Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

சூளாமணி - பாகம் 3
சருக்கம் 10-12, பாடல்கள் 1555-2130
ஆசிரியர் : தோலாமொழித் தேவர்

cULAmaNi - part 3
(carukkam 10-12, verses 1555-2130)
author: tOlAmozittEvar
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2018.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

சூளாமணி - பாகம் 3
சருக்கம் 10-12, பாடல்கள் 1555-2130
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்

    உள்ளடக்கம்
      0. பாயிரம் (1- 6)
      1. நாட்டுச் சருக்கம் (7- 35)
      2. நகரச் சருக்கம் (36- 69)
      3. குமாரகாலச் சருக்கம் (70-118)
      4. இரதநூபுரச் சருக்கம் (119-238)
      5. மந்திரசாலைச் சருக்கம் (239- 430)
      6. தூதுவிடு சருக்கம் (431- 572)
      7. சீயவதைச் சருக்கம் (573- 826)
      8. கல்யாணச் சருக்கம் (827 - 1130)
      9. அரசியற் சருக்கம் (1131- 1554)
      10. சுயம்வரச் சருக்கம் (1555 - 1839)
      11. துறவுச் சருக்கம் (1840- 2068)
      12. முத்திச் சருக்கம் (2069 - 2130)
    ------------

    10. சுயம்வரச் சருக்கம் (1555- 1839)

    கவிக்கூற்று

    தேவரு மனிதர் தாமுஞ்
            செறிகழல் விஞ்சை யாரு
    மேவருந் தகைய செல்வம்
            விருந்துபட் டனக டோற்ற
    மாவர சழித்த செங்கண்
            மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்
    தாவருஞ் செல்வ மொன்று
            தலைவந்த துரைக்க லுற்றேன்.       1555

    திவிட்டன் மகளிர் வலைப்படுதல்

    பானிலா நிறைவெண் டிங்கள்
            பனிக்கதிர் பரப்பி யாங்கு
    மேனிலா விரியும் வெள்ளி
            வெண்குடை விசும்பு காப்பக்
    கோனுலா வுலக மோம்ப
            நிறீஇயபின் குவளை வண்ணன்
    மானுலா மடக்க ணோக்கின்
            மகளிர்தம் வலையிற் பட்டான்.       1556

    திவிட்டன் உயர்ந்து விளங்குதல்

    திருமணி நிழற்றுஞ் செம்பொ
            னெடுமுடி முகட்டோர் தெய்வக்
    குருமணி யுமிழுஞ் சோதி
            குலவிய வொளிகொள் வட்டம்
    புரிமணி யோத வேலிப்
            புதையிரு ளிரியல் செய்யக்
    கருமணி வண்ணன் றானே
            கதிரவன் றொழிலும் பூண்டான்.       1557

    தேங்கமழ் தெய்வச் செம்பொற்
            றாமரை சுரிவெண் சங்கம்
    ஈங்கிவை நெதிக ளாக
            வேழர தனங்க ளெய்தி
    ஆங்கமர் செல்வந் தன்னா
            லற்றைக்கன் றமர்ந்த மாதோ
    ஓங்கின னுருவத் தாலும்
            வில்லெண்ப துயர்ந்த தோளான்.       1558

    தெய்வங்கள் செப்பி னீரெண் ணாயிரந் திசைநின் றோம்ப
    மையறு மன்னரீரெண் ணாயிரர் வணங்க வான்மேல்
    னொய்தியல் விஞ்சை வேந்தர் நூற்றொரு பதின்மர் தாழக்
    கையமை திகிரி யானைக் காமனே கலவிக் கின்றான்.       1559

    மன்னவர் மகளிரீரெண் ணாயிரர் மயிலொ டொப்பார்
    அன்னவ ரமிழ்தச் செப்பே ரணிமுலைக் குவடு பாயப்
    பின்னிய தாது மல்கப் பில்கிய தேம்பெய் மாரி
    துன்னிய சுரும்பொ டேங்கத் துணருடை கின்ற வன்றே.       1560

    பாரிசாதத்துக்கு மணஞ்செய்விக்க எண்ணல்

    அன்னண மியலு நாளு ளக்கிரத் தேவி தங்கோன்
    பொன்னணி யுலகின் வந்த பூவிரி பாரி சாத
    மன்னிய லரும்பு வைப்ப மற்றத னோடு சேர்த்திக்
    கன்னிய காம வல்லிக் கடிவினை காண லுற்றாள்.       1561

    திவிட்டனுக்கு அறிவித்தல்

    சுரும்பிவர் சோலை வேலித்
            துணர்விரி பாரி சாதம்
    அரும்பிய பருவச் செல்வ
            மடிகளுக் கறிவி யென்று
    பெரும்பிணா வொருத்தி தன்னைப்
            பெய்வளை விடுத்த லோடும்
    விரும்பினள் சென்று வேந்தற்
            கிறைஞ்சிவிண் ணப்பஞ் செய்தாள்.       1562

    அடிகண்முன் னடித்தி யாரா
            லங்கைநீர் குளிர வூட்டி
    வடிவுகொ டளிர்கண் முற்றி
            மகனென வளர்க்கப் பட்ட
    கடிகமழ் பாரி சாத
            மதனோடொர் காம வல்லிக்
    கொடிமணம் புணர்க்க லுற்ற
            குறிப்பறி நீசென் றென்றார்.       1563

    விண்ணப்பத்துக்குத் திவிட்டன் இசைதல்

    என்றவண் மொழிந்த போழ்தி
            னிலங்கொளி முறுவ றோற்றி
    நன்றது பெரிதி யாமு
            நங்கைதன் மகனைக் காண்டும்
    என்றவ னருளக் கேட்டே
            யிளையவள் பெயர்ந்து போக
    மின்றவழ் வேலி னாற்கு
            விதூடக னுழைய னானான்.       1564

    விதூடகன் தோற்றம்

    காதுபெய் குழையுஞ் செம்பொற்
            சுருளையுங் கலந்து மின்னப்
    போதலர் குஞ்சி யாங்கோர்
            பூந்துணர் வடத்தின் வீக்கி
    ஓதிய மருங்கு றன்மே
            லொருகைவைத் தொருகை தன்னால்
    மீதியல் வடகம் பற்றி
            வெண்ணகை நக்கு நின்றான்.       1565

    அவன் செயல்

    மூடிய புகழி னாற்கு முகிழ்நகை பயந்து காட்டுங்
    கோடிய நிலையின் முன்னாற் குஞ்சித்த வடிவ னாகிப்
    பாடிய சாதிப் பாடல் பாணியோ டிலயங் கொள்ள
    ஆடிய லெடுத்துக் கொண்டாங் கந்தணனாடு கின்றான்.       1566

    விதூடகன் கூத்தாடல்
    வேறு

    பாடு பாணியி லயம்பல தோற்றி
    ஆடி யாடிய சதித்தொழில் செய்ய
    நாடி நாடிநனி நன்றென நக்கான்
    நீடு நீடுமுடி யானெடி யானே.       1567

    காது கொண்டன கனபொற் குழைசோர
    மீது கொண்ட வடகம் புடைசூழ
    ஊதி யூதிமு ழுகும்வயி றென்னாப்
    பூதி மீதுபு ரளாநரல் கின்றான்.       1568

    மாத வன்வயி றுபற்றி நரன்றாற்
    கேத மென்னையென வேந்தல் வினாவ
    ஊதி யூதிவயி றுள்ளள வெல்லா
    மோத கங்கண்மு ழுகும்பல வென்றான்.       1569

    மன்னனும் விதூடகனும் உரையாடல்

    என்று தின்றனைபன் மோதக மென்ன
    என்று தின்றனவு மல்ல வினிப்போய்ச்
    சென்று தேவிகடி காவின் விழாவில்
    நின்று தின்னலுறு கின்றன வென்றான்.       1570

    மாதவன் மொழிய மன்னவ னக்காங்
    கேத மென்னைபெரி தெய்தினை யென்றே
    வேத நாவின்விறல் வேதியர்க் கல்லால்
    ஈத லில்லையினி யென்செய்தி யென்றான்.       1571

    வேதம் வல்லவரை வென்றிடு கிற்கும்
    வாதம் வல்லன தனாற்பெறு கிற்பன்
    வாதம் வெல்லும் வகையும்மென் மாண்பு
    மாதர் பண்டுமறி யும்மற வேலோய்.       1572

    வாதம் வெல்லும்வகை யாதது வென்னில்
    ஓதி வெல்லலுறு வார்களை யென்கை
    கோதில் கொண்டவடி விற்றடி யாலே
    மோதி வெல்வனுரை முற்றுற வென்றான்.       1573

    திவிட்டன் பொழிலினுட் புகுதல்

    நன்று வாதமிது காண்டு மெனப்போய்ச்
    சென்று சோலைமதில் வாயில தெய்தி
    ஒன்று காவலுழை யாரொடு கூடிப்
    பொன்றி லாதபுக ழான்பொழில் புக்கான்.       1574

    விதூடகன் கனி காண்டல்

    நீடு செம்பொன்முடி யாற் கெதிர் நிந்தா
    வேட மேவிய விதூடக னோடி
    ஓடி யாடி வருவா னுயர்காவிற்
    கூடி வீழ்வன கொழுங்கனி கண்டான்.       1575

    அவன் உரை

    கண்டு கண்டுதன கண்கனி தம்மேன்
    மண்டி மண்டிவர வாயெயி றூறக்
    கொண்டு கொண்டுகுவி யாவிவை காணாய்
    உண்டு முண்டுமென வோடி யுரைத்தான்.       1576

    மன்னன் விடை

    நல்ல வல்லகனி முன்னைய நாமிவ்
    வெல்லை செல்லவுறு மென்னலு மாயின்
    வல்லை வல்லைவரு வாயென முன்னால்
    ஒல்லை யொல்லையொலி பாடி நடந்தான்.       1577

    பொழில் வருணனை

    சந்து மாவொடு தடாயிட மெல்லாங்
    கொந்து தேனொடு குலாயிணர் கூடி
    வந்து தாழ்ந்து மதுமாரி தயங்கித்
    தந்து தாதுபொழி யும்பொழி றானே.       1578

    மாவின் மேல்வளர மாதவி வைத்த
    தாவி லாததழை தழைவன நோக்கிக்
    காவு காமர்கனி கண்டது கையாறிற்
    கூவு மோடியவை கொள்குவ மென்றான்.       1579

    கனி சிந்தியது கண்டு முனிவடைதல்

    கூடி வண்டு குடையுங் குளிர்காவில்
    ஓடி மண்டிவரு வானொரு பாலாற்
    சேடு கொண்ட கனி சிந்தின கண்டு
    மூடு கொண்ட மதியன் முனிவுற்றான்.       1580

    விதூடகன் வினா

    ஏவ லின்றியெரி வெங்கதி ரோணும்
    போவ லென்று நினையாப் புனைகோயில்
    ஓவ லின்றி யுடையாய் சிறிதேனுங்
    காவ லின்றுகடி காவிது வென்றான்.       1581

    பொன்னி னாய புரிசைத் தளமேலும்
    மன்னு வாளர் மறவோர் பலர்காப்பர்
    என்னை காவலிஃ தில்வகை யென்றான்
    மின்னு வார்ந்து மிளிருஞ் சுடர் வேலோன்.       1582

    திவிட்டன் கூற்று

    அருமுகத் தகனி யாயின வெல்லாம்
    ஒருமுகத் தனக ளன்றி யுதிர்த்துத்
    தருமுகத் தர்வரு வார்தறு கண்ணார்
    கருமுகத் தருளர் காவல்களி லென்றான்.       1583

    விதூடகன் செயல்

    யாவர் யாவரவ ரெங்குள ரென்னக்
    காவு மேவுமுசு வின்கலை காட்ட
    வாவர் கள்வரத னாலெழு நாம்போய்த்
    தேவி காவுநனி சேர்குவ மென்றான்.       1584

    கள்வர் தாம்பல ரெனக்கடல் வண்ணன்
    உள்வி ராவுநகை சேருரை கேட்டே
    வெள்கி வேந்தனரு கேயிரு பாலும்
    பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான்.       1585

    தமாலிய வீதியைக்கண்டு விதூடகன் மருளல்

    தாழ்தளிர் பொளிய தமால வீதிய
    ஏழகண் டிருளென வெருள யாவஞ்
    சூழிரு ளன்றி "சால காணென
    வீழிணர்க் கண்ணியான் வெருவு நீக்கினான்.       1586

    விதூடகன் மேலும் மருண்டு வினாதல்

    வாலிதழ் வீழ்தரு மகிழ்தன் றாண்முதல்
    சாலிகை புக்கது தயங்கு தாரினாய்
    சோலையு மமர்த்தொழி றொடங்கு மோவென
    வேலைநீர் வண்ணனை வெருண்டு நோக்கினான்.       1587

    அஞ்சலிங் கமர்த்தொழி லில்லை யாவதும்
    மஞ்சிவர் மகிழந்தன் வயவு நோய்கெடூஉப்
    பஞ்சிவ ரல்குலார் பவழ வாயினால்
    அஞ்சுவை நறவமீங் குமிழ ஆனதே.       1588

    திவிட்டன் தன் நண்பன் மருட்சியை நீக்கல்

    ஆங்கத னாவியா லரவத் தேனெழா
    ஈங்கிதன் றாண்முத லிருள மொய்த்தன
    ஓங்கிய கேள்வியா யுணர்ந்து கொள்கென
    வீங்கிய கழலவன் விளங்கச் சொல்லினான்.       1589

    பின்னும் விதூடகன் கேட்டலும் மன்னன் விடையிறுத்தலும்

    முள்ளரை முருக்கினோ டெழுந்த மல்லிகை
    வள்ளிதழ் குருதியின் வடிவி லூழ்த்தன
    கள்ளவிழ் கண்ணியாய் விரியு நாளெனத்
    தெள்ளிதி னவற்றையுந் தெளியச் செப்பினான்.       1590

    கடிமிசை விரிதருங் காமர் கொம்பரின்
    முடிமிசை யெழுதரு முறிகொ ளீர்ந்தளிர்
    அடிமிசை யீன்றதிவ் வசோக மென்கொலோ
    கொடிமிசை யெழுதிய குவவுத் தோளினாய்.       1591

    இலைத்தலை யீர்ந்தளி ரல்ல வீங்கிதன்
    மலைத்தகு வயவு நோய் தீர வைத்தன
    கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி
    அலத்தகச் சுவடென வறியக் காட்டினான்.       1592

    விதூடகன் கூற்று

    காவிவாய் விலங்கிய கருங்கண் வெம்முலைத்
    தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும்
    மேவியாங் கலர்ந்திடு நின்னை வென்றதால்
    ஆவியா ரசோகின தமைதி வண்ணமே.       1593

    மன்னன் விதூடகனுடன் விளையாடினான்

    மாதவன் மொழிதலு மன்ன னாங்கொரு
    போதினாற் புடைத்தனன் புடைத்த லோடுமிங்
    கேதிலா ளொருத்திக்கா வென்னைச் செய்தவித்
    தீதலொந் தேவிக்குத் தெரியச் செப்புவேன்.       1594

    திவிட்டன் ஒரு சிலாவட்டத்தின் மீது ஏறினான்

    என்றலு மெரிமணிக் கடகக் கையினால்
    அன்றவன் கைத்தலம் பிடித்தங் கியாவதும்
    இன்றிற லினிச் செய்த லில்லெனச் சொலிச்
    சென்றொரு மணிச்சிலா வட்ட மேறினான்.       1595

    விதூடகன் செயல்

    சொரிகதிர் மணிச்சிலா வட்டஞ் சேர்ந்தனன்
    அருகுநின் றந்தண னமர்ந்து நோக்கியே
    வெருவிய மனத்தினன் விதலை மேனியன்
    பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான்.       1596

    விதூடகன் பூதங் காண்டலும் திவிட்டன் அவன் மயக்கம் தீர்த்தலும்

    யாதுகண் டனையென விதனுள் வாழ்வதோர்
    பூதமுண் டதுபுடைத் துண்ணு மாதலால்
    ஏதமுண் டிங்கினி யிருப்பின் வல்லையே
    போதவென் றந்தணன் புலம்பிக் கூறினான்.       1597

    யாதத னுருவென வலர்பொன் னோலையுஞ்
    சோதிசூழ் சுடர்மணிக் குழையுந் துன்னிய
    காதொடு கண்பிறழ்ந் துளது கைகுறி
    தூதிய வயிற்றதென் றுருவ மோதினான்.       1598

    மின்னிழற் பூணவன் மெல்ல நக்கது
    நின்னிழற் காணது நிற்க நின்னுரை
    என்னிழ லென்னொடு மியங்கி னல்லது
    கன்னிழ லுள்புகிற் காண்ட லாகுமோ.       1599

    நின்னிழ லாவது தெளிய நின்றொழில்
    இந்நிழற் காணென விறைஞ்சி நோக்குபு
    தன்னிழ றான்செய்வ செய்யத் தான்றெளிந்
    தின்னிழ லிருந்தன னிலங்கு நூலினான்.       1600

    திருந்திய மணிநகைத் தேவி யிவ்வழி
    வருந்துணைப் பொழுதுமிம் மணிச்சி லாதலம்
    பொருந்தின பொழினலங் காண்டு மென்றரோ
    இருந்தன ரிருவரு மினிதி னென்பவே.       1601

    சயம்பிரபை சோலைக்கு வருதல்
    வேறு

    மின்னவிர் விளங்குமணி மேகலை மிழற்றப்
    பொன்னவிர் சிலம்பொலி போந்துபுடை சாற்றக்
    கன்னியர் நிரந்துபலர் காவலொடு சூழ
    வன்னமென வந்தரசி யார்பொழி லடைந்தாள்.       1602

    அவள் தன்னை மறைத்துக் கொண்டு நிற்றல்

    மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின்
    வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி
    மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறுஞ்
    சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள்.       1603

    திவிட்டன் இருக்கை

    மாதவன் மருட்டமழை வண்ணன்மணி வட்டம்
    சோதிவிடு சூழ்சுடர் வளாவ வதன்மேலாற்
    தாதுபடு போதுதவி சாமென வடுத்த
    மீதுபடு பொங்கணையின் மெல்லென விருந்தான்.       1604

    கவிக்கூற்று

    பந்தணையு மெல்விரலி பாடக மொடுக்கி
    வந்தணையு மெல்லையுண் மயங்கியொரு மாற்றம்
    அந்தணன்வி னாவவமிழ் தூரமொழி கின்றான்
    கந்தணைவி லாதகளி யானைபல வல்லான்.       1605

    விதூடகன் வினா

    நிலத்தவள்கொ லன்றிநெடு மால்வரையு ளாள்கொல்
    அலத்தக வடிச்சுவ டசோகின்மிசை வைத்தாள்
    உலத்தகைய தோளணிகொண் மார்பவுரை யென்ன
    வலத்தகைய னாயமணி வண்ணன் மொழிகின்றான்.       1606

    திவிட்டன் விடை

    செய்யன செறிந்தன திரண்டவிரல் சால
    வையதசை யார்ந்தவடி யின்னழகி னாலே
    மெய்யுமறி வன்வினவில் விஞ்சையன் மடந்தை
    வையமுடை யாற்குரிய மாதரவ ளென்றான்.       1607

    சயம்பிரபையின் செயல்

    என்றலு மிரண்டுகரு நீலமலர்க் கண்ணுஞ்
    சென்றுகடை சேந்துசிறு வாணுதல் வியர்த்தாள்
    அன்றரச னாவியுரு கும்படி யனன்று
    மின்றவழு மேனியொடு தேவிவெளிப் பட்டாள்.       1608

    அரசியைக் கண்ட அந்தணன் செயல்

    தாதிவர் கருங்குழலி தன்னைமுக நோக்கி
    மாதவ னடுங்கிவளர் பூம்பொழின் மறைந்தான்
    காதலனு மங்குரிய கட்டுரை மறந்திட்
    டேதமினி யென்கொல்விளை கின்றதனெ நின்றான்.       1609

    மன்னன் வேண்டுகோள்

    மன்னன்மக ளேமகர வார்குழன் மடந்தாய்
    அன்னமனை யாயமிழ்தின் மேலுமமிழ் தொப்பாய்
    என்னையிவ ணுற்றதனெ வென்னுமிலை யென்னா
    முன்னுபுரு வக்கொடி முரிந்துமுனி வுற்றாள்.       1610

    தேவியின் கூற்று

    அரசன் அவளடி தாழ்தல்

    ஆங்கவெளா டீங்குவிளை யாடுநனி நீயான்
    பூங்கமழு மாடமென தேபுகுவ னென்றாள்
    தாங்கல னெழுந்துதகை நீலமணி வண்ணன்
    ஒங்குமுடி சீறடியின் மேலொளிர வைத்தான்.       1611

    அரசி குற்றஞ்சாட்டுதலும் அரசன் இரங்கலும்

    மற்றநெடு மான்மகர மாமுடி வணங்கக்
    கற்றனை யினிப்பெரிது கைதவமு மென்ன
    உற்றதொர் பிழைப்புடைய னாய்விடி னுணர்ந்து
    முற்றமுறை செய்தருளு மொய்குழலி யென்றான்.       1612

    விதூடகனை இழுத்துவரச் செய்தல்

    மன்னனொர் பிழைப்புமிலன் மாதவனை நாடி
    இன்னினி யிவண்கொணர்மி னென்னவுழை யோர்கள்
    முன்னவன் மறைந்தமுரு கார்பொழிலி னுள்ளே
    துன்னுபு தொடர்ந்துதுகில் பற்றுபு கொணர்ந்தார்.       1613

    தேவிசினம்தீர்தல்

    பேதைமை கலந்துபிறழ் கண்ணினொ டொடுங்கு
    மாதவனை நோக்கிமணி வாய்முறுவ றோற்றிக்
    கோதைகளில் யாத்திவனை நீர்கொணர்மி னென்றாள்
    போதுவிரி தேங்குழலி பூம்பொழி லணைந்தாள்.       1614

    மன்னவன் மருட்டமணி யாழ்மழலை மாதர்
    முன்னிய முகத்துமுறு வற்கதிர் முகிழ்ப்ப
    இன்னவருள் பெற்றன னினிப்பெரிது மென்னா
    அன்னமனை யாளையணி மார்பினி லணைத்தான்.       1615

    விதூடகன் விடுதலை பெறுதல்

    போதிவ ரலங்கலொடு பூண்முலை ஞெமுங்கக்
    காதலன் முயங்குபு கலந்தினி திருந்து
    மாதவனு மேதமில னாதலின் மடந்தாய்
    தீதுபடு சீற்றமொழி யென்றுதெளி வித்தான்.       1616

    அவன் செயல்

    இட்டதளை தம்மொடிரு தோளுமிடை வீக்கிக்
    கட்டிவிடு பூம்பிணையல் கைவிடலு மெய்யுள்
    ஒட்டிவிடு காதலொடு வந்துருவு கொண்டு
    பட்டபல பாடலினொ டாடல்பல செய்தான்.       1617

    கனிகளைக் கண்டு அவன் பாடுதல்
    வேறு

    ஓடு மேமன மோடுமே
    கூடு மோதணி கோதையாய்
    காடு சேர்கனி காண்டொறு
    மோடு மேமன மோடுமே.       1618

    ஊறு மேயெயி றூறுமே
    வீறு சேர்விரி கோதையாய்
    சேறு சேர்கனி காண்டொறு
    மூறு மேயெயி றூறுமே.       1619

    வேண்டு மேமனம் வேண்டுமே
    பூண்ட பொன்னணி மார்பினாய்
    நீண்ட மாங்கனி காண்டொறும்
    வேண்டு மேமனம் வேண்டுமே.       1620

    பாரிசாத காமவல்லி திருமணத் தொடக்கம்
    வேறு

    இன்னன பாடி யாட வீர்ங்கனி பலவுங் கூவி
    முன்னவ னார வூட்டி முறுவலோ டமர்ந்த பின்னை
    மன்னிய பாரி சாத மணமக னாக நாட்டிக்
    கன்னியங் காம வல்லி கடிவினை தொடங்க லுற்றார்.       1621

    திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங்
    குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்கணாளும்
    பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப்பாரி சாதம்
    அருமணி யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார்.       1622

    தேவியர் யாவரும் அருகே வருதல்

    வரிவளை வயிரொ டேங்க வாரணி முரச மார்ப்பக்
    கருவளர் கனபொற் சோலைக் கறங்கிசை பரந்தபோழ்தில்
    திருவள ரலங்கன் மார்பிற் செங்கணான் றேவி மார்கள்
    உருவளர் கொம்ப ரன்னா ளருளறிந் துழைய ரானார்.       1623

    அவர்களினிடையே நின்ற திவிட்டன் நிலை

    செங்கய லுருவ வாட்கட்
          டேவிதன் குறிப்பிற் சேர்ந்த
    மங்கையர் வனப்பு நோக்கி
          மணிவண்ணன் மகிழ்ந்து மற்றப்
    பொங்கிய விளமென் கொங்கை
          மகளிர்தம் புருவ வில்லால்
    அங்கய னெடுங்க ணென்னும்
          பகழியா லழுத்தப் பட்டான்.       1624

    குடங்கையி னகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று
    மடங்களி மதர்வைச் செங்கண் மான்பிணை மருட்டி மையாற்
    புடங்கலந் திருள்பட் டுள்ளாற் செவ்வரி பரந்த வாட்கண்
    இடங்கழி மகளிர் சூழ விந்திர னிருந்த தொத்தான்.       1625

