Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

பெருந்தேவனார் அருளிய
பாரதம் (பொழிப்புரையுடன்)

pAratam of peruntEvanAr
ith commentary/notes
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version
    of this work for the e-text preparation. This e-text has been prepared via the Distributed
    Proof-reading implementation and we thank the following volunteers for their assistance:
    Anbu Jaya, Gopal, R. Navaeethakrishnan, Venkat Ranganathan, V. Ramasami,
    G. Rajesh, Sasikumar, Thamizhagazhvan, Vijayabarathi, V. Devarajan,
    S. Karthikeyan and S. Tamizharasu
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2015.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

பெருந்தேவனார் அருளிய பாரதம் (பொழிப்புரையுடன்)


Source:
பெருந்தேவனார் பாரதம்
பொழிப்புரையுடன் (மகாவிந்தம்)

பதிப்பாசிரியர்:
ஸ்ரீ பண்டித S.முத்துரத்ன முதலியார் அவர்கள் - தமிழ்ப் பண்டிதர்.

தஞ்சாவூர் ஸரஸ்வதிமஹால் நிர்வாகக் கமிட்டியாருக்காக
கவுரவ காரியதரிசி ஸ்ரீ S. கோபாலன் B.A.,B.L., அவர்களால்
வெளியிடப்பெற்றது.

தஞ்சாவூர் ஸரஸ்வதிமஹால் வெளியீடு-9.
தஞ்சை வெற்றிவேல் பிரஸில் அச்சிடப்பட்டது.
1950.
-------------

Preface

The Saraswathi Mahal Library is the result of the fusion of three cultural influences. The Tamilian Cholas, the Telugu Nayaks, and the Maharshtras finally enriched by the impact od the West under Maharaja Serfoji. The manuscripts in the Library are in ther espective languages of the Rulers., namely, Tamil, Telugu and Marathi. But they all owed common alle- giance to Sanskrit and this accounts for the Sanskrit collections in the Saraswathi Mahal which are the biggest in the whole of India. It is a remarkable lesson to us in tolerance that under the reign of the three differnt dynasties, no hostility was evinced by the successors to the language of the predecessors. On the other hand we find in our library remarkable instances of linguistic experiments like Tamil manuscripts in Telugu and Nagari script. Telugu manuscripts in Nagari script and Sanskrit manuscripts in Telugu script. Under each ruler, collections were made in many languages and subjects, until in the reign of Serfoji, the Great Maratha King, we had the Saraswathi Mahal well established as a great centre of research and learning.

Although the Sanskrit Collections in the Library are by far the most voluminous, still there are a great number of manuscripts in each of the other three languages which are of surpassing value. The Tamil collections are among the most valuable of our literary treasures. Importance naturally centres round the Tamil Medical manuscripts because of their practical value. But the Tamil collections in other subjects especiallly in literature deserve special attention.

We have published in the following pages the contents of a rare manuscript first noticed in our Descriptive Catalogue by the well known Tamil Scholar, late Sri Olaganatha Pillai. It is described as PERUN_ DEVANAR BHARATAM. It consists of 339 stanzas in Tamil in the "VENBA" metre, ( வெண்பா) dealing with the closing portion of MAHA BHARATAM, where the Pandavas journey to Heaven after entrusting the kingdom to Parikshit.

It is clear from the work that the author is one PERUNDEVANAR. But is he the celebrated author of the "SANGAM AGE" or the later PERUNDEVANAR of the 9th century, who enjoyed the patronage of the Pallava King NANDI VARMAN? A fragment of the later author comprising the UDYOGA PARVAM BHEESHMA PARVAM and DRONA PARVAM was published in 1925 by Pandit Sri A Gopala Iyer. In his learned Introduction, the Pandit has given cogent reasons for concluding that the author of the fragment is different from the author of the "SANGAM AGE". We have made a comparative study of the text published by him and the text we are now publishing and it is clear that the author of the present work is no other than the poet of the 9th century and that our work is the concluding part of the same work published by Pandit Sri A.Gopala Iyer.

Sri. S. Muthurama Mudaliar, the learned pandit of our Library, has discussed this question in his intro- duction. He has referred to some of the stanzas in the previously published work and this work to prove the identity of the author.

A chief feature of this work is the commentary in prose under each stanza. It is not clear if the author of the comments is different from the poet.

It is not necessary for us to speak of the high quality of the verses or the sublimity of the thoughts enshrined in them. Even a superficial glance at the work throws up coruscating utterances which linger long in the mind. There is no doubt that all lovers of Tamil will welcome this publication.

We are grateful to the Government of Madras for the timely financial aid they have given us to bring to light the rare treasures of the Saraswathi Mahal.

Saraswathi Mahal,)
Tanjore. )         S.GOPALAN
1--7--1950. )         Hony.Secretary.
------------------


முன்னுரை

ஸ்ரீ கண்ணபிரான் துணை

    "உயர்வற உயர்நல முடையவன் எவனவன்
    மயர்வற மதிநல மருளினன் எவனவன்
    அயர்வறு மமரர்க ளதிபதி எவனவன்
    துயரறு சுடரடி தொழுதெழென் மனனே"

மாபாரதக் கதைகள் பண்டைக் காலத்தில் நந் தமிழ் நாட்டில் 'யாண்டும்' பரவியிருந்தன என்பது சங்க நூற்களால் நன்கு அறியக்கிடக்கின்றது.

தமிழ் மக்கள் அக்கதைகளில் பெரிதும் ஈடுபட்டு அவற்றை அறிந்துகொள்வதற்கு ஆர்வமுடையவர்களாக விருத்தலை யுணர்ந்த பாண்டிய வேந்தன் ஒருவன் அவ்விதிகாசம் முழுவதையும் தமிழில் மொழிபெயர்க்க விரும்பினான்.

கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய 'பெருந்தேவனார்' என்பார், அவ்வேந்தன் வேண்டுகோட்கிணங்கி அப்பெரு நூலைப் பன்னீராயிரம் வெண்பாக்களில் பாடி முடித்தனர். இதனைக் கீழ்வரும் பாவினால் உணர்க.

    சீருறும் பாடல்பன் னீராயிரமுஞ் செழுந்தமிழ்க்கு
    வீரர்தஞ் சங்கப் பலகையி லேற்றிய வித்தகனார்
    பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழம்பதிகாண்
    மாருதம் பூவின் மணம்வீ சிடுந்தொண்டை மண்டலமே.

அவ்வருஞ் செயல்பற்றி அப்புலவர்பெருமான் 'பாரதம்' பாடிய பெருந்தேவனார் என்று சங்கப் புலவர்களாலும், பாண்டிய வேந்தனாலும் பாராட்டி வழங்கப்பெற்றனர்.

கி.பி. 900 முதல் 920 வரையில் பாண்டிநாட்டில் ஆட்சி புரிந்த 'மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன்' என்பான் சின்னமனூர்ச் செப்பேடுகளில், கடல்கோளுக்குமுன் தன் முன்னோர் காலத்தில் நிகழ்ந்த அரிய பெரிய செயல்களைக் குறிக்கு மிடத்து (1) 'மாபாரதந் தமிழ்ப்படுத்தும்'(2) 'மதுராபுரிச் சங்கம் வைத்தும்' (3)'தலையாலங்கானத்துக் கிடைத்த வெற்றி' என்று வரைந்திருப்பது அறியத் தக்கது.

தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலங்களில் ஊர்தோறும் மன்றங்களில் இரவில் மாபாரதம் படித்துப் பொருள் கூறப்பட்டு வந்தது என்பது, அவ்வேந்தர்களின் செப்பேடுகளாலும், கல்வெட்டுக்களாலும் அறியப்படுகிறது.

அங்ஙனம் படிக்கப்பெற்ற (South Indian Inscriptions Vol.III NO 206) பாரதம் வடமொழியில் உள்ள நூலாக விருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப் படுகின்றது.

எனினும், அறிஞர்கள் அந்நூலைப் படித்துப் பொருள் கூறுவதைப் பொதுமக்கள் விரும்பிக் கேட்டுவந்தமை குறிப்பிடத் தக்கது.

அது பற்றியே, அரசர்களும், பிற செல்வர்களும், ஊர்களில் பாரதம் படித்தற்கு 'நிவந்தங்கள்' அளித்துள்ளனர்; அன்றியும், அவர் இறையிலியாக வழங்கியுள்ள ஊர்களில் பாரதம் படிப்போர்களுக்குப் 'பங்குகளும்' அளித்திருப்பது உணரற்பாலதாம். பல்லவ வேந்தனாகிய 'முதல் பரமேச்சுரவர்மன்' (கி.பி 670-685) என்பான் கூரத்து மண்டபத்தில் பாரதம் வாசிப்பதற்கு ஒரு பங்கு நிலம் கொடுத்துள்ள செய்தி 'கூரஞ் செப்பேடுகளால்' தெள்ளிதிற் புலப்படுகின்றது. (South Indian Inscriptions Vol. I pp.144-146) நந்திவர்ம பல்லவமல்லனது (கி.பி. 710-775) தண்டந் தோட் டச் செப்பேடுகளில் 'பாரதம்' வாசிப்பவனுக்குப் பங்கு ஒன்றும், என்று கூறப்பட்டிருப்பதும் அறியற்பாலது, (S.I.I. Vol.II No.99)

பாரதம் பொதுமக்களால் பெருவிருப்புடன் கேட்கப் பெற்று வருதலையுணர்ந்த 'தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' என்ற பல்லவ அரசன்(கி.பி. 826-828) அதனைத் தமிழில் மொழி பெயர்க்குமாறு தன் அவைக்களப் புலவர்க்குக் கூற வே அப்புலவரும் அதனை 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக' இயற்றி அரசவையில் அரங்கேற்றினர். அப்புலவர்பெருமான் வரலாறு தெரியாமற் போயினமை மிக வருந்தற்பாலது. அவர் அந்நூலைத் தெள்ளா றெறிந்த நந்தி வர்மன் ஆட்சியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றியிருத்தல் வேண்டுமென்பது,

    "வண்மையில் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
    உண்மையால் பாராள் உரிமையால்--திண்மையால்
    தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வெண்றானோ
    டியார் வேந்தர் ஏற்பார் எதிர்"

என்ற பாரத வெண்பாப் பாடல் ஒன்றால் நன்கு துணியப்படும்.

இனி, கி.பி. 1210 ஆம் ஆண்டில் 'மூன்றாங் குலோத்துங்க சோழன்' ஆட்சிக்காலத்தில் பாரதம் மற்றொரு முறை இனிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று வட திருவாலங்காட்டுக் கல்வெட்டொன்றால் தெரிகிறது. (Inscription 482 of 1905) அப்பெருஞ் செயலைப் புரிந்தவர் தொண்டை மண்டலத்துக் குன்றவர்த்தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கமுடையான 'அருணிலை விசாகன் திரை
லோக்ய மல்லன் வத்சராஜன்' என்பவர். அவர் பாரதந்தன்னை 'அருந்தமிழ்ப் படுத்தி சிவநெறி கண்டவர்' என்று அக் கல்வெட்டில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வில்லிப்புத்தூராழ்வார் பாரதம் தோன்றியது..

இவ்வாறு, சங்க காலம் முதல் பாரத கதை பல பெரியார்களால் தமிழில் பாடப்பட்டிருப்பினும் தற்காலத்தில் வழங்கி வருவது கடைசியிற் செய்த நூலாகிய வில்லிபுத்தூராழ்வார் பாரதமேயாகும்.

இனி, மற்ற மொழிபெயர்ப்புக்கள் அநேகமாய் இறந்து பட்டனவெனினும், சிற்சில பகுதிகள் வெளியிடப் பெற்றிருக்கின்றன. அவற்றின் தொன்மையையும், சொல் நயத்தையும் உற்றுநோக்குங்கால் அவைகளில் பெரும்பாகம் இறந்தமை குறித்து வருந்த வேண்டியிருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் பகுதிகள் பின் வருமாறு:--

(1) தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பாரதப் பாட்டுகள் என்றும், பெருந்தேவனார் பாடல்கள் என்றும் குறிக்கப்பட்ட பாடல்கள் வெண்பாவும் அகவலாயும் உள.

(2) தெள்ளா றெறிந்த 'நந்திவர்ம பல்லவன்' புகழை முதற்படியாகவுடைய 'பெருந்தேவனார் பாரதத்தில்' உத்தியோக பருவம், வீடும் பருவம், துரோண பருவம் இவற்றில் சில பாகங்கள் பாடல்கள் 'உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுளாக' அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பகுதி வெண்பாக்களும், இரண்டொரு அகவற் பாக்களுமிருக்கின்றன. இது, திரு. பண்டித கோபாலய்யரவர்களால் வெளியிடப்
பெற்றிருக்கிறது.

(3) வீரசோழிய உரையாசிரியராகிய 'பெருந்தேவனார்' என்பவரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டிருக்கும் பாரதப் பாடல்கள் வெண்பாக்களாகும்.

(4) சரஸ்வதிமகால் நூல் நிலையத்தில் உள்ள பெருந்தேவனார் பாரதம்-மாவிந்தம். இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுளாகவும், செய்யுள் முற்றிலும் இரண்டோரிடங்கள் தவிர வெண்பாவாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய (1) என்று இலக்கமிட்ட பகுதி சங்க காலததிய பெருந்தேவனார் இயற்றியது என்று கொள்வதே சால்புடைத்து. சங்க காலத்திய தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவரும், 'திருவள்ளுவமாலையில்' 'எப் பொருளும்' என்ற முதற் குறிப்புப் பாடல் இயற்றியவரும் இவரே என்று கொள்ளல் தகும்.

இவரது காலத்தை ஆராய்வதற்கு நமக்குச் சில ஆதாரங்கள் உள. கடல்கொண்ட காலத்திற்கு முன்னே நிகழ்ந்த அரிய சம்பவங்களில் ஒன்றாகப் பாரதம் பாடியது குறிக்கப் பட்டிருப்பதனாலும், சங்க காலத்தில் பெருந்தேவனாருக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்கிற சிறப்புப் பெயர் ஏற்பட்டிருத்தலாலும், இவருடைய பாரதம் கடல்கோளுக்கு முந்தியதென்றே தீர்மானிக்கத்தகும்.

(2) நந்திவர்மன் காலத்திய பெருந்தேவனார் பாரதத்தின் நடை பிற்காலத்திய நடையாக விருத்தலானும் நந்தி வர்மன் புகழ் பாடப்பட்டிருத்தலாலும், இதை இயற்றிய
புலவர் நந்திவர்மன் காலத்தில் உள்ள இரண்டாவது பெருந் தேவனார் என்று கொள்ள இடந்தருகிறது.

(3) வீரசோழியத்தில் மேற்கோளாக எடுத்தாளப் பெற்ற பாரதப் பாடல்கள் வெண்பாக்களாகவுள்ளன. அவற்றை எடுத்தாண்ட உரையாசிரியர் பெருந்தேவனார் என்ப. மேற்கோள் பாடல்கள் பாரதப் பாட்டுக்கள் என்றும் குறிக்கப் பெற்றிருக்கின்றன. வீரசோழிய நூலின் காலம் 11ஆம் நூற்றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் கொண்ட முடிபாகும்.

ஆகவே, அதில் குறிக்கப்பெற்ற பாரதப் பாடல்கள் அதற்கு முற்பட்டதென்றே கூறாமலமையும். பெருந்தேவனார் என்ற பெயர்கொண்ட மூவருள் இப்பாட்டுக்கள் இயற்றியவர் சங்க காலத்திய பெருந்தேவனாரா அல்லது, நந்திவர்மன் காலத்திய பெருந்தேவனாரா, அன்றி வீரசோழிய உரையாசிரியராகிய பெருந்தேவனாரா என்பது ஆராய்ச்சிக்கு உரியதாக இருக்கிறது.

(4) தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் உள்ள பாரதப் பாடல்கள்:--

இவையடங்கிய சுவடியைக் கண்ணுற்று நோக்குமிடத்து, ஏடுகள் தொடர்ச்சியாக இல்லாமலும், பெரும்பான்மை முதல், இடை, கடைகளில் சிதைந்தும் இருந்தன.

முதலில் ஒன்று முதல் ஒன்பது ஏடுகளும், இடையிடையே மொத்தம் நூற்றுப்பதினெட்டு ஏடுகளும் முற்றுமில்லாமலும் எட்டு ஏடுகள் பாதியாக முறிந்தும் உள்ளன.

இப்பாடல்கள் பாரதத்தின் இறுதிப் பகுதியைச் சேரந்தன. இப்பகுதிக்குச் சுவடியில் 'மாவிந்தம்' என்ற பெயரிடம் பெற்றிருக்கிறது. அதாவது பாண்டவர்கள் சுவர்க்கமென்னும் மகா விந்தத்துக்குச் சென்ற பகுதி என்பது அதன் பொருள்.

இப்பகுதி உரையிடயிட்ட பாட்டுடைச் செய்யுளாகவும், அதன் நடை பெரும்பாலும் நந்திவர்மன் காலத்திய பெருந்தேவனார் பாரதத்தின் நடையை ஒத்தும், இதிலுள்ள உரை நடையும் நந்திவர்மன் காலத்திய பாரதத்தின் நடையைப்போல இருத்தலால் இது நந்திவர்மன் காலத்திய பாரதத்தின் இருதிப் பகுதியாகிய சுவர்க்காரோகண பாவத்தின் பகுதியாகக் கொள்ளத்தகும்.

நந்திவர்மன் காலத்திய பெருந்தேவனார் பாரதத்திலே வெளிவந்த பாரதப் பாட்டுக்களின் முதற்குறிப்பும், இப்பாரதப் பாட்டுக்களின் முதற் குறிப்பும், சில விடங்களில் ஒன்றியிருத்தலால் இவ்விரு நூலாசிரியரும் ஒருவராகவே இருத்தல் கூடுமென்பது உய்த்துணரற்பாலது.

எடுத்துக்காட்டாகச் சிலபாடல்களின் முதற்குறிப்புகள் கீழே கொடுக்கப்படுகின்றன.

ஸரஸ்வதிமஹால் ஸ்ரீ கோபாலையர் பதிப்பித் திருக்கும்
பாரதப்பாடல் பாரதப்பாடல்
எண் -- முதற்குறிப்புக்கள் முதற்குறிப்புக்கள் -- எண்
530 கார்வரையை கார்வரை மேல் 245
326 வம்பவிழ்தார் வம்பவிழ தார் 248
327 கோவர்த்தனமெடுத்து கோவர்த்தன மெடுத்து
75 வண்டுவரை மன்னன் வண்டுவரை மூழை
68 வண்டுவரை தன் வண்டுவரை தன்
21 அரவுயாத்தோன் }
24 அரவுயாத்தோன் } அரவுயாத்தோன்
-------------------

இந்நூலைத் திருத்தஞ் செய்து கொள்ளவும், ஒத்துப் பார்க்கவும், பலவிடங்களில் தேடியும், கடித முகமாக வினவியும், வேறு பிரதிகள் கிடைக்கப் பெற்றில. ஆதலின், இவ்வோர் பிரதியை வைத்துக்கொண்டே எழுத்துப் பிழைகளை நீக்கியும் அடிகள் இல்லாதவிடங்களில் விட்டும், பிரதியிலிருந்தவாறு பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது. கதைச் சுருக்கமும் பாடல்கட்கு ஓர் அகராதியும், அரும்பதங்கட்கு அகராதியும் பின்னே
வைக்கப் பெற்றிருக்கின்றன.

இந்நூற்பிரதிகள் கிடைத்து, அவற்றைத் தந்து உதவுவாரகளாயின் அடுத்த பதிப்பில் திருத்தம் பெறுதற்கு ஏதுவாகும். பொருந்துமென்று கொள்ளத்தக்க சொற்களும், எழுத்துக்களும் இருதலைப் பகரங்களில் அமைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாசிரியர் வைணவப்பற்று மிக்குள்ளாரென்பதற்கு இவருடைய பாக்களிலே திருவாய்மொழியின் சொற்களும் சொற்றொடர்களும், சில விரவி வருதலே போதிய சான்றாகும். அப்பாடல்களின் பகுதியைக் கீழ்வரும் பாடல்களின் முதற்குறிப்பு கொண்டு தெளிக.
--------
எண் பாரதப்பாடல் எண் திருவாய்மொழிப்பாடல்
247 வெள்ளைச்சுரி சங்கு} (7-3) வெள்ளைச்சுரிசங்கு
97 வெள்ளைநிறச் சங்கார்ப்ப}
210 கார்மேக வண்ணனே (10-41) கார்மேகவண்ணன்
333 பூவைப்பூ வண்ணன் பூவைப்பூவண்ணா
(2-3) திருப்பாவை மாரிமலை
------------

இனி, இப்பாரதப் பாடல்களில் சொல்லினிமையும் பொருளமைப்பும், வாய்ந்த சிலவிடங்களைக் குறிப்பிடுவோம்: (97) வெள்ளைநிறம் (98) மேற்கடலிற் (128) கரும்புங் கதலி (129) மாரி பெருக (193) உயர்ந்த (194) கண்ணன்றன் (210) கார்மேகவண்ணன் (212) வாழைமுழுமடல் (337) மண்ணிரந்து (237) வையத்துவெண்க (130) நாரத்தை புன்னை (245) எட்டேழுத்து (247) வெள்ளைச் சுரி சங்கு (321) பூவினொடு.

