையோர் தேவி நடுவிருந்து
வானம ராறு முகம்பன் னிருபுயம் வாய்ந்திலங்கத்
தேனமிர் பூமிபொழிற் சேனாப தீச சிகாவலனெங்
கோனமர்ந் தாடற்கென் செய்தீர் கொடுமுடிக் குன்றுகனே. (88)
மடக்கு - பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
கொடிதுன் றுங்குக் குடமுடையார் குளிர்வெண் சங்குக் குடமுடையார்
- குமரியெ ழிற்கா மருமகனார் குஞ்சரி யைக்கா மருமகனா,
கடயரா நீப மணித்தாரார் கருதார்க் கியாது மணித்தாரார்
- கங்கண மரவென் றணிகையினார் காதல ருறை தென் றணிகையினார்,
புடைதங் கமலத் திருவடியார் புகழுங் கமலத் திருவடியார்
- புட்பூங் கோட்டங் குலவு மிடம் பொழில்சூழ் கோட்டங் குலவுமிடம்,
அடலார் புரமே லேகம்பா அணிமா நிழலா ரேகம்பா
- அமருங் கனகச் சிநகரமே அணுகுங் கனகச் சிநகரமே. (89)
கட்டளைக்கலித்துறை.
நகர முதலைந் தெழுத்தாரு நற்கச்சிக் கோட்டமுறை
ஒகர முதல்வரு மொன்றெனு முண்மை யுணரினன்பர்
நிகர முதவுட லாதிகொண் டோர்சொன் னிகழ்த்துநற்றே
சிகரமு தம்பெற வந்தாள்வர் முன்னுஞ் சிவநெறியே. (90)
மதங்கு - எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
சிவனுடனா டுங்காளி யுமைமா தங்கி
திருவடியை நோற்ற வரந் திகழ்மா தங்கி,
குவளைவிழி வாள்வீசி வாள்கொண் டாடிக்
குமரகோட் டத்தாதிருப் புகழ்கொண் டாடி,
இவனடிப் புச் சித்தாகம னமுமு ருக்கும் இசைப்பாடல்
யோகாதம னமுமு ருக்கும்,
கவனவரம் பையர்பார்த்துத் தியங்கு வாரே
கந்தருவர் கேட்டுவிண்மீ தியங்குவாரே. (91)
நேரிசைவெண்பா.
வாராத வித்தை வருமே சிவஞானந்
தீராத வல்வினையுந் தீருமால் - நீரார்பூ
வன்னங் களிக்குஞ்சீ ரார்குமர கோட்டத்தார்
தன்னங் கடைக்கண்பார்த் தால். (92)
வேனில் - எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
தாலந்தொறும் வேனிற்கொடி தாவிச்செலு மாகில
தலைவாப்பிரி மகளீர்க டமைத்தானது தெறுமோ
வேலங்கைய ராமத்தலை வரையுந்தொட ராதோ
விறலாடவ ருககென்றொரு வேனிற்பிறி துளதோ
ஓலந்தரு கடல்வேள்சிறு காலுந்துயி லடையா
வுத்துங்கசி கரகோபுரம் வளையா வொருமேருக்
கோலந்திகழ் கச்சிக்கும ரக்கோட்ட வுலாசர்
குலவும் படியினும் வந்திலா குருகே யெனதருகே. (93)
நற்றாய்வருந்தல் - அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
எனதகப்பற் றினுமிககாண் மிகச்சிறியா
ளிளமைமுதி ராத வேழை
தனதகமவிட் டெழிற்குமரன் கோட்டத்தை
நினையார்போற் றனியே சென்றாள்
உனதகற்றைச் சடையாதரும வீரனா
லனறுகைபோ யுதாச னன்றன்
மனதகத்தே யெரிந்ததினுங் கொடிதெரியு
மிப்பாலை வனத்தெவ் வாறே. (94)
ஒருபொருண்மேன்மூன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை.
ஆறு முகக்குமரன் கோட்டத் தமரிளவல்
கூறுமிச் சோலை குலாவருமே லவன்றார்
வீறிய தோளழகு காணாமோ பாங்கி.