    பாரிசதத்திற்குக் கோலம் செய்யக் கட்டளையிடுதல்

    ஆங்கவ ரோடு மற்ற வணிபொழிற் கரச னாய
    பாங்கமை பாரி சாதம் பருவஞ்செய் பொலிவு நோக்கி
    ஈங்கிவற் கிசைந்த கோல மினிதினி னியற்று கென்றான்
    ஓங்கிய வுருவத் தார்மே லொளிநிலா வுமிழும் பூணான்.       1626

    பாரிசாதத்தை அலங்கரித்தல்

    எந்திர மிழிந்த தாரை
          யருவிநீ ரினிதி னாட்டிக்
    கந்தனெத் திரண்ட திண்டோட்
          கனகசா லங்கள் காட்டிப்
    பைந்தழைப் பொழிலுக் கெல்லா
          மரசெனப் பட்டஞ் சேர்த்தி
    அந்தளிர்க் கொம்பர் தோறு
          மணிபல வணிந்தா ரன்றே.       1627

    காமவல்லிக்கு மணக்கோலம் செய்து அதன் மணமகனோடு சேர்த்தல்

    கன்னியங் காம வல்லிக்
          கனங்குழை மடந்தை தன்னை
    மன்னவன் றேவி மார்கண்
          மணவினைக் கோலஞ் செய்து
    பின்னத னோடு சேர்த்திப்
          பெருகிய களிய ரானார்
    இன்னகைப் புதல்வர் செல்வம்
          யாவரே யினிதென் னாதார்.       1628

    திவிட்டன் சயம்பிரபை ஆகிய இருவர் மனத்துள் காமம் செறிதல்

    மாதரார் மனத்தி னுள்ளும்
          மணிவண்ண னினைப்பி னுள்ளுங்
    காதலுஞ் செறிந்த தாகக்
          காமனு முழைய னாகப்
    போதலர் பருவச் சோலைப்
          பொழினல நுகரும் போழ்தில்
    ஓதநீர் வண்ண னங்கோ
          ருபாயத்தா லொளிக்க லுற்றான்.       1629

    திவிட்டன் தன்னை மறைத்துக் கொள்ளல்

    பொன்னவிர் குழையி னாரைப்
          பொழில்விளை யாட லேவி
    மன்னவன் மதலை மாட
          வளநக ரணுகு வான்போற்
    றன்னைமெய் மறைத்தோர் விஞ்சை
          தாழிரு ளெழினி யாகப்
    பின்னைமா தவனுந் தானும்
          பிணையவ ருழைய னானான்.       1630

    தேவியர் பொழில் விளையாடல்

    மன்னவன் மறைந்த தெண்ணி்
          மாபெருந் தேவி மற்றப்
    பொன்னவிர் கொடியன் னாரைப்
          பொழில்விளை யாட லேவக்
    கன்னியங் கோலஞ் செய்து
          கதிர்மணிக் கலங்க டாங்கி
    இன்னகை மழலை தோற்றி
          யிளையவ ரினைய ரானார்.       1631

    அவர்கள் செய்து கொண்ட ஒப்பனைகள்

    அம்பொன்செய் கலாப வல்கு
          லந்தழை புனைந்த வஞ்சிக்
    கொம்பஞ்சு மருங்கு னோவக்
          குவிமுலை முறிகொண் டப்பிச்
    செம்பொன்செய் சுருளை மின்னச்
          செவிமிசைத் தளிர்கள் சேர்த்திக்
    கம்பஞ்செய் களிற்றி னான்றன்
          கண்களைக் களிப்பித் திட்டார்.       1632

    விரவம்பூந் தளிரும் போது
          மிடைந்தன மிலைச்சு வாரும்
    அரவம்பூஞ் சிலம்பு செய்ய
          வந்தளிர் முறிகொய் வாரும்
    மரவம்பூம் கவரி யேந்தி
          மணிவண்டு மருங்கு சேர்த்திக்
    குரவம்பூங் பாவை கொண்டு
          குழவியோ லுறுத்து வாரும்.       1633

    மாலை சூடுதல்

    பாவையும் விலங்கு சாதிப்
          படிமமும் பறப்பை தாமுங்
    கோவையு முகத்து மாக்கிக்
          குலவிய விதழ தாக
    ஓவியர் புனைந்த போலு
          மொளிமலர்ப் பிணையன் மாலை
    தேவியர் மருளச் செய்து
          சிகழிகை சேர்த்து வாரும்.       1634

    தேவியர் சயம்பிரபையைக் கொண்டாடுதல்

    சிகரமா யிலங்கு சென்னித் தென்மலைச் சாந்து மூழ்கிப்
    பகருமா மணிவண் டோவாப் பணைமுலைப் பாரந் தாங்கித்
    தகரவார் குழல்பின் றாழத் தாழ்குழை திருவில் வீச
    மகரயா ழெழுவி மன்னன் வண்புகழ் பாடு வாரும்.       1635

    அரசனைப்பாடுதல்

    அருமலர்த் தழையும் போது
          மடியுறை யாக வேந்தித்
    திருமலர்ப் பாவை யன்ன
          தேவியைச் செவ்வி காண்பார்
    உருமல ரிழைத்த பாவை
          யொளிமண நயந்து மாதோ
    குருமலர்க் கொம்பி னொல்கிக்
          குரவையின் மயங்கு வாரும்.       1636

    வட்டிகைத் தொழில்

    வட்டிகைப் பலகை தன்மேன்
          மணிவண்ணன் வடிவு தீட்டி
    ஒட்டிய வடிவிற் றம்மை
          யூடலோ டிருப்பக் கீறித்
    திட்டமிட் டுருவ நுண்ணூற்
          றுகிலிகை தெளிர்ப்ப வாங்கிப்
    பட்டமுங் குழையுந் தோடும்
          பையவே கனிவிப் பாரும்.       1637

    செய்யுளின்பம் ஊட்டல்

    மாம்பொழின் மருங்கு சூழ்ந்த
          மணிச்சிலா தலத்து மேலாற்
    காம்பழி பணைமென் றோண்மேற்
          கருங்குழ றுவண்டு வீழப்
    பூம்பொழில் விளங்கத் தோன்றும்
          பொன்னிதழ் மறிந்து நோக்கித்
    தேம்பொழி செய்யு ளின்பஞ்
          செவிமுதற் சேர்த்து வாரும்.       1638

    ஊசலாடல்

    கோதையுங் குழைவின் பட்டின்
          கொய்சகத் தலையுந் தாழ
    மாதர்வண் டொருங்கு பேர
          மழையிடை நுடங்கு மின்போற்
    போதலர் பொதும்பிற் றாழ்ந்த
          பொன்னெழி லூச றன்மேல்
    ஓதநீர் வண்ணற் பாடி
          நூழிலூ ழியங்கு வாரும்.       1639

    வாழைக்குருத்தில் உகிரால் உருவம் கிள்ளல்

    கள்ளுமிழ்ந் துயிர்க்குஞ் சோலைக்
          கனமடற் குமரி வாழை
    உள்ளெழு சுருளை வாங்கி
          யொளியுகிர் நுதியி னூன்றிப்
    புள்ளெழு தடமும் போர்மான்
          றொழுதியு மிதுன மாய
    ஒள்ளெழி லுருவுங் கிள்ளி்
          யுழையவர்க் கருளு வாரும்.       1640

    பிற விளையாடல்கள்

    மயிலுடை யாடல் கண்டு
          மகிழ்ந்துமெய்ம் மயங்கி நிற்பார்
    குயிலொடு மாறு கொள்வார்
          குழைமுகஞ் சுடரக் கோட்டிக்
    கயிலொடு குழல்பின் றாழக்
          கண்டுநீர் கொண்மி னென்றாங்
    கயிலுடைப் பகழி வாட்க
          ணங்கையின் மறைத்து நிற்பார்.       1641

    செழுமலர்த் தாது கொய்து
          மெல்விரல் சிவந்த வென்பார்
    விழுமலர்த் துகள்வந் தூன்ற
          மெல்லடி மெலிந்த வென்பார்
    கொழுமலர்ப் பிணைய றாங்கிக்
          கொடியிடை யொசிந்த வென்பார்
    எழுமலர்த் தனைய தோளான்
          றேவிய ரினைய ரானார்.       1642

    மகளிரும் சோலையும்

    கொடிமருங் குறாமே கொடியாய் நுடங்க
    வடிநெடுங் கண்ணோக்க மணிவண்டா யோட
    அடிமலருங் கைத்தலமு மந்தளிராய்த் தோன்றக்
    கடிநறும்பூஞ் சோலையைக் காரிகையார் வென்றார்.       1643

    மணங்கமழும் பூமேனி வாசங் கமழ
    வணங்கி வருஞ்சோலை யலர்நாற்ற மெய்திக்
    கணங்குழையீர் யாமுமக்குக் கைமாறி லேமென்
    றிணங்கிண ரும்போது மெதிரேந்தித் தாழ்ந்த.       1644

    அந்தா ரசோக மசோக மவர்க்கீந்த
    செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன
    வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த
    கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே.       1645

    தேவியர் ஒரு செய்குன்றம் சேர்தல்

    வெள்ளித் திரண்மேற் பசும்பொன் மடற்பொதிந்
    தள்ளுறு தேங்கனிய தாம்பொற் றிரளசைந்து
    புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
    தெள்ளு மணியருவிச் செய்குன்றஞ் சேர்ந்தார்.       1646

    கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும்
    மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும்
    துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் சோதித்துச்
    செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே.       1647

    தோகை மடமஞ்ஞை சோலைப் பரப்பின்போன்
    மாக மழைவண்ணன் காதன் மடந்தையர்கள்
    ஆக மணி சூழ்சார றைவிரும் பொழில்வாய்ப்
    போகமணி புரளக் கலைபுலம்பப் புக்கார்.       1648

    செய்குன்றிற் செயல்

    அரையிலங்கு மேகலை யார்ப்பி னயல
    வரையிலங்கு மேகலை மாறேநின் றார்க்கும்
    புரையிலங்கு பொற்சிலம்பு தான்சிலம்பும் போழ்தில்
    நிரையிலங்கு பொற்சிலம்பு நேரே சிலம்பும்.       1649

    கொங்குண் குழலார் குழலோர் மணிமழலை
    தங்கினவை கொண்டு தானுமெதிர் மிழற்றும்
    அங்கணவர் செய்வசெய் தசதியா டின்றே
    செங்க ணெடியான் கடிகாவிற் செய்குன்றே.       1650

    நகரும் சிற்றிலும் இழைத்தல்

    மருவி மழைதவழு மையோங்கு சாரல்
    அருவி கொழித்த வருமணிகள் வாரித்
    தெருவுபடத் திருத்திச் சீலம் புனைவார்
    உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார்.       1651

    மரகத வீர்ங்கதிரை வார்புற் றளிரென்
    றுரைதரு காரிகையா ரூன்றி மிதித்துத்
    திரைதவழச் சீறடிக ணோவ நடந்து
    விரைதரு பூம்படைமேன் மெல்ல வசைந்தார்.       1652

    அருவியாடல்

    வெம்பரிய தண்சாரல் வேரூரி யக்கொழுந்து
    தம்பருவச் சோலை தழைத்த தகைநோக்கி
    எம்பெருமான் போலு மெழில விவையென்று
    வம்புருவந் தோன்ற மணியருவி யாடுவார்.       1653

    சந்திரகாந்தக் கல் துளித்தலும் மகளிர் மழையென மருளலும்

    செங்களிதோய்ந் துள்சிவந்த சீறடியார் வாண்முகத்தின்
    றங்கொளிபாய்ந் துள்ளெறித்த தண்காந்த மாமணி
    திங்க ளொளிகருதித் தெண்ணீர்த் துளிசிதற
    மங்குன் மழையயிர்த்து வார்பொழிலின் வாய்மறைவார்.       1654

    மாணிக்கக் கதிரை அசோகந்தளிரென்று அயிர்த்தல்

    வம்பத் திரளுருவின் மாணிக்கச் செங்கதிரை
    அம்பொற் சிலம்பி னசோகந் தளிரென்று
    தம்பொற் சுடராழி மெல்விரலாற் றைவந்து
    கொம்பிற் குழைந்து குறுமுறுவல் கொண்டகல்வார்.       1655

    மாணிக்கத்தைக் காயா என்று மயங்குதல்

    விண்டு சுடர்தயங்கு மேதகுமா மாணிக்கம்
    கண்டு கவின்விரிந்த காயாந் துணரிவை
    கொண்டு குழற்கணிது மென்று கொளலுறுவார்
    வண்டு வழிபடர வாட்கண் புதைத்தியல்வார்.       1656

    ஆயோ என்று கூவிக் கிளிகளை மகிழ்வித்தல்

    வேயோங்கு சாரல் விளைபுனங் காவல்கொண்
    டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையால்
    போயோங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிக
    மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார்.       1657

    சிலர் மாணிக்கப்பாறை மீதேறுதல்

    பூந்தளிர் தாழ்ந்த பொழிறயங்கு பொன்வரைவாய்
    ஈர்ந்தளிர் மேனியா ரிவ்வா றினிதியலக்
    காந்தளங் குன்றின் கனபொன் மணியறைமேல்
    ஏந்திளங் கொங்கை மகளிர் சிலரியைந்தார்.       1658

    வள்ளி பாடுதல்

    பைம்பொ னறைமேற் பவழ முரலாக
    வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
    அம்பொன் மலைசிலம்ப வம்மனை வள்ளையுடன்
    கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார்.       1659

    வேறு

    கோடி சிலையெடுத்தான் கோளரிமா வாய்போழ்ந்தான்
    ஆடியல் யானை யயக்கிரீவ னையடித்தான்
    வீடின் மணியருவி வெண்மலையுங் கைப்பிடித்தான்
    வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே.       1660

    வலம்புரி வாய்வைத்தான் வார்சிலை கைக்கொண்டான்
    சலம்புரி சண்டை தலைபனிப் புக்கண்டான்
    பொலம்புரி தாமரையாள் பொன்னாகந் தோய்ந்தான்
    கலம்புரி வண்டடக்கை கார்மேக வண்ணனே.       1661

    செம்பொன்செய் யாழியான் சேதாம்ப னீண்முடியான்
    அம்பொ னிதியு மருங்கலமுங் கைப்படுத்தான்
    நம்பு மணிமேனி நங்கை நலநுகர்ந்தான்
    கம்பஞ்செய் யானைக் கருமேக வண்ணனே.       1662

    திவிட்டன் தெய்வமொன்றினை வேழமாகி வரச் செய்தல்
    வேறு

    மடந்தையர் பாட வாங்கு
          மாபெருந் தேவி நிற்ப
    அடைந்தவ ரோடு மாடு
          மார்வநீர் வெள்ளம் வாங்க
    உடைந்தழி மனத்தன் வேந்த
          னுழையதோர் தெய்வங் கூவிப்
    படந்தவா முகத்தோர் வேழ
          மாகெனப் பணித்து விட்டான்.       1663

    மைவரை யொன்று கோல
          மணிதயங் கருவி தாழ
    ஐவனங் கலந்த சார
          லருகுவந் தணைவ தேபோற்
    றெய்வமோர் வேழ மாகிச்
          செய்கடாந் திரண்டு வீழ
    மைவரு நெடுங்க ணல்லார்
          நடுங்கவந் தணைந்த தன்றே.       1664

    மடந்தையர் நடுக்கம்

    கயில்கலந் திருண்டு தாழ்ந்த
          கருங்குழன் மருங்கு சோர
    வெயில்கலந் திலங்குஞ் செம்பொன்
          மிடைமணிக் குழைவில் வீச
    அயில்கலந் திலங்கு வேற்க
          ணையரி பிறழ வேட்டி
    மயில்கலந் திரிந்த போல
          மடந்தையர் நடுங்கி னாரே.       1665

    திவிட்டன் சுயம் பிரபையின் அச்சம் தீர்த்தல்

    நாண்டனா னிறைந்த நங்கை
          நடுங்குபு நுடங்கி நோக்கி
    யாண்டையா ரடிக ளென்னு
          மாயிடை யஞ்சல் பொன்னே
    ஈண்டையே னென்னை பட்ட
          தென்றுசென் றணுகி னானால்
    வேண்டிய விளைத்துக் கொள்ளும்
          விழுத்தவம் விளைத்து வந்தான்.       1666

    திவிட்டன் தேவியைத் தேற்றல்

    மலைமுக மதநல் யானை
          மற்றது மறித்து நங்கை
    முலைமுக நெருங்கப் புல்லி
          முருகுவேய் கோதை சூட்டிக்
    கலைமுகந் திருத்திக் காதிற்
          கனபொன்செய் சுருளை நீவி
    இலைமுகங் கலந்த செம்பொற்
          கலங்களை யிலங்க வைத்தான்.       1667

    கதிரவன் உச்சியை அடைதல்

    மங்கையர் தம்மை யெல்லா
          மணிவண்ணன் மருட்டி மற்றிக்
    கொங்கவிழ் குளிர்கொள் சோலைக்
          குன்றினின் றிழிந்த போது
    வெங்கதிர் விரிந்த வெய்யோன்
          விசும்பிடை வெதும்ப வெம்பிச்
    செங்கதிர்க் கூடங் குத்திச்
          செந்நடு வாக நின்றான்.       1668

    அவர்கள் வாவி சார்தல்

    அணங்கனார் நுதலின் மேலி்
          லரும்பிய வாரத் தெண்ணீர்
    மணங்கம ழலங்கன் மார்பன்
          மனத்தினை வாங்க மற்றக்
    கணங்குழை மடந்தை மாரைக்
          கடிபுன லாடல் காண்பான்
    மணங்கொள்பூந் துணர்கொள் சோலை
          மண்டுநீர் வாவி சார்ந்தான்.       1669

    வாவிகளின் வருணனை

    சாந்துநீர் நிறைந்த வாவி
          தயங்குசெங் குவளை வாவி
    பூந்துக ளவிழ்ந்த பொற்றா
          மரைமலர் புதைந்த வாவி
    தேந்துண ரகன்ற தெண்ணீர்த்
          திருமணி யுருவ வாவி
    வாய்ந்தவை போலக்காட்டி காட்டி
          யுழையவர் வணங்கி நின்றார்.       1670

    மன்னவன் தன் தேவியரோடு வாவியுட்புகுதல்

    அன்னவா றமைந்த தெண்ணீ
          ரலைபுன லாடும் போழ்தில்
    இன்னவா றியற்று கென்றாங்
          குழையரை மறைய வேவிப்
    பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
          புணர்முலை மகளி ரோடு
    மன்னவாம் வயிரத் தோளான்
          வலஞ்சுழி வாவி புக்கான்.       1671

    வாவியின் தன்மை

    மலங்குபாய் தயங்கு பொய்கை
          மணக்கல்வா யடுத்த செம்பொற்
    கலங்கினா றிழிந்து கீழே
          கலந்துவந் தெழுந்த தெண்ணீர்
    அலங்கலான் மடந்தை மார்த
          னரும்புணை யாக வீங்கி
    வலங்குலாய்ச் சுழித்து வாய்த்த
          வாவி வாய் மடுத்த தன்றே.       1672

    நீர் விளையாடல்

    அலைபுனல் பெருக லோடு
          மலைகடல் வண்ணன் றன்னை
    மலைபுனை கொடியிற் புல்லி
          மடந்தையர் மயங்கு வாரும்
    மிலைபுனை கோதை சோர
          விடுபுணை தழுவு வாரும்
    கலைபுனை துகிலுந் தோடு
          மொழியப்போய்க் கரைகொள் வாரும்.       1673

    ஆர்புனல் சுழித்து வாங்க
            வனையரா யணிபொன் வாவி
    நீர்புனை தடத்தி னுள்ளா
            னிலைகொண்டு நெடுங்கண் சேப்பத்
    தார்புனை மார்பன் றன்மேற்
            றரங்கநீர் தயங்கத் தூவி
    வார்புனை முலையி னல்லார்
            மயங்கமர் தொடங்கி னாரே.       1674

    திரளிருஞ் சிவிறி வீக்கிச்
            செழுமழைத் தாரை பெய்வார்
    மருளிரும் பிணையன் மாலைப்
            படைபல வழங்கிச் சூழ்வார்
    சுருளிருந் தோடு வாங்கித்
            தோண்மிசை துளங்கி வீழ்ப்பார்
    இருளிருங் குழலி னார்க
            ளிறைவன்மே லினைய ரானார்.       1675

    மன்னன் தோற்று நிற்றல்

    சாந்தெழு சிவிறித் தாரை
            சதுர்முக மாக வீக்கிப்
    பாய்ந்தன பவழச் செங்கே
            ழங்கையான் முகந்த தெண்ணீர்
    வேய்ந்தன திவலை யாகி
            விழுந்தன வேரி மாலை
    நாந்தகக் கிழவன் பொய்யே
            நங்கைமார்க் குடைந்து நின்றான்.       1676

    காரையார் வண்ணன் மாலைக்
            காற்படை யுடைந்த போழ்தி்ல்
    தரையாய்க் குறளுஞ் சிந்து
            மிதந்தன சில்ல சிந்தி
    வேரியார் குவளை வேய்ந்த
            மெல்லிய லவர்க்குத் தோற்ற
    ஒரையாய் முதலை யாகிக்
            கூன்மடை யொளித்த வன்றே.       1677

    வாலி வற்றி விடுதல்

    வென்றனம் வீரன் றன்னை
            வீக்குமின் சிவிறித் தாரை
    சென்றெனச் சிறந்த காதற்
            றேவியர் திளைக்கும் போழ்தில்
    ஒன்றிய வுழையர் கீழ்நீ
            ரோப்பறித் திடுத லோடு
    நின்றகஞ் சுழிந்த தெண்ணீர்
            நெரேலென விழிந்த தன்றே.       1678

    மகளிர் நாணமுறல்

    மாலையுந் துகிலும் வார்
            வார்புன லொழுகும் போழ்தின்
    ஆலையின் கரும்பி னின்சொ
            லணங்கனா ரவிழத் தத்தம்
    கோலமென் றுகில்க டாங்கிக்
            குழைமுகஞ் சுடரக் கோட்டி
    வேலைநீர் வண்ணன் முன்னர்
            நாணினான் மெலிவு சென்றார்.       1679

    அருமணிக் கலாப வல்கு
            லவிழ்துகி லசைத்து மீட்டும்
    திருமணி வண்ண னோடுந்
            தேவியர் திளைத்துத் தெண்ணீர்ப்
    புரிமணிப் பொன்செய் வாவிப்
            புணைபுறந் தழுவிப் புக்கார்
    கருமணி வண்டுந் தேனுங்
            கையுறக் கலந்த தன்றே.       1680

    வேறு விளையாடல்
    வேறு

    கொங்கைக டுளும்பநீர் குடைந்துங் கொய்தளிர்
    அங்கையி னோன்புணை தழுவி யாடியுஞ்
    செங்கயற் கண்மலர் சிவப்ப மூழ்கியு
    மங்கையர் புனற்றொழின் மயங்கிற் றென்பவே.       1681

    புனல் இருள் பட்டது

    அடித்தலத் தலத்தகங் கழுமிக் குங்குமப்
    பொடிக்கலந் தந்திவான் படைத்த பூம்புனல்
    வடிக்கலந் திலங்குவா ணெடுங்கண் மைக்குழம்
    பிடிக்கலந் திருளுமங் கியற்றப் பட்டதே.       1682

    புனல் அளறுபடல்

    கொங்கைவாய்க் குங்குமக் குழம்புங் கோதைவாய்
    மங்கைமார் சிதர்ந்தன வாசச் சுண்ணமும்
    செங்கண்மா லகலத்து விரையுந் தேர்த்தரோ
    அங்கண்மா லிரும்புன லளறு பட்டதே.       1683

    திரைகள் இளைத்துத் தோன்றின

    அணங்கனா ரகலல்கு லலைத்து மாங்கவர்
    சுணங்குசூ ழிளமுலை துளும்பத் தாக்கியும்
    வணங்குபூங் கொடியிடை வளைத்தும் வாவிவாய்
    இணங்குநீர்த் திரையவை யிணைப்ப வொத்தவே.       1684

    தாமரையின் செயல்

    வடந்தவ ழிளமுலை விம்ம மங்கையர்
    குடைந்திட வெழுந்தநீர் குளித்த தாமரை
    மடந்தையர் குளித்தெழும் போழ்தின் வாண்முகம்
    அடைந்ததோர் பொலிவினை யறிவித் திட்டவே.       1685

    புனல் கரையேறி மீண்டது

    வளைத்தகை யொண்பணைத் தோளி மாரொடு
    திளைத்தகங் கழுமிய தரங்கத் தெண்புனல்
    இளைத்தவர் மணிக்கரை யேறச் சீறடி
    திளைத்துமுன் சிறிதிடஞ் சென்று மீண்டதே.       1686

    அரசன் முதலியோர் ஒரு மண்டபமடைதல்

    பொழுதுசென் னாழிகை யெல்லை பூங்கழல்
    தொழுதுவந் திளையவ ருணர்த்தத் தொண்டைவாய்
    எழுதிய கொடியனார் சூழ வீர்ம்பொழில்
    பழுதுழை யிலாப்பகற் கோயி லெய்தினான்.       1687