பாரதப் பாடல்களில் மேலே குறிப்பிட்ட சுவையுடைப் பாக்கள் சிலவற்றிற்கு பொழிப்புரை வருமாறு:--

(1) 'மேற்கடலில்' என்று தொடங்கும் சூரிய உதய வருணனைப் பாடலில் குளிப்பதற்கு மேலைக்கடலுக்குச் சென்ற சூரியன் உலகிருளைப் பார்த்து விரைந்து கீழ்க்கடல் வழியே தோன்றி ஒளி வீசினான் என்பது பொருட்சுவை ததும்ப அமைந்துள்ளது.

(2) 'கரும்புங் கமுகு' என்று தொடங்கும் பாடல் முத்துப் பிறக்குமிடங்களில் சில கூறியது நோக்கற்குரியதாம்

(3) 'மாரி பெருக' என்னும் தொடக்கத்தையுடைய பாடல் மழைவளம் பெருகவும், அறம் பெருகவும், வாரிபெருகவும், வளப்பம் பெருகவும், மறைநான்கும் பெருகவும் தன்ம
புத்திரா மண்முழுதுமாண்டனன் என்னுங் கருத்தையுட் கொண்ட இப்பாடல் முற்கால அரசியல் நிலையைக் காட்டுவதறிக.

(4) 'கண்ணன்றன்' எனத் தொடங்குமிப் பாடல் கண்ணம்பிரானுடைய அவயவங்கட்குக் கமலமலரை ஒப்புக்கூறிய நயம் மகிழ்ச்சி தரத்தக்கது.

(5) 'மண்ணிரந்த' எனத் தொடங்குமிப் பாட்டு மூன்றடி மண் கேட்டு மாபலியினிடம் யாசித்த மாயவற்கு மண்முழுதும் அளித்தனன் எனக்கூறும் சொன்னயம் நோக்கற்குரியது.

(6) வாழை முழு மடலின் போத்தை வெள்ளைக் குருகென்று நினைத்து மீனினங்கள் துள்ளுவதாக வர்ணித்திருப்பதின் நயம் வியத்தற்குரியது.

(7) " வாழை இளம்போதலர் வாளை அடற்குருகுதா மென்றஞ்சி" இக்கவியில் குருகென்று அஞ்சியதாக மற்றொரு வகையாக வர்ணித்திருப்பது நோக்கற்குரியது.

உவமைகள்;--

    48. கார்மேகம் எங்கும் கலந்தெழுந்த வாறேபோல
    76. இருதலைக்கொள்ளி வெள்ளெறும்பே ஒத்தேன்
    321. பாலோடளாயநீர் பாலானது போல
    322. பூவினோடு புனைந்த நார்போல
    372. மாக்குன்றின்மீது மயிற்கணங்கள் வந்தாற்போல

திருக்குறள் மேற்கோள்:--

316. "இன்னாசெய்தாரை ஒறுத்தல்" என்னும் குறட்பாவை, நரகத்தழுந்தும் துரியோதனனைத் தன்மபுத்திரன் கண்டு அன்பு கூர்ந்து நரகத்தினின்றும் விடுவித்ததற்கு எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்.
-----------------

கதைச் சுருக்கம்.

இப்பகுதி வடமொழி வியாசமாபாரதத்தில் சுவாக்காரோகண பர்வதத்தில் வந்துள்ள பகுதியில் ஒருபுடை ஒத்துள்ளதாகும்.

கண்ணபிரான் வைகுந்தம் புக்கபின்னர் பாண்டவர்கள் தம்மரசியலைப் பரீக்ஷித்து மன்னனிடம் ஒப்புவித்து மாவிந்தம் சென்ற வரலாறு மட்டுமுள்ளது. அரசாட்சியைப் பரீட்சித்து மன்னனிடம் ஒப்புவித்துப் பாண்டவர்கள் வனம் செல்லும் போது அமரபோகத்தில், பண்டு, தேவர்கள் அமுதங்கடைந்து ஆலித்தெழுந்த ஆரவாரம்போலப் புலம்பாநின்றது அத்தினபுரம். இவ்வகை நகரிசனம் புலம்புதலும் நகரியில் மகாசனங்கள் சோபங்கண்டு பரீட்சித்துவை நோக்கி தனம் புத்திரன் நல்லறிவுணாத்தி, இராச்சியம் கருகாமே, மண்மடந்தை வருந்தாமே இரட்சிக்கிறாயா? என்று சொல்லிப் பின்சென்ற நகரிசனங்களுக்கு அத்தினபுரம் சென்று, அமைதியுடன் இருப்பீராக எனப்பணித்தனன்.

பின், தன்மபுத்திரர் விண்டுபதம் எய்துதலும் ஆயிடைத் தெய்வமாதர்கள் பல்லாண்டிசைப்ப, மணிநெடுந்தேர் மேல் கொண்டு பவளச்சாமரை அருகிரட்ட, வெள்ளி வெண்குடை நிழற்ற, ஒற்றைச்சங்கு முன்னூத, வைணவரெல்லாம் தன்மபுத்திரனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனராக. தன்மபுத்திரன் வரவுபார்த்து கருடவாகனன் மேற்கொண்டு, நீலத் தடவரையில் செந்தாமரைப் பூக்கள் பூத்திருப்பது போல் விளங்குகின்ற புருடோத்தமனை அணுகச் செல்லாநின்ற பொழுது ஈசுரன் முதலாகிய இந்திராதி தேவர்களாலும் காண்பதற்கரிய ஸ்ரீ பாதங்களைத் தன்மபுத்திரன் பொருட்டாக அடியோங்கள் திருவடிதொழும் பேறுபெற்றோம் என்று கூறித்தேவர்கள் எல்லாம் பெருக்கச் சந்தோஷித்து விடைபெற்றுப் போயினர்.
------------

நன்றி கூறல்

தஞ்சை சரஸ்வதிமகால் நூல் நிலயத்துள்ள நூற்கள் சிதைந்து போகாவண்ணம் வெளியிட்டு உபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சரஸ்வதிமகால் புத்தக சாலையின் கவுரவ காரியதரிசியாகிய பிர்ம்ம ஸ்ரீ S. கோபாலய்யர் அவர்கள் B. A. B. L. என்னையும் வருகவென அழைத்து இந்நூலையும் இதுபோன்ற நூற்களையும் வெளியிடுமாறு பணித்தார்கள்.

ஆதலின், அவர்கட்கு எனது நன்றி என்றும் உரித்தாகுக. அஃதேபோல சரஸ்வதிமகால் நூல் நிலைய ஆராய்ச்சி ஆசிரியர் பிர்ம்மஸ்ரீ K. வாசுதேவ சாஸ்திரியார் அவர்கள் B. A. இந்நூல் வெளியீடு காரணமாகச் செய்து தந்த உதவி மிகவும் பாராட்டற்குரியது. அன்னார்க்கும் எனது நன்றி உரித்தாகுக.

தஞ்சை,         S. முத்துரத்னம்,
1-7-50         பதிப்பாசிரியர்
----------



"பெருந்தேவனார் பாரதம்"
[விநாயகர் துதி]

ஓத வினையகலு மோங்கு புகழ்பெருகுங்
காதற் பொருளனைத்துங் கைகூடும் - சீதப்
பனிக்கோட்டு மால்வரைமேற் பாரதப்போர் தீட்டுந்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள்.

[ திருமால் துதி ]
மாலென்ப தாம்பின்னை மால்வரையான் மால்விசும்பின்
மாலின் புயல்காத்த மால்வண்ணன் - மாலரவப்
பேரோத மேனியான் பேரோத நீர்கடைந்தான்
பேரோத மேனியான் பேர்.


ஸ்ரீ கண்ணபிரான் துணை.

"பெருந்தேவனார் பாரதம்"
பொழிப்புரையுடன் மகாவிந்தம்.
-------

விதியை வெல்ல வல்லாரில்லை என்ன, நீ விதி இல்லை என்று சொன்னாய், உனக்குமேல் வருகின்றதும், கூறுகின்றேன், வராமல் காக்கவல்லையாமாகில் காத்துக் கொள்ளென்று உரைத்து, இற்றைக்கு இருபத்தேழா நாளில் பிருமகத்தியானது வருதென்று கூறித், தன்னாச்*சிரமமே எழுந்திருந்து போயினான், மகாவிருடி என்றவாறு.

இப்பால் "சனமேசயன" யாது செய்தானோ எனில்

விதியா றதன்மேல் வினைமுன்னே காப்பதற்கென்
றோதுவார் தம்மை யுடனழைத்து - நீதி
அருந்தவ வேள்வி யதுதுடங்கு மென்றான்
பெருந்தழலில் நெய்வார்த்துப் பின். (1)

எ.து. வேதவிதியால் வேள்வி இயற்றினால் விதியை வெல்லலாம் என்றுரைத்த, முதுமொழிகொண்டு நூற்றெட்டு வேதவியாதரான(?) விப்பிரரை அழைத்து அக்கினி வளர்த்து ஓமந் தொடங்கி யாது நிகழ்ந்ததோ எனில்.

நெய்பெய் தழல்வளர்த்து நேரிருந்த நித்திரையிற்
றெய்வ மறையவனைத் தேர்வேந்தேன் - கையிலோர்
தெர்ப்பையினால் விட்டெறியத் திண்டாடி வேதியனும்
அப்பொழுதே பட்டா னயர்ந்து. (2)

எ.து. வேதமுனியாய் வேள்வி செய்கின்ற பிர................மல் பார்க்கிற விருந்து கேட்பாயாகில் பிரமகத்தியா தோஷமும் உன்மேலுண்டாகிய குற்றமும் நீங்கும் என்று
ரைத்துப் பின்னும் பார்த்துச் சொன்னான் வேதவியாசன்.

கரும்பிடர மென்றதனைக் காதலித்து மன்னா
விரும்பிட நீமேலிட் டிருந்தால் - [நெரு]ங்கும்
வினைவிட் டகலுமென்றும் விதிகடக்கு மாதலால்
மனத்திருந் தாராய் மதி. (3)

எ.து. கரும்பிடர மென்றதனை மேலிட்டு இருந்து பாண்டவர் புராணங் கேட்டு அவமதியாதே இருப்பையாகில், உன் திருமேனியும் பொறகென்று பிரமகத்தியும் போ
மென்ன, அதனைக்கேட்டு யாது சொன்னான் சனமேசயன்.

என்மேலிருந்த வினை யகல வெங்குரவர்
தன்மையது வெல்லாம் தவறாமல் - முன்னே
இகழ்ந்துரைத்த தீமை இடர்கெடுமா மாகில்
புகழ்ந்துரைக்க வென்றான் புரிந்து. (4)

எ.து. என் குருவங்கிசத்திலுள்ள பராக்கிரமங்கள் கேட்டால் என்மேலிருந்த வினை விட்டகலுமென்றும் அதனையான் கேட்ப [தேவரீர்] அருளிச் செய்வாயாகென்ன, மகாவிருஷி சந்தோஷித்துப் பிழையாமல் &சமுதமும் எடுத்துரைக்கத் தொடங்கினான். அது எங்ஙனமோ எனில்,

-------
@ சுவடியில் இதற்குப்பின் இரண்டு ********இல்லை*
& சகலமும் என்பது இருத்தல் வேண்டும்.

மாற்றரசர் தங்கள் வலிதொலைத்து மண்ணின்மேல்
ஏற்றரசு செய்தங் கினிதிருந்தான் - நூற்றுவரை
.......லையஞ்சோ ராண்டிருந்தான்
வென்னி முரசுயர்த்த வேந்து. (5)

தன்மபுத்திரன் எவ்வகை இராச்சி(யபாரம் செய்தானோவெனில்)

(வானம்) மழைபொழிய மாநிலத்தோர் வந்திறைஞ்சத்
தானமொடு தன்மந் தலைநிற்ப - நானிலத்தே
செம்பொன் மணிமகுடம் (சேரவே) வீற்றிருந்தான
அம்பொன் மணி யாசனத்தே யாங்கு. (6)

எ.து. ஆவினம் பெருக, அந்தணர் அறம் வளர, அறநிலைகள் தழைத்தோங்க, வருந்தவத்தோர் மனமகிழச் சிவநெறி வளரச் செங்கோல் செலுத்தித் துட்டநிக்கிரகஞ்செய்து, வேந்தா திறை அளப்ப ஆறில் ஒன்று கடமைகொண்டு அசுவ
மேதங் *கிரதுக்கள் பலவுஞ்செய்தி நீ ................ன தன்மபுத்திரன் என்றவாறு.
--------------
*கிரது - யாகம்.

இப்பால் ஸ்ரீ வாசுதேவா நிலைமை யாதாயிற்றோ எனில்,

கடல்...........................
.....................ந்தரடி பணிய
வங்காச னற்றே(?) நெடியமால் வீற்றிருந்தான்
செங்கோல் விளங்க மதித்து. (7)

இவ்வகை இருந்த ஸ்ரீ வாசுதேவர் ஸ்ரீ பலதேவரை வேறுகொண்டிருந்து யாதருளிச்செய்தார்.

புகுந்தா லித்தங் கொலிகடல் சூழ்வையம்
அகம்புகுந் தாளுங் கலிதானிற்க-விகழ்ந்தி
.............. க் கொன்றான் மாதவத்தோன்
துய்ய முடையானைத் தொகுத்து. (8)

எ.து. இனித்துவாபர(யு) முடிவுங் கலியுகத்தில் முதலுமான(தால்) இனித் தன்மசீலரானவர் கலியுகத்தில் நல்லோரிருக்கலாகாது. இருந்தால் செய்த தவங(ங்க)ளுங் குன்றித் தன்ம தானங்களும், மற்றும்செய்த அசுவமேத கிரதுக்களும் அழிவாய் நரகத்துக் கெய்துவா கண்டாய். இனி நாமும் இராக்கிஷராகப் பின்பற்றியே போகிறது &கற்பென்று(?) ஸ்ரீ வாசுதேவன் அருளிச்செய்து தன்மபுத்திராதிநரிடைக்கு யாது சொல்லித் தூதரை விடுத்தாரோ எனில்,
----------
& தப்பென்று இருத்தல் வேண்டும்.

கருமம் பெரிதுண்டு கார்வரைக் கோர்வார் வார்(?)
குருபதியாரைக் கொடுவா ரென்று[றா]ன் - உரிமையால்
மண்ணுளந்து மண்ணுண்டு மன்றிழந்த மண்காத்த
மண்ணுலக மாயோன மகிழ்ந்து, (9)

எ.து. தன்ம புத்திரனைக் காரியமுண்டென்று கடிது
கொடுவாராயாகென்னத் தூதனும் போய்த் தன்மபுத்திரனைக்
கண்டு யாது சொன்னான்.

மாயனழைத்தான் வளர்குருநா டாளுகின்ற
தூயபுகழ்த் தருமன் தூதனான் - பேய்முலையை
வாழாம லுண்டான் வளருந் திருநகர்க்குத்
தாழாதே ஏகின்றா னென்று. (10)

இவ்வகை துதன் சொல்ல யாது செய்தான் தன்மபுத்திரன்.

மாணியா மாவலிபால் மூவடிமண் கொண்டானை
காணவியத் தருமன் காதலித்துச் - சேணிலத்துப்
போய்மலரும் புனற்கங்கை நன் னாடன்
மாதாவின் பாலணைந்தான் வந்து. (11)

எ-து. மாதாவாகிய குந்தி தேவியை வணங்கி ஸ்ரீ வாசுதேவன் அழைத்தபடியுஞ் சொல்லிக்கொண்டு போந்து யாது செய்தான் தன்மபுத்திரன்.

ஆயர்புகழ்த் தரும னாடவர்கள் தற்சூழ
மாயனைக் காண்பான் வருகின்றான் - பேய்முலையை
மீட்டுப் பாலுண்டான் விளங்கமதித் துவரைக்
கூ(ட்)டப்பாற் சத்தங் கொண்டு. (12)

எ-து. தன்மபுத்திரன் பதினாலாயிர மிடக்கைச் சின்னமுமி யானை, தேர், குதிரை, புடைசூழச் சங்கு பேரிகை கடல் முழங்க ஸ்ரீமத துவாரகாபுரி யாங்கனம் புக்கானோ எனில்,

தருமனும் தம்பியரும் வந்தார்களென்று
நிறையொளிசேர் நீர்வாசல்காப்பீர்-கருமுகில்போல்
வண்ணத்தான் மாவலிபால் மண்ணிரந்துகொண்டாற்கு
விண்ணப்பஞ் செய்கென்றான் வேந்து. (13)

அதுகேட்டுத் துவாரபாலா ஸ்ரீ வாசுதேவற்கு விண்ணப்பஞ்செய்ய அவரை உள்புகுதவிடுவீராமின் என்னக் கேட்டுத் துவாரபாலருந் தன்மபுத்திரன் அருளிப்பாடென்ன வுரைக்கவுள்புகுந்து யாதுசெய்தான் தன்மபுத்திரன.

மறுதிறத்து வான்சகடுமா வாயுங் கின்று
அருதிறத்தி லன்றன் னையரும் - வுகிரழுத்தி
மேனியோ னீர்க்கனக வெற்பை யதிரட்டுத்
தான் றாள் பணிந்தான் வந்து. (14)

இவ்வகை ஸ்ரீ வாசுதேவனை அடிவணங்கி யாது விண்ணப்பம் செய்தான் தன்மபுத்திரன்.

தடத்தருகே வாழை இளம்போ தலர்வாளை
அடற்குருகு தாமென் றஞ்சி - உடற்சுருங்கிச்
சென்றியற்ற மீனினங்கள் சேர்ந்தொளிக்கும் நன்னாடா
இன்றழைத்த தேனோ வெனை. (15)

எ-து. எம்பெருமானே அடியேனை அருளிப் பாடென்று தூதா வந்து அழைத்த பணிவிடை ஏதென்று தன்மபுத்திரன் கேட்ப ஸ்ரீ வாசுதேவன் யாது அருளிச்செய்தான்.

கருமம் நினைந்து தரணிதனில் நீக்கும்
கருமமது காதலித்தென் கண்டாய்த் - தருமம்
தினைத்தனையும் சார்கிலராய்த் தீமைதரும் தீமை
வினைப்பயனில் யாம்விழுதல் விட்டு. (16)

எ-து. யானுன்னை அழைத்தபடியைக் கேட்பாயாகில், இவ்வுலகமெல்லாம் கலி வந்தாண்டால் பின்னைத் தனம்* மிட்*டாரானவர்களிருக்கு மதுகாரியமல்ல கண்டாய் என்று கீழ*ச் சமுத்திரத்தேற யானும் போகின்றேன். நீங்களும் இங்கே இருக்குதல் போகுதல் செய்மின் என்று உங்களுக்குச் சொல்லுவது பொருட்டாக அழைத்தேன் கண்டாய் என்றருளிச்செய, இதுகேட்டுக் கணமாத்திரை யானும் என் தம்பிமாரும் நின் பாதங்களைப் பிரிகை உண்டோவென்று தன்மபுத்திரன் விண்ணப்பம் செய்ய ஸ்ரீ வாசுதேவன் யாது அருளிச் செய்தான்.


திங்களவே (?) தாரணியம் சேர்ந்திருக்க வேணுமென்று
உங்கள் தனக்கே உடன்சொல்லி-வங்கக்
& கடல்சூழ்ந்த மண்ணெல்லாம் பொங்கி வரும்
நூற்றுவரு மாளப் பெருதுனக் கேயாக்கியதிறல்
வீற்றிருந்தா(ன்) ஆசனத்து மேல் . (17)
----------------------
& இவ்வடி மிகுந்துள்ளது

எ.து. துரியோதனாதிகள் நூற்றுவர் உனன் மித்துரு வாந்தவததாரையும் ஈடழித்துத் துரோணன், கிருபன், கன்னன் , சல்லியன், சகுனி தொடக்கத்தாரையும் பொருது கொன்று இவ்வுலகமனைத்தும் நின்னதேயாக்கி ஆளா நின்றாய். நீ என்னோடு இராச்சியத்தினைத் துறந்து போதுதற்குக் காரணம் ஏதென்று ஸ்ரீ வாசுதேவா அருளிச்செய்யத் தன்ம புத்திரன் யாதுசொன்னான்.