கொண்டல் தவழ்குமர கோட்டத் தமரிளவல்
தண்டுறையிற் பாங்காத் தனிவரு மேல்வனபொற்
கண்டிகை மார்பழகு காணாமோ பாங்கி.
எம்மா னுறைகச்சிக் கோட்டத் தமரிளவல்
இம்மால் வரையாடற் கென்வருமே லவன்றன்
செம்மே னியினழகு காணாமோ பாங்கி. (95)
இரங்கல் - கட்டளைக்கலிப்பா.
காண்வ ருங்கச்சிக் கோட்டத் திளவலைக்
காட்டும் வெங்கதிர் காலையு மாலையுஞ்,
சேணவருங் கங்குல் தேவர்க்கும் யாவர்க்குஞ்
செருச்செய் தானவர் போலவத் தைவெலும்,
ஏண் வ ருங்கதிர் வேலனன தொக்குமிவ் வேழை
கண்ணென் றுறக்கந் தடுக்குமால்,
மாணவ ருங்குகன் கைக்கொடி கூவிலிவ்
வல்லி ருட்பகைக் கெல்லைகண் டுய்யுமே. (96)
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
எல்லையிலா வாநந்தங் குமரகோட் டப்பிரானீந் திடவி ருப்பச்,
சில்லையிலா வாநந்த முறுமளவு மாதர்கண்ணைச் செழுங்க ளத்தை,
வல்லையிலர் வாநந்த மாப்புகழ்ந்து தமைமறந்து மாயை யேறுந்,
தொல்லையிலா வாநந்த மக்களுட னென்றுழல்வீர் சூழ்ச்சி யென்னே. (97)
இடமணித்தென்றல் - கட்டளைக்கலித்துறை.
*என்னைய னார்த்தருள சேனாப தீசத் திளங்குயிலே
யுன்னைய ளித்தநின் னூர்மால் வரைமிசை யோங்குமிறால்
பொன்னையளித்த கடல்போலெம்மூரிற்பொன்மாடத்தனனார்
மின்னை யளித்த வெழினோக்கு மாடி மெலிவுறலே. (98)
ஆசிரியச்சந்தவிருத்தம்.
உறவு கொண்ட தனது யானை குதிரை தேர்வில் குடைசரம்
உரங்கெடாத முரசுமற்றெ வைக்குமொவ்வொர் பகையுள
நிறம ழிந்து மருவ மாக நீயி யங்கி யாள்கெனா
நெற்றி மீது கண்ப டைத்த நிமலா முன்ப ணித்தலால்
திறல டைந்தொ ருத்தா கட்கு நோப டாது சிலுகுசெய்
சித்த சன்ற னைச்செ யிப்ப தெப்ப டிச்சொ லன்னமே
அறமி குந்த குமர கோட்ட வண்ண லைப்ப ணிந்துநோற்
றரிய சித்த சுத்தி மேவி லவனை வேறல சரதமே. (99)
நேரிசைவெண்பா.
சரதமறைக் கண்ணுந் தமிய னுளக்கண்ணும்
விரவுமெயிற் கச்சி விசாகன் - பரசிடுநல்
நெஞ்சரண வங்கமல நீணிலைநல் கும்பொன்விரும்
புஞ்சரண வங்கமலப் பூ (100)
குமரகோட்டக்கலம்பகம் - முற்றிற்று.
வெற்றிவேலுற்றதுணை.
-----------------------------
உ
விளம்பரம்.
இப்புத்தகம் வேண்டுவோர் சென்னைப் புரசை அவதானம் பாப்பையர் வீதி 4 - வது
கதவிலக்கமுள்ள வீட்டில் கா - வேங்கடாசலமுதலியாரிடத்திலும்,
சென்னைச் சீனாக்கடைத்தெருவில் க. முருகேச செட்டியார் புத்தகஷாப்பிலும்,
காஞ்சிபுரத்தில் பச்சையப்ப முதலியார் கல்விச்சாலைத் தமிழ்ப் பண்டிதர்
தி-சு. வேலுசாமிப்பிள்ளையிடத்திலும் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்
--------------