    தேவியின் செயல்

    தேவியர் திருமணி மேனி நீர்துடைத்
    தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக்
    காவியங் கண்ணினார் காக துண்டத்தின்
    ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார்.       1688

    தண்ணிறத் தண்கழு நீரி னெய்தலின்
    கண்ணிறக் கருங்கடை யிதழும் பெய்திடை
    தண்ணறுந் தமனகக் கொழுந்துஞ் சார்த்திய
    ஒண்ணிறப் பிணையலன் றுவக்கப் பட்டதே.       1689

    பொன்மலைக் காவியற் றிமிர்ந்து பூங்கமழ்
    தென்மலைச் சந்தன மெழுதித் தாமரை
    நன்மலர்த் தாதுமீ தப்பி நங்கைமார்
    மென்முலைத் தடங்களும் விருந்து பட்டவே.       1690

    கண்ணகங் குளிர்ப்பக் கல்லாரக் கற்றையும்
    தண்ணறுங் குவளைதா மெறித்த தாமமும்
    ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ
    எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார்.       1691

    காமரு நிறத்தகல் லாரக் கற்றைகள்
    சாமரை யெனத்தம ரசைப்பத் தாமரை
    தேமரு குடையிலை கவிப்பத் தேவியர்
    பூமரு மடந்தையர் போன்று தோன்றினார்.       1692

    தேவர்க டிசைமுகங் காப்பத் தீஞ்சுவை
    ஆவியா ரமிழ்தயின் றிருந்த வாயிடைப்
    பாவையர் கருங்கணாற் பருகு வார்கள்போன்
    மாவர சழித்தவன் மருங்கு சுற்றினார்.       1693

    ஆங்கோர் விஞ்சையன் தோன்றல்
    வேறு

    வஞ்சியங் கொம்ப னாரு மன்னனு மிருந்த போழ்தின்
    விஞ்சைய னொருவன் றோன்றி விசும்பினா றிழிந்து வந்து
    மஞ்சிவர் சோலை வாயில் வாயிலோன் வாயி லாக
    அஞ்சன வண்ணன் செந்தா மரையடி வணங்கி னானே.       1694

    வந்தவனை உபசரித்தல்

    வந்தவன் வணங்க லோடு
            மாமனை நுவலி யென்னை
    கந்தணை யானை வேந்தன்
            கழலடி செவ்வி யோவென்
    றந்தமி லாழி யாள்வான்
            வினவலி னருளு மாறென்
    றிந்திர னனைய நீராற்
            கிறைஞ்சலு மிருக்க வென்றான்.       1695

    விஞ்சையன் கொண்டுவந்த நிருபம்

    உரிமையோ டிருந்த போழ்தி
            னுணர்த்துதற் குரித்தென் றெண்ணித்
    திருமுகந் தொழுது காட்டத்
            தேவிதன் மருங்கு நின்ற
    உரிமைகொ ளுழைய ருள்ளா
            ளொருத்திவா சித்து ணர்த்த
    அருமுடி யொழிய வெல்லா
            வணிகளு மவனுக் கீந்தான்.       1696

    விஞ்சையின் செய்தி கூறல்

    கனிவளர் கிளவி யாருங்
            கதிர்மணிக் கலங்கள் வாங்கிப்
    பனிமதி விசும்பின் வந்தான்
            பால்வரப் பணித்த பின்னை
    இனியிது பெயர்த்து நீயே
            யுரையென வெடுத்துக் கொண்டு
    துனிவள ரிலங்கு வேலான்
            கழலடி தொழுது சொன்னான்.       1697

    சுடர்மலைத் திருண்ட சோலைச்
            சுரேந்திர காந்த மென்னும்
    வடமலை நகர மாளு
            மன்னவன் றேவி பெற்ற
    தடமலர்ப் பெரிய வாட்கட்
            டையன்மற் றவளை யெங்கோன்
    விடமலைத் திலங்கு செவ்வேல்
            வெய்யவன் பெயரன் வேட்டான்.       1698

    அதனைக் கேட்டுத் திவிட்டன் மகிழ்தல் ; சூரியாத்தமனம்

    என்றவன் பெயர்த்துஞ் சொல்ல
            வின்பநீர் வெள்ள மூழ்கி
    மின்றவ ழிலங்கும் வேலான்
            விஞ்சைய னவனைப் போக்கிச்
    சென்றுதன் கோயில் சேர்ந்தான்
            செங்கதிர்த் திகிரி யானு
    மன்றழல் சுருங்க முந்நீ
            ரலைகட லழுவம் பாய்ந்தான்.       1699

    மாலை

    அழலவன் குளித்த பின்னை
            யணங்கிவ ரந்தி யென்னும்
    மழலையங் கிளவிச் செவ்வாய்
            மடந்தையு மடைந்த போழ்தில்
    குழலமர் கிளவி யார்தங்
            கூந்தலுட் குளித்து விம்மி
    எழிலகி லாவி போர்ப்ப
            விருவிசும் பிருண்ட தன்றே.       1700

    இரவு

    விரவின பரவைப் பன்மிமீன்
            மிடைமணிக் கலாப மாக
    மருவின பரவை யல்குன்
            மயங்கிருட் டுகிலை வாங்கிப்
    புரிவணன் மதிய மென்பான்
            பொழிகதிர்த் தடக்கை நீட்டி
    இரவெனு மடந்தை செல்வ
            நுகரிய வெழுந்து போந்தான்.       1701

    திவிட்டன் இன்பம் நுகர்தல்

    ஏரணி விசும்பி னங்கே
            ழெழுநிலா விரிந்த போழ்தில்
    சீரணி மணிவண் டார்க்குஞ்
            சிகழிகைப் பவழ வாயார்
    காரணி வண்ண னென்னுங்
            கருங்களி வேழந் தன்னை
    வாரணி யிளமென் கொங்கை
            வாரியுள் வளைத்துக் கொண்டார்.       1702

    பங்கய முகத்து நல்லார்
            பவழவாய்க் கவளங் கொண்டு
    பொங்கிய களிய தாகி்
            மயங்கிய பொருவில் வேழம்
    குங்குமப் பொடிநின் றாடிக்
            குவட்டிளங் கொங்கை யென்னும்
    தங்கொளி மணிமுத் தேந்துந்
            தடத்திடை யிறைஞ்சிற் றன்றே.       1703

    வேய்மரு ளுருவத் தோளார்
            வெம்முலைத் தடங்க ளென்னும்
    பூமரு தடத்துட் டாழ்ந்து
            பொற்பொடி புதைய வாடிக்
    காமரு காம மென்னுங்
            கருங்கயம் படிந்து சென்று
    தேமரு குழலஞ் சாயற்
            றேவிகைப் பட்ட தன்றே.       1704

    காதலா லுரிமை பாங்கிற்
            கடிகமழ் காம வல்லித்
    தாதலொந் ததர்ந்து சிந்தத்
            திளைத்தவத் தடக்கை வேழம்
    மாதரா ளமிழ்தின் சாயற்
            றோட்டியால் வணக்கப் பட்டுப்
    போதுலாம் புணர்மென் கொங்கைக்
            குவட்டிடைப் பூண்ட தன்றே.       1705

    சுயம்பிரபையின் வாயினுள் மதி புகுதல்

    செங்கயற் கண்ணி னாளுஞ்
            செல்வனுந் திளைத்துத் தீந்தேன்
    பொங்கிய வமளி மேலாற்
            புணர்முலை நெருங்கப் புல்லித்
    தங்கிய பொழுதிற் றாழ்ந்து
            தண்கதிர் மதியந் தானே
    மங்கைதன் பவழச் செவ்வாய்
            மடுத்தக மடைந்த தன்றே.       1706

    தேவி அஞ்சியலறல்

    அடைந்தது மதிய மாக
            வாயிடை யரசன் றிண்டோள்
    மிடைந்ததோ ணெகிழ விம்மி
            மெல்லியல் வெருவ லோடு்
    மடங்கலை யலைக்கு நீரான்
            மருட்டினன் வினவ மாதோ
    வடந்தவ ழிளமென் கொங்கை
            மெல்லவே மிழற்றி னாளே.       1707

    மன்னன் அவளைத் தேற்றல்

    வணங்கியிவ் வுலக மெல்லா
            மகிழ்ந்துகண் பருகு நீர்மை
    அணங்கிவர் சிறுவன் வந்துன்
            அணிவயிற் றகத்துப் பட்டான்
    கணங்குழை யஞ்ச லென்று
            கருமணி வண்ணன் றேற்றப்
    பணங்குலாம் பரவை யல்குற்
            பாவையும் பரிவு தீர்ந்தாள்.       1708

    சூரியோதயம்

    கங்குல்வாய் மடந்தை கண்ட
            கனவுமெய் யாகல் வேண்டி
    மங்குல்வா னகட்டுச் சென்று
            மதியவன் மறைந்த பின்னை
    அங்குலா யிருளை நீக்கு
            மாயிரங் கதிரி னானும்
    கொங்குலாங் குழலி காணுங்
            குழவிய துருவங் கொண்டான்.       1709

    சுயம்பிரபையின் கருப்பப் பொலிவு

    குலம்புரி சிறுவனைத் தரித்துக் கோலமா
    நிலம்புரி நிழலொளி நிரந்து தோன்றலால்
    வலம்புரி மணிக்கரு விருந்த தன்னதோர்
    நலம்புரி திருவின ணங்கை யாயினாள்.       1710

    மின்னிலங் கவிரொளி மேனி மெல்லவே
    தொன்னலம் பெயர்ந்துபொன் சுடர்ந்து தோன்றலான்
    மன்னிலங் கருமணி வளர வாளுமிழ்
    பொன்னிலம் புரைவதோர் பொலிவு மெய்தினாள்.       1711

    புதல்வற் பேறு

    கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத்
    தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன்
    கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய
    நாணலம் பொலிதர நம்பி தோன்றினான்.       1712

    நகரமாந்தர் மகிழ்ச்சி

    பொலிகெனு மொலிகளும் பொன்செய் மாமணி
    ஒலிகல வொலிகளும் விரவி யூழிநீர்
    கலிகெழு கனைகடல் கலங்கி யன்னதோர்
    பலிகெழு முரசொலி பரந்தொ லித்ததே.       1713

    துளைபடு குழலிசை துடியொ டார்ப்பவும்
    வளைபடு கறங்கிசை வயிரொ டேங்கவும்
    தளைபடு தகைமலர் மாலை தாதுகக்
    கிளைபடு வளநகர் கிலுகி லுத்ததே.       1714

    தொத்திளங் கடிமலர் துதைந்த கோதையார்
    மொய்த்திளங் குமரரோ டாடு முன்கடை
    மத்தளப் பாணியு மதன கீதமும்
    கைத்தலத் தாளமுங் கலந்தி சைத்தவே.       1715

    சிறைநகர் சீத்தன திலத முக்குடை
    இறைநகர் விழவணி யியன்ற நீண்டுநீர்த்
    துறைநகர் சுண்ணநெய் நாவி தூங்கின
    நிறைநக ரவர்தொழி னினைப்பி கந்தவே.       1716

    சினகரத்திற் செய்தவை

    சுண்ணநெய் யெழுபக லாடித் தொன்னகர்
    நண்ணிய நானநீ ராடி நம்பியைப்
    புண்ணியா வாசனை செய்து புங்கவன்
    திண்ணிய வடிமலர்ச் சேடஞ் சேர்த்தினார்.       1717

    சுற்றத்தார் வருதல்

    வழுவலி னாஞ்சிலான் வண்பொ னாழியான்
    தழுமல ரலங்கலான் றாதை தானெனச்
    செழுமல ரணிகுழற் றேவி மாரென
    எழுபெருங் கிளைகளு மினிதி னீண்டினார்.       1718

    அவர்கள் குழவியைத் தழுவி மோந்து மகிழ்தல்

    எழுதரு பரிதியங் குழவி யேய்ப்பதோர்
    தொழுதகை வடிவொடு நம்பி தோன்றலும்
    தழுவினர் முயங்கினர் முயங்கித் தம்முளே
    ஒழிவிலா வுவகைநீர்க் கடலுண் மூழ்கினார்.       1719

    அந்தணர் முதலியோர் வாழ்த்துதல்

    அறத்தகை யந்தணர் குழுவு மாடல்வேன்
    மறத்தகை மன்னவர் குழுவு மாநகர்த்
    திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப்
    பொறுத்தவர் பொலிவுரை புடைபொ ழிந்ததே.       1720

    திவிட்டன் அந்தணர் முதலியோருக்கு அரதன முதலியவை அளித்தல்

    குருமணிக் கோவையுங் குளிர்பொற் குன்றமும்
    அருமணிக் கலங்களு மரத்த வாடையும்
    புரிமணி வளநகர் புகுந்து கொள்கெனக்
    கருமணி யொளியவன் கவரக் காட்டினான்.       1721

    நாமகரணம்

    திருவொடு திசைமுகந் தெளிர்ப்பத் தோன்றினான்
    திருவொடு வென்றியிற் சேரு மாதலால்
    திருவொடு திகழ்தர விசய னென்றரோ
    திருவுடை மார்பனை நாமஞ் சேர்த்தினார்.       1722

    விமானம் வருகை

    விஞ்சைய ருலகிற்கும் விடுத்து மோகையென்
    றஞ்சன வண்ணனங் கருளு மாயிடை
    மஞ்சுடை விசும்பினின் றிழிந்து வந்தது
    செஞ்சுட ருமிழ்வதோர் செம்பொன் மானமே.       1723

    மணிநகு விமானமொன் றிழிந்து வந்துநம்
    அணிநக ரணுகின தடிக ளென்றலும்
    பணிவரை கொணர்மினீர் பாங்கி னென்றனன்
    துணிநகு சுடரொளி துளும்பும் வேலினான்.       1724

    மஞ்சுசூழ் மழைநுழை மானந் தன்னுளோர்
    விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர்
    கஞ்சுகி யவரொடு மிழிந்து காவலன்
    இஞ்சிசூழ் நகரணி யிருக்கை யெய்தினார்.       1725

    பொலிகெனப் புரவலன் பொன்செய் நீண்முடி
    மலிதரு நறுநெயம் மகளிர் பெய்தலுங்
    கலிதரு கனைகட லன்ன காதலோ
    டொலிதரு நகையொலி யுவந்தெ ழுந்ததே.       1726

    நாவிகா றழுவிமன் னறுநெய் யாடிய
    பாவைமார் தங்களைப் பாவை கோயிலுக்
    கேவியாங் கிருந்தபி னிறைவற் கின்னணம்
    தேவிகோன் றமன்றொழு தொருவன் செப்பினான்.       1727

    தூதன் கூறிய செய்தி

    எங்கள்கோ னெறிகதிர்ப் பெயர னீர்மலர்க்
    கொங்குசே ரலங்கலான் குளிரத் தங்கினாள்
    மங்குறோய் மணிவரை மன்னன் றன்மகள்
    தொங்கல்சூழ் சுரிகுழற் சோதி மாலையே.       1728

    மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன்
    தொங்கல்வாய் மடந்தைகண் டுயிலு மாயிடைக்
    கங்குல்வாய்க் கதிர்மதி கவானின் மேலிருந்
    தங்கண்மால் விசும்பக மலர்வித் திட்டதே.       1729

    தெண்கதிர்த் திருமணி கனவிற் சேர்ந்தபின்
    கண்கதிர்த் திளமுலை கால்ப ணைத்தன
    தண்கதிர்த் தமனியப் பாவை போல்வதோர்
    ஒண்கதிர்த் திருமக ளுருவ மெய்தினாள்.       1730

    வயா

    வானிவர் மணிநகை விமான மேறவும்
    கானிவர் கற்பகச் சோலை காணவும்
    மானிவர் நோக்கினாள் வயாவி னாளது
    தேனிவ ரலங்கலாய் தீர்க்கப் பட்டதே.       1731

    அமிதசேனன் பிறப்பு

    மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத்
    தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின்
    கோணிற்கும் விசும்பிடைக் குழகித் திங்களும்
    நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான்.       1732

    தேமரு செங்கழு நீரின் செவ்விதழ்
    காமரு பவழவாய் கமழுங் கண்மலர்
    தாமரை யகவிதழ் புரையுந் தானுமோர்
    பூமரு தமனியக் குழவி போலுமே.       1733

    வானிடை மணிவிளக் கெரிந்த வண்டொடு
    தேனுடை மலர்மழை சிதர்ந்த தவ்வழி
    மீனுடை விரிதிரை வெண்சங் கார்த்தன
    தானுடை யொளிதிசை தவழ்ந்தெ ழுந்ததே.       1734

    பெயரிடுதல்

    அளப்பருந் திறலுடை யரசர் தொல்குடை
    அளப்பருந் திறலினோ டலரத் தோன்றினான்
    அளப்பருந் திறலின னமித தேசனென்
    றளப்பருந் திறற்பெய ரமரக் கூறினார்.       1735

    ஐயன தழகுகண் பருக வவ்வழி் மையணி
    மழைமுகில் வண்ணன் மாமனார்
    வையக முடையவற் குணர்த்தி வாவென
    நெய்யொடு வந்தன னிலைமை யின்னதே.       1736

    தூதனை யுபசரித்தல்

    என்றவன் மொழிதலு மிலங்கு நேமியான்
    நின்றகஞ் சுடர்தரு நிதியி னீத்தமங்
    கன்றவற் கருளின னரச செல்வமோ
    டொன்றின னுவந்துதன் னுலக மெய்தினான்.       1737

    வேறு

    விண்டா ரில்லா வெந்திற லோன்பொற் சுடராழித்
    தண்டார் மார்பன் றன்மக னன்மா மணியேபோல்
    கண்டார் கண்களி கூருஞ் செல்வக் கவினெய்தி்
    வண்டா ரைம்பான் மங்கையர் காப்ப வளர்கின்றான்.       1738

    கண்கவர் சோதிக் காமரு தெய்வம் பலகாப்பத்
    தண்கமழ் போதிற் றாமரை யாளுந் தகைவாழ்த்த
    விண்கவர் சோதித் தண்கதி ரோன்போல் விரிவெய்தி
    மண்கவர் சோதித் தண்கதிர் வண்ணன் வளர்கின்றான்.       1739

    தவழ்தல்

    செம்பொற் கோவைக் கிண்கிணி யேங்கத் திலகஞ்சேர்
    அம்பொற் கோவைப் பன்மணி மின்னிட் டரைசூழப்
    பைம்பொற் கோவைப் பாடக மென்சீ றடிநல்லார்
    தம்பொற் கோவைப் பூண்முலை முன்றிற் றவழ்கின்றான்.       1740

    போதார் பொய்கைப் போதவிழ் பொற்றா மரைகாட்டி
    மாதார் சாயன் மங்கையர் கூவ மகிழ்வெய்திக்
    காதார் செம்பொற் றாழ்குழை மின்னின் கதிர்வீசத்
    தாதார் பூவின் றண்டவி சேறித் தவழ்கின்றான்.       1741

    கண்ணின் செல்வங் கண்டவர் கண்டே மனம்விம்ம
    மண்ணின் செல்வம் வைகலும் வைகன் மகிழ்வெய்தி
    விண்ணின் செல்வச் செங்கதி ரோன்போல் விளையாடித்
    தண்ணென் செல்கைப் பொன்னுருள் வாங்கித் தளர்கின்றான்.       1742

    கல்வி கற்பித்தல்

    ஐயாண் டெல்லை யையன ணைந்தா னவனோடு
    மையா ரின்பக் காதலி நாவின் மகளாகப்
    பொய்யாக் கல்விச் செல்வர்க டம்மாற் புணர்வித்தான்
    நெய்யார் செவ்வே னீளொளி நேமிப் படையானே.       1743

    மகள் பிறப்பு

    காமச் செல்வ னென்றுல கெல்லாங் களிதூங்கும்
    ஏமச் செல்வ நம்பியொ டின்னு மிளையாகச்
    சேமச் செல்வன் றேவி பயந்தா டிசையெல்லாம்
    ஓமச் செல்வங் கொண்டினி தேத்து மொளியாளே.       1744

    பெயரிடுதல்

    பாரார் செல்கைப் பல்கிளை யெல்லா முடனீண்டிப்
    பேரா வென்றிக் கொன்றிய வாறு பெயரிட்டுச்
    சீரா ரோகை விஞ்சையர் சேணி செலவிட்டுக்
    காரார் வண்ணன் காதலொ டின்பக் கடலாழ்ந்தான்.       1745

    ஐயன் றானு மவ்வகை யாலே வளர் வெய்த
    மையுண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்கத்
    தெய்வம் பேணிப் பெற்றனர் பேணுந் திருவேபோல்
    மெய்யின் சோதி சூழொளி மின்னின் பெயராளும்.       1746

    தேதா வென்றே தேனொடு வண்டு திசைபாடும்
    போதார் சாயற் பூங்கொடி போலப் பொலிவெய்தித்
    தாதார் கோதைத் தாயரொ டாயம் புடைசூழ
    மாதார் சாயன் மாமயி லன்னாள் வளர்கின்றாள்.       1747

    வேறு

    மழலைக் கனிவாய் மணிவண்டு
            வருடி மருங்கு பாராட்ட
    அழனக் கலர்ந்த வரவிந்த
            வமளி சேர்ந்த விளவன்னம்
    கழனிச் செந்நெற் கதிரென்னுங்
            கவரி வீசக் கண்படுக்கும்
    பழனக் குவளை நீர்நாடன்
            பாவை வார்த்தை பகருற்றேன்.       1748

    செம்பொற் சிலம்புங் கிண்கிணியுஞ்
            செல்வச் செஞ்சீ றடிபோற்ற
    வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்த
            வல்குன் மணிமே கலை மருட்ட
    அம்பொற் சுருளை யிருபாலு
            மளக வல்லி யருகிலங்கப்
    பைம்பொற் சுடிகை நிழறுளங்கப்
            படர்ந்தா டாயம் படிந்தாளே.       1749

    பந்தாடல்

    நங்கை நல்லார் பாராட்ட
            நகையாட் டாயம் புகலோடு
    மங்கை மடவார் பந்தாடன்
            மயங்கி யாடன் மணிநிலத்துக்
    கொங்கை சேர்ந்த குங்குமத்தின்
            குழம்புங் கோதை கொய்தாதும்
    அங்க ராகத் துகளும்பாய்ந்
            தந்தி வான மடைந்ததுவே.       1750

    காவி நாணுங் கண்ணார்தங்
            கையி னேந்துங் கந்துகங்கள்
    ஆவி தாமு முடையனபோ
            லடிக்குந் தோறு மடங்காது
    பூவி னார்ந்த மணிநிலத்துப்
            பொங்கி யெழுந்து பொன்னேந்தி
    நாவி நாறு மிளங்கொங்கைத்
            தடங்கள் சென்று நணுகியவே.       1751

    கரிய குழலும் பொற்றோடுஞ்
            செய்ய வாயுங் கதிர்முறுவல்
    மரிய திசையு மதிமயங்கு
            மம்பொன் முகத்து மடவார்கள்
    திரியத் தம்மைப் புடைத்தாலுஞ்
            சென்று சேர்ந்து திளைக்குமால்
    அரிய செய்யுங் காமுகர்போ
            லளிய வந்தோ வடங்காவே.       1752

    செம்பொற் சுருளை மெல்விரலாற்
            றிருத்திச் செறிந்த தேரல்குல்
    வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்து
            மணிமே கலையுந் தானேற்றி
    அம்பொற் குரும்பை மென்முலைமே
            லணிந்த பொன்ஞா ணருகொடுக்கிப்
    பைம்பொற் றிலத நுதலொதுக்கிப்
            பாவை பந்து கைக்கொண்டாள்.       1753

    வேறு

    கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை
            கருமேகக் குழன்மடவார் கைசோர்ந்து நிற்பக்
    கொந்தாடும் பூங்குழலுங் கோதைகளு மாடக்
            கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந் தாழ்ந்தாட
    வந்தாடுந் தேனுமுரல் வரிவண்டு மாடமணி
            வடமும் பொன்ஞாணும் வார்முலைமே லாடப்
    பந்தாடு மாடேதன் படைநெடுங்க ணாடப்
            பணைமென்றோ ணின்றாடப் பந்தாடு கின்றாள்.       1754

    கந்துகங்கள் கைத்தலத்தா லேறுண்டு பொங்கிக்
            கருங்கண்ணுந் தாமுமுறக் கலந்தெழுந்த போழ்தின்
    வந்தனவுஞ் சென்றனவும் வானத்தின் மேலு
            மணிநிலத்து மீதுநெறி மறிகுவன வாகி
    அந்துகிலி னிடைத்தோயு மகலல்கு றீண்டு
            மணிமருங்கு சூழுமணியார் வடமுந் தாக்கும்
    கொந்தவிழும் பூங்குழ்லுங் கோதைகளு மூழ்குங்
            குவளை வாட் கண்ணிவருங் குறிப்பறிய மாட்டாள்.       1755

    நறுமாலை வந்தலைப்ப நன்மேனி நோமா
            னங்காயிப் பந்தாட னன்றன்றா மென்பார்
    இறுமாலிம் மின்மருங்கு லென்பாவ மென்பார்
            இளமுலைமே லேர்வடம்வந் தூன்றுமா லென்பார்
    செறுமாலிங் கிவைகாணிற் றேவிதா னென்பார்
            செங்கண்மால் காணுமேற் சீறானோ வென்பார்
    பெறுமாறு தாயருந் தோழியரு நின்று
            பிணையனா டன்மேற் பன்மொழி மிழற்றுகின்றார்.       1756