ஈரொன்ப தின்மரோடும் எழுபதின்மரோடும்
தேரும் போருந்துந்திசை அழித்தாய் - காரணத்தால்
கஞ்சனையுங் காய்ந்தாய் கடல் வண்ணா நீசெய்த
வஞ்சனை காணன்றே விம்மன். (18)

அன்றியும்,

பாரதப்போர் பயின்றுவித்தும் பார்த்தனுக்குத் தேரூரச்
சாரதியாய் முன்னே தனிநடத்தும் - மக்கட்கு
ஒப்பரா மதுவாய்மை பண்ணினாய் எங்களுக்கு
உன்னைவிடக் காரியமென் னேது. (19)

எ.து. பூமி தேவியின் பொறை தீர்க்கவும் கஞ்சன் வதை நிமித்தமாகவும் தேவர்கள் யுத்தத்தில் பிழைத்த வீரிய அசுரரைக் கொல்லவும் பாரதப்போருக்கு நிமித்தனாகியும் நீயே நின்று கொல்லுவித்து இயன்றால் பாதகமில்லையென்று, ஒருவர்க்குப் பக்கமாக நின்று வெற்றிகொண்டு இம்மண்ணெல்லாம் எனக்குத் தந்தருளினாய். பூர்வவிதியின் பயனன்றோ, என்று உள்ளபடியே தருமபுத்திரன் விண்ணப்பஞ் செய்ய ஸ்ரீவாசுதேவன் முறுவலித்து யாது அருளிச் செய்தான்.

வீமன்விசய னென்றிரண்டு வெங்கோப யானைகளே
போர்வென் றழித்தால் போர்வேந்தே - எம்முனைக்கண்
என்னைநீ கூரி லிதுவே தகாதென்றான்
முன்னைப் பயனை முயன்று. (20)

எ.து. "அர்ச்சுனன் என்னும், அங்கியும் வீமன் என்னும் வாயுவும் இரண்டுங்கூடி பாரதயுத்தம் சயித்தது, என்னாற் செய்யப்பட்டதில்லை" என்று ஸ்ரீவாசுதேவன் அருளிச் செய்யத் தன்மபுத்திரன் யாது விண்ணப்பஞ் செய்தானோ எனில்,

எனக்கு மெனக்கிளைய தம்பியர்தங் கையால்
மனக்கினியார் மாண்ட பழிதா - னெனக்கோர்
மதியனத்தார் மாதவங்கள் மண்ணின்மேல் நீங்கும்
கதியினைத்தான் வென்றான் கடந்து. (21)

எ-து. இராச்சியத்தின்பொருட்டுத் தன் மித்துர்வாந்தவத்தாரை யெல்லாங் கொன்று, அரசாண்டான் தன்மபுத்திரன் என்னுஞ் சொல் பாரிடமெங்கும் நிகழ்ந்ததாலிப் பழி நீங்கும் வண்ணம் எனக்கு அருளிச் செய்வாய் ஆகென ஸ்ரீ வாசுதேவரெ அருளிச் செய்தான் என்றவாறு

கொற்ற முரசுயர்த்த கோவேந்தர் கூறுங்கால்
உற்றவினை நீகொன்ற வூழிவினை - வெற்றிகொள்ள
வேண்டுதிரே மாவிந்தம் வெங்................
........................................... 22

பதினாயிரம் வேதவித்தியாதரா சேவிப்பத் திருவோலகம் எழுந்தருளியிருந்தான். இப்பால்,

ஐயிரண்டு மீரிரண்டு மவ்வளவிற் பிள்ளைகளும்
மெய்திரண்டு தோளால் மிகவிரும்பிக் - கைதிரண்டு
நின்றுவிளை யாடுவார் நீணகலா மாதவத்தோர்
சென்றவனைக் கண்டார் தெளிந்து. 23

எ.து., அந்த நகரியில் பிள்ளைகளெல்லாந் திரண்டு ஒருவனைக் கருப்பிணியாகச் சிலையை வயிற்றகத்தில் கட்டிக் கொண்டு விளையாடா நின்றகாலத்துத் தேவர்கள் பணியினால், அத்துருவாச மகாவிருடி துவராபதியைச் சாபமிட வேண்டிப் பிள்ளைகள் யிற்ப, மகாவிருடியைக்கண்டு பிள்ளைகள் யாது சொன்னார்.

விளையாடு போதின்கண் மெய்ந்தோ மிவள்தான்
களைகா ணிலாள்போற் கலங்கும் - தளையாடு
மாணோபெண் ணோவீ தறியோ மருந்தவத்தீர்
பெண்நீர் கூறும் பெயர்த்து. 24

எ.து. இவள் வயிற்றில் பிள்ளை ஆணோ பெண்ணோவென்று சொல்லுவீராமின் என்று பிள்ளைகள் மகாவிருடிக்குச் சொல்லுமளவில் யாதுசொன்னான் மகாவிருடி.
-------------------------------------------
* இதன் பிறகு சுவடியில் இரண்டு ஏடுகள் இல்லை.

இந்த இவள் வயிற்றில் வந்தோரிருப் புலக்கை
புந்தியி லும்மைப் பொடியாக்க - வந்து
பிறக்கு[மா]மென்று பெருந்தவத்தோன் சொல்லச்
சிறக்குமா லிப்போதிற் சென்று. (25)

எ.து. இவள் பெறுவதோ ரிருப்புலக்கை யாதலால் உங்களுக்கும் உங்கள் சுவாமிக்கும் மிருத்துவாவ தென்று மகாவிருடி சாபமிட்டுப் போயினான். அப்பொழுது பிறந்த இருப்புலக்கையைப் பிள்ளைகளெல்லாம் பற்றிக்கொண்டுபோயாது செய்தார்.

மெய்கள் விதிர்விதிர்த்து வேர்த்துமிக நடுங்கிக்
கையதனால் பற்றி கடுகிப்போச் - செய்யமலர்
கண்ணன்பாற் றான்சென்று காதலித்துக் கட்டுரைத்தார்
வண்ண வுலக்கைதனை வைத்து. (26)

எ.து. பிள்ளைகளெல்லாம் இருப்புலக்கையைப் பற்றிக் கொண்டுபோய் ஸ்ரீ வாசுதேவருக்குக் காட்டச் சொல்லுவார். தாம் விளையாடினவாறும், மகாவிருடி சாபமிட்டவாறும் சொல்லி நிற்ப ஸ்ரீ வாசுதேவனும் பயப்பட்டுப் பிள்ளைகளை
நோக்கி யாது அருளிச் செய்தார்.

மாதவத்தோர் சாபம் வழுவாவதை வருமால்
எதவிறுப் புலக்கை எள்ளளவும் - போதாமல்
தராதலத்தில் வீழாமல் தக்கவாங் கொண்டே
அராவிடுங் கோளென்றார் அறிந்து. (27)

இருப்புலக்கை யாவரும் பெறுவாரில்லை. இது நம்மைக் கெடுக்குமாதலால், மகாவிருடிவரம் தப்பாது இ[வ]ற்றைப் பொடியாகப் பித்தவவன்றி யேயராவி இப்பொடி எல்லாம் கொணடுபோய்ச் சமுததிரத்திடுமின, என்ன அவர்கள் ஆங்கோர் அரங்கொண்டு பொடியாக்கி யாதுசெய்தார்.

--------------------
* பித்தம்--மண்வெட்டியில் *****ப்பு

இப்பொடி எல்லாம்வாரிப் புழுதியுட னாங்கே
அடியின்மேற் றான்படா வண்ணங்--கடிதன்னை
யன்றெடுத்துக் கொண்டாங் கனவினுடன் பெய்தார்
குன்றெடுத்தார் கூறக் கொணர்ந்து. (28)

எ.து. இபபடி அவர்கள் சமுததிரத்திட்ட இருப்புலக்கைப பொடி யாது செயததோ எனில.

எழுகடலி னுட்பெய் திடவிருடி சாபம்
வழுவின்றி வார்கரையிற் சேர்ந்தங் கொழுகு புனல்
மண்டி எழுந் தெங்கும்வளர் சம்பினுடன் பொழிந்தார்
பிண்டி பாலானதே பின்பு. (29)

எ.து. மகாவிருடி சாபம பழுதுபோகாதாகலின் ஓதமெறிகரை சேர்ந்து.பொடியிரும்பெல்லாம்,கூடிப் பிண்டி பாலுருக்கொண்டு சம்பாய் நின்ற தெனறவாறு.

அப்பொழுது ஸ்ரீமத்துவராபதியில் பிள்ளைகளாக விருந்துள்ள இராசகுமாரருங்கடலாடி, விளையாடாநின்ற காலத்து யாதருளிச் செயதாரோ எனில்,

பண்டைமுனி சாபம் பரந்துபல சம்பாகி
மண்டுகடல் பார்மேல் வளர்ந்ததனைக் கண்டுதங்கள்
கையாற்பறித்துக் களித்தார்த்து வார்மணலில்
தொய்யாநின் றடினார் சுழ்ந்து, (30)

---------
*எறிபடைவகை, பிண்டிபாலத்தை ஏந்தி, சிந் 2269

எ.து. பிள்ளைகளெல்லாம் சம்பின் கோலாகக்கருதி ஓரொனறு தாம் கைக்கொண்டு யாது செயதாரோ எனில்,

அருந்தவத்தோன் சாபத்தால் ஆங்கெங்கும் சம்பின்
குருந்தெழுந்த தோரொன்றாக் கொண்டு பெருந்திரையில்
ஓடினார் ஓடி இகலி எதி ரெதிரே
சாடினார் தம்மில் சலித்து. (31)

இவ்வகையே பதினாறாயிரம் குமாரர்களும் தமமிற்படை பொருது எறிந்து மோதியும், ஒருவர்சோராமல உள்ளபடியே மடிந்தார்கள். அப்பொழுது பிள்ளைகள்பட்ட சேதி ஸ்ரீ வாசுதேவறகறிவிபப, அவருக தம்மிலே சிநதிததிருப்ப ஸ்ரீ பலதேவா யாது சொன்னார்

ஒட்டிவந்த நாளிருநூ றுயிரமிவ் வொண்பதியில்
மட்டவிழ் தாராய்வந்து மண்ணாண்டோம் பட்டனபோ
தங்கிளைஞ் செல்லாரு நாமுமினிப் பாற்கடற்கே
அங்கணையச் செல்[வோமினி] (32)

அப்பொழுது அவ்வனததிலிருந்து வேடன யாது செய்தான் என்றவாறு.

அங்குட்ட மான பிரமாணத் தவ்விரும்பை
வங்கக், கடல் மீன், வயிற்றகத்தே தங்கியதோ(ர்)
அம்பாகக் கொட்டி அருங்கானி லெய்தினான்
வெம்பாவ வேட்டைக்கு மிக்கு. (33)

---------
*இதற்கடுத்த ஏடு (27- வது) இல்லை.

எ.து. மகாவிருடி சாபத்தால் வந்து தோன்றிய இருப்புலக்கையை அராவிச் சூழ்கடலின் கண்ணிட அங்குட்ட பிரமாணத்தோரிரும்பு மீன் விழுங்க, அம்மீன் வலையிற்பட, ஆங்கதனை ஒருவேடன் வாங்கி அம்மீனைப் பிளக்க அம்மீன் வயிற்றில் கிடந்த இரும்பைக்கண்டு மிகபிரியப்பட்டுத் தன்னம்புக்குத் தலையாகவிடக் கொண்டு செல்லாநின்ற காலத்து, ஒருநாள் வேட்டைக்குப்போய் ஒரு மானைக்கண்டு அம்பு தொடுத் தெய்யவேண்டி யாது செய்தான் வேடன்,

வில்வளைய வாளி தொடுத்தந்த வெங்கானில்
செல்லுங் கலைமான் செறுத்தந்த - ஒல்லையம்பை
உற்றவந்தா னெய்யவது ஓடியதே மாதவன்மே
லற்றமுன் சாபத்தா லாங்கு. (34)

எ.து. பூர்வ விதியினாலே வேடனுக்கஞ்சி ஓடுகிற மானைத் தப்பி வடவிருட்சத்தின் கீழே யோகமாக எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ வாசுதேவன் ஸ்ரீ பாதாம் குண்டத்து உருகுதலுங் கண்டு வேடனு மதி பயமெய்தி மானைப் பிழைத்த அம்பு மனிதரைப்பட்டது போலும் என்று அம்பு தேடிச் செல்லுகின்ற வேடுவன் ஸ்ரீ வாசுதேவரானதுவும், தன் கைஅம்பு பட்டதுவுங் கண்டு யாது செய்தானோ வெனில்,

இனமானை யானெய்ய வெங்கோனு மோடி
உனயோ திருந்தமா லின்பகற் - றன்காலிற்
பட்டவா வென்று பதைத்துப் பயமாகிக்
கெட்டேனென விருந்தான் கீழ். (35)

எ.து. எம்பெருமானே நின்னாலறியப்பட்டதில்லை இனி என்னைக் கொல்வாயாகிலும் இரட்சிப்பாயாகிலும் திருவுளமென்று பாதாங்குட்டத்தில் சுரோணிதத்தை யமைத்து ஸ்ரீ
பாதத்தின் கீழிருந்து பிரலாபிக்கின்ற வேடனைப் பார்த்து யாதருளிச் செய்தான் ஸ்ரீ வாசுதேவன்.

என்னை நீயஞ்சா திருங் கானில்
முன்னை வினைகாண் முரண்வேடா-- மன்னுபுகழ்
பார்த்தனைக்கொண் டிங்கணைவா யாகென்றான் பஞ்சவற்கு
வார்த்தைதனைச் சொல்லீர் மறித்து. (36)

எ-து. வாராய் வேடனே நின்னால் ஒரு தோஷமுமில்லை. இதுவெல்லாம் பூர்வ விதியே கண்டாய் என்று வேடனைத் தேற்றி நானென சீவன் விடுவன முன்னே அத்தினபுரம் புகுந்து அர்ச்சுனனுக்குச் சொல்லி ஈண்டன கொண்டுவருவாயாகென்று அருளிச் செய்து விடைகொடுப்ப வேடனும் பரவசப்பட்டு விடை கொண்டுபோய், அத்தினபுரம் புகுந்து அர்ச்சுனன் கோயில் வாசல் குறுகித் துவாரபாலரைக் கண்டு சொல்லுவான் ஸ்ரீ வாசுதேவன் தூதனானோவென்ன வந்தேன் என்று அரிவிப்பீராமெனன், அவர்களும் சென்று தன்மபுத்திரனும் அர்ச்சுனனுக்கு அறிவியுங்களென்று கூறவும், உடனே அர்ச்சுனனுக்குத் துவாரபாலர் சொல்ல அவனும் வந்த தூதனை வரவிடுவீராமென்று சொல்ல வேடனும் வந்து அர்ச்சுனனை முன்கண்டு புகுந்தபடி எல்லாம் விண்ணப்பஞ்
செய்ய அர்ச்சுனனும் யாது செய்தான்.

வில்வேடன் சென்று விசயற்கு வேறாகச்
சொல்லியவா றெல்லாந் தொழுதுரைப்ப--ஒல்லையிற்போய்
மாமுரசமுன்னும் மன்னவற்கு மற்ற தெல்லாம்
கோமதலை கூறும் குறித்து. (37)

என்பது வேடன் சொன்ன வார்த்தை எல்லாம் தன்ம புத்திரனுக்கு அர்ச்சுனன் விண்ணப்பம் செய்தான்.

என்னை வருகவென்று அருளிச் செய்தானாகில் பின்னை நானருளிப் பாடுண்டானால் வருகின்றேன். நீங்களிருவரும் போய் மாதவன்பால் புகுந்த தெல்லாமறிந்து வருவீரா மென்ன, வீமார்ச்சுனற்கு விடைகொடுப்ப வேடனை முன்
கொண்டு போயாது செய்தார்,

குருக்களில் முன்பிறந்த கோவேந்தன் கூறிப்
பொருப்பனைய தோளாரும் போந்து - செருக்கண்
மணிநெடுந்தேர் முன்னூர்ந்த மாதவன்பால் வந்தார்
அணிநெடுந்தே ரேறி யவர். (38)

என்பது இவ்வகை இருவரும் தேரேறி அத்தினபுரம் புறப்பட்டுப் போந்து பலதுன்னிமித்தங்களும் கண்டு யோகமாக எழுந்தருளி இருந்த வடவிருட்சத்துக்கு நேரே சென்ற பொழுது,

மாயனிருந்த நிலைமைதனைக் காண்டலுமே
நெடித்தாய மன்னவர்கள் நெஞ்சுருகித் - தாயஞ்சேர்
நூற்றுவரை அன்றேவி நேர்பரித்தே ரூர்கண்ண
போற்றியென வீழ்ந்தார் புரண்டு. (39)

இவ்வகை திருமேனியில் தளர்ச்சியும் சுரோணிதமுங் கண்டு ஸ்ரீ பாதங்களிருகையுறப் பூண்டுகொண்டு பிரலாபித்த இவர்களை நோக்கி ஸ்ரீ வாசுதேவன் யாதருளிச் செய்தான்

இதுவெனக்குக் காலமிகல் வீமா பார்த்தா
விதிநினைந்து வேறுநீர் வேண்டாங் - கதுமெனப்போய்
வண்டுவரைக் குள்ள மாநிதியும் மாதரையும்
கொண்டுபோ மென்றார் குறித்து. (40)

எ.து. இது எனக்குக காலமாதலால் நீஙகளிருவரும் போய ஶஸ்ரீமத துவராவதி புகுந்து, அணி இழையாரையும, என் மகாபணடாரமும் மற்றஙகள்ள மாநிதியமும் சாத்திரங்களும் எல்லாம்கொண்டு, அத்தினபுரம் புகுவீராமின் என்று அருளிச் செய்யுமளவில் தேவர்கள் புட்ப வருடம் பொழிந்து சதுர் வேதங்களைப் பாடி வந்தெதிரகொண்டு ஸ்ரீ கருடனை நினைந்தருள அவனுமப்பொழுது அஞ்சலியத்தனாய்ப் பஞசாயுத சகிதனாய்ச சங்கு சக்கரதரபாணியாய், மாணட

ஸ்ரீ சங்குவாய் வையத்தார் தமக்கு நீ
இங்குரிமை பூண்டே விசையா - இவ்விடத்தில்
வேல்வேந்தன் மாண்டாற்குச் செய்யும் வழக்கு (41)

எ.து. இவற்குத தாழாதே வேணடுங் கிரியைகளெல்லாம்செய்து நம்மைத் துறந்துகொளவதென்று வீமசேனன் சொல்லிப் பின்னும் யாது சொன்னான்.

ஐவோரு முந்தன் அடைக்கலமாய் வாழ்வோமை
பொய்போல விங்ஙன் புறத்திட்டுச் - செய்தான்
மருவுந்தோள் மார்பா மறந்தனையோ வெங்கள்
செருவினியிற் செய்த திறம். (42)

அன்றியும்
கோவாத்தன மெடுத்துக் கோனிரையைத் தான் மேய்த்தும்
மாழ்தக்க புள்ளின் வாய்பிளந்தாய் - பூவின்
மடந்(தை)தனைக் கைவிட்டு மண்மேல் அவமாய்க்
கிடந்தனையோ வென்றான் கிளந்து. (43)

அன்றியும்

----------
* 33,34 இவ்விரண்டு ஏடுகளும் இல்லை


காண்டா வனத்தைஇன்று கருதித் தனிவாட்ட
நீண்டபெருந் தேவனாய் நீயருள - ஆண்டமக்கோர்
மாதவனாய் மைத்துனனா மாபாரதம் பொரவோர்
தூதுவனாய் நின்றிலையோ சொல். (44)

என்றிவ்வகை, பலவுஞ் சொல்லிப் பிரலாபித்து ஸ்ரீ பாதங்களிலே கிடந்தரற்றுகின்ற அர்ச்சுனனை எவ்வண்ணத்தாலுந் தேற்றி இனித் தாழாதே சங்காரஞ் செய்வாயாகென்று அர்ச்சுனனும் அரிதாகத் தேறி அக்கினிவளர்த்துத் தருப்பையும் சமித்தையும் பரப்பி,வெண்பொரியும் வெண்பூவும் தெளித்து நீதிமார்க்கம் வழுவாமல் வேதமார்க்கமே செய்து சர்வ திக்குகளில் உதகங் கொண்டுவந்து வீமசேனன் கொடுப்ப உதக கிரிகை செய்து அக்கினிமூட்டி அனல் கொளுத்தினான். அர்ச்சுனன் அப்பொழுது வேண்டும் கிரியை பண்ணின பின்னை அங்கு நின்றும் வீமசேனனோடும் துவாரபதி புகுந்து அர்ச்சுனன் யாது செய்தான்

ஐயாறு நாளங் கணிநகரத் துள்ளிருந்து
வையகத்தோர் தான்செய்யும் வான்முறையால்--
வாய்த்தனடை வெல்லாம் வழக்காக வாய்ந்தபுகழ்
பார்த்தனவன் செய்தான் பரிந்து. (45)

இவ்வகை ஸ்ரீமத் துவாரபதியிலிருந்து ஸ்ரீ வாசுதேவற்கு வேண்டும் கிரியைகளெல்லாம் செய்து, நிற்குமளவில் ஸ்ரீமத் துவாரபதிக்கு யாது நிகழ்ந்ததோவெனில்,

ஆழிநீர் வண்ண னருளாலே அந்நகரி
மூழையது வெழுந்து மூடிற்றே - ஊழி
யுகம்புகுந்த வாங்கே யுறுநீர்தான் வையத்
தகம்புகுந்தா ழங்கடல் நீராங்கு. (46). .