    நீராலிக் கட்டி நிரந்தெழுந்து பொங்கி
            நிழறயங்கும் பொன்னறைமே னின்றாடுகின்ற
    காராலி மஞ்ஞை களிசிறந்தாற் போலக்
            கருங்குழலி பந்தாடல் காதலித்த போழ்தில்
    சீராலி மால்வண்ணன் றேவியுந் தானும்
            செவ்வரத்த நுண்ணெழினி சேர்ந்தொருங்கு நோக்கி்
    வாராலி மென்கொங்கை மையரிக்கண் மாதர்
            வருந்தினா ணங்கையினி வருகவீங் கென்றார்.       1757

    வேறு

    அருமணி முடியவ னருளி தென்றலும்
    பருமணிப் பந்துகை விட்டுப் பாவைதன்
    புரிமணிக் குழல்புறந் தாழப் போந்தரோ
    கருமணி யொளியவன் கழல்சென் றெய்தினாள்.       1758

    மங்கையை வலப்புடைக் குறங்கின் மேலிரீஇ
    அங்கையா லணிநுத லரும்பு நீர்துடைத்
    தெங்குமி லுவகையோ டினிதி ருந்தபின்
    நங்கைத னலங்கிளர் மேனி நோக்கினான்.       1759

    இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின்
    வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால்
    குளமையா னறவிரி குவளைக் கண்ணியான்
    உளமயா வுயிர்ப்பதோ ருவகை யெய்தினான்.       1760

    செல்வியைத் திருக்குழ றிருத்தித் தேவிதன்
    அல்குன்மே லினிதினங் கிருவி யாயிடை
    மல்குபூ மந்திர சாலை மண்டபம்
    பில்குபூந் தெரியலான் பெயர்ந்து போயினான்.       1761

    அருத்தநூ லவரொடு மாய்ந்து மற்றவர்
    கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான்
    திருத்தகு சயம்வர முரசந் திண்களிற்
    றெருத்தின்மே லறைகென விறைவ னேயினான்.       1762

    வாலிய சந்தமென் சேறு மட்டித்துப்
    பீலியந் தழையொடு பிணையல் வேய்ந்தன
    பாலியல் பலிபெறு முரசம் பன்மையில்
    ஆலியங் கதிர்கொள வதிர்ந்த றைந்தவே.       1763

    வாழ்கநம் மன்னவன் வாழ்க வையகம்
    ஆழ்கநம் மரும்பகை யலர்க நல்லறம்
    வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலம்
    தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே.       1764

    புள்ளணி வார்பொழிற் பொன்செய் மாநகர்
    உள்ளணி பரப்புமி னுயர்மின் றோரணம்
    வெள்ளணி விரும்புமின் விருந்து போற்றுமின்
    கள்ளணி மலரொடு கலங்கள் பெய்ம்மினே.       1765

    இன்றைநா ளுள்ளுறுத் தீரைஞ் ஞாள்களும்
    மன்றலஞ் சயமரம் வரைந்த தாதலால்
    ஒன்றிவா ழரசரோ டுலக மீண்டுக
    வென்றுதா னிடிமுர சறைந்த தென்பவே.       1766

    கொடிபடு நெடுநகர்க் கோயில் வீதிவாய்
    இடிபடு மழைமுகி லென்ன வின்னணம்
    கடிபடு முரசுகண் ணதிர்ந்த காரென
    மடிபடு மாடவாய் மயில்கண் மான்றவே.       1767

    முர்சொடு வரிவளை மூரித் தானையோ
    டரசரு மரசரல் லாரு மாயிடைத்
    திரைசெறி கனைகடல் சென்று தேர்த்தனெப்
    புரைசெறி புரிசையின் புறணி முற்றினார்.       1768

    வெண்மலைச் சென்னிமேல் விஞ்சை வேந்தரும்
    கண்மலைத் திழிதருங் கடலந் தானையர்
    விண்மலைத் திழிதரும் விளங்கு சோதியர்
    எண்மலைச் சிலம்பிடை யிறைகொண் டீண்டினார்.       1769

    அவ்வரை யரைசர்கோ னருக்கன் றன்மகன்
    செவ்வரை யனையதோட் செல்வன் றன்னொடும்
    மைவரை நெடுங்கணம் மடந்தை தன்னொடும்
    இவ்வரை யரைசெதிர் கொள்ள வெய்தினான்.       1770

    பொன்னகர்ப் புறத்ததோர் புரிசை வார்பொழி்ல்
    தன்னகத் தியற்றிய தயங்கு பொன்னகர்
    மன்னர்கட் கிறைவன்வந் திருப்ப மண்மிசை
    இந்நகர்க் கிறைவனு மெதிர்கொண் டெய்தினான்.       1771

    கண்சுட ரிலங்குவேற் காள வண்ணனும்
    வெண்சுட ரொளியவன் றானும் விஞ்சையர்
    தண்சுடர்த் தமனிய வண்ணன் றன்னொடும்
    மண்சுட ருறுப்பதோர் வகைய ராயினார்.       1772

    இருபுடைக் கிளைகளும் விரவி யின்னணம்
    தெருவுடைத் திசைமுகந் தெளிப்பத் தேர்த்தரோ
    மருவுடை மகரநீர் வளாகம் வானவர்
    உருவுடை யுலகம்வந் திழிந்த தொத்ததே.       1773

    சிகைமணி யழுத்திய செம்பொற் சென்னிய
    நகைமணிக் கோபுர வாயி னான்கொடு
    வகைமணித் தலத்ததோர் மதலை மாளிகை
    தொகைமணித் தொழில்பல தொடரத் தோற்றினார்.       1774

    பளிங்கியல் பலகையும் பவழத் தூண்களும்
    விளங்குபொற் கலங்களும் வெள்ளி வேயுளும்
    இளங்கதிர் முத்தமு மியற்றி யின்னணம்
    வளங்கவின் றனையதம் மதலை மாடமே.       1775

    மீன்முக விசும்பிடை விரிந்த வெண்ணிலாப்
    பான்முகந் தொகுப்பன பனிக்கும் வேதிகை
    மேன்முகந் திருத்திய வெள்ளி முன்றிலான்
    நான்முக மருங்கினு நகுவ தொக்குமே.       1776

    அங்கதற் கைந்துகோ லளவி னாடரங்
    கிங்குவந் திறுத்தன வென்னு மீட்டன
    செங்கதிர்ப் பவழக்கா னிரைத்த செம்பொனான்
    மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே.       1777

    விளிம்பிடை மரகத வேதி கட்டிய
    வளம்பெறு மணிநகை மஞ்ச மீமிசை
    இளம்பெருஞ் சுரியுளை யரிநின் றேந்திய
    உளம்பொலி யாசன முயர விட்டவே.       1778

    மண்டங்கு மகரவா சனத்து மென்மயில்
    கண்டங்கள் புரைவன கனபொற் கொட்டைய
    அண்டங்கொ ளன்னமென் றூவி யார்த்தன
    எண்டங்கு மணியன வியற்றப் பட்டவே.       1779

    வாரித்தண் கதிர்மணி முத்த மாலையும்
    பாரித்த பளிங்கெழிற் பழித்த கோவையும்
    பூரித்த பொழிகதிர்ப் பொன்செய் தாமமும்
    வேரித்தண் பிணையலு மிடையப் பட்டவே.       1780

    மஞ்சுடை மாளிகை மிடைம ணித்தலம்
    பஞ்சுடைத் தவிசுகள் பரப்பிப் பூவடுத்
    தஞ்சுட ரிடுபுகை யடர்ந்தெ ழுந்தரோ
    வெஞ்சுடர்க் கடவுளை விருந்து செய்தவே.       1781

    சயமர மாளிகை யியற்றிச் சந்தனப்
    பயமர நிழலொளி மஞ்சம் பாவின
    வியமரத் தொழிலவர் வினைமுடிந் ததென்
    றியமரத் தொழுதிக ளெழுந்தி சைத்தவே.       1782

    மங்கல நாழிகை வந்த மன்னர்கள்
    இங்குவந் தேறுக வென்று சாற்றலும்
    சங்கொலி பரந்தன தயங்கு மாமுர(சு)
    சங்கொலித் தெழுந்தன வரசர் தோன்றினார்.       1783

    வேற்றரசர்
    வேறு

    எரிமணி வயிரப் பூணா
            னிக்குவா குலத்துட் டோன்றி
    அருமணிப் புரிசை வேலி்
            யயோத்தியாள் கின்ற வேந்தன்
    திருமணி நிழற்றுஞ் செம்பொன்
            னெடுமுடி திருவில் வீசப்
    புரிமணி யாரந் தாழப்
            பொன்னகர் பொலியப் புக்கான்.       1784

    குழவியம் பருகி போல்வான்
            குருகுலங் குளிரத் தோன்றி்
    அழுவநீர்ப் புரிசை வேலி
            யத்தின புரம தாள்வான்
    முழவங்க ளிரண்டு செம்பொன்
            முளைக்கதிர்க் கனக வல்லி
    தழுவிய தனைய தோளான்
            றன்னொளி தயங்கச் சார்ந்தான்.       1785

    நண்டுபொன் கிளைக்கு நாட
            னாதவன் குலத்துட் டோன்றிக்
    குண்டல புரம தாளுங்
            குங்குமக் குவவுத் தோளான்
    கண்டிகை தவழப் பூண்டு
            கதிர்மணி முடியின் மேலால்
    வண்டுகள் பரவச் சென்று
            வளநகர் மருளப் புக்கான்.       1786

    ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன்
    வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன்
    சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச
    ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான்.       1787

    சொரிமது கலந்த சோலைச் சூரிய புரம தாளும்
    அரிகுலத் தரசர் கோமா னவிர்மணி யாரந் தாங்கிப்
    பொருமலைப் பகடு நுந்திப் புயலலைத் திருண்டு வீழ்ந்த
    புரிமலர்க் குஞ்சி தாழப் பொன்னகர் புகழப் புக்கான்.       1788

    சொன்மலர்ந் துலக மேத்துஞ்
            சுடரவன் மருகன் றோலா
    மன்மலர்ந் திலங்கு செய்கை
            வளங்கெழு மதுரை யாள்வான்
    தென்மலை வளர்ந்த தெய்வச்
            சந்தனந் திளைத்த மார்பன்
    மின்மல ராரந் தாங்கி
            வியனகர் விரும்பப் புக்கான்.       1789

    ஐம்பெருங் குலத்த ராய வரசரும் பிறரு மாங்கண்
    கம்பெறி களிநல் யானைக் கடற்படை புறத்த தாக
    வம்பெறி வளாகஞ் செம்பொன் மஞ்சங்கண் மலிர வேறி
    வெம்பரி விளங்குந் தானை வேலவர் விளங்கு கின்றார்.       1790

    திருந்திய திலதக் கண்ணித்
            தேவிளங் குமரன் போலும்
    அருந்தகை யரச நம்பி
            யடுதிற லமித தேசன்
    பரந்தபின் பசலை கூரப்
            பனிக்கதிர் வருவ தேபோல்
    விரிந்தொளி சுடர வேந்தர்
            விளங்கொளி மழுங்கச் சென்றான்.       1791

    மழைபுரை மதத்த தாய
            மழகளி யானை தன்மேல்
    வழைவளர் சோலை சேர்ந்த
            மணிவண்டு மறிவ வேபோல்
    எழுதெழி லழகன் றன்மே
            லிளையவர் கருங்கண் வீழ்ந்து
    விழவயர் நகரின் வந்த
            வேந்தரை விட்ட வன்றே.       1792

    வரைசெறிந் தனைய செம்பொன்
            மஞ்சங்கண் மலிரத் தோன்றி
    அரைசர்க ளிருந்த போழ்தி
            னாழியந் தடக்கை வேந்தன்
    விரைசெறி குழலங் கூந்தன்
            மெல்லியல் வருக வென்றான்
    முரைசொலி கலந்த சங்கு
            வயிரொடு முரன்ற வன்றே.       1793

    இளவரசர் வருகை
    வேறு

    மன்னவன் மடந்தை மணிமாட நிலையுள்ளால்
    பொன்னமளி மேலடுத்த பொங்கணையின் மேலாட் (கு)
    கன்னமனை யாரடிக ளாரருளி தென்றார்
    இன்னகைய பூந்தவிசி னின்றினி திழிந்தாள்.       1794

    வஞ்சியனை யார்மணிதொ டர்ந்தசுடர் ஞாணால்
    அஞ்சில விருங்குழல சைத்தயில் பிடித்தார்
    கஞ்சுக முகத்தமுலை கச்சுமிக வீக்கி
    மஞ்சிவரு மாமயில னார்மருங்கு சூழ்ந்தார்.       1795

    ஆயமொடு தாயரிடை யாளரசர் தங்கள்
    ணேயமிகு நெஞ்சினிடை யாளுமட வாளாய்ப்
    பாயமதி தாரகையொ டோரைபட வேகித்
    தூயமணி நீர் நிலைக டோறிவர்வ தொத்தாள்.       1796

    வண்டுவழி செல்லவய மன்னர்மதி செல்லக்
    கண்டவர்கள் கண்கள்களி கொண்டருகு செல்ல
    எண்டிசையு மேத்தொலியொ டின்னொலிகள் செல்ல
    விண்டமல ரல்லிமிசை மெல்லநனி சென்றாள்.       1797

    அம்மெலடி தாமரைச ராவியொடு நோவச்
    செம்மெலிதழ் வாயொடவர் சிந்தனை துடிப்ப
    வெம்முலைக ளோடவர்கள் காதன்மிக வீங்க
    மைம்மலர் நிகர்க்குமணி மாளிகை யடைந்தாள்.       1798

    பொன்னேநன் மணிக்கொம்பே பூமிமே
            லாரணங்கே போற்றி போற்றி
    அன்னேயெம் மரசர்குலத் தவிர்விளக்கே
            யாரமிர்தே போற்றி யுன்றன்
    மின்னேர்நுண் ணிடைநோமான் மென்மலர்மேன்
            மென்மெலவே யொதுங்கா யென்று
    மன்னேர்சே யயினெடுங்கண் மங்கைமார்
            போற்றிசைப்ப மாடம் புக்காள்.       1799

    அணிதயங்கு சோபான வீதிவா
            யணங்கனையா ரடியீ டேத்த
    மணிதயங்கு மாளிகைமேல் வாணிலா
            வளர்முன்றின் மருங்கு சூழ்ந்து
    கணிதயங்கு வினைநவின்ற கண்டத்
            திரைமகளிர் கையி னீக்கித்
    துணிதயங்கு வேலரசர் மனந்துளங்கச்
            சுடர்ந்திலங்கித் தோன்றி னாளே.       1800

    வடியரத்த மிடைவழித்துக் கருங்கண்ணுஞ்
            செம்பொன்னால் வளைத்த சூரல்
    கொடியரத்த மெல்விரலாற் கொண்டரசர்
            குலவரவு கொழிக்கு நீராள்
    முடியரக்குப் பூங்கண்ணி மூரித்தேர்
            வேந்தர்தமை முறையாக் காட்டிப்
    படியரக்கும் பாவைக்குப் பைபையவே
            யினையமொழி பகரா நின்றான்.       1801

    இக்குவா குலத்தரசன்

    அங்கார வலர்கதிர மணிசுடரு
            மரியணைமே லமர்ந்து தோன்றித்
    தங்கார மணிநிழற்றுந் தடவரையா
            ரகலத்தான் றகர நாறுங்
    கொங்கார வார்குழலார் குவிமுலைகண்
            முகம்பொருத குவவுத் தோளான்
    இங்காரு நிகரில்லா விக்குவா
            குலத்திறைவ னிருந்த கோவே.       1802

    ஆதியா னருளாழி தாங்கினா
            னாயிரச்செங் கதிரோ னாணுஞ்
    சோதியான் சுரர்வணங்கு திருவடியான்
            சுடுநீறா நினையப் பட்ட
    காதியா னருளியபொற் கதிர்கொள்முடி
            கவித்தாண்டார் மருகன் கண்டாய்
    ஓதியா மொழியினிவ னுறு வலிக்கு
            நிகராவா ருளரோ வேந்தர்.       1803

    ஆழித்தே ரொன்றேறி யலைகடலி
            னடுவோட்டி யமரர் தந்த
    மாழைத்தேர் மருங்கறா மணிமுடியு
            மணிகலமுந் திறையா வவ்வி
    ஊழித்தே ரரசிறைஞ்ச வுலகெலா
            மொருகுடைக்கீ ழுறங்கக் காத்த
    பாழித்தோட் பரதன்பி னிவனிவனா
            னிலமடந்தை பரிவு தீர்ந்தாள்.       1804

    இன்னவன துயர்குலமு மிளமையுமிங்
            கிவன்வடிவுஞ் சொல்ல வேண்டா
    மன்னவன்றன் மடமகளே மற்றிவனுக்
            கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து
    பொன்னவிரு மணியணைமேற் பொழிகதிரீண்
            டெழுந்ததுபோற் பொலிந்து தோன்றுங்
    கொன்னவின்ற வேற்குமரன் குருகுலத்தார்
            கோனிவனே கூறக் கேளாய்.       1805

    அருளாழி யறவரச னருளினா
            லகன்ஞாலம் பரிவு தீர்த்தான்
    உருளாழி யுடையரிவ னடைவின்மிக்க
            கடைப்பணிகொண் டுழையோர் போல
    இருளாழி நிழற்று ளும்பு மெரிபொன்மணி்
            நெடுமுடிசாய்த் திறைஞ்சப் பட்டான்
    மருளாழுங் கழிவனப்பின் மற்றிவனே
            குலமுதற்கண் வயவோன் கண்டாய்.       1806

    சூழிருங் கடற்றானை யுடன்றுளங்கச்
            சுரர்கொணர்ந்து சொரிந்த மாரித்
    தாழிரும்பல் புயறாங்கிச் சரகூடஞ்
            சந்தித்த தகையோ னன்னோன்
    யாழிரங்கு மணிவண்டு மிலங்கிழையார்
            கருங்கண்ணு மருங்கு நீங்கா
    வீழிரும்பொற் சுடரார வரைமார்ப
            னிவன்சீர்யான் விளம்ப வேண்டா.       1807

    இங்கிவன திடமருங்கி னெழில்றயங்கு
            மணிமஞ்ச மிலங்க வேறிச்
    சங்கிவர்வெண் சாமரையுந் தாழ்குழையின்
            நீள்சுடருந் தயங்கி வீசக்
    குங்குமஞ்சேர் கொழும்பொடியிற் புரண்டுதன்னி
            னிறஞ்சிவந்த குளிர்முத் தாரம்
    செங்கதிரோ னொளிபருகுஞ் செவ்வரைநே
            ரகலத்தான் றிறமுங் கேளாய்.       1808

    தகரநா றிருஞ்சோலைச் சயம்பூறான்
            றுறவரசாய் நின்ற காலை
    மகரயாழ் நரம்பியக்கி வரங்கொண்டு
            வடமலைமே லுலக மாண்ட
    சிகரமா லியானையான் வழிமருகன்
            செந்தாமந் தவழ்ந்து தீந்தேன்
    பகருமா மணிமுடியா னமரருமே
            பாராட்டும் படியன்பாவாய்.       1809

    சக்கரர்தாம் பிறந்துவரித் தரங்கநீர்
            வளாகமெல்லாந் தங்கீழ்க் கொண்ட
    உக்கிரமெய்க் குலத்தரச னொளிவேலிவ்
            விளையவன துருவே கண்டாய்
    அக்கிரநற் பெருந்தேவி மடமகளே
            யரசணங்கு மணங்கே யின்னும்
    விக்கிரமக் கடற்றானை விறல்வேந்த
            ரிவர்சிலரை விளம்பக் கேளாய்.       1810

    குண்டலபுரத்தார் கோமான்

    ஏலஞ்செய் பைங்கொடியி னிணர்ததைந்து
            பொன்னறைமேற் கொழுந்தீன் றேறிக்
    கோலஞ்சேர் வரைவேலிக் குண்டலத்தார்
            கோமானிக் கொலைவேற் காளை
    ஞாலங்க ளுடன் பரவு நாதவன்றன்
            குலவிளக்கு நகையே னம்பி
    போலிங்க ணரசில்லை பொன்னார
            வரைமார்பன் பொலிவுங் காணாய்.       1811

    சூரியத்தார் கோமான்

    சொரிமலர்த்தண் மலரணிந்த சோலைசூழ்
            சூரியத்தார் கோமான் றோலா
    அரிகுலத்தார் போரேறிவ் வரியேறு
            போலிருந்த வரச காளை
    வரிமலர்த்து மணிவண்டு புடைவருடு
            மாலையார் மகளிர் வட்கண்
    புரிமலர்த்தண் வரையகலம் புராதார்
            புண்ணியங்கள் புணரா தாரே.       1812

    பாண்டியன்

    வேலைவாய்க் கருங்கடலுள் வெண்சங்கு
            மணிமுத்தும் விரவி யெங்கும்
    மாலைவாய்க் கரும்பறா வகன்பண்ணை
            தழீஇயருகே யருவி தூங்கும்
    சோலைவாய் மலரணிந்த சூழ்குழலா
            ரியாழிசையாற் றுளைக்கை வேழம்
    மாலைவாய் நின்றுறங்கும் மதுரைசூழ்
            வளநாடன் வடிவுங் காணாய்.       1813

    கண்சுடர்கள் விடவனன்று
            கார்மேக மெனவதிருங் களிநல்யானை
    விண்சுடரு நெடுங்குடைக்கீழ் விறல்வேந்தன்
            றிறமிதனை விளம்பக் கேளாய்
    தண்சுடரோன் வழிமருகன் றென்மலைமேற்
            சந்தனமுஞ் செம்பொன் னாரத்
    தொண்சுடரும் விரவியநல் வரைமார்ப
            னுலகிற்கோர் திலதங் கண்டாய்.       1814

    கரபுரத்தரசன்

    மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற
            வரம்பணைந்து தடாவி நீண்ட
    கழைக்கரும்பு கண்ணீனுங் கரபுரத்தார்
            கோமானிக் கதிர்வேற் காளை
    இழைக்கரும்பு மிளமுலையா யெரிகதிரோன்
            வழிமருக னிவனீரீர்ந்தண்
    தழைக்கரும்பின் முருகுயிர்க்குந் தாரகலஞ்
            சார்ந்தவர்க டவஞ்செய் தாரே.       1815

    உறந்தைக்கோன்

    வண்டறையு மரவிந்த வனத்துழாய்
            மதர்த்தெழுந்த மழலை யன்னம்
    உண்டுறைமுன் விளையாடி யிளையவர்க
            ணடைபயிலு முறந்தைக் கோமான்
    கொண்டறையு மிடிமுரசுங் கொடிமதிலுங்
            குளிர்புனலும் பொறியும் பூவும்
    ஒண்டுறையு மும்மூன்று முடையகோ
            வேயிவன தெழிலுங் காணாய்.       1816

    ஏமாங்கத நாடன்

    தழலவாந் தாமரையி னீரிதழுஞ்
            செங்குவளைத் தாதும் வாரி
    அழலவாஞ் செந்தோகை யலங்குபொலங்
            கதிர்ச்செந்நெ லலைத்த வாடை
    பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது
            பவழக்காற் செம்பொன் மாடத்
    தெழினிவாய்க் கொணர்ந் தசைக்கு
            மியலேமாங் கதநாட னிவனேகண்டாய்.       1817

    மகதைகோ

    காந்தளங்கட் கமழ்குலையாற் களிவண்டு
            களிறகற்றுங் கலிங்க நாடன்
    பூந்தளவங் கமழ்சாரற் பொன்னறைசூழ்
            தண்சிலம்ப னன்றே பொன்னே
    ஏந்திளஞ்சிங் காதனத்தி னினிதிருந்த
            விளவரச னிப்பா லானோன்
    மாந்தளிர்கண் மருங்கணிந்த மணியருவிக்
            குன்றுடைய மகதைக் கோவே.       1818

    அங்கநா டுடையவர்கோ னவ்விருந்தா
            னிவ்விருந்தா னவந்திக் கோமான்
    கொங்குவார் பொழிலணிந்த கோசலத்தார்
            கோமானிக் குவளை வண்ணன்
    கங்கைதா னிருகரையுங் கதிர்மணியும்
            பசும்பொன்னுங் கலந்து சிந்தி
    வங்கவாய்த் திரையலைக்கும் வளநாட
            னிவன்போலும் வைவேற் காளை.       1819

    வஞ்சியின்மெல் லிடையவளை வானிலா
            வளர்முன்றில் வலமாய்ச் சூழ்ந்து
    பஞ்சியின்மெல் லடிநோவ நடைபயிற்றிப்
            படைவேந்தர் பலரைக் காட்டி
    மஞ்சிவரு மாளிகையின் வடமருங்கின்
            மணிமஞ்ச மலிரத் தோன்றும்
    விஞ்சையர்த முலகாளும் விறல்வேந்தர்
            குழாங்காட்டி விரித்துச் சொன்னாள்.       1820

    வித்தியாதர அரசர்

    மாடிலங்கு மழைதவழ்ந்து மணியருவி
            பொன்னறைமேல் வரன்றி வம் பூந்
    தோடிலங்கு கற்பகமுஞ் சுரபுன்னை
            வனங்களுமே துதைந்து வெள்ளிக்
    கோடிலங்கு நெடுவரைமேற் குடைவேந்த
            ரிவர்குணங்கள் கூறக் கேட்பின்
    ஏடிலங்கு பூங்கோதா யிமையவரின்
            வேறாய திமைப்பே கண்டாய்.       1821

    அங்கவவர் வளநகருங் குலவரவு
            மவையவற்றோடறையும் போழ்தின்
    வெங்கதிரோன் பெயரவனுக் கிளவரசிவ்
            வேந்தனெனொ முன்னந் தானே
    கொங்கிவருங் கருங்குழலி பெருந் தடங்கண்
            இருங்குவளை பிணையல் போலச்
    செங்கதிரோ னெனவிருந்த திருந்துவே
            லிளையவன்மேற் றிளைத்த வன்றே.       1822

    வேறு

    கடாமிகு களிநல் யானைக்
            கவுளிழி கான வீதி
    விடாமிகை சுழன்று வீழும்
            விரைகவர் மணிவண் டேபோல்
    படாமுகக் களிற்றி னான்றன்
            பவழக்குன் றனைய மார்பில்
    தடாமுகை யலங்க றன்மேற்
            றையல்கண் சரிந்த வன்றே.       1823

    ஏட்டினார் குழலி னாளுக்
            குழையவ ளின்ன னென்று
    காட்டினா ளாவ தல்லாற்
            காரிகை தன்னின் முன்னம்
    ஓட்டினா ணிறையுங் கண்ணு
            முள்ளமுங் களித்த தங்கே
    பாட்டினா லென்னை போக
            பான்மையே பலித்த தன்றே.       1824

    விண்டழி நிறைய ளாகி
            மெல்லவே நடுங்கி நாணி
    வண்டிவர் மாலை நோக்கி
            மாதராள் மறைத லோடும்
    கொண்டதோர் குமரன் போலக்
            குங்குமக் குவவுத் தோண்மேல்
    ஒண்டொடி மாலை வீழ்த்தா
            ளுலகொலி படைத்த தன்றே.       1825

    ஆர்த்ததங் கரவத் தானை
            யாலித்த முரசுஞ் சங்கும்
    தேர்த்தன மலருஞ் செம்பொற்
            சுண்ணமுந் திசைக ளெல்லாம்
    போர்த்தன பதாகை பொங்கிப்
            பூமியங் கிழவ ருள்ளம்
    வேர்த்தன வேர்த்துத் தாமே
            வெய்துயிர்த் தொழிந்த வன்றே.       1826

    புனைவுதா னிகந்த கோதைப்
            பொன்னனாள் பூமி பாலர்
    நினைவுதா னிகந்து காளை
            வடிவெனு நிகளஞ் சேர
    வினைகடாம் விளையு மாறியாம்
            வேண்டிய வாறு வாரா
    வினையதால் வினையின் றன்மை
            யெனநினைந் தாறி னாரே.       1827

    நெய்த்தலைப் பாலுக் காங்கு
            நெடுவரை யுலகின் வந்த
    மைத்துன குமரன் றன்னை
            மடமொழி மாலை சூட்ட
    இத்தலை யென்ன செய்தா
            னெரிகதி ராழி வேந்தன்
    கைத்தலை வேலி னாற்குக்
            கடிவினை முடிவித் தானே.       1828

    விண்ணகம் புகழு நீர்மை
            விழுக்கலம் பரப்பி யார
    மண்ணக வளாகத் துள்ள
            மன்னரான் மண்ணு நீர்தந்
    தெண்ணகன் புகழி னாரை
            யெழிலொளி துளும்ப வாட்டிப்
    புண்ணகங் கமழும் வேலான்
            பொன்மழை பொழிவித் தானே.       1829

    தருமணன் மணிமுத் தாகத்
            தண்டுல மியற்றிக் கான்யாற்
    றருமணற் றருப்பை சூழ்ந்தாங்
            கதன்மிசை பரிதி பாய்த்திப்
    பெருமண மன்னற் கேற்ற
            சமிதையாற் பெருக்கப் பட்ட
    திருமணி யுருவிற் செந்தீச்
            செல்வத்திற் சிறந்த தன்றே.       1830

    தங்கழல் வேள்வி முற்றித்
            தையலக் காளை யோடும்
    பொங்கழல் வலஞ்செய் போழ்திற்
            குழைமுகம் பொறித்த தெண்ணீர்
    பைங்கழ லமரர் பண்டு
            படைத்தநீ ரமிழ்தப் புள்ளி
    அங்கெழு மதியந் தன்மே
            லரும்பியாங் கணிந்த வன்றே.       1831

    மன்னவ குமர னாங்கு
            மடந்தையைப் புணர்ந்து மாடத்
    தின்னகி லமளி மேலா
            லிளமுலைத் தடத்து மூழ்க
    அன்னவன் றாதை செங்கோ
            லாணைவே லருக்க கீர்த்தி
    தன்னமர் மடந்தைக் கேற்ற
            சயமர மறைவித் தானே.       1832

    சயமர மறைந்த நன்னாட்
            டமனிய மஞ்சம் பாவி
    இயமரந் துவைப்ப வேறி
            யிகன்மன்ன ரிருந்த போழ்தில்
    பயமலை மன்னன் பாவைக்
            கவரவர் பண்பு கூறிக்
    கயமலர் நெடுங்க ணாளோர்
            காரிகை காட்டி னாளே.       1833

    வரிகழன் மன்ன ரென்னு
            மணிநெடுங் குன்ற மெல்லாம்
    சுரிகுழன் மடந்தை யென்னுந்
            தோகையம் மஞ்ஞை நோக்கி
    எரிகதி ராழி வேந்தன்
            றிருமக னென்னுஞ் செம்பொன்
    விரிகதிர் விலங்கற் றிண்டோட்
            குவட்டினை விரும்பிற் றன்றே.       1834

    மாதராள் சுதாரை வாட்கண்
            மலரொடு மணிவண் டார்க்கும்
    போதுலாம் பிணையல் வீரன்
            பொன்வரை யகலஞ் சூழ
    ஏதிலா மன்னர் வாட
            விருபுடைக் கிளைஞ ரெல்லாம்
    காதலாற் களித்துச் செல்வக்
            கடிவினை முடிவித் தாரே.       1835

    கழல்வலம் புரிந்த நோன்றாட்
            கடல்வண்ணன் புதல்வன் காமர்
    குழல்வலம் புரிந்த கோதை
            குழைமுகம் வியர்ப்ப வேட்டான்
    அழல்வலம் புரிந்து சூழ்ந்தாங்
            கத்தொழின் முடித்த பின்னைத்
    தழல்வலம் புரிந்த வேலான்
            றடமுலை வாரி சார்ந்தான்.       1836

    மாதரஞ் சாய லாளு
            மணிவண்ணன் சிறுவன் றானும்
    ஓதநீ ரின்ப மென்னு
            மொலிகடற் றரங்க மூழ்கச்
    சோதியம் பெயரி னாளுஞ்
            சுடரவன் புதல்வன் றானுங்
    காதலிற் களித்துத் தங்கள்
            கனவரை யுலகஞ் சார்ந்தார்.       1837

    வேறு

    எரிவிசயங் கோவேந்தி மன்னரென்னும்
    அரிவிசயங் கெடநின்ற வாணை வேலான்
    திருவிசயன் றிருவன்ன செல்வி யோடும்
    மருவிசயங் கெழுகோயின் மலர்ந்து புக்கான்.       1838

    இனையனவா மிகுசெல்வ மிங்கு மாக்கிப்
    புனைமலர்வா னவர்போகம் புணர்க்கும் பெற்றி.
    வினையதனின் விளைவின்ன தென்று நாளும்
    நினைமின்மோ நெறிநின்று நீர்மை மிக்கீர்.       1839
    -------------

    11.துறவுச் சருக்கம் (1840- 2068)


    மன்னிய புகழி னான்றன்
            மகன்வழிச் சிறுவர் வாயுள்
    இன்னகை மழலை கேட்டாங்
            கினிதினி னிருந்த காலைப்
    மன்னுமெய்த் துறவிற் புக்கான்
            பயாபதி மன்னர் மன்னன்
    அன்னதன் பகுதி தன்னை
            யறியுமா பகர லுற்றேன்.       1840

    திவிட்டனும் அவன் மக்களும் பயாபதியை அணுகுதல்

    திருமகி ழலங்கன் மார்பிற்
            செங்கணான் வணங்கச் செல்வப்
    பெருமகிழ் வெய்தி வேந்தன்
            பிரசாபதி பெரிய வாட்கண்
    உரிமையோ டிருந்த போழ்தி
            னொலிகல னொலிப்ப வோடி
    அருமைகொ டிகிரி யாள்வான்
            சிறுவர்சென்ற ணுகி னாரே.       1841

    தவத்தின் பயனைப் பயாபதி உணர்தல்

    ஆங்கவ ரணைந்த போழ்தி
            னமிழ்துகொப் புளித்த போலும்
    தேங்கமழ் பவழச் செவ்வாய்
            முறுவனீர் பருகித் தேங்கி
    ஈங்கிவை யனைய தோற்றி்
            யின்பமே பருக நின்ற
    வீங்கிய தவத்திற் கின்னும்
            வித்திடற் பால தென்றான்.       1842

    நல்வினை

    அலகுடன் விளங்கு மம்பொற்
            குடைநிழ லரசர் சூழ
    உலகுடன் வணங்க வோடை
            யுயர்களிற் றெருத்த மேலால்
    பலகுடை பணியச் செல்லும்
            பண்பிது நமக்குத் தந்த
    நலனுடைத் தளிய நங்க
            ணல்வினைத் தெய்வ மன்றே.       1843

    மேலும் அவன் எண்ணுதல்

    தன்னையோ ரரச னாக்கித்
            தரங்கநீர் வளாக மாள்வித்
    தின்னுயி ராகிச் செல்லு
            நல்வினை யென்னு மின்ன
    முன்னுப காரி தன்னை
            முதல்கெட முயலுங் கீழ்மை
    நன்னரின் மாந்த ரன்றே
            நரகங்கட் கரச ராவார்.       1844

    சென்றநாள் பெயரு மேனுஞ்
            செல்வமுஞ் செருக்கு மாக்கி
    நின்றநா ணிலவு மேனு
            நெறிநின்று வருந்த வேண்டா
    இன்றுபோல் வாழ்து மன்றே
            யிப்படித் தன்றி யாங்கள்
    பொன்றுநாள் வருவ தாயின்
            வாழ்க்கையோர் பொருள தன்றே.       1845

    வாழ்வு நிலையற்றது

    எரிபுரை யெழில தாய
            விளந்தளி ரிரண்டு நாளின்
    மரகத வுருவ மெய்தி
            மற்றது பசலை கொண்டு
    சருகிலை யாகி வீழ்ந்த
            கரிந்துமண் ணாதல் கண்டும்
    வெருவிலர் வாழ்து மென்பார்
            வெளிற்றினை விலக்க லாமோ.       1846

    தவம் சிறந்தது எனத் துணிதல்

    பிறந்தனர் பிறந்து சாலப்
            பெருகினர் பெருகிப் பின்னை
    இறந்தன ரென்ப தல்லா
            லியாவரு மின்று காறு
    மறைந்துயிர் வாழா நின்றா
            ரில்லையால் வாழி நெஞ்சே
    சிறந்தது தவத்தின் மிக்க
            தின்மையே சிந்தி கண்டாய்.       1847

    உடலின் இழிவு

    பிறந்துநாம் புறஞ்செய் கின்ற
            பேதையிவ் வுடலந் தானும்
    இறந்தநாள் போல்வ தின்றா
            யிற்றையின் னாளை வேறாய்ப்
    பறைந்துநாம் பற்றப் பற்றப்
            பற்றுவிட் டகலு மாகிற்
    சிறந்தனர் பிறர்க கள்யாரே
            சிந்தைநீ சிந்தி யென்றான்.       1848

    தொகைமல ரலங்கல் சூடித்
            தூநறுஞ் கண்ண மப்பிப்
    புகைநனி கமழ வூட்டிப்
            புறஞ்செயப் பட்ட மேனி
    சிகையினோர் சிறுமுட் டீண்டச்
            சிதைந்தழுக் கொழுகு மாயி்
    நகைபெரி துடைத்து நாணா
            மிதனைநா மகிழ்த னெஞ்சே.       1849

    ஒழுகிய முடையு நீரு
            முதலகை யிகப்ப வூறும்
    அழுகலிவ் வள்ளல் யாக்கை
            யகம்புற மாயிற் றாயில்
    கழுகொடு கவருங் காக்கை
            கைத்தடி கொண்டு காத்தும்
    அழகுள சுழலு மன்னோ
            வாயிரச் சாதி மாதோ.       1850

    வல்வினை விளைத்த மாந்தர்
            மற்றதன் வித்து மாட்டிப்
    புல்வினை கான மண்டிப்
            புலியின்வாய்ப் பட்ட தேபோல்
    நல்வினை யினிதி னூட்டு
            நல்வினை முதல்கண் மாறி
    இல்வினை யின்பம் வெஃகி
            யிறுபவே யறிவி லாதார்.       1851

    பயாபதி தன் அமைச்சருடன் ஆராய்தல்

    இன்னன பலவுஞ் சிந்தித்
            திருந்தது மிகையென் றெண்ணி
    மன்னவ னுழையர் தம்மான்
            மந்திரத் தவரைக் கூவிப்
    பொன்னவிர் பவழத் திண்காற்
            புரிமணிக் கூட மெய்திக்
    தன்னம ரமைச்ச ரோடு
            தானமர்ந் திருந்து சொன்னான்.       1852

    நிலைத்த செல்வத்துக்கு வரும் ஊனங்கள் யாவை? என்று அவன் வினாதல்

    மலைபயில் களிநல் யானை
            மன்னரால் வவ்வ லின்றாய்க்
    கலைபயில் மகளிர் கண்போற்
            கள்வர்கைப் படாது நாளும்
    நிலையின செல்வக் கூனம்
            வருவன வுரைமி னென்றான்
    இலைபயின் மகரப் பைம்பூ
            ணெரிமணிக் கடகக் கையான்.       1853

    அமைச்சர் இறுத்த விடை

    ஆள்வினை மாட்சி யென்னு
            மிரண்டினு மரசு காத்துத்
    தோள்வினைக் களவு காவ
            லுள்வழித் துன்னல் செல்லா
    வாள்வினைத் தடக்கை வேந்தே
            வருவது மற்று முண்டோ
    கோள்வினை பயின்ற கூற்றங்
            குறுகல தாயி னென்றார்.       1854

    கூற்றத்தார் கொள்ளற்பாலன யாவை என்ற வினாவும் அதற்கு விடையும்

    கோள்வினை பயின்ற கூற்ற
            வரசனாற் கொள்ளற் பால
    கேள்வினை பயின்ற நூலிற்
            கிளர்ந்துநீ ருரைமி னென்ன
    வாள்வினை புரிந்த தோளான்
            மனத்ததை யுணர்ந்து மாதோ
    நாள்வினை புரிந்து நங்க
            ளுயிர்நிறை கொள்ளு மென்றார்.       1855

    கூற்றுவனை வெல்லும் உபாயம் யாது? என்று வினவல்

    சந்தினாற் றவிர்க்க லாமோ சார்பினா லொழிக்க லாமோ
    பந்தியா முன்னந் தாமே பகைத்திருந் துய்ய லாமோ
    வெந்திறற் காலன் றன்னை மேற்சென்று வெல்ல லாமோ
    உய்ந்துயிர் யாங்கள் வாழு முபாயநீ ருரைமி னென்றான்.       1856

    அமைச்சர் விடை

    பீழைமை பலவுஞ் செய்து பிணிப்படை பரப்பி வந்து
    வாழுயிர் வாரி வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணுங்
    கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி
    பாழியந் தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்களென்றார்.       1857

    அரசன் கூறுதல்

    ஆயினக் காலன் பாணி யாம்பிற வரச செல்வம்
    மேயினங் களித்தி யாங்கள் விழைந்துயிர்வாழும் வாழ்க்கை
    பாயிய வெழுந்த வேங்கை பாரிக்கு மளவிற் பைம்புன்
    மாயிருஞ் சுருளை மேயு மான்மறி போலு மென்றான்.       1858

    குரவர் கூற்று

    அருங்களி யானை வேந்தே யத்துணைப் பாணியுண்டோ
    கருங்களி மதநல்யானை வாய்புகு கவள மேபோல்
    பெருங்களி யாளன் காலன் பிறையெயி றணிந்துநின்ற
    இருங்களி யாணர் வாழ்விற் கிமைப்பிடை பெரிது கண்டாய்.       1859

    காலனைக் கடப்பதற்கு மார்க்கம் கூறுகழு என்று அரசன் அமைச்சரை வினாதல்

    இன்னுயி ரழியும் போழ்து மிறைவனுக் குறுதியல்லான்
    முன்னிய முகமன் மாட்டா முற்றிய வறிவி னாரை
    மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழுயிர் வவ்வுங் காலன்
    தன்னைநா மிகந்து சேருஞ் சரண்பிறி துரைமி னென்றான்.       1860

    முனிவரைக் கேட்குமாறு அமைச்சர் கூறல்

    இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற் கிறுதி செய்யும்
    கனிபுரை கிளவி நீக்கிக் கண்ணனார் கருத்துட் கொண்டு
    துனிவன நினையுங் காலன் றுணிவன துணியுஞ் சூட்சி
    முனிவரை வணங்கிக் கேட்டு முயறுமோ வடிக ளென்றார்.       1861

    குருகயா வுயிர்க்குஞ் சோலைக் குளிரணிப் பழன நாட
    முருகயா வுயிர்க்கும் பூவார் முறிமிடை படலை மாலைத்
    திருவயா வுயிர்க்கு மார்பற் செறிதவர் சரண மூலத்
    தருகயா வுயிர்ப்பி னல்லா லரண்பிறி தாவ துண்டோ.       1862

    பயாபதி துயர்நீங்கிய மனத்தனாதல்

    எரிகின்ற சுடரி னெய்பெய் திடுதிரி தூண்டி யாங்கு
    விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் விசோதி யன்னாற்
    பரிகின்ற வுரிமை வல்ல படரொழி மனத்த னானான்
    சொரிகின்ற மதுவின் மாரித் துவலையி னனைந்த தாரான்.       1863

    கரும்பணி மொழியி னார்தங்
            கருந்தடங் கண்ணும் வண்டும்
    சுரும்பணை முலையி னாருந்
            தொடையலுந் துதைந்த மார்பன்
    அரும்பணி யசோக நீழ
            லடிகள தணிபொற் கோயில்
    விரும்பணி விழவு சாற்றி
            வியன்முர சறைக வென்றான்.       1864

    அருகன் விழா

    ஒளியவ னுலகம் தன்னுட்
            கரந்தவ னுயிர்க ளுய்யும்
    அளியவ னருள்செய் யாழி
            யுடையவ னடிமை செய்வார்க்
    கெளியவ னெந்தை பெம்மாற்
            கியற்றிய விழவின் மிக்க
    களியவ ரென்ப செம்பொற்
            கதிர்முடி சூடு வாரே.       1865

    அருள்புரி யழலஞ் சோதி
            யாழியா னாதி யில்லான்
    மருள்புரி வினைகட் கென்று
            மறுதலை யாய வாமன்
    இருள்புரி யுலகஞ் சேரா
            வியனெறி பயந்த பெம்மான்
    பொருள்புரி விழவு காண்பார்
            புண்ணிய வுலகங் காண்பார்.       1866

    கண்ணிய வறிவன் செல்வ
            விழவினுட் களித்த மாந்தர்
    புண்ணியத் துகள்க ளென்னும்
            பொற்சுண்ணம் புதைய வாடிப்
    பண்ணியன் மொழியி னார்தங்
            கருங்கண்ணாற் பருகு நீர்மை
    விண்ணிய லுருவ மெய்தி
            விளங்கிவீற் றிருப்ப ரன்றே.       1867

    நகரம் விழவணி காண்டல்

    எல்லைசான் முரசிற் சாற்றி
            யின்னன வறைத லோடும்
    மல்லன்மா நகரங் கேட்டே
            வானுல கிழிந்த தேபோன்
    முல்லைவான் கண்ணி சூடி
            முகிழ்நகைக் கலங்க டாங்கிச்
    செல்லும்வாய் தோறுஞ் செல்வ
            விழவணி தேர்த்த தன்றே.       1868

    இன்னிசை முரசங் கேட்டே
            மெய்பெரி தினிய கேட்டா
    மன்னிய நங்கள் வாணாள்
            வாழ்கநம் மிறைவ னென்னாப்
    பொன்னியன் மலருஞ் சாந்துஞ்
            சுண்ணமும் புகையும் பொங்கத்
    துன்னிய நகர மாந்தர்
            துறக்கம்பெற் றவர்க ளொத்தார்.       1869

    திருவிழா நடைபெறல்
    வேறு

    பூரண மணிக்குட நிரைத்த பொன்னணி
    தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி
    வாரணி முரசொடு வளைக ளார்த்தரோ
    காரணி கடலொலி கைத விர்த்ததே.       1870

    விரையினான் மெழுகிய வீதி வாயெலாம்
    திரையினார் செழுமணி முத்தஞ் சிந்தினார் யினா
    லென்னையவ் வொளிகொண் மாநகர்
    புரையினாற் பொன்னுல கிழிந்த தொத்ததே.       1871

    அகிற்புகை மாளிகைகளைச் சூழ்தல்

    கழுமிய காழகி லாவி காமரு
    செழுமணி மாளிகைச் சென்னி சூழ்வது
    விழுமணி விளங்கிய விலங்கன் மீமிசைத்
    தழுவிய விளமழை தவழ்வ தொத்ததே.       1872

    அந்தணர்

    வெண்டுகி லுடுத்துவெண் சாந்து மெய்வழித்
    தொண்டிரண் மல்லிகை யொலியல் சூடினார்
    வண்டிரண் மணிமுத்தும் வயிரச் சாதியும்
    கொண்டிய லணியொடு கோலந் தாங்கினார்.       1873

    வெண்மருப்பி ரட்டைய வேழ மீமிசைக்
    கண்மருட்டு றுப்பன கமலப் பூப்பலி்
    விண்மருட்டு றுப்பன வேந்தி வேதியர்
    மண்மருட்டு றுப்பதோர் வகையின் மன்னினார்.       1874

    வேந்தர்

    செம்மலர்க் கண்ணியர் செம்பொற் றாரினர்
    கொய்ம்மலர்க் குங்குமங் குழைந்த சாந்தினர்
    கைம்மலர் மணிநகைக் கடகம் வில்லிட
    மெய்ம்மல ரணியினர் வேந்த ராயினார்.       1875

    செய்ந்நிறக் குவளைகை செய்த சூட்டினர்
    அந்நிறந் தழுவிய வரத்த வாடையர்
    மெய்ந்நிறஞ் செய்யன வேழ மீமிசைக்
    கைந்நிற மலரொடு கலந்து தோன்றினார்.       1876

    வணிகர்

    பொன்மலர்க் கண்ணியர் பொன்செய் சுண்ணமொய்
    மின்மலர் மேனிமேல் விளங்க வப்பினார்
    மென்மல ரணிநகை மிளிருங் கோலமோ
    டின்மல ரிருநிதிக் கிழவரீண்டினார்.       1877

    போரொளிப் பீதக வுடையர் பைம்பொனால்
    ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி
    போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர்
    வாரணி வனமுலை யவரொ டென்பவே.       1878

    அரசன் விழாவிற்கெழுதல்

    நகரமாங் கெழுந்தபி னரலுஞ் சங்கொடு்
    முகுரவாய் மணிமுர சதிரு மூரிநீர்
    மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
    சிகரமால் யானைமேற் செல்வன் றோன்றினான்.       1879

    குதிரைகள் பல

    வேல்புரை கண்ணியர் கவரி வீசவெண்
    பால்புரை பவழக்காற் குடையி னீழலான்
    மால்புரை கருங்கடல் வளாகங் காவலன்
    கால்புரை புரவியங் கடலுட் தோன்றினான்.       1880

    களிறு ஈட்டம்

    புதமெழு புரவிகள் புடைப ரந்திடை
    மதமழை பொழிவன வயிரக் கோட்டன
    கதமழ லெழவுமிழ் தகைய காணில
    விதமெழு களிறுகள் பலமி டைந்தவே.       1881

    பிற விழாச் செய்திகள்

    ஆர்த்தன பல்லிய மதிர்ந்த குஞ்சரம்
    தேர்த்தன தேர்க்குழாந் திசைத்த பல்லுயி்ர்
    போர்த்தன கொடிமிடை பொழிந்த பூமழை
    வேர்த்தன விளிந்தன வினைக ளென்பவே.       1882

    விரிந்துயர் வெள்ளிவெண் குடையின் மாடெலாம்
    திருந்திய சாமரை திசைக டேர்த்தன
    பரந்தெழு பாற்கடற் பரவை வெண்டிரை
    நிரைந்தெழு நுரையொடு நிரைத்த வொத்தவே.       1883

    பீலியந் தழைபிணித் திட்ட வட்டமு
    மாலியங் கசைப்பன வால வட்டமு
    மேலியங் கொளியவன் மறைய வேய்ந்தரோ
    காலியங் கிடவிடங் காண்கி லாரரோ.       1884