எ.து. ஸ்ரீ நாராயணன் பணியிலும் வருணராசனுக்குத் தான் முன்னமே வேம்டிக்கொள்கின்ற சமுத்திற்குள்ளே சிறிதிடம தரவேணும், எனறருளிச் செய்ய வருணராசனிடம் கொடுத்து ஸ்ரீமத் துவாரபதியெனறு படைவீடு செய்திருநது ஸ்ரீவைகுண்டமேறின பின்னை முன்னம் இவ்வணைமேயாக வேணுமெனறு, வரம்பிழையாது மற்றந்த நகரிக்கு மூழை புகுதவேணடிச் துவாரபதி நீஙகிக் கலிபுகுந்ததனோடு மூடிக் கொண்டதென்றறிக, அப்பொழுது, அதுகணடு வீமார்ச்சுனாயாது செயதார்.

வண்டுவரை தன்னிலுள்ள மாநிதியும் வாம்பரிமா
கெண்டையங்கண் மாதருடன் கேசவன்றன்--பண்டார(ம்)
உள்ளதெல்லாம் கொண்டுவர வோங்குவரை வாணர்
கொள்ளைகொண்டா ரெல்லாம் குறித்து. (47)

அணியிழையாரையும், மாநிதியையும், ஐம்பதினாயிரம் மதகரியும் இருபதினாயிரம் மணிநெடுந்தேரும், அறுபதினாயிரம் பாய் புரவியும், மற்றுமுள்ள பணடாரமனைத்துங் கொண்டு வீமசேனன் கடைக்குழை தாங்கவும், அர்ச்சுனன்
முன் தாங்கவும், அத்தினபுரம் நோக்கிப் போகாநின்ற பொழுது,

*கார்மேக மெங்கும் கலந்தெழுந்த வாறேபோல்
போர்வேட ரெங்கும் புகன்றெழுந்தார், சீர்மேவும்
மாநிதியுங் கொள்வார் மடவார் துகிலூரிவார்
தார்விசயன் காணவே தான். (48)
--------------
*கற்பனைப்பாடல்.

எ.து. கார்மேகம்போல வேடரெல்லாம் திரண்டுவந்து வீமார்ச்சுனர் கண்டு நிறகவே ஆயிழையாரைத் துகிலுரி வாரும் ஆபரணங்களைக் கழற்றிகொள்வாரும், மணிநெடுந்தேரும் மதகளிறும், வயப்புரவியும், கைகொள்வாரும், மகா நிதியும், சூறைகொள்வாருமாக நின்றபொழுது,

*இடும்பனையும் பேகனையு மேற்றி யிருங்கானில்
கடும்போரில் நூற்றுவரைக் காய்ந்தான்--அடங்கலரை
வென்றடர்த்து நின்ற விறவீமன் வீரியமும்
குன்றியாதா லூக்கங் குறைந்து. (49)
-------------
* இப்பாட்டுக் கற்பனையுடையது.

எ.து. இடும்பனையும், பேகனையும், கொன்று சராசந்தனைப் பிளவு செய்து, துச்சாதனனை மறக்களத்திற் கொன்று சுரோணிதமும் பருகித் துரோபதையுமிருந்து தன் மனக்கருத்து மூடி வீமசேனன் வரப்பலன்களும் குறைத்து நின்றமை கண்டு நாராயணன் பலமல்லது இவரால் ஒரு பலன்களு மிருந்ததில்லை என்று தேவர்கள் கண்டு சொல்லா நிற்ப,

இனி, வீமார்ச்சுனர் சத்தி குன்றினபொழுதே அகலிடத் தாற்கும் அழிவன்றோ என்று தேவர்களும் திகைத்து இருக்கு மளவில் அர்ச்சுனன் சிறிது தாங்கலுற்றானுக்கு யாது நிகழ்ந்ததோ எனில்,

ϯகங்கைமகன் முதலாங் கன்னனையே யுள்ளிட்ட
அங்கவர்க ளெத்தனைநூ றாயிரவர் -- பங்கப்
படமலைந்த பார்த்தன் பகழிதொடுத் தெய்ய
உடலகவா வாங்கண் தொழுது. (50)
-------
ϯ கற்பனைப்பாடல்

எ.து. அக்கினி தேவன் ஆங்கறிவிப்பக் காண்டாவனந் தீயெழுப்பி மகாதேவருடன் யுத்தம் செய்து மகாபாரதப் போரில் வீடணன் கன்னன் மற்றுமுள்ள எத்தனையோ ஆயிரமிராசர்களைக் கொன்று பூமி பாரந்தீர்த்து தர்மபுத்திரனுக்கு இராச்சியங் கொடுத்த தோள்கள் வலிகுறைந்து அர்ச்சுனனுக்குக் காண்டீபம் வாங்கவொண்ணா தாயிற்று

இவ்வகையே பட்டார் படவும், பிடிபட்டார் பிடிபடவும், போய் அத்தினபுரம் புகுந்தார் வீமார்ச்சுனர் என்றவாறு.

இவ்வகை சென்ற இருவரையும் கண்டு தன்மபுத்திரன் யாது சொன்னான்,

மணிவண்ணற்குத் தீங்குளவோ மன்னர் காள்
நீங்கள் திருமுகத்தில் வாடியவா--செப்பார்கொல்
துவராபதி வாக்கைச் சொல்லா துமக்குக்
கவரான தெல்லாங் கரிந்து. (51)

என்றிவ்வகை தன்மபுத்திரன் கேட்பவும் மிலைச்சித்தெதிர் முகம் நோக்காது வீமார்ச்சுனர் புகுந்தபடி சொல்ல அது நிற்ப அர்ச்சுனன் நமஸ்காரஞ் செய்து தன்மபுத்திரனை வணங்கி யாது செய்தானோ எனில்,

தங்கோன் மணியிற் றனஞ்செயனும் வீமனும் போய்ப்
பொங்கா ரணியம் புகுந்ததற்பின்-செங்கண்மால்
சென்று புரஞ்சோதி சேந்தனவும் சீர்சோதி
ஒன்றினவுஞ் சொன்னா ருவந்து. (52)

அன்றியும்

வண்டுவரை மூழை எழுந்ததுவும் நன்னெறியில்
விண்டவர்கள் சூறைமிகுத் தாடினவும்-பண்டெதிர்ந்து
மாற்றானார் சார வளர்வாகு குன்றினவும்
வேறாகச் சொன்னான் விரிந்து. (53)

எ.து. தன்மபுத்திரன்

வந்ததெல்லாம் நீர் கூறுமின், அன்னிய முண்டாகின்றது
தீர்ப்பன புகுந்த வண்ணமெல்லாம் உரைப்பீரா மென்னப்
பின்னும் சொல்வான் தன்மபுத்திரன்
--------
41, .42 இந்த இரண்டு ஏடுமில்லை.


மன்னர் *கடுகி வந்துதுனுக் கென்ன
வன்னமணி ஓசை எடுத்தீர் - உன்னியது
கட்டுரைமின் என்றுரைத்தான் கார்வயல்சூழ் நன்னாடன்
$எட்டுணையுங் குன்றா தெடுத்து. (54)
-------------
* கருகிவந்து, பாடபேதம், $ எட்டணையும் -- பாடபேதம்

எ.து. பிராமணர்காள் உங்களுடைய அபிதாயம் கேட்டுக் குவலாகப் பயந்தேனாகின்றேன். உங்கள் நியாயாம் உரைப்பீரா மெனனத் தன்மபுத்திரனை நோக்கிப் பிராமணர் செல்லுவார்

இந்த மறையோன் எனக்கோ ரகம் விற்றான்
அந்த வகத்திலடையுமோ ரூதியம் -எந்தன்
பெருமானே யான் பெறுதல் பேசுங்கால் வேண்டேன்
அருமறையோ ராக மிது. (55)

இந்த பிராமணன் எனக்குச் சிறிது பூமி விற்றன். அந்த நிலத்தை யானும் உழுவிப்ப அந்தபபூமியில் சிறிது திரவியம் கிடந்தது. இந்தத் திரவியத்தை நீ கொள்ளென்று கொடுப்பக், கொள்ளேன் என்கின்றான் பிரானே என்ன, அவனுக்குப் பூமி கொடுத்த பிராமணனை நோக்கித் திரவியம் வாங்கிக் கொள்ளோமென்பது, தக்கதன்றென்று தன்ம புத்திரன் கேட்ப பூமி கொடுக்கும் பிராம்மணன் சொல்லுவான்.

என்னா லறியப் படாத விருநிதியம்
மனனாஎனக் கதனால் வாழ்வொழிந்தேன் - முன்னாள்
விலைகொடுத்த நாளே கொடுத்தேன்பின் கொள்கை
புலைமகட்கு(ம்) ஆகாப் பொருள். (56)


என்பது. பிரானே யான் பூமி கொடுத்தவனறே அப்பூமியில் கிடந்த திவியமும் அவனதே என்றும், எனக்கது பொருளாவது யானறிந்ததாகில அன்றே என்றும் தானறியாத பொருள கொள்ளலாகாதென்றும், பூமி கொடுத்த பிராமணன் சொல்லப் பின்னும் யாது சொன்னான் தன்மபுத்திரன்

பண்டுன் வழியுள்ளார் வைத்த பழம்பொருளைக்
கொண்டிடுவ தல்லாது கூறுவதென் - எண்டிசையும்
ஏய்ந்த புகழ்மறையோ ரீண்டீன்று கொள்கவென்றான
ஆய்ந்த முரசுயர்த்தோ னாங்கு, (57)

எ.து. உன்னுடைய மூதாக்கள் வைத்த பொருள் நினதன்றோ
கொளளாயென்ன எனக்கு ஆகாதென்று பிராமணன்
மறுத்திடலும் இதற்குச் செய்வதேது மறியாத பட்டாகளை
அழைத்துக் கேட்பப் படடாகள் யாது சொன்னார்.

மஞ்சாடு சோலைசூழ் நாடாளு மன்னவனே
அஞசாறு நாளி லறியலாம் - வஞ்ச
மறையவர்கள் தங்கள் வழக்கிதனைக் கேட்க
இறையவனே என்றா ரிசைந்து. (58)

எ.து. இவர்கள் வழக்குச் சொலலுமளவில் அஞசாறு நாளைக்கு *அவதி வேணுமென்று அப்பிராமணர் இருவரையும் வேறு கொண்டுபோய்க் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வழக்கு வீடறுத்துச் சொல்லுகிறோமென்று சொல்லி விடுமளவில் யாது நிகழ்ந்ததோ எனில்

கையால் நடந்து தலைகீழாய்க் கால்மேலாய்
பொய்யால் மிடைந்த புகழ்சூடி - வையம்
வலிகவிந்து தக்கோர் வழக்கழிய வந்து
கலிபு குந்தான் காசினியிற் காய்ந்து. (59)

எ.து. அப்பொழுது வழக்காளறகுப் பட்டாகள் விதித்த நாள் வந்துறுதலில் கலியது வழக்காளறகு முனவே அத்தினபுரமபுக்குக் காலிரண்டு மேலாகித் தலைகிழாய்க் கையால் நடந்து புகா நிற்க நீதி அழிந்து நெறி குன்றிப்போய் பாய்ந்ததாகக கருதுவது.

அப்பொழுது,

வழக்கைப் பிணங்கித் தவவலிமையாற் பற்றி
சழகோடித் தக்கோர்க ளிடத்தம்மை உழக்கின்றே
உள்ளாற்றித் தீதை யிருந்துநலிந் திட்டதே
கள்ளத்தால் வந்த கலி. (60)

எ.து. கலி புகுந்த காரணத்தினால் தன்மதானங்களும் இன்றி, ஆதித்தியகிரணங்களும் சுருங்கிப்போய்க் கலிவருகிறறென்றவாறு

அப்பொழுது,

பொருள்சுமந்த அந்தப் பொருளெனதே என்றா
னருளஞ்சி நீங்கிய பின்னிற் - பொருளு
மஞ்சினான்கொள் ளென்றானு நன்னிதிய மெல்லாம்
உன்னதே என்றா னிசைந்து. (61)

எ.து. அந்தததிவசம் போயின, பிறறைஞான்று பொருள்கொள் என்ற பிராமணனும் பொருள் என்னதே என்றான்.

-----------
47 வது ஏடு இல்லை. *ஈற்றடி இல்லை.

பூரி கொடுத்த பிராமணனும் பொருள என்னதே என்றான். இப்படி இவர்கள் யக்கியம் கேட்டுத் தன்மன பயப்பட்டுச் சகாதேவனை நோக்கி யாது சொன்னான்.

வலிய கொடுக்கினும்பொன் வாங்கா மறையோன்
நிலையழிந்தான் நீணிலத்தின் மீதே--- கலிபுகுந்த
†காரணத்தாற் கண்டீரோ வென்றுரைத்துக்
காட்டி, 62
------
†இவ்வடியுமிறுதிக் குறை

இவ்வண்ணமே ஆயிற்றென்று யாமினி இராச்சியத்துக்கு இராசாவெனறிருப்பது தன்மமொனறல்லவென்று ஸ்ரீ வாசுதேவனைச் சிந்தித்து யாது சொன்னான் உதிட்டிரன,

மாலவனுந் தன்சோதி காட்டினான் வானுலகில்
காலமும் போய்வந்து கலிபுகுந்தான் -- கோலமலர்
ம(1ண்ணு)ளோர் தாமொழிய மாவிந்தம் போமவனுக
கெண்ணுமோ வென்றா னெடுத்து. 63
----------
1, மனறுளோர் - மூ.பாடம் 2. பனி-மூ.பாடம்

எ.து. தம்பிமாரை நோக்கித் தன்மபுத்திரன் சொல்லுவான் ஸ்ரீ வாசுதேவன வைகுண்டததே எழுந்தருளினான், நமக்கினி தலைக்கணில்லை கலிபுகுந்தது நாம் ஐவரும் துரோபதையும் அத்தினபுரம்விட்டு மாவிந்தம் போவேனென்று. ஓருப்பாடு பண்ணினபடி அபிமன்னுவின் குமாரன பரீக்ஷித துவைநோக்கி யாது சொன்னான தருமபுத்திரன்.

(2படி) முழுதும் வந்து பணிகேட்பப் பார்மேல்
முடிசூடி முனசூழ ஞாலத் -- திடிமுரசு
நின்றியம்ப நீராசு நீகாக்க வென்றுரைத்தான்
வென்றி (3முரசு) யர்த்த வேந்து. 64
----------
3. சேர்க்கப்பெற்றது,

என்பது, காணி பாலர் பணிகேட்பத் தமனியக் குடைமேல் நிழற்ற என்னைப்போல் இராச்சியம் செய்திருப்பாயா கென்று தன்மபுத்திரன் பணிப்ப பரீக்ஷித்து யாது விண்ணப்பம் செய்தான்.

கருடனவன் காக்குங் கடலுலகம் காப்ப
திருடிரா வியதுவோ வென்னே--அருணன்
†[அராவிற்] றன்மீதுல வும்புவிகளெண்டிசையே
தீத்தநீண் முடியாச் சொல். 65
------
* இவ்வடியிருந்தவாறே எழுதப்பெற்றது † அராவிற்சேர்க்கை.

எ.து. கருடன் காக்கின்ற புவி எல்லாம் ஓருயிராவிருந்து காக்கவென்றோ பெருமான் எழுந்தருளியிருந்து காத்த விராசசியத்தை என்னால் இரட்சிக்கப்போமோவென்று பரீட்சித்து விண்ணப்பஞ் செய்யத் தன்மபுத்திரன் அருளிச்செய்தான்

வாள்விசயன் சேர்க்கு மருளேயிம் மாநிலத்தா
னாளறியா ரில்லை பார் -- ஒளிசேர்
மற்றொப்பா நிலமுழு துங்கா வலனா
வாளாநீ யென்றா னாக. 64

எ.து. பூமியான உரியார் பிறரில்லை, நீ அருச்சுனன் மகன் அபிமன்யு புத்திரனாகையால் இராச்சியத்தினை நீ ரட்சிக்க வேண்டுமாதலால் மணமடந்தை வருந்திடாமலும் நம்முடைய அதிட்டானம் குலையாமலும் நீ துட்டரைச் சங்கரித்துச் செங்கோல் செலுத்தென்று தருமபுத்திரன் அருளிச் செய்ய யாது விண்ணப்பம் செய்தான் பரீட்சித்து

நரகுலமீது தனில் நல்லமிர்த மாகு
மிரதி பயவா விருந்தும்--வீரப்
படைவேந்தர் தம்மைஎல்லாம் பாரிடைக்கொன்றாண்ட
கொடைவேந்தன் வீமனையே கூறு. 67

எ,து. வீமசேனனுக்கு இராச்சியங் கொடாயாகில் ஸ்ரீ வாசுதேவனுக்குச் சாதகனாகிய அர்ச்சுனற்கு இராச்சியம் கொடுப்பதென்று பின்னும் சொல்லுவான் பரீட்சித்து.

வானவர்தம் கோனுக்காய் மாவலிதான் தேரூரத்
தானவரைக் கொன்ற தனிச்சிலையோன்--என
விருளிற் றொடலு மியல்வரைசூழ் நாடா
பெருமகற்கே நல்காயிப் பேறு. 68

எ,து. இந்த ராச்சியத்தினை அர்ச்சுனற்கே கொடாயாகில் அதிபராக்கிரமராகிய நகுல சகாதேவற்குக் கொடுத்தருள் வாயாகென்று மற்றவனை நோக்கி யாதருளிச் செய்தான்
தன்மபுத்திரன்

மாயன் பணித்தமையால் வாள்விசயன் தன்சிறுவன்
சேயுந் தனக்காக்கித் திண்புவியை--நீயே
முடிசூட்டி வைத்து முரசுயர்த்தோய் நீங்கள்
அடிகூட்ட நம்மருகே யாம். (69)

சொல்லக் கேட்டுக் குந்திதேவி யாது சொன்னாள்.

அரவுயர்த்தோன் வஞ்சனைக ளன்றுபல நீங்கள்
வரையனைத்து மவனகான(ம்) நண்ணிப்-பரவுகின்ற
பாரதப்போர் வென்றுகடற் பார்காக்க வெய்தினையே
நேருனக் கின்றார்சொல் நீ. (70)

அன்றியும்,

வேந்தர் திறைகொணர வெண்சாமரை இரட்டச்
சாந்தணியும் மென்முலையார் தற்சூழத்-- தீந்திகழும்
மன்னவர்கை கூப்ப மணியாசனத் திருந்தான்
என்னது யா(ர்) வேண்டீ ரிது. (71)

------------
51, 52, 53 & 54 இந்நான்கு ஏடுளும் இல்லை.

அன்றியும்,

செம்பொன மணிமகுடஞ் சூடியகோ வேந்தர்
அம்பொ(ன்) னகரத னுட் புகுந்து --தம்பியர்கள்
சென்றுதிறை கொணரச் செங்கோல் செலுத்தாதே
குன்றிடைநீ யேகுவதோ கூறு. 72

எனறிவ்வகை சொல்லிக் குந்திதேவி தவிப்பத தன்ம புத்திரன் யாது சொன்னான்.

மன்னுங் குருநாடன் மாதைமன மகிழ்வுற்
றென்னைப் பயந்தெடுக்க வென்றிறைஞ்சி--முன்னம்
கடற்றுவரை நன்னாடன் கட்டுரைத்த தெல்லாம்
எடுத்துரைத்தா னாங்கே இசைந்து. 73

எ.து. மாதாவே நான மகாவிந்தம் போகின்றது ஸ்ரீவாசுதேவன் பணியாதலின் நீக்கப்பெறாதென்று விண்ணப்பஞ் செய்யக் குந்திதேவி யாதருளிச் செய்தாள்.

மாதவன்றன் சொல்லை வழுவாத வண்ணத்தால்
மாதவமேற் கொண்டுநீ மன்னவனே--போதியோ
எங்கோவே உன்னை இறையும் பிரிந்திரேன்
வெங்கானம் வருவன் விரைந்து. 74

எ.து. மாதவன பணித்தருளினன் வழுவாமல் போகா நின்றாலே யான் உன்னை இருங்கானம போக்கி இமைப்பொழுதும் தரியேன் யானும் வருவன் எனகேட்டு யாது விண்ணப்பஞ் செய்தான் தன்மபுத்திரன்

செந்தாமரை யடிகள் சேந்துபல பாலுறைப்ப
வெந்தரிங் கானகத்(து) ஏகுவதில்--பைந்தார்
வாள்விசயன் சேய்க்கு வருமகனைக் கொண்டாசை
ஆளுநீ ரென்றா னவன். 75

எ.து. எம்பெருமாட்டி தேவரீர்க்கு மகாவிந்தம் போவதரிது. அபிமன்யுவின் புத்திரன் பரீட்சித்து இராச்சியம் பண்ணுவித்துக்கொண்டிங்கே எழுந்தருளி இருக்கவேண்டுவன் சீர்பாதங்கள் கானிடை நடக்கவல்லதோவென்று தன்மபுத்திரன் விண்ணப்பஞ் செய்யக்கேட்டுக் குந்திதேவி யாது சொல்லி யாது செய்தாள்.

* மைந்தரிவர் சொல்லாற்றார் ................
*(வேந்த)ரிவர் சொல்லாற்றார்....சிந்தை---(தடுமாறியே)
இருதலைக்கொள்ளிமின் வெள்ளெறும்பே ஒத்தேன்
ஒருதலைக்கு மாற்றா துழன்று. 76

எ.து. மகாவிந்தம் போகவேண்டாமென்பேனாகில் திருமால் வசமழைத்தேனாவேன். அப்போது என்னையும் போக வேண்டாவென்றாள்.

பிள்ளைகளைப் பிரிந்தொரு மாற்றி†.....பொழுதிருக்கலால் ஆற்றேனென்று தன்சிந்தை ஆகுலஞ்செய்து கண்ணீர் சொரிந்து நின்று யாது சொன்னாள் குந்திதேவி--

தன்மனைத் தான்பார்த்து நாராயணன் வசனந்
தன்வசமே தானாகச் சார்ந்தொழுகி--என்மகனே
உன்வசனங் குன்றாமல் உம்பியரோ டேகின்றான்
தன்வசனங் குன்றான் தளர்ந்து. 77

எ.து. கிரேதாயுகத்தின்கண் சக்கரவர்த்தி தன் மகனை காடுறையப்போக்கித் தான் மாண்பெய்தினான். அவனைப் போல யானுமுங்கள் திண்டோள்களும் செம்முகங்களும் உங்கள்சத்திய வாக்கியங்களும் உங்கள் தைர்யங்களும் காணாதே யானுமுயி ரழிகின்றேன்.
-------------
* இவ்வடிக ரின் கடைச்சீரில்லை.
† இங்குள்ள எழுத்துக்கள் விடப்பெற்றிருக்கின்றன.

நீருந் தம்பிமாரும் மகாவிந்தத்தே நாராயணன் திருவருள் பிழையாதே திருவடி சோ்மின் என்று குந்திதேவி அருளிச் செய்யத் தன்மபுத்திரன் யாது சொன்னான்.

பூபதியைப் பொற்கொடியா டன்னை யுடன்படுத்தி
மாமதிக டனனையவ் வாய்முறையே--பூபதியைக்
கொண்டுநீ ரிந்தச் சுருபத்தைக் காத்தருள்பின்
எண்டிசையு மென்றா னெடுத்து. 78.

இவ்வகை மாதாவுக்கு விண்ணப்பஞ் செய்து அவர் பாதமுற வணங்கிப் பின்னை யாது செய்தான் தன்மபுத்திரன்.

பூவலய மாண்டு புனையிழையார் தற்சூழக்
காவ(ல)ன்றன் னோடிருந்த காந்தாரி--சேவடிகள்
செந்தாமரைக் கரத்தாற் சென்றுதரு மன்பணிய
வந்தா னவள்பால் மகிழ்ந்து. 79

எ.து. காந்தாரி கோயில் நோக்கிப் போய் ஐவருஞ் சென்று பாதமுற வணங்கிநிற்ப, யாது சொல்லி வாழ்த்தினாள் காந்தாரி.

ஏறாகி எவ்வுலகு மாண்டாங் கெதிரன்றி
மாறாத வென்றி மகர்மகளு--......ன்றின்றி
யும்பியரும் நீயு முய்ந்தூழி வாழ்கென்றா(ள்)
அம்பிகைசேர் காந்தாரி ஆங்கு. 80.

எ.து. உனக்கெதிர் யாவருமின்றி உன்தம்பிமார் புடைசூழ பாராட்டிறத்து இராசாக்கள் பணிகேட்பத் திருமடந்தை என்றும் பிரியாமே இருந்து இராச்சியபாரம் பண்ணி இனிது ஊழி வாழ்மின் என்று வாழ்த்திப்பின்னும் விசாரித்து யாது சொன்னாள் காந்தாரி.

திருமுகங்கள் வாடிநின் திண்டோளுஞ் செல்வம்
பெருகொளியும் பேணுதலொன்றிக் -- குருகுலத்துக்
கோமானே வந்தவாறு கூறென்றா டன்சிந்தை
வேமாறு முன்னம் விரைந்து. 81

எ.து. நின் திருமுகம் வாடினவாறும் ஸ்ரீ வாசுதேவன் நிலமையும், எனக்கறியச் சொல்லுவாயாகென்ன யாது சொன்னான் தன்மபுத்திரன்

கோத்திரரைக் கொன்ற கொடுவினைகள் தான்தீர
யாத்திரை தானாமாறு மெவ்வாறும் - மாத்திரையில்
வந்தேனடியேன் வரலா ருணர்த்தி இன்றுன்
செந்தாமரை அடிக்கே சேர்ந்து. 82

எ.து. குருக்களையும் என் மித்துரு பாந்தவத்தாரையும் பிராதாக்களையும் கொ[ன்று] பிரமகத்தி தோஷந்தீர எனக்கு தீர்த்த யாத்திரைக்கு விடை தருவாயாகென்று அடிவணங்க யாது சொன்னாள் காந்தாரி

... .....ழிக ளெல்லாமிகுத் திடி...................ம்
மாறவொரு தன்மை மமையாதோ -- வேறுனக்குத்
தீங்காவ து[ண்டா திருமேனி]யிற் றளர்ந்து
போங்கா ரணமேதிப் போது. 83

உன்மேலுண்டாகிய பழியனைத்து[ம், செய்யத் தன்ம]ங்களிலும், நின் சத்திய வாக்கியத்திலும், பலம் செய்வற்றோ வென மக்கள் நூற்றுவரையும், மேன்[மை] மி[குந்த தவத்] தாரையும், இழந்து, நீயும் நின் தம்பிமாரும் சுகமே இருந்து இராச்சியத்தினை இரட்சித்துப் போது[கண்டு] உங்கள் செம் முகமே அமையுமென்று யான் மாண்டகாலத்தும், உன் தம்பி மாதா பிதா(வுக்கு நடததுவீ) ராகத் தம் போலே எனக்கு நன்மை செய்ய, நீ உண்டென்று துயரொழிந்து நின்முக [ம் நின தம்பி]மார் வீமார்ச்சுனர், நகுல சகாதேவர் முகங்களிலும் விழித்திருந்தேன் இனி நின் தம்பிமாரும் (தீர்த்த)யாத்திரை போகில் எனக்குண்டாகக் கிடக்க அற்ப சீவனும் இன்றே ஒழிந்தன்றோ என்றுபின்னும் யாதுசென்னாள காந்தாரி.

-------
60-வது ஏடு முன்பாதி இல்லை.


எ.து. சன்மாந்திரத்திலே தன்மஞ் செய்தார்க்குத் தன்மமே கை கொடுக்கும். ஆதலால் இது பூர்வவிதி கண்டாய என்று பின்னும் யாது சொன்னாள் காந்தாரி.

குந்தியு மாதவனுங் கூறியகொன்[சொல்] மாறாதே
எந்தைநீ மாவிந்தம் ஏகுதியோ--கந்தமலர்ப்
பூந்தாராய் போகுதியோ வென்னாப் புலம்பினாள்
காந்தாரன் பாவை கலந்து. 84

எ.து. ஸ்ரீவாசுதேவர் பணியும் குந்தாதேவி பணியு மாறாதே போகின்றாய். அருவினையென் சொல்லைத் தவறியனறோ என்று தன செம்மலர்க்கண்ணருவி சோரத் தன்மயுத்திரனுக்கு விடை கொடுத்தாள் காந்தாரி.

அப்பொழுது தம்பிமாருந் தானும் மாதாவை நமஸ்கரித்து மீண்டும் வந்து சபாமண்டபததிருந்து மந்திரிகள், புரோகிதர், சேனாபதிகள மற்றுமுள்ள படைத்தலைவர், மண்டபத் தலைவராயுள்ள சாமந்தர்கள் இவ்வனைவர்க்கும் பரீட்சித்துவைக் காட்டிக் கொடுத்து, உச்சியை முகந்து கொண்டு 'கா' அத்தினாபுரி அரசு[காடத்தின்] முறைமை குன்றாதே நடத்துதி என்று சொல்லித் தழுவிக் கொண்டு போகலுற்றபொழுது நகரிசனங்கள யாது செய்தார்.

மன்னரெழுந்தருள மாநகரியோ ரெல்லோரும்
என்னதாய் வாழ்வோ மெனவிரங்கிப்-பின்னை
அகநோவ வாய்விட்டரற்றினார் தங்கள்
முகமோதி கைசலிக்க முன். 85

அன்றியும்

மன்ன ரெழந்தருள மாநகரத் தொரெல்லொரும்
இன்னபடி சொல்வோ மென்னாதே--தன்னுயிரைக்
கூடிருக்கக் காலன் கொடுபோவ தேதுடன்கொண்
டாடலுற்றார் கைதலைமே லாய். 86

அன்றியும்,

அரசுதுறந் தாரணிய மைவருந்தா மேக
அரவண்[ம்] வரைகடல் போலாகி--அரவந்*
தலைசுமந்து மண்ணுளோர் தாம்தா மிரங்கி
நிலையழிந்தார் நெஞ்சத்துள் [†நின்துருகி] நின்று. 87

அன்றியும்,

அமரலோகத்தில் பண்டு தேவர்கள் அமுதங் கடைந்து ஆலித்தெழுந்த ஆரவாரமபோலப் புலமபா நின்றது அத்தின புரம் என்றவாறு. இவ்வகை நகரிசனம் புலம்புதலும், நகரியில் மகாசனங்கள் சோபங்கண்டு பரீட்சித்துவை நோக்கி யாது அருளிச் செய்தான தன்மபுத்திரன்

குருக்கள் குடிமுதலாங் கோவேந்தர்க் கெல்லா(ம்)
இருக்கையிது கண்டாய் என்றும்--பெருக்கத்தாய்
கண்ணாலே மண்ணுமிருங் காதலித்து காத்தளியாய்
மண்ணாளு நீதி மகிழ்ந்து. 88
-------------
* கற்பனைப்பாட்டு.
† இச்சீர் இருந்தவாறு எழுதப்பெற்றது.


இவ்வகை பரீட்சித்துக்கு அறிவுணர்த்தி இராச்சியம் கருகாமே, மன்மடந்தை லருந்தாமே இரட்சிக்கிறாயா? என்றுசொல்லிப் பின்சென்ற மகா சனங்களையும், மந்திரி, புரோகிதர் சேனாபதி தொடக்கத்தார் மற்றனைவரையும் நோக்கி யாது சொன்னான் தன்மபுத்திரன்.

தங்கள் நினைலெல்லாம் சொல்லி அருள்கின்ற
அங்கவரை எல்லா(ம்) அகமகிழ்ந்து--நீங்கள்
ஏகுமது வேண்டா எழில்நகரி எல்லாரு
போகுமின்க ளென்றார் புரிந்து. 89

இவ்வகை நகரிசனங்களுக்கு விடைகொடுத்து பரீட்சித்துவை அணைத்துக்கொண்டு [நா] டிக்கொள்ளத் தன்மபுத்திரன் சொல்லுவான் : மாசின்றி மச்ச, கூர்ம, வராக, நரசிங்க, வாமன, 1 ராமோ, 2 ராமச்ச, 3 ராமச்சவிட்டுணுவாய் அவதாரம் பண்ணி அருளிய ஸ்ரீ மாதவனுடைய ஸ்ரீ வைகுண்டமல்லது அறிவதில்லை. ஸ்ரீ வைகுண்டத்துக்குச்செல்ல நெறிகாட்டு மெனவுரைத்து அவர்களும், எங்களால் அறியப்பட்டது நீங்கள் வடக்கு நோக்கி வழிகொண்டு போமின் எனப், பாண்டவர்கள் யாது செய்தார்.

நெய்தற் றடமும் நெடுவயல்சூழ் நன்னாடு
மெய்தற்கரி தென்னவு மெய்தினார்--கொய்தமலர்
மாக்கங்கை சூடும் வளநா[ட்]டவுன்றன்னருளால்
கோக்கங்கை தானிழந்த குன்று. 90

எ.து. அனாதிகாலம் தவம் பண்ணி அசுவமேதம் பண்ணியும் விப்பிரதானம் பண்ணியும் எய்தற்கரிய வரை இடங்களும், நீந்தற்கரிய மாலியாறும் கடந்து சத்த விருடிகளால்
--------------
64-வது ஏடு இல்லை.
1. பரசுராமன். 2. தசரதராமன். 3. பலராமன்.


மதிக்கப்பட்ட திரிசூலபர்வதம் சார்ந்தாராகக் கருதுவது. அப்பொழுது ஆதித்திய பகவானும் யாது செய்தான்.

எழ்பொழிலு மேழ்பகலு மேழ்பரித் தேரோட்டிச்
சூழவருஞ் சூரியனு மோடித்-- தாழ்கடலுள்
காரிருளைக் காட்டிக் கடிதுடனே போய்வீழ்ந்தான்.
கூரிருளை மேற்போர்த்துக்கொண்டு. 91

எ.து. ஆதித்தனும் அத்தமன பர்வதஞ் சார்ந்தான். பாண்டவருந் துரோபதையும் திரிசூல பருவதஞ்சாருமளவில் ஆதித்தனும் நல்லிருள்படாமல் போர்ப்ப, இந்த நல்லிருள் யாமத்துச் சந்திரனும் வந்துதோன்ற, ஐவரும் ஒரு பளிங்குப்பாறையில் இருந்தபொழுது நித்திரைவராமல் ஒருவரை ஒருவர் முகநோக்கித் தங்கள் இராச்சியம் பல சொல்லுவது கேட்டுத் தன்மபுத்திரன் வீமசேனனை நோக்கி யாது சொன்னான்.

* நன்றியது பயக்கு ஞாலமது தன்னை
இன்றிவந்தே நீர்வளன்றுயர மெய்தாதே-- நன்றறியாப்
பாலகனைப் பாராள வைத்தோம் பணித்தாங்கே
(காலமதை உணர்ந்தேதான்) 92

வீமசேனனே போய் இராச்சியத்தினை இரட்சிப்பாயாகென்ன யாதுசொன்னான் வீமசேனன்.

† எம்பெருமா னேகு மிடமே எனக்காக
வம்பவிழும் கானே வளநாடு-- எம்பெருமான்
உம்பியர்க ளோடேகீர். 93
------------
67-வது ஏடு இல்லை.
* ஈற்றடி சேர்க்கை. † 3-வது அடி குறை. 4-வது அடி இல்லை.

இவர்களும் இப்பரிசே விண்ணப்பஞ் செய்யத் துரோபதையை நோக்கியாது அருளிச் செய்தான் தன்மபுத்திரன்

பாலைநிலமும் படர்காடும் பாறைகளும்
சேலுகளு மாறுந் திரியாதே --ஞாலத்துத்
தேக்குருதிச் சேயலைக்கும் சீர்கொளுவும் நன்னாட்டி(ல்)
மாக்குந்திபா லிருப்பாய் வாழ்ந்து. 94

என்பது இன்னமும் பல தீர்த்தங்களும் ஆடக்கடவோம் எங்களுடனே இந்த அருங்கானகமுங் குன்றுகளும் மால் யாறுங் கடந்து உழலவேண்டா நீபோய் அத்தினபுரம் புகுந்து குந்தாதேவியுடனே சுகித்திருப்பாய் ஆங்கென்ன யாது சொன்னாள துரோபதை,

கொல்லைவாகு கொழித் தன்னை சொற்கேட்டுச்
செல்வஞ் சிறிதாய்ச் சிறந்தாலும்-- சொல்லுங்காற்
றன்கணவன் சோறே தனக்கமுத மாதலால்
புன்கண்மை எய்துவரோ போய். 95

என்று இவ்வகை சொல்லிப் பின்னும் யாது சொன்னாள் துரோபதை,

எ.து.

ஐவீருஞ் சேரு மருஞ்சுரமே யன்னகரி
ஐவீரும் சொன்னதே யாமெனக்கு- வையகத்தோ
ரேசும்படியோ விருப்பே னிருநிலத்தார்
பேசும்படி இருப்பேன் பின். 96
-----------
[என்னை] சேர்க்கை.

எ.து. ஐவீரும் புக்கரு நகரியே எனக்கு நகரி, ஐவீரும் புக்க சுவர்க்கமே எனக்குச் சுவர்க்கம், ஐவீரும் புக்க கானகமே எனக்குக் கானகம், என்று பின்னும் கலிபுகுந்த காலத்து நீங்கள் இராச்சியந் துறந்து மகாவிந்தம போக யான் கன்ம பூமிபோகேன் என்று துரோபதை சொல்லிப் பின்னும் யாது செய்தாள்.

வெள்ளைநிறச் சங்கார்ப்ப வெண்டா மரைகண்மேல்
துள்ளிவரால் பாயுந் துறையன்ன -- புள்ளிருந்தே
மாங்கனிகள் கீறும் வளநாடொழிந்தைவர்
போங்கான லென்காலும் கோர்பூ. 97

நீங்கள் ஐவீரும் *ஒட்டச்சூதாடி உறைந்த கானகத்திலே பன்னீராண்டு கரந்துறைந்து ஓராண்டுங் கூடி அனுபவித்தேன். சுவாக்கபதிகளாக நீங்கள் அழகிய இராச்சியங்களை விட்டுப்போகையால் என்னைக் கன்மலோகத்திலே போயிருக்கப் பணிப்பது,

தன்மமோ என்று துரோபதை சொல்லிநிற்ப வீமார்ச்சுனர் நகுல சகாதேவர் யாது விண்ணப்பஞ் செய்தார்.

எம்பெருமான் எங்கட் கிசைந்தருளுங் குற்றேவல் ஏவியவர் செய்தால் இன்று எம்பெருமான் இராச்சியம் பண்ணுகிறது.

நாம மகாவிந்தம் போமளவிலிங்கு குற்றேவேல் செய்ய அடியோங்கள் வேண்டாதே. வாவென்று விண்ணப்பஞ் செய்யுமளவில் ஆதித்தன் யாது செய்தான்.
---------
* ஓட்டம் -- பந்தயப்பொருள்

சூரியஉதய வருணனை

மேற்கடலிற் றான்குளிக்க வெய்யோன் விரைந்துபோய்
கார்க்கடலின் கீழ்பாற் கதிர்விட்டான்-- பூக்கமல(ம்)
வண்டிரைப்ப மாமலர்கள் வாய்திறப்ப மண்ணுல
மெண்டிசையு நீங்கிற் றிருள். (98)

இவ்வகை ஆதித்திய பகவான் உதயஞ் செய்யப் பாண்டவருந் துரோபதையும் பர்வதங்களில் உள்ள தீர்த்தங்களை யாடிப் பின்னும் யாது செய்தார்.