    சந்தனஞ் செறிந்தன செப்புந் தண்புகைக்
    கந்தமே நிறைந்தன கரண்ட கங்களும்
    கொந்துமொய்ம் மலர்நிறை கோடி கங்களும்
    உந்தியொன் றொன்றினை யூன்று கின்றவே.       1885

    நிரந்தன பூப்பலி நிரைகொண் மாரியாய்ச்
    சொரிந்தன சுரும்பிவர் துணர்கொள் பூமழை
    பரந்தன மங்கலப் பதாகை யவ்வழிக்
    கரந்தன கருவினைக் குழாங்க ளென்பவே.       1886

    பாடுவார் பலாண்டிசை பரவு வார்பரந்
    தாடுவா ரறிவனைப் பரவி யார்களும்
    கூடுவார் குழுவுமெய் குழுமி யெங்கணும்
    ஊடுதான் வியலிட முள்ள தில்லையே.       1887

    பயாபதியின் செயல்

    நொவ்வகை வினைப்பகை யகற்றி நூனெறி
    செவ்வகை மொழிந்தவன் செல்வச் சேவடிக்
    கிவ்வகை யெழுவகை விழவு செல்வுழி
    நெய்வகை வேலவ னிலைமை கேட்கவே.       1888

    சினகரம் சேர்தல்

    நீர்ப்பலி விரைப்பலி நிரந்து தேனிமிர்
    பூப்பலி யெனவிவை நிரைத்துப் புண்ணியன்
    சீர்ப்பொலி சினகரஞ் சென்று சேர்ந்தனன்
    ஆர்ப்பொலி தழுவிய வரவத் தானையான்.       1889

    நகர் வலம்

    கோடுயர் கோபுர வாய்தல் சேர்ந்துதன்
    நீடுயர் மழகளி றிருவித் தானிழிந்
    தேடுய ரினமல ரேந்தி யீர்ம்பொழின்
    மாடுயர் வளநகர் வலங்கொண் டெய்தினான்.       1890

    அருகக் கடவுள் தரிசனம்

    மன்னவ னணைதலு மலர்ந்த வாணிலாப்
    பொன்னணி வளநக ரகத்துப் பொங்கரி
    துன்னிய வணைமிசைத் துளங்குஞ் சோதியோ
    டன்னணம சோகமர்ந் தடிக டோன்றினார்.       1891

    ஆசனம்

    குஞ்சரத் தடக்கைய குழைச் சென்னிய
    மஞ்சிவர் தோற்றத்து மகர வாயொடு
    செஞ்சுடர் மணிநிரை யழுத்திச் செம்பொனால்
    அஞ்சுட ருமிழ்வதவ் வணையின் வண்ணமே.       1892

    ஏழிய லுலகிலுள்ளி ருளுங் கையகன்
    றாழியல் வினைகேளா டவிய வாயிரம்
    தாழொளி சுடரவன் றன்னைக் காணவோர்
    சூழொளி மண்டிலஞ் சுடரத் தோன்றுமே.       1893

    கவரி

    கழுமிய பானிலாக் கதிரின் கற்றைகள்
    செழுமணித் திரண்மிசைச் செறிந்த போல்வன
    எழுவளர்த் தனையதோ ளியக்க ரேந்தின
    தொழுதகை யுருவின கவரி தோன்றுமே.       1894

    குடை

    பருகலாம் பானிலாப் பரந்த மாமணி
    அருகெலா மணிந்தக டம்பொ னார்ந்துமேற்
    பெருகலாஞ் சுடரொளி பிறங்கி நின்றதம்
    முருகுலாம் பிண்டியான் குடையின் மும்மையே.       1895

    அழல்வளர்த் தனையன தழையு மவ்வழல்
    தழல்வளர்த் தனையன மலருந் தாமரைப்
    பொழில்வளர் வளையமும் பொதுளி வண்டினம்
    குழைவள ரசோகின்மேற் குளிர்செய் கின்றவே.       1896

    மாமழைக் கண்ணியர் மருங்கு போல்வன
    தூமழை வளர்கொடி துவன்றிப் பத்திகள்
    பாமழை யுருவுகள் பலவுந் தோன்றவே
    பூமழை பொன்னிலம் புதைய வீழ்ந்தவே.       1897

    வானவர் வாத்தியவொலி

    மொய்த்திலங் கலர்மழை முருகு லாவிய
    மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
    கைத்தலம் பரவிய காம ரின்னியம்
    எத்திசை மருங்கினு மிரங்கித் தோன்றுமே.       1898

    கின்னரர்

    மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப்
    பைஞ்ஞலம் பருகிய பரும வல்குலார்
    மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம்
    கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே.       1899

    எரிமணி நெடுமுடி யிமைப்பிற் செங்கணப்
    புரிமணி வண்ணனும் பொன்செ யாழியத்
    திருமணி வண்ணனுந் தேவி மார்களும்
    அருமணி வண்ணனுக் கருகு தோன்றினார்.       1900

    ஒண்டமர் மணிகளு மொளிர்பொற் சாதியும்
    கொண்டன ரியற்றிய கோலச் செய்கையால்
    கண்டவர் கண்கவர் நகரங் காண்டலும்
    விண்டுதிர் வினையினன் வேந்த னாயினான்.       1901

    பணியொடு நறுவிரை மெழுகிப் பன்மலர்
    அணியுடை யனையன பலவுஞ் செய்தபின்
    மணிமுடி நிலமுற வணங்கி வாமன்மேற்
    றுணிபடு வினையினன் றுதிதொ டங்கினான்.       1902

    வேறு

    மூவடிவி னாலிரண்டு சூழ் சுடரு நாண
            முழுதுலக மூடியெழின் முளைவயிர நாற்றித்
    தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
            சுடரோ யுன்னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்
    சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச்
            சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப்
    பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து
            புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே.       1903

    கருமாலை வெவ்வினைகள் காறளர நூறிக்
            கடையிலா வொண்ஞானக் கதிர்விரித்தா யென்றும்
    அருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்றும்
            அடியேமுன் னடிபரவு மாறறிவ தல்லால்
    திருமாலே தேனாரு மரவிந்த மேந்துந்
            திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ
    பெருமானே நின்பெருமை நன்குணர மாட்டார்
            பிணங்குவார் தம்மைவினைப் பிணக்கொழிக்க லாமே.       1904

    ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
            உலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
    அளியார யுலகநீ யாள்கின்றா யென்கோ
            அமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
    விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
            நீவிரித்த வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
    தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
            தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்க லாமே.       1905

    களியானை நாற்கோட்ட தொன்றுடைய செல்வன்
            கண்ணொரா யிரமுடையான் கண்விளக்க மெய்தும்
    ஒளியானை யூழி முத லானானை யோங்கி
            உலகளவு மாகியுயிர் தமக்குறுகண் செய்யா
    அளியானை யாரழலஞ் சோதிவாய் சூழ்ந்த
            அருளாழி யானையிணை யடிபரவு வார்கட்
    கெளியானை யெந்தை பெரு மானையே யல்லால்
            இறையாக வீங்கொருவ ரெண்ணுமா றென்னே.       1906

    தெருளாமை யால் வினவற் பாலதொன் றுண்டு
            திருவடிகள் செம்பொனா ரரவிந்த மேந்த
    இருளாழி யேழுலகுஞ் சூழொளியின் மூழ்க
            இமையாத செங் கண்ணி னிமையோர்வந் தேத்த
    உருளாழி யானு மொளி மணிமுடிமேற் கைவைத்
            தொருபாலில் வரவுலக நின்னுழைய தாக
    அருளாழி முன்செல்லப் பின்செல்வ தென்னோ
            அடிப்படா தாய்நின்ற வான்ஞால முண்டோ.       1907

    வானோர்த முலகுடைய மானீல வண்ணன்
            மகிழ்ந்திறைஞ்சு மாலையணி மணிமுடிமேல் வைகா
    ஊனாரு மறவாழி யோடைமால் யானை
            உடையான்ற னொளிமுடியின் மேலுரையோ நிற்கத்
    தேனாரு மரவிந்தஞ் சென்றேந்தும் போழ்து
            திருவடிகள் செந்தோடு தீண்டாவே யாகில்
    ஆனாவிம் மூவுலகு மாளுடைய பெம்மான்
            அடியுறுவா ரின்மைதா மறிவுண்ட தன்றே.       1908

    தேனருளி மந்தாரச் செந்தாமந் தாழ்ந்து
            திரளரைய செம்பவளம் வம்பாக வூறி
    வானருளி மாணிக்கச் செங்கதிர்கள் வீசி
            மதிமருட்டும் வெண்குடையோர் மூன்றுடைய வாமன்
    யானருள வேண்டியடி யிணைபணியும் போழ்து
            இமையவர்கோ னாயிரச் செங்கணான் வந்து
    தானருளு மாறென்று தாள்பணியும் போழ்துந்
            தகையொன்ற தேலிறைமை தக்கதே யன்றே.       1909

    விண்டாங்கு வெவ்வினை வெரூஉவுதிர நூறி
            விரிகின்ற மெய்ஞ்ஞானச் சுடர் விளக்கு மாட்டிக்
    கண்டார்க ணின்னிலைமை கண்டொழுக யானின்
            கதிர்மயங்கு சோதியாற் கண்விளக்கப் பட்டுத்
    தண்டாஅ மரைமலரின்மே னடந்தா யென்றுந்
            தமனீயப் பொன்னணையின் மேலமர்ந்தா யென்றும்
    வண்டார சோகி னிழல் வாயமர்ந்தா யென்றும்
            வாழ்த்தினால் வாராயோ வானவர்தங்கோவே.       1910

    கருவார்ந்த பொருணிகழ்வுங் காலங்கண் மூன்றுங்
            கடையிலா நன்ஞானக் கதிரகத்த வாகி
    ஒருவாதிங் கவ்வொளியி னின்னுள்ள வாகில்
            உலகெல்லா நின்னுளத் தேயொளிக்க வேண்டா
    திருவார்ந்த தண்மார்ப தேவாதி தேவ
            திரளரைய செந்தளி ரசோகமர்ந்த செல்வ
    வருவாரும் வையகமு நீயும்வே றாகி
            மணிமேனி மாலே மயக்குவதிங் கென்னோ.       1911

    செங்க ணெடுமாலே செறிந்திலங்கு சோதித்
            திருமுயங்கு மூர்த்தியாய் செய்யதா மரையின்
    அங்கணடி வைத்தருளு மாதியா யாழி
            அறவரசே யென்றுநின் னடிபணிவ தல்லால்
    எங்க ணிட ரகலுமா றிந்நிலைமை யெய்தி
            இருளுலக நீக்குமரு டருகநீ யென்று
    வெங்கணிரு வினையையற வென்றாய்முன்னின்று
            விண்ணப்பஞ் செய்யும் விழுத்தகைமை யுண்டோ.       1912

    வேறு

    என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச்
    சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து
    வென்றவன் கோயில் வலங்கொண்டு மீண்டுமொர்
    பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான்.       1913

    சாரணர்

    ஆங்கொர் முனிவ னருந்தவப் பல்குணந்
    தாங்கிய மாமலை யன்ன தகையவன்
    பூங்கமழ் சேவடிப் போதுதன் பொன்முடி
    தாங்கிய தாம நுதியாற் றுடைத்தான்.       1914

    ஆற்றி லமைந்த வருந்தவத் தால்வினை
    ஊற்றுச் செறித்த வொருபெயர் மாதவன்
    மாற்றரு மந்திர வாய்மொழி யாயிடை
    ஏற்றன கொண்டாங் கிறைவ னிருந்தான்.       1915

    அமைச்சர் வேண்டுகோள்

    வணங்கி மணிமுடி மன்ன னிருப்ப
    மணங்கமழ் கண்ணியர் மந்திர மாந்தர்
    அணங்கு மறவமிழ் தூட்டி யடிகள்
    பிணங்கும் பிறவிகள் பேர்த்துய்மி னென்றார்.       1916

    முனிவன் கூற்று

    வன்ன மணிமுடி மன்ன னிருந்திட
    இன்னியற் செல்வ மெனைப்பல வெய்திய
    மன்ன னறியுந் திருவற மாண்பினை
    என்னை வினவிய தென்னைகோ லென்றான்.       1917

    அமைச்சர் கூற்று

    அடிக ளடிசி லமைந்த தயில்வான்
    முடிய முயலு முறைமை யறியான்
    நெடிதின துவறு நீர்மையு மோரான்
    வடிவமர் செல்வன் வகையு மதுவே.       1918

    முனிவன் செயல்

    மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
    அந்தரம் வாழு மமரர் வழிபடும்
    தந்திர ஞான்ற தவத்திற் கரசனும்
    இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான்.       1919

    முனிவர் உபதேசம்

    கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின்
    விதிசெய் வினையும் வினைவெல் வகையு
    மதியவர் காமுறும் வீட்டது மாண்பும்
    அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான்.       1920

    ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள
    வீடி லொருவன் விசிறும் வளையமும்
    ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர்
    நாடுங் கதியவை நான்குள கண்டாய்.       1921

    நரகர் விலங்கு மனிதர்நற் றேவர்
    விரவி னவர்தம் விகற்ப முரைப்பிற்
    பெருகு முரையென்று பெய்ம்மலர்த் தாரோன்
    உருக வொருவா றுறுவ னுரைத்தான்.       1922

    நரகர் கதி

    கீழா நரகங் கிளத்தும் படலங்கள்
    ஏழா யிருபத் திரட்டியோ டொன்பது
    போழா மவற்றுள் ளவர்கள் புகலிடம்
    பாழா மிலக்கமெண் பஃதுட னான்கே.       1923

    நரகங்களின் பெயர்

    இருளி னிருளு மிருளும் புகையும்
    அருளி லளறு மணலும் பரலும்
    மருளின் மணியு மெனவிப் பெயர
    பொருளி னரகங்கள் போதரக் கொண்ணீ.       1924

    ஆங்க ணரக மடைந்தார் படுதுயர்
    ஈங்க ணுரைப்பி னெமக்கும் பனிவரும்
    வாங்கி யவற்றின் முதலதன் வார்த்தைகள்
    பாங்கின் மொழிவன் பனிமலர்த் தாரோய்.       1925

    பத்தடம் பத்தொடு மூன்றா மவற்றிடை
    ஒத்த வுறையு ளிலக்கமொர் முப்பது
    கொத்தெரி வெம்பவர் கும்பிக் குழியவை
    இத்துணை யென்பதொ ரெல்லை யிலவே.       1926

    பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும்
    தாழிப் பதலையும் போலுந் தகையன
    ஆழப் பரந்த வழுக லளறவை
    பீழைப் பதகர் பிறக்கு மிடமே.       1927

    வேதனைகள்

    குழிபடு கும்பிக் கருவாய் பெருகி
    அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால்
    வழுவி யனல்படு பாறைக் கண் வைகிப்
    புழுவி னுருள்வ பொரிவ பொடிவ.       1928

    புழுவி னுருண்டு பொடிந்தவர் பொங்கி
    எழுவர் புகையைந் தெழுந்தபின் மீட்டும்
    வழுவினர் வீழ்வர் மறிந்துமவ் வாறே
    ஒழிவிலா வேதனை யுள்ளள வெல்லாம்.       1929

    அந்தோ வறனே வெனவழைப் பார்களை
    வந்தோ மெனச்சொல்லி வாங்குபவ ரில்லை
    வெந்தே விளிந்து மொழியார் விழுத்துயர்
    முந்தே வினைய முயன்றனர் புக்கார்.       1930

    அன்னணம் வேதனை யெய்து மவர்களைத்
    துன்னி யுளர்சிலர் தூர்த்தத் தொழிலவர்
    முன்னதிற் செய்த வினையின் முறைபல
    இன்னண மெய்துமி னென்றிடர் செய்வார்.       1931

    தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை
    அங்கு மகிழ்ந்தா ளவளிவள் காணெனச்
    செங்கன லேயென வெம்பிய செம்பினில்
    பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார்.       1932

    கொள்ளு மிவையெனக் கூட்டில் வளர்த்ததம்
    வள்ளுகிர்ப் பேழ்வாய் ஞமலி வடிவுகள்
    அள்ளிக் கதுவ வலறி யயலது
    முள்ளிற் புனைமர மேற முயல்வார்.       1933

    மேயப் பருவம் விரும்பிய மீனினம்
    காயப் பெருந்தடி காண்மி னிவையெனத்
    தீயைப் பருகிய செப்புத் திரளவை
    வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார்.       1934

    மறிப்பல கொன்று மடப்பிணை வீழ்த்துங்
    கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை
    உறுப்புறுப் பாக வரிந்தரிந் தூட்டி
    ஒறுப்பர் சிலரை யவரு மொருபால்.       1935

    இடைப்பல சொல்லி யெளியவர் தம்மை
    உடைப்பொருள் வெஃகி யொறுத்த பயத்தான்
    முடைப்பொலி மேனியை முண்மத் திகையாற்
    புடைப்ப நடுங்கிப் புரள்வ ரொருசார்.       1936

    வெறுப்பன வேசெய்து மேலா யவரைக்
    குறிப்பல சொல்லிய நாவைக் கொடிற்றால்
    பறிப்பர் பரிய வயிரமுட் கொண்டு
    செறிப்ப ருகிர்வழி யேறச் சிலரே.       1937

    பொரிப்பர் சிறைசெய்து பொங்கெரி மாட்டிக்
    கரிப்பர் கனல்படு காரக லேற்றித்
    திரிப்பர் பலரையுஞ் செக்குர லுட்பெய்
    துரிப்ப ருடலை யவரு மொருபால்.       1938

    பழுப்பல பற்றிப் பறிப்பர் பதைப்ப
    மழுப்பல கொண்டவர் மார்பம் பிளப்பர்
    கழுப்பல வேற்றி யகைப்பர் கடிதே
    விழுப்பெரும் பூணோய் வினையின் விளைவே.       1939

    பறிப்பர் பலரவர் கைகளைப் பற்றிச்
    செறிப்பர் விரல்களைச் சீவுவர் மேனி
    நெறிப்ப ரெலும்பு நிரந்துடன் வீழ
    மறிப்பர் மலைமிசை மற்று மொருசார்.       1940

    சாவ நலிந்திடுந் தண்ணீர்ப் பிணிபெரி(து)
    ஆவென் றலறு மவரையரு நஞ்சின்
    வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு
    நாவு மழுக நரல்வ ரொருசார்.       1941

    அழலிவை யாற்றோ மெனவழன் றோடி
    நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால்
    தழல்வளி தாமே தலைவழி சிந்தக்
    கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார்.       1942

    முல்லை முகைமலர்த் தாரோய் முதற்புரை
    அல்ல லெனைப்பல வாயிர கோடிகள்
    எல்லையி றுன்ப மிவற்றி னிருமடி
    புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை தோறும்.       1943

    விளிவி றுயரொடு மேற்பொங்கி வீழும்
    அளவு மவர்கண் முறையும் பிறவும்
    அளவில் கீழ்க்கீ ழிரட்டி யறைந்தேன்
    உளரொளி ஞானமஃ தொன்று மொழித்தே.       1944

    பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும்
    செய்யாக் குழிகளுஞ் சீநீர்த் தடங்களும்
    நையா நரக ரிடமிவை நாறினும்
    உய்யா பிறவுயி ரோசனைக் கண்ணே.       1945

    எழுவின் முழமூன் றறுவிர லென்ப
    வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார்
    ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன்
    முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே.       1946

    ஆண்டுச் சிறுமை பதினா யிரமுள
    நீண்டவர் வாழ்நா ணிறைவு கடலெல்லை
    ஈண்டிதன் கீழ்க்கீழ்ப் பெருகிவரு மெங்கும்
    வேண்டிற் சிறுமைதம் மேலோர் நிறைவே.       1947

    மூன்று மொரேழு மொழிபஃதும் பத்தினோடே
    ஏன்ற நல்லேழு மிருபத் திரண்டுமென்
    றான்ற வலைகடன் முப்பத்து மூன்றுமென்
    றூன்றின கீழ்க்கீ ழுயர்ந்தன வாழ்நாள்.       1948

    முடைகொண் முழுச்செவி மொண்பற் பதகர்
    உடையந் தலியிருப் புண்பது நஞ்சே
    புடையவர் காணிய போர்நனி மூட்ட
    மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார்.       1949

    வேவா ரழலுள் விளியா ரளற்றினுள்
    ஓவார் புகையு ளுகையா வுழல்பவர்
    ஆவா வளிய நரகர் படுதுயர்
    ஏவார் சிலையா யிரங்குந் தகைத்தே.       1950

    ஆங்குண் டெனப்படு மாழ்துயர் வீழ்பவர்
    தேங்கொண்ட பைந்தார்த் திறன்மன்ன யாரெனில்
    தாங்கொண்ட தார மறுத்துப் பிறன்வரைப்
    பூங்கொண்டை மாரைப் புணரு மவரும்.       1951

    உள்ளங் கொடியா ருயிர்க்கொலை காதலர்
    வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள்
    கொள்ளுங் கொடுமைக் குணத்தின் மனித்தரும்
    நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார்.       1952

    நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத்
    தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும்
    புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத்
    தல்லறஞ் செய்யு மறிவில் லவரும்.       1953

    தெண்டிரை வாழுந் திமிலுங் கலங்களுங்
    கொண்டிரை யாகவுயிர் கொல்லுஞ் சாதியும்
    கண்டிடு காதனை நின்னாற் செயப்படும்
    தண்டிக டம்மொடுஞ் சார்த்தினை கொண்ணீ.       1954

    ஆறா நரக வழலினு ளாழ்பவர்
    தேறார் திருவறந் தேறினு நல்வத
    மேறார் சிலர்நனி யேறினு நில்லலர்
    வேறா யினிச்சொல்ல வேண்டுவ துண்டோ.       1955

    விலங்குகதித்துன்பம்

    விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும்
    உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி
    புலங்கொண்ட வைம்பொறி யீறாப் புணர்ந்த
    நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ.       1956

    நின்று வருந்து நிகோதப் பிறவியுள்
    ஒன்றறி வெய்தி யுழக்கு முயிர்பல
    அன்றிச் சிறிதுண் டவற்றினு மவ்வழிச்
    சென்று பெயர்வ சிலவுள கண்டாய்.       1957

    ஓரறி வாகி யுழக்கு முயிர்களைப்
    பேரறி வாரும் பிறரில்லை யின்னவை
    யாரறி வாரழி யுந்திறம் யாதெனில்
    கூரறி வில்லவர் கொன்றிடு கின்றார்.       1958

    உயிர்தொகை யாறனு ளொன்றொழித் தேனைப்
    பெயர்த்தொகை பெற்ற பிறவிக டம்மைப்
    பயிர்த்தலு மின்றி யுலகம் பதைப்பச்
    செயிர்த்தவர் போலச் செகுத்திடுங் கண்டாய்.       1959

    ஏனை யொழிந்த வியங்குநற் சாதிகள்
    ஆனை முதலா வளிய விலங்குகள்
    மானுடர் பற்றி வலிந்து நலிந்திட
    ஊனெய் யுருகு முழக்கு மொருபால்.       1960

    ஊர்ந்து முழுது முறுபார மேந்தியும்
    சாய்ந்த விலங்குக டாளுடைந் தாழ்தர
    வீர்ந்து மறுத்து மிறைச்சி யுவப்பவர்
    தேர்ந்து செகுப்பவுந் தேயுஞ் சிலவே.       1961

    தடிவிலை வாழ்நர் தடிந்திடப் பட்டு
    முடிவிலை வாழ்நர் முருக்க முரிந்தும்
    கொடுவி லெயினர்கள் கொல்லக் குறைந்தும்
    விடலில வேதனை வேந்த விலங்கே.       1962

    அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும்
    நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு
    வந்தோ மெனநின்ற மாண்புடை யார்களும்
    உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார்.       1963

    முனிவரே அறிபவை

    கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி
    துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர்
    என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி்
    மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ.       1964

    வலிய முழங்கினு நாறினும் வட்கி
    நலியு மிவை யென நையு மொருபால்
    பலிபெறு தெய்வங்கண் மேலிட்டுப் பாற்றும்
    கலியவர் கையுட் கழியு மொருபால்.       1965

    கண்களி னோக்கியுங் காதலி னுள்ளியும்
    மண்க ளிடைவிட்டு வைகியும் புல்லியும்
    தண்கமழ் தார்மன்ன தாயர் வளர்ப்புழி
    எண்களை யின்றிட ரெய்து மொருபால்.       1966

    இன்னன துன்பமோ டிவ்விலங் காகுநர்
    என்னவ ரென்னி னிவைநனி கேளினி
    மன்னிய மாதவ மேற்கொண்டு மாயங்கள்
    பின்னை முயல்வார் பிறப்பு மதுவே.       1967

    பொருளிடை மாயம் புணர்த்தும் பிறரை
    மருளிக ளாக மயக்கு மவரும்
    இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா
    அருளி லவரு மவைநனி யாவார்.       1968

    பற்றொடு பற்றி முனிந்தார் பலபல
    செற்ற நவின்றார் செறுப்பொடு சென்றவர்
    சுற்ற மழிக்குந் துவர்ப்பகை துன்னினர்
    மற்றிவ் விலங்கெய்து மன்னுயிர் மன்னா.       1969