சங்கரன் றன்சடையினின்றும்போய்த் தாழக்
கங்கைவழிந் திழிந்தவாரி மடுக்கண்டு-- பொங்கு
புனலிடையே யாடிப் பொருப்பிடையே போயினார்
கனவரை யோர்க்கடிகண்டாங்கு. (99)

இவ்வகை தேவேந்திரனுடைய கங்கைமடுக் கண்டு தீர்த்தமாடி ஸ்ரீகைலாச வாசியை* நமஸ்கரித்து,

"முகவன்பாற் சென்றடிபணிந் தாற்றாம லாங்கு"

எ.து. பாண்டவருந் துரோபதையும் பர்வதத்தின் பக்கத்தில் அரிய தாபத்துடனே ஆற்றாது வந்து கணபதிகோயில் கண்டு தம்பிமாரை நோக்கி யாது [சொன்னான்] தன்மபுத்திரன்

தெய்வமிதனை நாம் சிந்தித்துக் கைதொழுது
ஐய மறவழிகண் டாற்றலா--மெய்யே
.....மலான்பாலே தாம்பணிந்தால்
ஓங்குநெறி காணலா மென்று. (100)

-----------
71, 72 ஏடுகள் இல்லை.

எ.து.விக்கினேசுரன் நம்மை எல்லாமவனைத் தோத்திரஞ் செய்து வணங்கினால் நமக்கு நெறிகண்டு இளைப்பாறிப் போகலாமென்று மவனை ஐவரும் சென்று யாது சொல்லித் துதித்தாரோவெனில்

சீராருந் திருமடந்தை
...........................................................
சடையாற்கு நேரிழையாளு [வந்தளித்தகரி] முகவா
கணபதியே உனக்கபயம். (101)

அன்றியும்

வஞ்சமுலைப் பேயி னுயிருண்டு மருதிடந்து
நஞ்சரவத் தாழ்கடலிற் றான் துயின்றும்-- நஞ்சரவ
னடம் பயின்று நந்தன்மனை வளர்ந்துங்
கஞ்சனைக் [காய்ந்த] பதியே உனக்கப யம். (102)

அன்றியும்

மறப்பதன்றிஎப்பொழுது மதுதும்பை பலகொண்ட
சிறப்புக்கள் சிந்தனையாற் செய்வோமைப் பிறை தும்பை
அரவினொடு பெரும்புனலுஞ் சடைக்கணிவோன்
திருமகனேகணபதியே உனக்கபயம். (103)

அன்றியும்

ஆரமிக வெடுத்தணைத்து அன்னையென்றும் பேச்சி
[கோர]முலைவாய் வைத்துண்ட கொடுங்குழவி தன்மருகா
பாரொழிந்து பஞ்சவரோ பாஞ்சாலி யோடும்வந்தோம்
[தேருநெ]றி ஈதென்னாக் கணபதியே உனக்கபயம். (104)

என்றிவ்வகை பாண்டவர்கள் துதி செய்ய மற்றவர் சுவாக்கத் திருட்டியனாய் அவர்களுக்கு முன்னின்றருளி விக்கினேசுரன் யாது அருளிச் செய்தான்.

கணவன் [முதலைவருமே] கானகமெல் லாம்போய்
எனைஅளவு மெய்தநீர் வேண்டா--மனையவற்கு
இன்புறற் றிண்சுவாமி யானவ் விடத்தே
துன்புற் றிடர்தீர்ந் திரு[நீர்சூழ்ந்து]. (105)

எ.து. நீங்கள் ஆரணிய வாசிகளாய் மலையினும், கானிலும் உழலவேண்டாம் நாம் ஐந்துபேர்க்கும் பரம சுவர்க்கமாகப் பூசிக்கத்தக்கதாகத் தருவோம். நீர் எங்கும் போகாதே இனிதிருப்பீராமின் என்று விக்கினேசுரன் அருளிச் செய்யத் தன்மபுத்திரன் யாது விண்ணப்பம் செய்தான்.

கலிபுகுந்த காரணமே கார்வண்ணன் கழிந்தான்போ
யரசுகை விட்டோம் போந்தோம்--வலக்கையர்
விந்தத் தடவரையை யாங்கள் கடிது
வரவருள்வா யாக கடிது. (106)

எ,து, துவாபரயுக மொழிந்து நீங்கிக் கலிபுகுந்ததென்று ஸ்ரீ வாசுதேவர் பார்துறந்து வைகுண்டத்து எழுந்தருளினார். அடியோங்களும் ஸ்ரீ நாராயணன் பணித்தருளின வரம்பிழையாதே மகாவிந்தம் போகப்புறப்பட்டோம்.

பூலோகத்துப் பஞ்சபாண்டவராகின்றோம் யாங்கள் கலி புகுந்தவாறே எங்கள் அரசு துறந்து இராச்சியம்விட்டு மகாவிந்தம் போக விடை கொண்டுவந்தோம்.

நின் திருமலையிலே அனேகந் திறக்கப்பட்டு வழிகாணாது உழன்று திரிகின்றோம், எமக்கு இந்த வரைகடந்து போகப் பிரசாதித் தருள்வாயாகென்ன, விக்கினேசுரனுக்கு அதிட்ட [ததுட்ட]னாய் நீங்கள் வடக்கு நோக்கி இமமலை கடந்து
போமின் என்று நெறிகாட்டி ஆச்சரியமாயினான்.

அப்பொழுது பாண்டவருந் துரோபதையும் யாது செய்தார்

கரிமுகவன் தன்னருளாற் கார்வரையை நீந்தி
அரியவன மெல்லாம்விட் டங்கோர்--பெரியதொரு
தேயத்தின் மிக்க திருக்கடையி னுட்புகுந்தார்
காத்திருந்தார் தெய்வக் கடை. (107)

எ.து. இமயகிரி பர்வதத்தைக் கடந்து சுரோணிதமென்னும் பர்வதத்தின் மேலே எழுந்தருளி இருந்த அபிஷேக பாலன் கோயில்கண்டு ஐவருஞ் சென்று துதிசெய்து வலமாக வந்து அபிஷேகபாலனும் பிரத்யக்ஷமாக உங்களுக்கு வேண்டும் வரம் என் பக்கலில் வாங்கிக்கொள்ளும் என்னப் பாண்டவரும், தம்பிரானே எங்களுக்கு வரமாவது,ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ பாதங்களைக் காண்கிறதே கண்டாய். எங்களுக்கு வரமென்னும் அபிஷேக பாலனும் மிகப் பிரியனாய் "சுரோத்த கிரிபர்வதத்தை" அடைந்து வழிகாட்ட அனுக்கிரகம் செய்தருளினான்.

அப்பொழுது பஞ்சபாண்டவர்களும் வடக்கு நோக்கிப் போய் காலபர்வதத்தைக் கண்டு வானவர் உறையும் பருவதமிது காணுமென்று தன்மபுத்திரன் கூறவும் பருவதத்தின் மீதேறி அங்குள்ள தீர்த்தங்களையும் ஆடிப்போகப் பின்னையாது கண்டார் பாண்டவர்கள்

எண்ணான்கு யோசனையி னீளமக லத்தால்
எண்ணான்கு சூழுமியல் புடைத்தாய் -- கண்ணினாற்
காண்பார் தமக்கினிதாய்க் காட்சியினாற் காட்டிற்றே
மண்பாலு மாநகரந் தான் (108)

-------
78-வது ஏடு இல்லை.

எ.து. காந்தருவ ராசன் நகரி எண்ணான்கு யோசனையுடைத்தாகிய நீளமும் அகலமும்,

…………. ……… த்,
தென்கொ லோவிண்ணடைய.................................
அற்றனர்கொ லெண்ணாங் கொருநொடியின் வந்தார்
அற்றமது கொதிப்பா னாங்கு. (109)

எ.து. மேகராசன் என்னும் நகரத்து வாதராசன் பாண்டவரும் துரோபதையும் கண்டு இவர்கள் பூமியில் வாழும் மனிதர், தேவர்கள் வாழும் கோநகரத்துக்கு வந்தார்கள். இவர்களை நாம் சென்றறிய வேணுமென்றும் கதுமென எதிரே வந்து யாது சொன்னான் மேகநாதன்

பாண்டவருஞ்சென்று பணிவரையி னன்னெறிகண்
டீண்டின்வருவா ரெதிர் 3விளங்கி- (1யாண்டுபல)
மந்திரங்க ளொத்த மதியாலே வந்தணைந்தார்
2செங்கதி(ரோன்) முன்னினத்தே தான். (110)

இவ்வகை மேகநாதன் சொல்லத் தன்மபுத்திரன் யாது சொன்னான்.

5எஞ்சா தெதிர்4 விளங்கி எம்மை வினவுதியோ
பஞ்சவரோ நாங்கள் பகருங்கால்- அஞ்சவரு
நாடிந்த அவனி யெல்லாம். (111)

செய்யத்தொடங்க வேணுமென்ற அனாதிகாலமுன்னால் தேடித் திரிகின்றேன் யுத்தத்துக்கு ஐவீரும் ஒருப்படுவீரா மென்று மேகநாதன் பரீட்சித்துக்குச் சொல்லுவது கேட்டு யாது சொன்னான் தன்மபுத்திரன்.
----------------
80-வது ஏடு இல்லை. 1,2 சேர்க்கை. 3,4 விளங்கி--மூலபாடம்
5. குறைப்பாட்டு.

அரசுதுறந் தாரணியம் ஐவோரும்; போந்தங்
கொருவரையுங் கொல்லா துயர்விரதம்- பெரிதுடையோம்
பேணாமை யானீ பிறிதொன்று சொல்லிடினுங்
கோணாமை எங்கள் குணம். (112)

எ.து. அரசு துறந்து இவ்வடிவுகொண்டு போந்தோம் நாங்கள் கொண்ட விரதத்தால் இப்பொழுது நெறிகளோடு போம் எம்மை எல்லாரும் சேயின் உடன் பட்டோமென்று தன்மபுத்திரன்சொல்லி வீமசேனனை நோக்கி யாது சொன்னான் மேகநாதன்.

தருமந்தானிற்கத் தடுத்தாண்ட மைமிக்க
குருபதியைக் கூர்வயிரத் தண்டால்-- திருகியொரு
நூற்றுவரைக் கொன்றாய் நொடிவரையி லென்னோடு
போர்க்குறிமி னென்றான் புகன்று. (113)

இவ்வகை மேகநாதன் கூறக்கேட்டு வீமசேனன் யாது சொன்னான்.

மேகநாதன்சொல்ல விடம்போல விறல்வீமன்
ஆகத்துப்பட்டாங் கழுந்தாமுன்- மேகத்
தத்திங்கள் வெண்குடையான் தன்னருளா னோக்க
†முத்திங்க ளாகு முகம். (114)

எ.து. மேகநாதன் சொல்லிய சொற்கேட்டு நெருப்பெழ விழித்தும் அங்குநின்ற தோர் வடவிருக்ஷத்தைப்பற்றி நோக்க தன்மபுத்திரன் [*தூரதிருட்டியினால்] நோக்குதலும் அப்பொழுது யாது நிகழ்ந்தோ எனில்
------------
*ரோஷகிருட்டினால் மூ.பாடம் † முத்தினங்கள் - சுவடி

பாம்பைக்கருடன் படஞ்(சு)ருக்கினாற்போலக்
காம்பணைத் தோள்வீமன் தன்னைத்--தேம்ப
நயனத்தால் நோக்க நறும்பாதம் பாத்து
வயனத்தால் மாநிலத்தான் மற்று. (115)

எ.து. ஸ்ரீவைகுந்ததேவன் மாநாகத்தைப் படஞ்சுருக் கினாற்போல வீமசேனன் கோபாக்கினியைத் தன்மபுத்திரன் நயனமாகிய சொல்லால் தணிந்தான் என்றவாறு.

அப்பொழுது மேகநாதனை நோக்கி வீமசேனன் யாது சொன்னான்.

குருக்கள் குடிப்பிறந்தார் கொண்ட விரதம்
நெருக்கிடினும் நின்னொப்பார் வந்து-- செருக்கிடினும்
(சீ)றுவதொன்றில்லையால் தேர்வேந்தே எம்பெருமான்.
கூறுவதே எங்கள் குணம். (116)

எ.து.யாதே யாயினும் எங்கள் வம்சத்தார் கொண்ட விரதம், நின்போலார்வந்து [நெருக்கிடினும்] மீதூர்வதில்லை. எம்பெருமான்; தன்மபுத்திரன் பிரசாதமல்லது மற்றொன்றுங்கடவோம் அல்லவென்று வீமசேனன் சொல்லக்கேட்டு அருச்சுனனை நோக்கி யாது சொன்னான் மேகநாதன்;.

விண்ணவற்காய்த் தானவரை வென்றடர்ந்த வேல் விசயன்
ம(ண்ணக)த்து மாபாரதம் பொருதாய்--கண்ணகத்து
மைத்துனனே மாலுமக்கு வந்தொருகால் வரமருள
வித்தகத்தை என்மேல்விடு. (117)

எ.து. தேவராசனுக்கு மகனாகிய இரணியபுர வாசிகனைக் கொன்றாய். நீ என் பழம் பகைஞன் ஆதலால் நாராயண மூர்த்தி நிற்கையால் நான் மெய்தூர மாட்டாதிருந்தேன். நான் இன்று உன்னை ஏகாநதத்துக் கண்டேன். என்னோடு யுத்தம் செய்தியோ என்றும் யுத்தம் செய்யாயாகில் உன்னைப் பிடித்துக் கொன்றுவிடுவேன் என்றும், மேகநாதன் கூறக்கேட்டு அர்ச்சுனன் யாது சொன்னான்.

நேர்ந்த சிலையழியா நின்னைப் போலாகாது
கூச்சமை செய்யார் குருகுலத்தார்-வாயினாற்
பேணித்தருமன் பெயர்த்தொன் றருளுமேல்
காணத் தகுமென் கருத்து. 118

யுத்தம் செய்யாமைக்கு விரோதங் கொண்டேன் ஆயினும் உன்பொருட்டுத் தன்மபுத்திரன் பிரசாதம் பெறில் நீ சொல்லுகிற சேவகம் அறிந்து விட்டொழிந்தேன் என்று. கூறிகளை, அவமதித்துக் கூறினேன் ஆதலால் என்னோடு நின்று அமர் செய்ய அஞ்சினார்கள். நீ ஆகிலும் நின் சேவகத்தைக் காட்டுதி என்று மேகநாதன் கூறக்கேட்டு யாது சொன்னான் நகுலன்.

தங்கள்பணி நோக்கி தானவன்சொல் நோக்கி
வெங்கோபந் தன்னை விட்டொழிந்து- கங்கைத்
திரைபார்த்துப் போய்வசனம் சொல்லைக் குருநாட
னுரைசுருங்கு தென்றா னுணர்ந்து. 119

எ.து. மேகநாதன் கூறிய சொற்கேட்டு எழுந்த கோபாக்கினியைத் தன்மபுத்திரனென்னும் கிருபாசமுத்திரத்தாற்றணிந்து நகுலன் ஒன்றை உரையாதே நிற்ப சகாதேவனை நோக்கி யாது சொன்னான் மேகநாதன்.

கருவேந்தி மேகங் கருவரைமேற் பெய்ய
மருவேந்திச் சென்று மண்டுங்- குருவேந்தா
கோக்குமரா நீதான் குறித்தொருகால் வாளமருட்
டாக்குதியோ வென்றான் சமைந்து. 120

------------------------------
85-வது ஏடு இல்லை.

எ.து. யாவரும் தேவாசுரர் என்னுடனே யுத்தம்செய்து வென்றாரில்லை பண்டொருகாலத்துத் தேர்வே....

அன்றியும்,

ஐவீருங் காக்கின்ற ஆரமுதமாங் கதனை
கையாலே தீண்டிக் கருங்காகம் -மெய்யதனைத்
தீண்டுமோ வென்றழுதாள் தீயவினை தீண்டும்
பாண்டவர்க ளென்றாள் பணிந்து. 121

எ.து. ஐவரும் அருந்துகின்ற ஆரமுதத்தினை ஒருகாகம் அருந்தக்கண்டு நிற்பதோ என்று துரோபதை பிரலாபியா நின்றவிடத்து தன்மபுத்திரனை நோக்கி யாது சொன்னான்
வீமசேனன்.

தன்மன்முக நோக்கித் தம்பியரை நோக்கி
உருமதிர வுற்றெழுந்தங் கோடி- செருமனத்தால்
மாமலையின் மீதேறி யொருமரத்தை வாங்கினான்
(*காமர்) தோள் வீமன் கருத்து. 122

எ.து. தன்மபுத்திரனை நமஸ்கரித்துத் தம்பியரைக் கடைக்கணித்து ஒரு வடவிருக்ஷத்தைக் கிழித்துக்கொண்டு வடவாமுகாக்கினிபோல் மேகநாதனை அடர்ந்து சென்றழித்துப் பின் யாது செய்தான் வீமசேனன்.

பொருப்பு நெருப்பெழ வகிர்த்துப் பொங்கி அச்சுதனை, ஆதிவராகனனை, அநந்தசயனனை, பரந்தாமனை பரஞ்சுடரை, ஸ்ரீதரனை, தங்கள் சிந்தையுள்ளே வைத்து கோமேதகமென்னும் பருவதத்தைச் சென்று எய்தி அதன் மேலுள்ள தீர்த்தங்களையும் விரும்பி ஆடியதில் வாழ்கின்ற இருடிகளைக்கண்டு நமஸ்கரித்து அங்கு நின்றும்போந்து வடக்கு நோக்கிச் செல்லா நின்றார் குருகுல வேந்தா என்றவாறு.

---------------
87 & 88-வது ஏடுகள் இல்லை. * காமருவு- மூலபாடம்.


கார்மேக வண்ணன் கழலிணைதான் சிந்தித்துக்
கார்மேக வேனங் கனவரைவாய்ச்--சார்மேவும்
பன்னரிய காதம் பலவுஞ்சென் றெய்தினார்
மின்னரிபோல் வேலார் விரைந்து. (123)

இவ்வகை பல மாலவரைகளும் பல தீர்த்தங்களும் ஆடிப் பற்பமராமென்னும் பர்வதத்தையே நிதம் தேவர்கள் விரும்பி ஆடும் தீர்த்தங்களைத் தாங்களும் விரும்பி ஆடி அதன்மேலுள்ள அஷ்டத விருட்சங்களைக் கோர்[வை] பொன்னோடு இரும்பையும் போதலால் மின்னிடையைக் கொண்டு போவான்றன்னைக் கொல்லாமல் காப்பவனுக்கு வீரனைக் கொல்வதோ விடுவதோ என்று தன்மபுத்திரனை நோக்கி அர்ச்சுனன் சொல்ல யாது சொன்னான் வீமசேனன்.

நிருபதிகள் நின்னொப்பார் நீணிலத்தி லுண்டோ
நரபதிகள் நாடுங்கா னண்ணித்--துருபதையை
கொண்டேகக் கண்டுநின்ற கோமானே நின்னையொப்பார்
உண்டோ வுலகத்தி னுள். (124)

எ.து. நரபதிகள் நின்னோடு ஒப்பார் நானிலத்திலர் என்று அருச்சுனனைத் துதித்துச் சொல்லித் துரோபதையுங்கொண்டு சித்தர் ஆசிரமம் புகுந்தார் பாண்டவர்கள், என்றவாறு.

மேகநாதன் யுத்தமுடிந்து முற்றும், இவ்வகை கந்தர்வர்களை விட்டு, அங்கு நின்றும் துரோபதையுடன் கொண்டு பஞ்சபாண்டவர்கள் யாது செய்தார்.

நெறியி னோடுமரங்கள் நின்றுதழை கின்றீர்
வெறிகொள்ளும் வெந்தழலே வீசச்--செறிகொள்
கொடிப்பவளந் துன்னிய குன்றிடையே நின்றார்
அடிப்பவளம் போற்சிறப்ப வாங்கு. (125)

எ.து. அங்கு நின்றும் போந்து பவளம் என்னும் பர்வதம் சார்ந்தார். அப்பொழுது அந்த பர்வதத்தின் கிரணங்களையும், கண்டதன் மேலுள்ள தீர்த்தங்களை விரும்பியாடி, அங்கு நின்றும் வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர்கள் என்றவாறு.

சாகரங்க ளேயுகந்து தண்ணீர்கை யாற்குடித்து
ஆகமங்க ளோதி அறிவறிந்து--வேகத்தால்
நீலநெடு வரைமேல் மேவினார் நீணிலத்தில்
கோலநெடுந் தேவியுடன் கொண்டு. (126)

எ.து. சாகரமே ஆகாரமாகக்கொண்டு தண்ணீர் பருகி வெங்கதிர்க் கிரணங்களால் வேவப்பெற்று விருடசங்கலெல்லாம் வற்றிக்கிடக்கின்ற கானகத்தூடே பாதங்களிலே பரலுறைப்பச் சென்று நீலமென்னும் பர்வதத்தைக் கண்டு அதன்மேலுள்ள தீர்த்தங்களில் விரும்பியாடி, அதனையுங் கடந்து வடக்கு நோக்கி போயினார் பாண்டவர்கள், என்றவாறு.

......யுங்கண்டு அங்கு நின்றும் வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர்கள் என்றவாறு.

மாதவனைக் கேசவனை வாராழி மாயவனைச்
சீதரனைச் சிந்தையுற நினைந்து -- *போதித்துப்
புள்ளினங்கள் வந்துறையும் புட்கரணி நண்ணினார
தன்னினங்கள் தாரார் கடிது. (127)

இவ்வகை பல யோசனைகளெல்லாம் கடந்து சென்று ஐவரும் காணாமல் தாய் போய் மகளைச் சென்றெய்தி புட்கரணியின் பொலிவு எவ்வகையோ எனில்,
-----------
93-வது ஏடு இல்லை. *போதிற்று மூ. பாடம்.

கரும்புங் கதலியும் காற்கமுகும் தெங்கும்
நெருங்கும் பலாமரமு நீடி--மருங்கெழுந்த
மாதளையு மல்லிகையும் வாய்த்தமலர்த் தேன் சொரியும்
போதுகளும் பொய்கைப் புனல். (128)

அன்றியும்,

புண்டரீகப் பொய்கைப் புனல்ததம்பப் பொய்கை எலாம்
கண்டியம்பப் புள்ளினங்கள் காளைவரால்-- வண்டலரும்
செந்தாமரையே தலைக்* கணியச் சேர்ந் திலங்கும்
பைந்தாமரை மலரே ஆங்கு (129)

அன்றியும்,

நாரத்தை புன்னை நறுங்கொதுகு நன்செருந்தி
கார்வந்து சேருங் கனவரைமே-- லாயிரஞ்சேர்
சந்தனமு மஞ்சனமுந் தான் மறந்து காட்டிற்றே
அந்தமருஞ் சோலை மருங்கு. (130)

அன்றியும்,

கோகுலங்கள் பாடக் குதலைவாய் கொஞ்சுகிளி
ஆகமங்க(ள்) ஓதி அருவரைவாய்த்-- தோகை
மயிலினங்கள் கூத்தாட வான்கடுக்கை பொன்னே
வியலுளதென் நீயு மிடம். (131)
----------------
*தலைகணைய -மூ. பாடம்

எ.து. இப்பிரகாரங்களை உடைத்தாகிய புட்கரணியைக் கண்டு அதன்கணணே சத்திவிருடி என்னும் பேருடையான் இராசவிருடி தவசு பண்ணினவனைக் கண்டு பாண்டவருஞ்சென்று அவர் பாதம நமஸ்காரம் செய்து நிற்குமளவில் ஆதித்திய பகவான் யாது அருளிச் செய்தான்.

அருணனவ னன்றேக ஆதித்த னாங்கே
வருணன் திசை நோக்கி வந்து--தரணியோர்க்
கந்திப் பொழுதாக வாழ்கடலில் மூழ்கிடுகச்
சந்திரனுந் தோன்றினான் தான். (132)

ஆதித்திய பகாவானும் அத்தமன பர்வதம சார்ந்தான. அவ்வெல்லையில் சந்திர பகவானும் வந்து தோன்ற ஐவரும் துரோபதையும் இராசரிஷி யருகே நின்றார். அப்பொழுது இருடியும் சில புராணங்களை உரைத்து, இருக்குமளவில் தனமபுத்திரனை நோக்கி இராசரிஷி யாது சொன்னான்.

மன்னவா மாமுனியே வந்தபடி யேதென்ன
மன்னவனு மாமுனிக்கு வந்த வகைசொல்லி--மன்னவனும்
அன்னங்கள் மேவு மணிமா மலர்ப்பொய்கை
தன்னைவின வென்றான் தான். (133)

எ.து. தனமபுத்திரனை இருடி பார்த்து நீங்கள் போந்தது ஏதென்றான். நாங்கள் பாண்டுவின் புத்திரராம், தன்ம புத்திரர், விமார்ச்சுனா, நகுல சகாதேவர் துரோபதையா கின்றோம். யாங்கள் துவாபர யுகம நீங்கி கலி புகுந்தவாறே இராசசியந் துறந்து மகாவிந்தம் போவது பொருட்டாக ஸ்ரீவாசுதேவன் பணியாற புறப்பட்டோமென்று, தனமபுத்திரன் சொல்ல இருடி யாது சொன்னான்.

மேகம் பொழிந்த வியன்சார லிற்பொய்கை
ஆகுமிது தன்னி லழகாக--நாக
கன்னியர்கள் வந்து கலந்தாடுந் தீர்த்தமிது
மன்னவனே என்றான் மகிழ்ந்து. (134

நாக கன்னியர்கள் அன்பதினாயிரர் வந்து தினந்தோறும் தீர்த்தபானம் பண்ணிப்போகிற புண்ணிய தீர்த்தமாகியது மகா தீர்த்தங் கண்டாய். நாக லோகத்தின்கண் நின்றும் வந்து தரணியைக்குறுகி ஆடையும் ஆபரணங்களும் களைந்து தீர்த்தமாடிப் பழந்துகிலுடுத்துப் புனை இழை புனைந்து மகா இருடிக்குத் தானஞ்செய்து, தங்கள் இனிது பேசிநின்ற நாக கன்னியரைப் பஞ்சபாண்டவர்களுக்குக் காட்டி, மற்றவர்களும் கன்னியர்களைக்கண்டு காட்சிசெய்து நிற்குமளவில், கன்னியர்களுக்குப் பாண்டவர்களைக் காட்டி இவர்கள் சிலர் மாண்டவர் போலிருந்ததெனத் தங்களிலே பேசி அடுத்து நின்று சொல்லி யாது செய்தார்,

மண்ணிற் பிறந்த மனிதர் வரவரிதாம்
நண்ணத் தகுவரோ நற்பொய்கை -- நண்ணினாங்
கேட்டறியோ மென்று கிளிமொழியா ரெல்லாரும்
வாட்டமின்றி எய்தினார் வந்து. (135)

இந்தப் புட்கரணியினகண் மாண்டவர் யாவரும் வரவு அரிது, இவர்கள் இராக்கதரோ, க்ஷததிரியரோ, வித்தியாதரரோ, மனித்தரோ என்று அறிந்து போவோம் என்று அவர் களமாடெய்தி நின்று யாது சொன்னார் கன்னியர்கள்

எந்நாட்டு மன்னவரே நும்மூரேது பேரேது
இந்நாட்டி னீர்வந்த காரணமென்--மன்னாட்டி
எட்டனையும் குன்றா தெடுத்துரைமி னென்றுரைத்தார்
மட்டவிழும் பூங்குழலார் வந்து. (136)


எ.து. நீங்கள் யாரோ நும் ஊர் எது பேர் சொல்லுமின், இந்த மாதர் யாரென்ற கன்னியர்கள் வினவத் தனம புத்திரன் யாது சொன்னான்.

ஏந்திழையீ ரெம்மை வினவுதிரோ இங்குத்தான்
வாய்ந்த குருக்கள்வழி வந்தோம்--ஏந்தியசீர்
பாண்டவரும் பாஞ்சாலி பின்னின்றாள் பாரதற்கிங்
கீண்டியமா விந்தம்போ வோம். (137)

எ.து. நாங்கள் குரு வம்சத்துப் பாண்டுபுத்திரர், பஞச பாண்டவற்கின்றோ மற்றிவளும் பாஞசாலன் பயந்தாள் துரோபதையாகின்றாள் யாங்கள், தன்மராசசியம் செய்யா நின்றகாலத்து துவாபர முடிவும், கலியுகத்தலையும் உலோகம் சத்திய விரதம குன்றிப்போய்ப் பரந்து வருவது கண்டு ஸ்ரீ வாசுதேவன் பணிப்ப இராச்சியந் துறந்து மகாவிந்தம் போகின்றோம் என்று தன்மபுத்திரன் சொல்லக் கேட்டுக் கன்னியர்க்ள யாது செய்தார்,

பஞ்சவர் நீராகில் பார்த்தன்தா னார்கொலொ
வெஞ்சமரில் அஞ்சாத வீமனென்று--அஞசாது
1போகுறியு மாற்ற மெடுத்துரையு மென்றுரைத்தார்
2மாற்குறியுங் கண்ணாள் மகிழ்ந்து. (138)

வீமனிவன் காண் விசயனிவன் காணு[ம்]
நாமத்தருமன்றா னான் காணும்--சேம
இரட்டையர்க ளிங்குநின்றார் ஏந்திழையீர்காணு
3மட்டாலி யாம்வந்து வாத்து[4வாறு], (139)
-------

1,2 இவ்வடிகள் இருந்தவாறே எழுதப்பபெற்றது.
3 ஈற்றடி சரியாக இல்லை. 4. வாறு சேர்க்கை.

எ.து. வீமசேனனிவ னென்றும் இவற்கிளையான் அர்ச்சுனன் இவன் என்றும் இரட்டையராகின்றார் இவர் என்றும் இவன் அனையவற்கு மூத்தான் தன்மபுத்திரன் ஆகின்றேன் யானென்றும் பத்தினியாகிய துரோபதையாகின்றாள் இவளென்றும், வேறாகக் கூறக்கேட்டுக் கன்னியர்களும் பெரிய காதலொடு யாது சொன்னார்.

செங்கோல் திசைநடப்பத் தேர்வேந்தர் போற்றி செய
அங்கனில முற்றுமரசாண்டு--சிங்கா
தன்மதனில் வீற்றிருந்தார் [*தார்வேந்தர்] மற்று
வனமதனில் வந்தாரோ நின். (140)

பொன்னங்கழல் மாப்போலும் நல்ல திருவடியே எம்முடைய சொல்.

எ.து.திரிபுவனமெல்லாம் இராச்சியம் பெறினும் வேண்டாம். ஸ்ரீவாசுதேவன் ஸ்ரீ பாதகமலங்களே எங்களுக்கு இராச்சியம் என்று தன்மபுத்திரன் சொல்ல, இவர்கள் நற்சுற்ற மனிதராய் இருந்ததென்று சாலவும் கால் பெருகியாது செய்தார் கன்னியர்கள்.

போதுமினி நாமென்று பொற்கொடியார் தங்களிலே
ஏதம்பலவு மெடுத்துரைத்துச்-- சோதி
மணிவிளங்கித் தோன்று மலர்ப்பொய்கை நின்று
நிலைதுளங்கிப் போயினார் நின்று. (141)

இவ்வகை நாக கன்னியர் போயினபின்னை பாண்டவரும் இராச…. . நமஸ்கரித்து விடைவேண்ட மகா இருடியாது அருளிச் செய்தான்.
-------

*சேர்க்கை. 101-வது ஏடு இல்லை.


மற்றினமலர்ப் பொய்கை நின்றுவடக் கேகுதிரேல்
வெற்றரவின் வாய்தனில் மேவுதிரேல்- உற்றவற்கு[ம்]
நான்முகற்கு [*மற்றவர்க்கு] நன்றாய்த் தவம் புரிவான்
மேல்வருவ தேஉரைத்தேன் மீண்டு (142)

எ.து. இந்தப் புட்கரணியினின்றும் வடக்கு நோக்கிச் செல்லுவீராகில் இவ்விடத்துக்கு மூன்று யோசனை சென்றால் ஒரு மகா நாகமுண்டாம். அதன்வாயில் அகப்படுவீராகில் பிழைப்பில்லை என்று மகாவிருடி சொல்ல இருடியை நமஸ்கரித்து வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர். என்றவாறு.

இவ்வகை பாண்டவர் மூன்றுயோசனையும் நடந்துசெல்ல மகாவிருடி சொல்லிய மகா நாகத்துக்குப் பாண்டவரும் துரோபதையும் சாரநிற்பக் குமுதபர்வதமென்னும் மலையருகும் மகாநாகம் பூமிமேற் கிடப்ப ஆகாசமுட்டின் வயிறும் வாயுமாய்க் கிடந்து புகையும் இரைத்தலும் வேறுபோக வழி காணாது இருடி சொன்ன மகாநாக மிதுவென்று ஐவருந் துரோபதையும் நின்று விசாரித்து நாகத்தைப்பார்த்து நிற்குமளவில் மகாநாகமும் பாண்டுவின் புத்திரரைக்கண்டு நாவளைத்துக் கொட்டாவி விட்டு எரிபோன்ற நயனங்களால் நோக்கிக் கிட்டவர நிற்ப, பாண்டவர் யாது செய்தாரோ எனில்,

அறுவரும் தன்வயிற்றி னுள்ளே புகுந்திட்டவர்கள்தன் னுயிரை
அய்வரும் போய்ப் புரத்தாயினார் அவ்வனத்தில் முனிவன்
செப்பவரும் சாபம் சிதைந்து. (143) --------
* மற்றவர்க்கும் சேர்க்கை.

எ.து.அறுவருந் தன் வாயினூடு வழிபோமளவில் தம்பிரானை அறிந்து வயிறு கிழித்து அப்புறத்தே உருவினார் பாண்டவர் என்றவாறு,

அரவ முருமாறி அந்தணனாய் வந்து
பாவிப்பணிவானைப் பார்த்து--விரவியநீர
பேரின்பமெய்தும் பெருந்தவத்தோர் நந்தமக்கின்
றாரென் றுரைப்பாய் இனி. (144)

எ.து. பாண்டவர் வயிறுகிழிய மகாநாகம் சாபம் நீங்கிப் பிராமணனாக வேஷமாய்த் தன்மபுத்திரனுளளிட்டாரை வணங்கிநிற்ப இவர்கள் அவனைப்பார்த்து நீர் ஆரென்று தன்மபுத்திரன் வினவப் பிராமணன் யாது சொன்னான்.

மாமுனிவன் தன்னருளால் வந்தின்மலர்ப் பொய்கைதனில்
நாள்வழுவா வண்ணமலர் நானெடுப்ப-- னாளொருநாள்
தாமமெடுத்து வரத்தாழ்த்த தென்னைத்தான் முனிந்து
சாபமிடக் கண்டழிந்தேன் காண். (145)

எ.து. பிரானே தன்மபுத்திரனே முன்னாள் ஒரு மகா விருடி நாராயண பகவானைப் பூசித்ததிருப்பானுண்டு. அவனுக்குப் பூசைக்குதவ நான் பொய்கையிலே மலரெடுத்துக் கொண்டுசெல்வேன். ஒரு நாளிலே சில கன்னியர்களைக் கண்டு பூசைக்காலத்துக்கு உதவ மலரெடுத்துச் செல்லாதே கன்னியர்களுடனே சுவர்த்தம் சொல்லித் தாழ்த்துநின்றேன். இருடியும் கோபித்து இத்தனைபோது தாழ்த்த காமக்குரோதியன்றோ என்று நீ அந்தப் பொய்கை இடத்துப் பெரியதொரு பாம்பாய்க்கிடவென்று சபிக்க நானும் அந்தச் சாபத்துடனே இருடியைப்பார்த்து நீ இட்ட சாபம் நீங்குவ தெப்படி என்று கேட்டேன்.


ஒரு நாளிலே பஞ்ச பாண்டவருந் துரோபதையும் மகா விந்தம் வருவார்கள். அப்பொழுது உன்வாயினூடு வந்து வயிறுகிழியப் புறப்பட்டபொழுது சாபம் நீங்குவதென்றும், அப்பொழு துனக்கு மோட்ச மென்றும் அருளிச்செய்தான். அந்தச் சாபம் இன்று உங்களாலே ஒழிந்தது. எம்பிரான்கள் என்றும் இவர்களை மிகவும் இரட்சித்தவர்கள் நீங்களன்றோ என்று துதித்துப் போயினார். பிராமணன் மற்றவனுக்கு விடைகொடுத்துப் பின் அங்குநின்றும் வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர்கள் என்றவாறு, அப்பொழுது,

குன்றகத்தின் மேலே குடபால் வடபாலாய்ச்
சென்று சென்றேறச் செல்வரிதாய்-- நின்றிருந்து
பன்னாட் பலகூடிப் பார்வேந்தர் சென்றடைந்தார்
முன்னோர் நெடுவரையின் முன். (146)

பலதிவசம் வழியில் தங்கிக் கிழக்கும் மேற்கும் இரு விலக்காய்க் கிடந்ததோர் பர்வதத்தைக்கண்டு போகலாவதோர் நெறிகாணாது ஏறவும், இழியவும் இடமின்றி விசும்பு முட்டிய பர்வதமாய்க் கிடந்த இதனைக்கண்டு தம்பிமாரை நோக்கி யாதருளிச் செய்தான் தன்மபுத்திரன்.

நீள்வரையால் மேலுயர்ந்து நின்ற வரையதனில்
வாள்விசயர் வீமர் வரவரிதாய்க்-- காளையர்காள்
கட்டுரைமின் என்றுரைத்தான் கார்வரைசூழ் நன்னாட்டை
விட்டுவரை சேர்ந்தான் விரைந்து. (147)

எ.து. தன்மபுத்திரன் தம்பிமாரை நோக்கி மனத்துயருற்று முகநோக்கிச் சொல்ல யாது செய்தான் வீமசேனன்.

எங்கோன்க ளார்ந்திட் டிடர்கூறத் தான்கேட்டு
இங்கேயோ யாமிருப்ப தென்றெழுந்து--செங்கமலக்
கண்ணன்றன் சக்கரமாய் கைதன்னைத் தியானித்துத்
திண்கமல மோதினான் சென்று. (148)

எ.து. வீமசேனன் கைத்தலமே திருமாலது சக்கரமாக வரைந்து பிரசாதித்துக்கொண்டு தன்கையாலே நெடுவரையை மோத,

[அம்]மலைகள் பொடியாகி நீரெழுந் ததுமன்றி
மண்ணதிர்ந்து மாமலைகள் தள்ளாடி--உண்ணடுங்கி
நாகலோ கந்துளங்கி நின்றுநடுங் கிற்றே
வேகமுட னடிகண் மிக்கு. (149)

எ.து.இவ்வகை சத்த சமுத்திரங்களும் கலங்கிற்று. பூலோக பர்வதங்களும் கலங்கி நடுங்கிற்று. பிரமலோகமும் அதிர்ந்திட்டது. அவ்வளவு *பருமனாய்க் கிடந்த குடிகன.......... வடிவுபெற்று வீமசேனனைத் திருவடிதொழுது நின்று யாது சொன்னான்.
-------
* பறுமாய்க்கிடந்த மூ. பாடம்.

தேவாசுரன் சினத்துடன்ற காலத்து மாங்கே
பூவாருஞ் சக்கரத்தாற் பொன்றினரைத்-- தேவர்கள்
வைகுந்த மாள்வதற்கு வைகுந்தனாங் கதற்கின்
றெய்தினார் சாபமிது. (150)

எ.து.தேவாசுரர் யுத்தம் பொருதகாலத்து நாராயண சுவாமி திருச்சக்கரத்தால் பட்டு அசுரரை யான் கொண்டு போய் ஸ்ரீவைகுண்டமேற்ற நாராயணசாமி முனிந்தருளி பர்வதமாய்..................பாய், ஆகென்று சாபம் பணித்தருளிய சாபம் மோட்ச எங்ஙனம் நீங்குவதென்று வேண்டிக்கொள்ள யாது அருளிச் செய்தான். பாண்டுவின் புத்திரன் வீமசேனன், ஸ்ரீ வைகுண்டத்துக்கு வருவன் அப்பொழுது நின்னை அவன் கைத்தலத்தால் மோதிடுவன், அப்பொழுது சாபம் நீங்குமென்று அருளிச் செய்தான். அப்படியிலே யான் மோட்ச மெய்தினேன் என்று நமஸ்கரித்து நிற்ப இருடி தனக்கு, விடை கொடுத்து அங்கு நின்றும் வடக்குநோக்கிப் போயினார் பாண்டவர் என்றவாறு. இப்பால் பெரியதொரு வனத்திடையே சென்றார் எங்ஙனமோ எனில்.