    இல்லையுயி ரென்று மில்லைபிறப் பென்று
    நல்லன தீயன நாடி லிலவென்றும்
    பல்லன சொல்லிப் படுத்துண்ணும் பாவிகள்
    நில்லாது செல்வர் நிகோத கதியே.       1970

    மக்கட்கதி

    மாக மழைவண்கை மன்னவ மக்களும்
    மேக கதியின ரநேக விகற்பினர்
    சேகர் மிலைச்சர் மனிதர் கடிப்பியர்
    போக மனித ரெனப்பொருட் பட்டார்.       1971

    சேகர்

    பத்து வகைய பரதவி ரேவதத்
    தத்தகு கால விழிவி னகத்தவர்
    சித்தந் தெளிவிலர் சீல மடைவிலர்
    செத்த வறிவினர் சேக ரவரே.       1972

    மிலேச்சர்

    தீவினுள் வாழுங் குமானுடர் தேசத்து
    மேவி யுறையு மிலைச்ச ரெனப்பெயர்
    ஆவ ரவருண் மிலைச்ச ரவரையும்
    வீவருந் தாரோய் விலங்கினுள் வைப்பாம்.       1973

    வாலு நெடியர் வளைந்த வெயிற்றினர்
    காலு மொரோவொன் றுடையர் கலையிலர்
    நாலுஞ் செவியர் நவைசெய் மருப்பினர்
    சீல மடைவிலர் தீவினுள் வாழ்வார்.       1974

    மக்கட் பிறப்பெனு மாத்திர மல்லது
    மிக்க வெளிற்று விலங்குக ளேயவர்
    நக்க வுருவினர் நாணா வொழுக்கினர்
    தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார்.       1975

    பூவும் பழனு நுகர்ந்து பொழின்மரம்
    மேவி யுறையு மிலைச்சர் மிகப்பலர்
    ஓவலர் வாழ்வ தொருபளி தோபமென்
    றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ.       1976

    மனிதர்

    தேச மிலைச்சரிற் சேர்வுடை யாரவர்
    மாசின் மனிதர் வடிவின ராயினும்
    கூசின் மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர்
    நீச ரவரையு நீரி னிழிப்பாம்.       1977

    கூடன் மிலைச்சர் குமானுட ரென்றிவர்
    ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில்
    கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை
    நாடினர் கொள்ளா நலமி லவரும்.       1978

    அடங்கா மரபி னவர்கட் கடங்கார்
    விடங்கார் மணந்த விடக்கும் பிறவும்
    உடங்காய்ந் துணக்கொடுப் பாரு முயர்ந்தோர்
    தொடங்கா வினைக டொடங்கு மவரும்.       1979

    அன்ன பிறவியு ளாங்கவ ராபவர்
    இன்னுஞ் சிலவ ரிழிகதிப் பாற்பட்டுத்
    துன்னிய போழ்தே சுருங்கி யொழிபவர்
    என்னும் பிறர்க ளறிவிற் கிகந்தார்.       1980

    மக்கள் வதியு மிரண்டரைத் தீவினுள்
    தக்க நிலத்துப் பிறந்தவர் தம்முளும்
    முக்குலத் தாரொடுங் கூடா முயற்சியர்
    ஒக்கலைப் போல்வார் பலரு முளரே.       1981

    முக்குலத் தாரொடு மூடத் தொழுதியர்
    தக்க தகாவென்ப தோராத் தகையவர்
    மக்க ளெனப்படு வாரலர் மற்றவர்
    பக்கங் கிடக்கும் பதரெனக் கொண்ணீ.       1982

    நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள்
    இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை
    எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல்
    அல்லியந் தாரோ யரிது பேரிதே.       1983

    அண்ணை யலிகுரு டாதி யவர்களை
    மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத்
    தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும்
    பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.       1984

    எண்பத்து நான்கெனு நூறா யிரமுள
    பண்பொத்த சாதிப் பதமென்ப மற்றவை
    கண்பற்றுந் தாரோய் களிப்பதொர் நல்வினைத்
    திண்பற் றுடையவ ரிவ்வுடல் சேர்வார்.       1985

    சார்ந்த பொழுதே தலைநாட் கருவினுள்
    வார்ந்து வழுவா தமைந்து வளரினும்
    மீர்ந்தண் கமழ்நறுந் தாரோ யிடர்பல
    கூர்ந்து வருபயாங் கூற வுலவா.       1986

    குழவி யருஞ்சுரஞ் சென்று குமர
    வழுவ வடவி யரிதி னிகந்தால்
    கிழவெனு மெல்லை கெழீஇயினர் சார்ந்து
    வழுவினர் செல்வது மற்றோர் கதியே.       1987

    மனித வின்பம் தாழ்ந்தது

    யானை துரப்ப வரவுறை யாழ்குழி
    நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்
    தேனெய் யழிதுளி நக்குந் திறத்தது
    மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ.       1988

    அன்பும் பிறவு மமைந்தாங் ககத்திருந்
    தின்பங் கருது மிருவர்க் கிடைபல
    துன்பங்க டோன்றுந் தொடர்ப்பா டுளவெனில்
    முன்பவை யில்லெனின் முற்றுந் தொழிலே.       1989

    நன் மாண்பு

    இன்ன நிலைமை யிதனுட் பிறந்தவர்
    மன்னுமொன் றுண்டு வதத்தாற் பெறுவது
    பொன்னியல் சேர்கற்ப போக நிலங்களிற்
    துன்னு முயற்சி துணியுந் திறமே.       1990

    முயற்சி துணி திறம்

    துன்னு முயற்சி துணியுந் திறமவை
    பன்னி யுரைப்பிற் பலவாய்ப் பெருகினும்
    தன்னிய றானந் தவமொடு பூசனை
    என்னுமிந் நான்கென வெண்ணி யுணர்நீ.       1991

    தலையு மிடையுங் கடையுமாச் சாற்றும்
    நிலைமைய தான நிழன்மணிப் பூணோய்
    உலைவி லேற்போ னுடனீ பவனீயும்
    மலைவில் பொருளின்ன மாட்சிய மன்னா.       1992

    ஐமை யமைந்தார்க் கெழுமை யமைந்தவர்
    இம்மை நினையா ரிமைபத மீவழி
    மும்மைக்கு மும்மடங் காய முறைமையில்
    பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே.       1993

    இரப்போர்

    துறவி யடக்கை பிறர்க்குநன் றாற்றல்
    உறவினர்க் கோம்புதன் மெய்த்தலைப் பாடென்
    றறிவ ரறைந்தாங் கறைந்தனன் றானங்
    குறைவில னேற்பவற் கேற்ற குணனே.       1994

    வள்ளல்

    போதிசை வாற்றல் பொன்றுதறு கட்பம்
    ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு
    காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி
    வேதமின் றீவான் குணமிவை யேழே.       1995

    தன்னியல்

    தானு மடங்கி யடங்கினர்க் கேந்திய
    ஊன முயிர்களுக் கெல்லா முணர்வது
    ஞான வொழுக்கம் பெருகு நலத்ததை
    ஈனமி லின்ப நிலங்கட் குவித்தே.       1996

    கடைநின் றவருறு கண்கண் டிரங்கி
    உடையதம் மாற்றலி லுண்டி கொடுத்தோர்
    படைகெழு தானையர் பல்களி யானைக்
    குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே.       1997

    பொருள்

    ஊறுபல செய்துயிர் கட்கிடர் செய்யும்
    வீறில் பொருளை வினையவர்க் கீந்தவன்
    ஏறும் பயனிஃ தென்றினி யான்சொல்லி
    நாறிணர்த் தாரோய் நகுவ துடைத்தே.       1998

    தன்கைப் பொருளு மிழந்து தனக்கொரு
    புன்கட் கதிசெல்லும் வாயில் புணர்ப்பவன்
    வன்கட் பதகர்க்கு வான்பொருள் கைக்கொடுத்
    தென்கைப் பணிகொண்மி னென்பவ னொத்தான்.       1999

    தானப்பயன்

    ஒத்த குணங்க ளமைந்தாங் குறுவர்க்குத்
    தத்துவந் தேறி யவன்செய்த தானங்கள்
    முத்திறத் துள்ளும் படாது முடிமன்ன
    உத்தம தேவரு ளுய்க்கு முணர்நீ.       2000

    மிக்க விரதம் விரிபல வாயினும்
    தொக்கன வைந்திற் சொலுமூன்றி னான்கினில்
    ஒக்க வவற்றி னுறுபயஞ் சொல்லிடில்
    தக்கவர்க் கொத்ததிற் றன்னங் குறைவே.       2001

    விரதம்

    எல்லா விரத மியல்பொக்கு மாயினும்
    அல்லா விரத மனையா யவர்கட்குக்
    கொல்லா விரதங் குடைமன்ன வாமெனின்
    வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய்.       2002

    தவத்தின் இயல்பு

    தம்மை யுடையவர் தாங்குந் தவத்தியல்
    எம்மை வினவி னெமக்கு முரைப்பரி
    தும்மையுலகத் தொளிபடு மூக்கமோ
    டிம்மை யிகந்தார்க் கிசையு மதுவே.       2003

    தவஞ்செய்து வந்தார் தவநிலை நிற்பார்
    அவஞ்செய்து வந்தார்க் கரிது பெரிதும்
    பவஞ்செய்து மாக்கள் பரியு மதுதான்
    எவன் செய்து மென்னை யீர்மலர்த் தாரோய்.       2004

    தெருண்டவர் மேற்கொளுஞ் செய்தவச் செல்வம்
    இரண்டும் பலவு மியலாய்ப் பெருகு
    மருண்டினி யென்னவை வந்த பொழுதே
    முரண்டரு தோண்மன்ன முற்ற வுணர்நீ.       2005

    பூசனைப்பயன்

    உலகங்கண் மூன்று முடைய பெருமாற்
    கலகையில் பூசனை யாற்ற முயன்றால்
    திலக மிவரெனத் தேவர்க ளாவர்
    விலகுஞ் சுடரொளி வீங்கெழிற் றோளாய்.       2006

    புண்ணிய வாயில் ஏழ்

    புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை
    கண்ணிய நான்கா யடங்கு மடங்கினும்
    நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர்
    எண்ணிய வாயில்க ளின்னு முளவே.       2007

    அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும்
    பொருளொன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும்
    மருளி றவமும் வாலிய ஞானமும்
    இருளறு தியான நிகழ்வுமென் றேழே.       2008

    அருள்

    ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற்
    கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள
    நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத்
    தீர முடைமை யருளி னியல்பே.       2009

    தெருள்

    வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும்
    வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
    மையன் மும் மூடப் பகுதி மயக்கின்மை
    செய்ய மனத்தோர் தெருளின் றிறமே.       2010

    குணத்தின்கண் ஆர்வம்

    அறிவ ரடிமுத லார்வம் பெருக்கல்
    உறுவ ரொழுக்க முவத்தன் முதலா
    இறுதியில் பல்குண நோக்கமென் றின்ன
    செறிதலி லார்வங்கள் செல்வந் தருமே.       2011

    புகழ்

    ஆற்றல் வகையா லருந்தவ மேற்கொண்டு
    நோற்று நுனித்த லொழுக்கந் தலைநிற்றல்
    போற்றி யுரைத்தல் புகழ்ச்சி நிகழ்விஃ
    தேற்று மிருவிசும் பீர்மலர்த் தாரோய்.       2012

    தவம்

    அற்ற துவர்ப்பின ராகு மருநிலை
    உற்றவர்க் கிவ்வா றொழுக்கந் தலைநிற்றல்
    நற்றவ மென்றிங்கு நாங்கண் மொழிந்தது
    மற்றிது வானுல காள்விக்கு மன்னா.       2013

    ஞானம்

    நூற்பொருள் கேட்டு நுனித்தோ ருணர்வது
    மாற்படை கூட்டு மயங்கிரு டீர்ப்பது
    மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது
    நாற்படை யோய்நல்ல ஞான நிகழ்வே.       2014

    தியானம்

    சென்று பெருகுந் தியான நிகழ்ச்சியும்
    ஒன்ற வுரைப்பி னொருநால் வகைப்படும்
    நன்றியின் மாற்றினை நல்குமிரண் டல்லன
    வென்றி விசும்பொடு வீடுந் தருமே.       2015

    போற்றிய புண்ணியப் பொற்சுண்ண முன்புகழ்
    வாற்றி முயல்வார்க் ககநிகழ் வாமவை
    மாற்றிய வற்றை மறுதலை யாக்கொளிற்
    பாற்றி யுழப்பிக்கும் பாக நிகழ்வே.       2016

    காட்சி யெனும்பெயர்க் கதிர்விளக் கேற்றிய
    மாட்சி யுடையார் வதமில ராயினும்
    ஆட்சி கரிதன் றமருல கல்லது
    மீட்சியில் பேரின்ப வெள்ளத் துழவே.       2017

    மெய்ப்பொரு டேறுதல் காட்சி விளக்கது
    செப்படு மாயின் வினையெனுந் தீயிருள்
    அப்படி மானு நிலையன் றதனைநின்
    கைப்பொரு ளாக்கொள் கதிர்மணிப் பூணோய்.       2018

    தெய்வ மனிதர்

    தெய்வ மனித ரவரைத் தெளிவுறின்
    ஐய விசயனு மாழி வலவனும்
    எய்த விவர்முத லீரொன்ப தின்மரிவ்
    வைய மருள வருந ருளரே.       2019

    பிரதி வாசுதேவர்

    ஆழி யிழந்த வயகண்ட னாதியாப்
    பாழி வலவன் பகைவர்மும் மூவரும்
    வீழ வுரைத்தேன் வியன்பெரு ஞாலத்துள்
    ஊழிதொ றூழி யுலப்பில கண்டாய்.       2020

    சக்கரவர்த்திகள்

    தேய வினைவெல்லுந் தெய்வ மனிதருள்
    நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட்
    பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத்
    தாய திகிரி யவரு மவரே.       2021

    தீர்த்தங்கரர்

    தீர்த்தஞ் சிறக்குந் திருமறு மார்பரும்
    பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும்
    ஓர்த்திவ் வுலகினு ளுத்தமர் மற்றவர்
    தார்த்தங்கு மார்ப தவத்தின் வருவார்.       2022

    போக மனிதர்
    வேறு

    தக்கமிகு தானமுத லாயதலை நிற்கும்
    மக்களிவ ராவர்மத யானைமற வேலோய்
    புக்கவரு ளேபடுவர் போகநிலஞ் சார்ந்தார்
    ஒக்கவவர் தன்மையு முரைக்கவுல வாவே.       2023

    உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோராம்
    முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய்
    பத்துவகை பாதவ மியற்றிய பயத்தால்
    அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய்.       2024

    அங்கிருவர் தம்பதிகள் செய்கையை யறைந்தால்
    இங்கிருவர் செய்கைதமை யெண்ணியறி வாய்நீ
    தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய்
    இங்கிருவர் தேவர்கள் வளர்ப்பவியல் கின்றார்.       2025

    நக்ககுழ விப்பருவ நாற்பதினொ டொன்பான்
    ஒக்கவரு நாள்கள்கலை யோடுட னிறைந்தால்
    மிக்கவொளி சூழ்ந்துமிளிர் மேனியவ ராகித்
    தக்கவிள மைப்பருவ மெய்தினர்க டாமே.       2026

    கொம்பழகு கொண்டகுழை நுண்ணிடை நுடங்க
    வம்பழகு கொண்டமணி மென்முலை வளர்ந்தாங்
    கம்பவழ வாயுளணி முள்ளெயி றிலங்கச்
    செம்பவழ மேனியவள் கன்னிமை சிறந்தாள்.       2027

    நீலமணி கண்டனைய குஞ்சிக ணிறைந்தான்
    ஞாலமளி கொண்டநளிர் தாமரை முகத்தான்
    கோலமணி மால்குவடு குங்கும மடுத்தால்
    போலுமணி மேனியொடு காளை பொலிவுற்றான்.       2028

    தாதுபடு சண்பக மிகந்த நறுமேனிக்
    காதுபுனை காமர்குழை பொற்சுருளை மின்ன
    மீதுபடு கற்பக விளந்தளிர் மிலைச்சிப்
    போதுபுனை கோதையவள் பூம்பொழி லணைந்தாள்.       2029

    பவழவரை யன்னதிர டோட்பரவை மார்பன்
    றவழுமணி யாரமொடு தார்மணி தயங்கக்
    கவழமனை மேவுகளி யானையென வந்தாங்
    கவிழுமல ரீர்ம்பொழிலு ளையனு மணைந்தான்.       2030

    கன்னியவள் மேலிளைய காளையிரு கண்ணும்
    மன்னுகமழ் தாமரையின் வாயித ழலங்கல்
    பின்னியென வீழ்ந்த பிணை யன்னவவள் கண்ணும்
    துன்னுமிரு நீலமென வந்தெதிர் துதைந்த.       2031

    நையுமென நின்றவிடை யாள்குணமோர் நான்கும்
    வையமகிழ் காளையிவன் மாண்டகுண நான்கும்
    ஐயென வகன்றன வணைந்தனர் கனிந்தார்
    மெய்யுமிடை வுற்றவிது வால்விதியின் வண்ணம்.       2032

    அன்றுமுதன் மூன்றளவு மல்லமுடி காறும்
    சென்றுபெரு கிக்களி சிறந்துநனி காமம்
    என்றுமிடை யின்றியிமை யாரினுகர் வார்க்கு
    நின்றது பிராயமது வேநிழலும் வேலோய்.       2033

    போகநிலம்

    கங்குலவ ணில்லைகலி யில்லைநலி வில்லை
    அங்கவர்க ணாளிடைக ழித்தமிழ் தயின்றால்
    எங்குமில வின்பவெழி லெய்தறரு மீதால்
    தங்கிய தவத்தரசர்க் கீந்தபயன் றானே.       2034

    அன்னமிகு போகமவ ரெய்திவிளை யாடி
    முன்னமுடி பல்லமவை மூன்றுடன் முடித்தால்
    பின்னுமவர் தம்வழி பிறந்தவரை நோக்கி
    மின்னுமினி தேறுவது வானுலக மன்னா.       2035

    பல்லமுத லோர்பகுதி மூன்றிரண்டு மொன்றும்
    அல்லவிரு வர்க்க மிழ்து மம்முறையி னேறும்
    நல்லநிலங் காலமுயர் வென்றிவைக ணாடிச்
    சொல்லவுல வா விவர்கள் செய்கைசுடர் வேலோய்.       2036

    செம்பவழம் வெண்பளிங்கு பைந்தளிர் சிறக்கும்
    வம்பழகு கொண்டமணி மேனியவர் பூவார்
    கொம்பவிழுஞ் சண்பகங்கண் முல்லையிணர்க் கோங்கம்
    அம்பவழ வண்ண முதலானவர்மெய் நாற்றம்.       2037

    நலங்கண்மிகு நம்முலகி னன்மைமிகு நீரால்
    புலங்கண்மிகு போகமொடு போகநிலத் துள்ளால்
    விலங்கொடுள வாழ்பறவை யவ்வுடம்பு விட்டால்
    கலங்கண்மிகு கற்பநில மேறுவன கண்டாய்.       2038

    தேவர்கதித் துன்பம்
    வேறு

    பூவிரியு நறுமேனிப் பொன்னிலங்கு நிமிர்சோதித்
    தேவர்கடந் திறமுரைத்த றேவருக்கு மரிதெனினும்
    நாவிரவி நாமுரைப்ப நால்வகையாய் விரியுமவை
    ஓவரிய பெரும்புகழா யொருவகையா லுரைப்பக்கேள்.       2039

    ஈரைவர் பவணர்களு மிருநால்வர் வியந்தரரும்
    ஒரைவர் சோதிடரு மொருபதின்மே லறுவரெனுங்
    காரைய முறுவகையாய் கற்பகரு மீயுலகிற்
    சீரைய மில்லாத திருமலர்த்தார்த் தேவரே.       2040

    உற்றவர்க்கு மேலவர்க ளொன்பதின்ம ரொன்பதின்மர்
    மற்றவர்க்கு மேலவரை வகையரவர் மேலவர்கள்
    இற்றவர தெண்வகையா மிவர்க்கென்று மில்லாத
    செற்றநோய் செயிர்பகையென் றிவைமுதலசெல வுணர்நீ.       2041

    பவணர்

    அருமணியி னொளிநிழற்று மாயிரமாம் பணமணிந்த
    திருமணிசேர் முடியவருந் தீயொழுகு சிகையருமாப்
    பருமணிய படலஞ்சேர் பவணத்துப் பதின்மர்கெளாண்
    குருமணிகொ ணெடுமுடியாய் கூறுபா டுடையவரே.       2042

    வியந்தரர்

    கின்னரர்கண் முதலாய வியந்தரரைக் கிளந்துரைப்பின்
    இன்னநர ருலகத்து ளெவ்வழியு முளராகி
    மென்னரம்பி னிசைகேட்டும் வெறியயர்வு கண்டுவந்தும்
    மன்னவரை வணங்கியுந்தம் மனமகிழ்வ ரொருசாரார்.       2043

    குலகிரியு மலையரசுங் குளிர்பொழிலு நளிர்கயமும்
    பலகிரியுந் தீவகமும் படுகடலும் படிநகரும்
    உலகிரிய வெளிப்பட்டு மொளிகரந்து முறைந்தியல்வர்
    அலகிரியும் பலகுணத்தோ யமரர்களே னைப்பலரே.       2044

    சோதிடர்

    சந்திரருஞ் சூரியருந் தாரகையு நாண்மீனும்
    வெந்திறல கோட்களுமா மெனவிளங்கி விசும்பாறா
    மந்தரத்தை வலஞ்சூழ்ந்து வருபவரு நிற்பவரும்
    சுந்தரஞ்சேர் மணிமுடியாய் சுடர்பவருஞ் சோதிடரே.       2045

    எண்ணியமுத் தேவர்களு மிவர்மடந்தை யவருமாய்க்
    கண்ணியறூ நற்காட்சிக் கதிர்விளக்குத் தூண்டினார்
    நண்ணுபவோ வெனினண்ணார் நல்விரதந் தலைநின்று
    புண்ணியங்கள் படைத்தாரக் குழுவினிடைப் பொலிவாரே.       2046

    காதலரிற் பிழையாராய்க் கள்ளூன்றேன் கடிந்தகற்றி
    ஈதலோ டில்லிருக்கு மிளம்பிடியர் முதலாயார்
    ஓதினமுத் தேவரா யுயர்ந்தவர்க்கு ளுயர்ந்துளராய்ச்
    சோதியும்பே ரெண்குணனுந் துப்புரவுந் துன்னுவரே.       2047

    கற்பகர்

    மந்தரமா நெடுமலையின் மத்தகத்து மேற்கூற்றின்
    அந்தரப்பே ருலகத்து ளமரரைமற் றறையுங்கால்
    இந்திரவில் லெனவெளிப்பட் டிமையவர்க டொழுதேத்தச்
    சுந்தரநன் மணிப்படிவ மெனச்சுடர்ந்து தோன்றுவரே.       2048

    அலர்மாரி மேற்சொரிவா ரமிழ்தநீ ராட்டுவார்
    பலர்மாண்ட கலனணிந்து பலாண்டிசைப்பார் பாடுவார்
    மலர்மாண்ட மணிக்கவரி மருங்கசைப்பார் மடந்தையரைச்
    சிலர்மாணச் சேர்த்துவார் தேவரா யதுபொழுதே.       2049

    ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி
    வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர்
    ஏடார்ந்த தொங்கலரா யின்பநீர்ப் பெருவெள்ளம்
    நீடாரக் குளித்தாடு நிலைமையரே யவரெல்லாம்.       2050

    பொன்மாட நெடுநிலத்தார் புகலமளி யணைமேலார்
    கன்மாடு பொன்வளருங் கதிர்மணிக்குன் றதன்மேலார்
    மின்மாடு மிளிர்ந்திலங்கு விமானத்தா ரெனினல்லால்
    சொன்மாடு பிறிதில்லைச் சுவர்க்கஞ்சேர்ந் தவர்கட்கே.       2051

    கந்தருவக் கோட்டியுள்ளார் கண்கனிய நாடகங்கண்
    டிந்திரனோ டினிதினிருந் திளம்பிடியார் பாராட்டச்
    சுந்தரமா மணிமாடச் சூளிகைய ரெனினல்லால்
    அந்தரமேற் பிறிதில்லை யமரருல கடைந்தவர்க்கே.       2052

    கந்தாரங் களித்தனைய பனிமொழியார் கண்கவர
    மந்தார வனத்திடையார் மணிமுழவி னிசைவாங்க
    மந்தார மணியரங்கி னெனும்வார்த்தை யவையல்லாற்
    செந்தாரோய் தேவர்கள் செய் திறற்றொழின்மற் றுடையரே.       2053

    தீர்த்தங்க டிறந்தவர்க்குச் சிறப்போடு திசையெல்லாந்
    தேர்த்தங்க ணொளிபரப்பச் செல்பொழுதுந் தம்முலகில்
    கார்த்தங்கு மயிலனையார் காமஞ்சேர் கனிகோட்டி
    தார்த்தங்கு வரைமார்ப தம்முருவி னகலாரே.       2054

    இமையாத செங்கண்ண ரிரவறியார் பகலறியார்
    அமையாத பிறப்பறியா ரழலறியார் பனியறியார்
    சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு நெடுமுடியார்
    அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே.       2055

    தேவர் குணஞ் செய்தல்

    அணுவளவாய்ச் சிறுகுதன்மற் றதிநுட்ப மிகப்பெருகல்
    நணியவர்போ னினைத்துழியே நண்ணுறுதல் விழைதகைமை
    பணியினமைத் திடல்குறிப்பிற் பலவுருவு நனிகோடல்
    துணிவமையு நெடுவேலோய் சுரருடைய குணங்களே.       2056

    தேவர் அடையும் துன்பம்

    அளிதருஞ்செங் கோலுடையோ யமரருக்குமந்தரமுண்
    டொளியோடு பேரின்ப முயர்ந்தவர்க்கே யுயர்ந்துளவாம்
    தெளிதரு நற் காட்சியது திருந்தியமே னெடுந்தகையோர்க்
    கெளிதகவும் பெரும்பாலும் பெறலேனோர்க் கரியவே.       2057

    கனைகதிராக் கதிர்கலந்து கண்ணிலங்கு திருமூர்த்தி
    புனைகதிரொண் மணிப்படிவம் பொழிந்ததுபோற் பொலிந்ததன்மேல்
    வனைகதிரின் மணிமுடியும் மாணிக்கக் கடகமுமென்
    றினமுதலாச் சிடர்ந்தினிதி னியல்பாய்நின் றெரியுமே.       2058

    செழுந்திரட்பூம் பாவைகளுந் திகழ்மணியின் சுடர்க்கொழுந்தும்
    எழுந்திலங்கு மேனியரா யெரியுமணிக் கலந்தாங்கி
    மொழிந்துலவாக் காரிகையார் முலைமுற்றா விளமையார்
    அழிந்தலராக் காரிகைமா ரமரரசர் தேவியரே.       2059

    இன்பமே பெரிதாகி யிடையறவின் றிமைப்பளவும்
    துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ்செல்வம்
    மன்பெருமா தவத்தினால் வருமொருநா ளீறுடைய
    தன்பதன்கண் மிசையேயென் றடிகடரு பொரு டெளிந்தார்.       2060

    பவணத்தார்க் கொருகடலா மிகையமரும் பல்லமொன்றாம்
    இவணொத்த வமரருக்கு மிருவிசும்பிற் சுடரவர்க்கும்
    சிவணொத்த வுயர்வாழ்நாள் சென்றபினர்ச் செல்கதியும்
    அவணொத்த தத்தமது விதிவகையா மதிபதியே.       2061

    இரண்டாகு முதலவர்கட் கேழீரைந் தீரேழாய்த்
    திரண்டிரண்டாய் மூவுலகத் தொழிந்தவர்சேர் பிரண் டிரண்டாய்
    அரண்டகவந் தேறிப்பின் னாரணவச் சுதருலகின்
    மருண்டாய மணிமுந்நீர் பதினொன்றற் கிருமடியே.       2062

    ஆங்கவர்மே லமரரசர் மும்மூவர்க் கொரோவொன்றாய்
    ஓங்கினர்மே லொன்பதின்மர்க் கொன்றொன்றா யவர்மேலார்
    பாங்கினுறப் பெறுகுவன பதினைந்திற் கிருமடிமேல்
    வாங்கொலிநீ ரொருமூன்று வாழ்வென்ப மணிமுடியாய்.       2063

    ஆயிடைய வமரரசர் திறம்வினவி னணங்கனையார்
    வேயிடைமென் பணைப்பொற்றோள் விழைவின்றிப் பெரிதாகி
    ஏயிடையோ ரறவின்றா வின்பஞ்செய் திருமூர்த்தி
    சேயிடையொள் ெளாளிநிழற்றச் செம்மாந்தா ரிருந்தாரே.       2064

    ஊனிலா வுறுப்பமையா வொளியமா யுலகெல்லாம்
    பானிலாப் பரந்தெறிப்பப் பளிங்கினது படிவம்போன்
    மேனிலா மணியனையார் வெண்சங்கே ரிலைச்சையாம்
    கோனிலா வவரின்மிக் கவரில்லைக் குடைவேந்தே.       2065

    அப்பால தத்திதியா மதனிலமைந் தாலூணின்
    றொப்பாரும் பிறிதிவணின் றூழிநாட் பெயர்ந்திழிவின்
    றெப்பாலுந் திரிவின்றோ ரியல்பாய வின்பத்தான்
    மெய்ப்பால தவ்வரைசர் வீற்றிருக்கும் வியனுலகே.       2066

    அறவுரை

    கதிநான்குங் கதிசேரும் வாயிலுமிவ் விவையிதனால்
    விதிமாண்ட நரகமும்புன் விலங்குகளுஞ் சேராமை
    மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில்
    நிதிமாண்ட பெருஞ்செல்வ நீங்காத வியல்பென்றான்.       2067

    உறுதிகணன் குரைக்குங்கா லுபசார முரைப்பதோ
    அறுதியில்பே ரருளீரென் றரசனாங் கடிதொழலும்
    இறுதியிலாப் பேரின்ப மெய்துமா றெடுத்துரைத்தான்
    மறுதரவில் கதிபடரு மாதவத்து வரம்பாயோன்.       2068
    ----------------

    12. முத்திச் சருக்கம் (2069-2130)

    வீடுபேற்றுக்குரிய நெறி

    இருவகை வினைகளு மில்ல திவ்வழி
    வருவகை யிலாதது மறுவின் மாதவர்
    பெருவழி யாச்செலும் பெயர்வில் சூளிகைக்
    கொருவழி யல்லதிங் குரைப்ப தில்லையே.       2069

    பிறப்பின் பெற்றி

    பிறந்தவன் பொறிப்புலக் கிவரு மப்புலம்
    சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும்
    மறைந்தவை வாயிலா வினைக ளீட்டினால்
    இறந்தவன் பின்னுமவ் வியற்கை யெய்துமே.       2070

    தூயோர் மாட்சி

    பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான்
    துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய்
    உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான்
    மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே.       2071

    வீடடையும் வீரர்

    காட்சியு ஞானமுங் கதிர்த்துத் தன்பொறி்
    மாட்சியை வெலீஇமனந் தூய னாயபின்
    நாட்செய்து நவிற்றிய தியான வீதியான்
    மீட்சியில் வீட்டுல கெய்தும் வீரனே.       2072

    வீட்டின் இயல்பு

    கடையிலெண் குணத்தது காம ராகர்கள்
    இடைநனி யிலாத தில் லியற்கை யில்லது
    மிடையொடு விழைவுவே ரறுத்த வீரர்கள்
    அடைவதோர் நிலைபிறர்க் கறிய லாகுமோ.       2073

    மணிமலர்ந் துமிழ்தரு மொளியுஞ் சந்தனத்
    துணிமலர்ந் துமிழ்தருந் தண்மைத் தோற்றமும்
    நணிமலர் நாற்றமு மென்ன வன்னதால்
    அணிவரு சிவகதி யடைய தின்பமே.       2074

    பயாபதியின் மனவுறுதி

    வடுவறு மாதவ னுரைப்ப மாண்புடை
    அடிகள தறவமிழ் துண்ட வாற்றலான்
    முடிவுகொ ளுலகெய்த முயல்வ னென்றனன்
    விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தனே.       2075

    மிக்கெழு போதிகை விலக்க றக்கதன்
    றொக்கநன் றுடன்பட லுலக மேன்றெனத்
    தக்கவாய் மொழிந்தவத் தரச னேர்ந்திலன்
    தொக்கவான் புகழவற் கமைச்சர் சொல்லினார்.       2076

    இருட்பிலத் தரும்பட ரெய்திப் பல்புகழ்
    வருட்டதை யிலனலிந் துண்ண வாழ்பவன்
    பொருட்டகு வாயில்பெற் றுய்ந்து போம்வழி
    உருட்டுவா னொருவனை யுவந்து நாடுமோ.       2077

    அமைச்சர் கூற்று

    அருஞ்சிறைப் பிணியுழந் தலைப்புண் டஞ்சுவான்
    பெருஞ்சிறை தனைப்பிழைத் துய்ந்து போயபின்
    கருஞ்சிறைக் கயவர்கைப் பட்டு வெந்துயர்
    தருஞ்சிறைக் களமது சென்று சாருமோ.       2078

    பிணிபடு பிறவிநோய் பெயர்க்கு மாதவம்
    துணிபவன் றன்னொடு தொடர்ச்சி நோக்குமோ
    அணிமுடி துறமினெம் மடிக ளென்றனர்
    மணிமுடி மன்னவற் கமைச்ச ரென்பவே.       2079

    புத்திமதி

    எனவவர் மொழிதலு மெழுந்து போதியின்
    சினைமல ரிலங்குவேற் சிறுவர் தங்களை
    வனமலர்க் கண்ணியான் கூவி மற்றவர்க்
    கினலிலா னிவ்வுரை யெடுத்துச் செப்பினான்.       2080

    திருமகள் இயல்பு

    பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும்
    அருளிலார்க் கறத்தினாம் பயனு நூல்வழி
    உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனம்
    தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே.       2081

    திருமக ணிலைமையுஞ் செல்வர் கேட்டிரேல்
    மருவிய மனிதரை யிகந்து மற்றவள்
    பொருவறு புகழினிர் புதிய காமுறும்
    ஒருவர்கண் ணுறவில ளுணர்ந்து கொண்மினே.       2082

    புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக்
    கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
    எண்ணில ளிகழ்ந்திடும் யாவர் தம்மையும்
    நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே.       2083

    உற்றுநின் றொருவர்கண் ணிற்கு மாய்விடின்
    மற்றவர் குணங்களை மறைத்து மாண்பிலாச்
    செற்றமுஞ் சினங்களுஞ் செருக்குஞ் செய்திடும்
    கற்றவர் தம்மையுங் கழற நோக்குமே.       2084

    அம்பென நெடியகட் கணிகை யார்தமை
    நம்பிய விளையவர் பொருளு நையுமால்
    வம்பின மணிவண்டு வருடுந் தாமரைக்
    கொம்பினை மகிழ்ந்தவர் குணங்க ளென்பவே.       2085

    ஆதலா லவடிறத் தன்பு செய்யன்மின்
    ஏதிலா ரெனவிகழ்ந் தொழியும் யாரையும்
    காதலா ராபவர் கற்ற மாந்தரே
    போதுலா மலங்கலீர் புரிந்து கேண்மினே.       2086

    பூமகளியல்பு

    நிலமக ணிலைமையு நெறியிற் கேட்டிரேல்
    குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள்
    வலமிகு சூழ்ச்சியார் வழியண் மற்றவள்
    உலமிகு வயிரத்தோ ளுருவத் தாரினீர்.       2087

    தன்னுயர் மணலினும் பலர்க டன்னலம்
    முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர்
    பின்னும்வந் தவரொடுஞ் சென்று பேர்ந்திலள்
    இன்னுமஃ தவடன தியற்கை வண்ணமே.       2088

    வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும்
    உற்றதோ ருரிமைக ளில்லள் யாரொடும்
    பற்றிலள் பற்றினர் பால ளன்னதால்
    முற்றுநீர்த் துகிலிடை முதுபெண் ணீர்மையே.       2089

    அடிமிசை யரசர்கள் பணிய வாண்டவன்
    பொடிமிசை யப்புறம் புரள விப்புறம்
    இடிமுர சதிரவொ ரிளவ றன்னொடு
    கடிபுகு மவளது கற்பின் வண்ணமே.       2090

    இன்னன விவடன தியற்கை யாதலால்
    அன்னவள் பொருளென வார்வஞ் செய்யன்மின்
    மன்னுயிர் காவனும் மக்க டாங்கினால்
    பின்னைநுங் கருமமே பேணற் பாலிரே.       2091

    பயாபதி துறவு

    மீனிவர் விரிதிரை வேலி காவன்மேல்
    ஊனிவர் வேலினீ ருங்கள் பாலதால்
    யானினி யெனக்கர சாக்க லுற்றனன்
    தேனிவ ரலங்கலீர் செவ்வி காண்மினே.       2092

    உற்றநாள் சிலநுமக் கென்னொ டல்லது
    மற்றநாள் பலவவை வருவ வாதலால்
    கற்றமாண் சிந்தையீர் கவற்சி நீங்குமின்
    இற்றையான் றுணிந்ததென் றிறைவன் செப்பினான்.       2093

    மக்கள் கூற்று

    என்றலு மிளையவ ரிறைஞ்சிக் கைதொழு
    தின்றியா மடிகளைப் பிழைத்த தென்னென
    ஒன்றுநீ ரிலீரென வுரையொ ழிந்தரோ
    அன்றவர்க் கயலவ னாகிச் செப்பினான்.       2094

    ஆவியா யரும்பெற லமிழ்த மாகிய
    தேவிமார் தங்களைக் கூவிச் செவ்வனே
    காவியாய் நெடுங்கணீர் கருதிற் றென்னென
    மேவினார் தவமவர் வேந்தன் முன்னரே.       2095

    அமைச்சர் துறத்தல்

    இமைப்பதும் பெருமிகை யினியி ருந்தனெ
    நமைப்புறு பிறவிநோய் நடுங்க நோற்கிய
    அமைச்சரு மரசர்கோ னருளி னாற்றம
    சுமைப்பெரும் பாரத்தின் றொழுதி நீக்கினார்.       2096

    அணிமுடி யமரர்தந் தாற்றப் பாற்கடல்
    மணிமுடி யமிழ்தநீ ராடி மாதவர்
    பணியொடு பன்மணிக் கலங்க ணீக்கினான்
    துணிவொடு சுரமைநா டுடைய தோன்றலே.       2097

    முடியைக் கடலில் எறிதல்

    அருமுடி துறந்தன னரச னாயிடைத்
    திருமுடி மணித்துணர் தேவர் கொண்டுபோய்ப்
    பருமுடி நிரையனப் பரவைப் பாற்கடல்
    பெருமுடி யமைகெனப் பெய்யப் பட்டதே.       2098

    முரைசதிர் முழங்கொலி மூரித் தானையும்
    திரைசெறி வளாகமுஞ் சிறுவர்க் கீந்துபோய்
    அரைசரு மாயிர ரரைசர் கோனொடு
    விரைசெறி மணிமுடி விலங்க நீக்கினார்.       2099

    முடிகளுங் கடகமு முத்தி னாரமும்
    சுடர்விடு குழைகளுந் துளும்பு பூண்களும்
    விடுசுடர்க் கலங்களும் விட்டெ றிந்தவை
    படுசுடர் தாமெனப் பரந்தி மைத்தவே.       2100

    வரிவளை வண்ணனு மறங்கொ ணேமியத்
    திருவளர் மார்பனுஞ் செல்வன் சென்னிமேல்
    எரிவளர் மணிமுடி யிழியு மாயிடைப்
    புரிவளைக் கடலெனப் புலம்பு கொண்டனர்.       2101

    விசய திவிட்டர் துயரம்

    காதல ராயினுங் காதல் கையிகந்
    தேதில ராயின மடிகட் கின்றென
    ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர்
    போதலர் கண்களும் புனல்ப டைத்தவே.       2102

    முடிகெழு மன்னர்முன் னிறைஞ்ச நம்மைத்தம்
    கடிகம ழகலத்துக் கொண்ட காதலெம்
    அடிகளு மயலவர் போல வாயினார்
    கொடிதிது பெரிதனெக் குழைந்து போயினார்.       2103

    தாதுக வகலத்துத் தாமம் வாங்கியும்
    மீதுவந் தேறியு மேவல் செய்யுநம்
    கோதுக மியாவர்கொண் டாடு வாரெனப்
    போதுக முடியினர் புலம்பொ டேகினார்.       2104

    முனிவர் சமாதானங் கூறல்

    நின்றிலா நிலைமையி னீங்கி நின்றதோர்
    வென்றியா லுலகுடன் வணக்கும் வீரியம்
    இன்றுகோன் புரிந்ததற் கிரங்கல் வேண்டுமோ
    என்றுதா னிளையரை முனிவர் தேற்றினார்.       2105

    அணங்குசா லடிகள தருள தாய்விடில்
    பிணங்கிநாம் பிதற்றிய பேதை வாய்மொழி
    குணங்கடா மல்லகோன் குறிப்பு மன்றென
    வணங்கினார் மணிமுடி மான வீரரே.       2106

    மன்னர் நகருக்கு ஏகல்

    திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம்
    பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம்
    எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய்
    மருவுடை வளநகர் மன்னர் துன்னினார்.       2107

    வேற்படைப் பிரிவு

    பாற்படு செல்வமும் பரவை ஞாலமும்
    காற்பொடி யாகவுங் கருதிற் றின்மையால்
    ஏற்புடைத் தன்றுநம் மடிமை யீண்டென
    வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே.       2108

    பயாபதி தவம் மேற்கொள்ளல்

    வேற்படை விடுத்து வீரத்
            தவவர சதனை மேவி
    நூற்படை முனிவர் கண்ணா
            னோக்கிய நயத்த னாகிப்
    பாற்படு விரத நோன்மைப்
            படைப்பெருந் தலைவ ரைவர்
    மேற்படை செய்யச் செல்லும்
            வினைவரை விலக்க வைத்தான்.       2109

    குணப்படை யிலக்க மெண்பான்
            குலவுநான் காகுஞ் சீலக்
    கணப்படை பதினெட் டாகு
            மாயிரங் கருவி யாகத்
    துணைப்படை பிறர்க்குச் செய்யுந்
            துருநயத் தளவு நீக்கி
    மணப்புடை சிந்தை யென்னு
            மடந்தையைச் செறிய வைத்தான்.       2110

    செறிவெனப் படுவ மூன்று
            செழுமதில் செறியச் செய்து
    பொறியெனும் வாயி லைந்து
            பொற்கத வடைத்து மாற்றி
    அறிவமை சிந்தை யின்மாட்
            டகம்படி யுழைய ராக்கிக்
    கறையிலீ ரறுவர் நிற்ப
            விறைவராக் காக்க வைத்தான்.       2111

    படைகெழு புரிசை வெல்வார்
            புறநின்று பதின்மர் காக்க
    விடையவர் தம்மு ளாரே
            யுழையரீ ரறுவ ராக
    உடையதன் னுலக மூன்று
            மொருவழிப் படுக்க லுற்று
    மிடைகெழு வினைவர் தானை
            மெலியமேற் சென்று விட்டான்.       2112

    பின்னணி யோகு நான்மை
            யபரகாத் திரம்பெற் றேனைத்
    தன்னவ யவங்கண் முற்றித்
            தயங்குநூன் மனங்க ளோவா
    துன்னிய திசையி னுய்க்கு
            முணர்வெனும் வயிரத் தோட்டி
    இன்னியன் ஞான வேழத்
            தெழிலெருத் தேறி னானே.       2113

    தருக்கெயில் காப்பு வாங்கத்
            தடக்கைமால் பகடு நுந்தித்
    திருக்கிளர் குணமேற் சேடிச்
            செழுமலைக் குவட்டி னோட்டி
    முருக்கிய வுருவு வேட்கை
            முனைப்புல மகற்றி முற்றிச்
    செருக்கிய வினைவர் வாழுந்
            திண்குறும் பழிக்க லுற்றான்.       2114

    நிறையிலார் பொறுத்த லாற்றா
            நிலையிது நிறைந்த நோன்மைக்
    கறையி லீராறுக் கொத்த
            கண்ணியர் கவரி வீச
    முறையினாற் பெருகு முள்ளச்
            சமாதிநீர் முறுக வுண்ட
    குறைவிலாத் தியான மென்னுங்
            கொற்றவா ளுருவிக் கொண்டான்.       2115

    விண்கடாஞ் செய்யும் வெய்ய
            வினைவர்கட் கரண மாகிக்
    கண்கடா மிறைக்கு மோரேழ்
            கடிவினை பொடிசெய் திட்டே
    கொண்கடா நவின்ற வீரெண்
            கொடிமதிற் கோட்டை குட்டி
    எண்கடா முடைய வெண்மர்
            குறும்பரை யெறிந்து வீழ்த்தார்.       2116

    ஈடிலர் வெகுளி யுள்ளிட்
            டெண்மரை யெறியத் தீயுட்
    பேடுவந் தொன்று பாய்ந்து
            முடிந்தது முடிந்த பின்னை
    ஓடிவந் தொருத்தி வீழ்ந்தா
            ளுழையவ ரறுவர் பட்டார்
    ஆடவன் றானும் போழ்து
            கழித்துவந் தொருவ னாழ்ந்தான்.       2117

    பின்னுமோர் நால்வர் தெவ்வர்
            முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
    அன்னவர் தம்மு ளானே
            குறைப்பிண மொருவ னாகித்
    தன்னைமெய் பதைப்ப நோக்கி
            யவனையுந் தபுப்ப நோனார்
    துன்னிய துயிலு மேனைத்
            துளக்கஞ்செய் திருவர் பட்டார்.       2118

    ஆங்கவ ரழிந்த பின்னை
            யரசரை யிருவரோடும்
    தாங்கியீ ரிருவர் தாக்கித்
            தலைதுணிப் புண்ட பின்னை
    வீங்கிய வனந்த ஞான்மை
            விழுநிதி முழுதுங் கைக்கொண்
    டோங்கிய வுலகிற் கெல்லா
            மொருபெருங் கிழவ னானான்.       2119

    பயாபதி கேவலமடந்தையை மணத்தல்

    நெடிதுட னாய தெவ்வர்
            நால்வரை நீறு செய்திட்
    டடிகள்பின் முடிவென் பாளை
            யகப்படுத் தனைய ராக
    இடிமுர சதிருந் தானை
            யரசரோ டிங்க ணீண்டிக்
    கடிகம ழமரர் வீரன்
            கடிவினை முடிவித் தாரே.       2120

    கொடிகளுங் குடையுங் கோலக்
            கவரியு மமரர் தங்கள்
    முடிகளு மடந்தை மாரு
            முகிழ் நகைக் கலங்க ளுஞ்செற்
    றடியிடு மிடமின் றாகி
            மூடியா காய மெல்லாம்
    கடிகமழ் மலருஞ் சாந்துஞ்
            சுண்ணமுங் கலந்த வன்றே.       2121

    பொன்னரி மாலை பூவின்
            பொழிமதுப் பிணையன் முத்தின்
    மின்னிவர் விளங்குந் தாம
            மெனவிவை விரவி வீசித்
    துன்னிய வினைவர் கூட்டந்
            துணித்துவீற் றிருந்த கோனைப்
    பன்னிய துதிய ராகி
            யமரர்கள் பரவு கின்றார்.       2122

    பயாபதியை அமரர் பரவுதல்
    வேறு

    கருமால் வினையரசு காறளர நூறிப்து
    பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை
    ஒருவாமை வேட்டெய்தி யூழி பெயர்ந்தாலும்
    வருமா றிலாத வளநகரம் புக்கானே.       2123

    சிந்தை மடவா டொடுத்த தியானவாள்
    வெந்து வினைவேந்தர் வீடியபின் விட்டெறிந்து
    முந்து முடிவென்னுங் கன்னி முலைமுயங்கி
    வந்து பெயரா வளநகரம் புக்கானே.       2124

    அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
    உலக மலோக முடனே விழுங்கிப்
    புலவன் முடிவென்னும் ங்கொடியுந் தானும்
    நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்.       2125

    வேறு

    இனையன பலபரவி யிறைஞ்சி யேத்தி யிமையவர்கள்
    கனையெரி மிகுவேள்வி கலந்து செய்து களிப்பெய்தி
    அனையவ ரறவாழி யமிழ்த நீங்கா தகத்தாடிப்
    புனையவிர் சுடரொளியார் புகழ்ந்து தத்த மிடம்புக்கார்.       2126

    பயாபதி சூளாமணியாய்த் திகழ்தல்

    களங்காண் வகையுடைந்து
            காலர் காமர் கையகல
    விளங்காத் திசையின்றி
            விளங்க வீரன் மெய்ப்பொருளை
    உளங்காண் கேவலப்பே
            ரொளியா லிம்ப ருலகெல்லாம்
    துளங்கா துயர்ந்துலகின்
            முடிக்கோர் சூளா மணியானான்.       2127

    அருமால் வினையகல அமரர் நாளு மடிபரவப்
    பெருமான் பிரசாபதி பிரம லோக மினிதாளத்
    திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தா மரைத்தடக்கைக்
    கருமால் கடல்வரைத்த கண்ணார் ஞாலங் காக்கின்றான்.       2128

    தங்கோ னமருலக மினிதி னாளத் தரங்கநீர்ப்
    பொங்கோதம் புடையுடுத்த பூமியெல்லாம் பொது நீக்கிச்
    செங்கோ லினிதோச்சித் தேவர் காப்பத் திருமாலும்
    அங்கோல வேலரச ரடிபா ராட்ட வாள்கின்றான்.       2129

    விசய திவிட்டரை வாழ்த்துதல்

    வலம்புரி வண்ணனு மகர முந்நீர் மணிமேனி்
    உலம்புரி தோளினனு முலக மெல்லா முடன்வணங்கச்
    சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா மரையடிக்கீழ்
    நலம்புரி விழவியற்றி நாளு நாளு மகிழ்கின்றார்.       2130
    ----------------

This file was last updated on 10 Jan. 2018
Feel free to send the corrections to the .