மூங்கில் மிடைந்தெழுந்து முப்பத்தைந்து யோசனைகள்
நீந்தற் கரிய நெடுவரைக--ளாங்கே
ஒருவகையாற் சென்றடைந்தா ரோங்குவரை யுச்சி
மருவினிய தோள்வீரர் வந்து. (151)

பேசு, நீ யார் தான் உனக்குப் பேரேது உன்னைச் சாபமிட்டார் ஆரென்று அர்ச்சுனன் கேட்ப, அசுவமுகி யாது சொன்னாள்.

தெய்வமுனி யைச்சென்று திருக்கைதனைப் பிடிப்பத்
தெய்வமுனியும் சினந் தெழுந்து-தெய்வ[பாவமது]
வாக்கினான் பாண்டவரை யந்தார் விசயனிது
நீக்குவா ரென்றா னினைந்து. (152)

எ.து. இருடி பகவான் மகன் 'அத்துமி' என்பான் விட்டுணுலோகத்து நின்றும் வந்தான், அவனை யான் சென்று கையைப் பிடிப்ப அவன் முனிந்து நீ அசுவமுகத்தியாய் வனத்திடை வாழ்வாய் என்று சபித்தான்.

அப்பொழுது சாபம் மோட்சம்வேண்டி நின்றேன், பாண்டு புத்திரன் மகன் அர்ச்சுனன் மகாவிந்தத்துக்கு வருவான். அவனை நின் கையாற் பற்றித் தழுவி உன் சாபம் நீங்கி மோட்சம் பெறுதியென்று தெய்வமுனி அருளிச் செய்தான்.
--------
109-வது ஏடு இல்லை.


நான் உன்னைத் தேடி உன் வரவு பார்த்திருந்தேன். அஙேகங் காலமுண்டு நின்னாலே மோக்ஷம் எய்தினேன் கண்டாய் என்று நமஸ்கரித்து நிற்ப அர்ச்சுனன் சொல்வான்*வாராய் அசுவமுகி நாங்கள் அனைவரும் போக என்னைய,
* * * * * * * *

இவ்வகைத் தன்ம்புத்திரன் உரைப்ப அனைவரும் அப்படியே துதிசெய்ய மற்றவள் அருந்துயரீந்து, பரமேசுரியிடம் பிரத்தியக்ஷமாக நோக்கி யாது அருளிச் செய்தாள் (என்னுடனே வேண்டும் வரம் வாங்கி)

என்னுடனே வேண்டும் வரம்வாங்கி இப்பொழுதே
பொன்னணிதார் மார்பா புகலுவீர்--மின்னிடையாள்
* வாக்கினாற் சொல்லவெங்கள் வைகுந்தம் சேரும்வகை
ஆக்குவாய் என்றா ரறிந்து. (153)
--------
111-வது ஏடு இல்லை. *வாற்றினால் மூ. பாடம்.

எ.து. பரமேசுரி என்னுடைய பக்கல் வேண்டின வரம் வாங்கிக்கொள்ளுமெனப் பாண்டவரும் மேகங்களுக்கு வரமானது ஸ்ரீ வைகுண்[டம்பெ]றுவதே என்று விண்ணப்பஞ் செய்ய மாகாளியும் அப்படியே ஆக்தென்று பிரியப்பட்டு, அவளை நமஸ்கரித்து வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர் என்றவாறு.

அப்பொழுது வனகானிடைவழியிற் றங்கி யாது செய்தார்.

வழியிற் சிலநாட்கள் வன்கானிற் றங்கிச்
செழுவரையிற் சென்றணைந்தா ராங்கே-ஒழுகிவரும்
கங்கைநீர் பாய்ந்துகளும் கார்வயல்சூழ் நன்னாடர்
சிங்கம்போல் வார்களும் சென்று. (154)

இவ்வகை சென்றும்,

*மாயூரபரவத மென்னும் வரைதிகையும் சண்பகமெங்
*கேயும்வளர் சோலை எழில்ழனப்பி-லந்தரமா
மாருதம்வந் தூடாடும் வாவியிடைச் சென்றடைந்தார்
பாரதங்கள் சொல்லிப் பயின்று. (155)
--------
* இவ்விரண்டடிகள் சீர் சரியாகவில்லை.

சிறிதிடஞ் சென்றவாறே ஒரு பொய்கையின்கண் பெரியதாகவும் புட்பங்களும் பல அருவியாறுகளும் உடையதொரு பொய்கையைக் கண்டு துரோபதையை நினைத்துச் சித்த சந்தாபத்துடனே யாது செய்தார் பாண்டவர்.

மணிவாரிப் பொன்கொழிக்கும் வானதிசூழ் நன்னாட[ர்]
அணிபொழில்சூ ழாற்றங் கரைமேல்--இணர்மலர்த்தார்
மாமுரசு முன்னுயர்ந்த மன்னவருந் தம்பியருந்
தாமிருந்தா ரரசின் கீழ்த் தான். (156)

இவ்வகை ஆற்றங்கரையையும் பொய்கையையும் கண்டு அதன் கரையில் பொலிவெய்தி நிற்பதொரு அரசின்கீழிருந்து யாது சொன்னான் தன்மபுத்திரன்.

பொய்கை யொருபாற் புனற்செருத்தி யொருபால்
நெய்தற் றடமொருபால் நீழலுட[ன்]--எய்தும்
சடைமவுலி தான்போகத் தக்கதே கானத்
திடைமருவும் பொய்கை இது. (157)

இவ்வகையே பொய்கையின் குணம் சொல்லியிருந்த போது அவ்விடத்து வாழ்வானொரு சிங்கிலி என்பானொரு மகாவிருடியைக் கண்டு நமஸ்கரிப்ப அவனும் இனிது பேசிச்சாகா, மூவா, பலமருந்தியிருக்கின்ற விருடி யாது சொன்னான்.

உள்ளவா கண்டுகந்தே னாகிலு மும்மைநான்
உள்ளவா கேட்குந் திறமுளதால்-- வெள்ளமீன்
மண்டிவயல் சேரு மாநிலத் தீரோவென்று
விண்டவன்றன் கேட்டான் விரைந்து. (158)

என்பது நீங்கள் பூலோகத்து மனிதர் போலிருக்கின்றீர் உங்கள் வரலாறு தெளியவுரையுமென்ன யாது சொன்னான் தன்மபுத்திரன்.

மாரிபெருக அறம்பெருக மண்முழுதும்
வாரிபெருக வளம் பெருக-- ஆரியர்கள்
நாவின்மறை பெருக ஞாலமுழு தாண்டிருந்த
தாவுபுகழ்ப் பாண்டவரோ தான். (159)

என்பது, மண்ணெல்லாம் வளஞ்சுரக்க அறம் வளரத் தன்மதானம் பண்ணாநிற்பத் துவாபரம் நீங்கிக் கலிபுகுந்தவாறே ஸ்ரீ வாசுதேவரும் வைகுண்டத் தெழுந்தருளிப் புகுந்தார்.

யாங்கள் ஐவரும் மாவிந்தம் போவதற்கு வந்தோம். இது எங்கள் வரத்து என்று தன்மபுத்திரன் சொல்ல மகா இருடியும் விதிபோலவானன்றோ, விதியை வெல்ல வல்லாரில்லை என்று சொல்லியிருந்த இடத்து யாது சொன்னான் மகாவிருஷி. நீங்கள் தளர் வெய்தி இருந்தீரோ, பசியுண்டோ என்ன எங்களுக்குப் பாகம் பண்ணியிடுகிறவள் துரோபதை என்பாள் வழியிலே நடையினால் தளர்ந்து மரித்தாள். அது கொண்டு மூன்றும் மூவரசமாயிருந்து ஆகாரங் கொள்ள அன்றித் தபித்தோம் என்ன விருடியும் விசாரித்துச் சாகா மூலபலங் கொள்ள அறிவீரல்லர் என்று, தன்னாச்சிரமமே கொண்டு போய் யாது செய்தான் இருடி.

வானின்ற மங்கையரைப் பார்த்தந்த மாவிருட
தானீன்ற ழைப்பறுவர் தங்காது--கானீன்ற
கற்பகத்தா னீன்ற கறிசோறுடன் றயிரும்
அற்புதமாக் கொண்டுவந்தா ராங்கு. (160)

எ-து. கன்னியர்கள் கறியுஞ் சோறுந் தயிருங் கொண்டுவந்த விடத்துப் பாண்டவரை (அ)முது செய்வித்திருக்குமளவில் ஆதித்தனும் அத்தமன பர்வதம் சார்ந்தான். அப்பொழுது மகா விருடியை நோக்கித் தன்ம புத்திரன் சொல்லுவான்.

மானத்தை இல்லாக் கலியால் மனைவிட்டுக்
கானத்தை யாங்கள் கடிதடைந்தோம்---ஞானத்தை
பேணுமாறு செய்யும் பெரியோனே மாலவனைக்
காணுமா றெங்கனே என்று. (161)

படர்சடைகள் தாங்கிப் பருவரையைச் சேர்ந்த
கடருமா றங்குட்ட மூன்றி---உடலின்
உயிரங்க வுன்னி ஒருநெறியே பார்த்தாலுந்
தெரியவரியான் காணென்றான் தேர்ந்து. (162)

எ,து. ஒரு கடகிய ஒருவன் சரிதாராய்த் தங்கள் மெய்யினும் அவனைக் காணுதற்கரிது கண்டாய் என்று பின்னும் சொல்லும் மகாமுனி.

அல்லும் பகலு மழல்கொண்டு நின்றாலும்
வெல்லும் பரியன்ன வேல்வேந்தே--நல்ல
திறமறிவார் சிந்தை தெளிவின்னா நிற்பானும்
அறியா னும்பற் குணர்ந்து. (163)

அன்றியும்,

வானவற்கும் காண்டற் கரியமலர்ப் பாதம்
தானவற்கும் காணாத் தகைமைத்தே--ஞானமிக
இந்திரனே நான்முகனே யீசனே என்றிவர்கள்
மந்திரித்துக் காணார் மரித்து. (164)

அன்றியும்,

ஓங்காரமாகி யுணர … ….. …. …. யானுமமைப் பலவுஞ் சொல்லி விலக்கினேன். நீங்களினி வடக்கு நோக்கிச் சிறிதிடம் சென்றவாறே, நெறிகாணலாம் என்று இருடி சொல்ல ஆதித்தன் உதயம் செய்தருளினான். பாண்டவரும் மகா விருடியை நமஸ்கரித்து வடக்கு நோக்கிப் போய் நீரும், நிழலும் இல்லாததொரு கொடிய வனத்தைக் கண்ணுற்று தண்ணீர்த்தாகமாய்த் தம்பிமாரை நோக்கி யாது சொன்னான் தன்ம புத்திரன்.

அத்தியூர் வாழ வந்தூர நற்கண்ணர்
மெத்திகையின் தண்மா லிருஞ்சோலை -அத்தியுடன்
வானவர்கள் போற்றும் மதிலரங்க வேங்கடமே
எனவுரு வானா னிடம். (165)

இவ்வகைத் துதித்து தாகந்தீர்ந்து போய் யாது கண்டாரோ எனில்,

பிறை கவ்விநின்ற பெருங்குன்றம் போலத்
துறையடைத்துத் தோன்றுமோர் துட்டக்--கறைமுகவேற்
கண்ணுடையான் மன்னவரைக் கண்டுகலந்தெழுந்தாள்
பெண்ணுருவாய் நின்றுழலும் பெண். (166)

எ.து. ஆரணியத் தூடே செல்லாநின்ற பாண்டவரைக் கண்ட பர்வதம் போலவாள் ஒரு இராக்கிஷ நமக்கிற*றை
…. …. …..
-------------
127-வது ஏடு இல்லை. 129-வது ஏடு இல்லை.

....ள கருவரை போலன்று நின்றகார்.....
....க்கி யாங்கேநி........ (167)

……… ……… ……… ………….
..... கழல் பணிந்தாள் ........
காவலரை வண்டிரைக்குங் கூ.......
........ திரள் பண்டு நீச .......
சாலப் பழையார பொற்பைந்தொடி பணிந்த காரணத்தைக்
கட்டுரையாய் என்றான் அழல்.......
.....யோ துரோபதைக்குச்
சார்ந்தாய் ஒலிந்த வாரண...... து சொன்னாள்
அந்தமில் சீர் மாதவத்தோன் புத்திரி. (168)
……… …. …

விருஷியைக் கண்டு தனமபுத்திரன் சொல்லுவான்.

தடுப்பதற்குக் காரணம் ஏதெனச் சொல்லுவான் இப் பருப்பதத்தில், நாலு வாசலுங்காத்து நிற்பாரில் விக்கினே சுரனுந் துர்ககாதேவியும் கேத்திரபாலனும் சாமுணடீசுரியும் காவலர் ஆகையால் இங்கிவர்கள் நால்வருந் திருக்கண்சாற்றி அருளினால் ஒழிந்து யாவர்க்கும் போக வொண்ணாதென்ன அதற்குடன்பட்டு யாது சொல்லித் துதித்தார் பாண்டவர்.

சங்கினொடு நேமி தண்டுசிலை வாள் சூலம்
அங்கையிற் கொண்டன் றவுணரெல்லாம் - மங்கச்
செருவிளையாட் தே ....ஏந்தி
அருவினைக* டீர்த்தே அருள். (169)

--------
130 - வது ஏட்டில் பாதி இல்லை. 131 - 136 ஆறு ஏடுகள் இல்லை.


இவ்வகை துதிப்ப மற்றவரும் கிருபை பண்ணிப்போங்களென்று பிரசாதஞ் செய்யப் பாண்டவரும் போய் அறுபத்து நாலு யோசனை சென்றார். அப்பால் செல்லும் நெறி எங்ஙனோவெனில்,

வராகமொடு மானு மறையு மயிலும்
குராகவிருங் குன்றுங் கொடிய--தராதலமாய்க்
கண்பமில வொண்ணாக் கடுவெளிசென் றெய்தினார்
எண்பது யோசனைக ளேய்ந்து. (170)

இவ்வகை, குரோத பருபத மென்னும் பருபதங் கண்டிலேன்.

வண்டுசெறி புண்டரிகங் காலக் கரதலங்கள்
பொன்மேனி மண்தான்... .......
பண்டு உண்டான் வடிவு ........ (171)

என்பது நானும் நாராயண சுவாமியை இப்படியே கண்டோம், நீயுங்கண்டாயாகில் கண்ட வண்ணம் சொல்லுதி என்று சிறிய வாசதம் சொல்லத் தன்மபுத்திரன்
சொல்லுவான்.

மாலைநினைந் திருந்தேன் வல்வினையால் மாதினொடு
சால நினைந்திடுந் தம்பியரை--ஞாலக்
கருத்தாய் நினையுந் தன்னுள்ளே நின்று
வருந்தா மயலாக்கு மற்று. (172)

இவ்வகை என்னை பஞ்ச இந்திரியங்கள் மயக்காநின்றன. என் சித்தம் எம்பியரை நினைந்தழியும் ஒருபால் திருமாலை நினைந்து அழியும் ஒருபால் பாஞ்சாலி திறத்தாரும், ஒருபால் குந்தி தேவியையும் காந்தாரியையும் நினைக்கு மோன நெறியில் அங்கு வாய்* அங்காந்து யாது செய்தான்.

வாங்குகடற் பாரில் வந்துமுன் போனயுகம்
ஆங்கறியவே விசனத்தாலோ--கோங்கின்முகை
ஒக்குந் தனமுலையாள் ஓங்குதிரு மார்பா
மிக்கெங்கட் கெல்லாம் விளம்பு. (173)

என்பது, முன்னையுகங்களில் ஸ்ரீ வாசுதேவர் செய்தருளிய பராக்கிரமங்களும் பிரமா செய்தருளிய பராக்கிரமங்களும் பரமேசுவரன் செய்தருளிய பராக்கிரமங்களும், மூவரிலும் செயமுடையார் யாவரென்று நாங்கள் அறிய அருளிச் செய்வாய் ஆகென்று வீமசேனன் கேட்பத் தன்மபுத்திரன் அருளிச் செய்வார்.

மண்ணுண்டு மண்ணளந்து மண்ணுமிழ்ந்தார் வார்த்தைதனை
அண்ண லுரைசெய்ய வதுகேட்டுத்--திண்ண
வழியதனைத் தாங்கடந்தார் வண்மை பலசொல்லி
பொழியுமதஞ் சேர்களிற்றார் போய். (174)

*என்பது, நாராயணசுவாமி செய்த பராக்கிரமங் கேளுமென்று சொல்லுவான், அக்கினிக்கண்ணியன் என்னுமுகத்தின்கண் ஈசுரனும், விட்டுணும், பிரமாவும் கூடியிருந்த விடத்து பிரமா சொல்லுவான். யான் சிருஷ்டித்த பாரங்களையோ--


* * * * * * * * * *
... ... ... ... ... ... நெஞ்சா, யாது செய்தான் வீமசேநன்..........
ன் யாது செய்தான் வீமசேனன்
-----
142-வது ஏடு இல்லை. * ஏட்டில் இருந்தவாறு எழுதப்பெற்றது.

எண்ணுங்கால் ஏழுலகம் அஞ்சிட்ட தென்கொலென
கோத்திட்ட வால்பாவங் கேட்டு இராக்கதனுமஞ்சிய
மெய்தளர்ந்து பார்த்தமுதங் கருகிப்பறக் கிட்டியாத்த
விண் சுழன்று வீழ்வதுபோல் மிக்கு.

அப்பொழுது வீ... ...ன மகாமேருவைப் போல...ன மகாமேருவைப்போல தோற்றமுடையவன் உடன்...

...லெ, பரமாக்கி விடுகின்றேன். காத்துக்கொள்ள... விரோவென்று கூறிச் சமரணை பண்ணுமளவில் சதூத்தச புவனங்...பபனையாக்கி அந்தநிலையில் ஒரு குழவி ஆற்றிடம் ஆலித்து அழா நிற்பத் திறத்திலே குழவியாகக்கிடந்தழுத விட்டுணுவைக்கண்டு அதிசந்தோஷத்தைச் சொல்லுவான். சமஸ்தமும் நீயே ஆதலால் நீ சமஸ்த முழக்கிவை (முழுது)ம் எழுதும் எமக்குக் காட்டுவாயாகென்ன அனந்தசயனனும் இவையனைத்தையும் மீளவும் இழிந்து காட்டினான் என

கடலடைத்த வாறுங் கடலிலங்கை புக்குப்
பொடிபடுத்திப் போந்தவா றெல்லா- மிடிமுச்ச
முன்னுயர்த்தோன் மொழியவே முற்றுணர்ந்தோர் மாவிந்தம்
*பின்னுயற்க்கப் போவார் பெரிது. 175
--------------
* பின்னுயரப்போவார் என்றிருத்தல் வேண்டும்.

என்பது திரேதாயுகத்தின் கண்ணிராவணனோடு யுத்தஞ்செய்து இலங்காபுரியை அழித்தவாறும வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராஜ்ஜியம் கொடுத்து நன்மை பலவுஞ் சொல்லிப் பர்வதங்களும் மரமடர்ந்த காடுகளும் கடந்து எண்பது யோசனை சென்று ஒரு வட விருஷங்கண்டு அதன் கீழிருந்து யாது சொன்னான் தன்மபுத்திரன்,

உரு. ..வனிங் கிருநிலத்தைத் தானே யகற்றிக்
...கொண்டொழுகுந் தன்மையால் -தானடைந்த
பொன்னிற்ற மார்பகலம் போந்தது மற்றெல்லாம்
மன்னன் பணிந்தான் வகுத்து. 176

இவ்வகை யாலின்கீழிருந்து ஸ்ரீ வைகுண்டநாதன் தொழில்களைப் பாராட்டி நடந்து தூரமுஞ் சொலி நாராயணன் கீர்த்தியே கொண்டாடுகின்ற பாண்டவரைத் திருவிளத்தடைத்து, மற்றவர் விப்பிரகாயமறிந்து வருவாயா கென்று வயின தேவனை விடை கொடுத்தருள, வயினதேவனும் கடுகவர விகைந்து ஸ்ரீ பாதகமலங்களை நீங்கி அன்னமாக வடிவு கொண்டு வந்து பாண்டவர் கூறுகின்ற நாராயணன் கீர்த்திகளை வட விருஷத்தின் மேலிருந்து கேட்டுக்கொண்டு பாண்டவரை நோக்கி.......... வாறு சொல்லி(ற்)றோ வெனில்,

ஒல்லைநீ ரெப்பொழுது மிங்கிவனை ஓயாமற்
சொல்லுதிரோ எவ்விடத்தான் சொல்லுவீர் - அல்லாது
கற்றுநீ சொல்லுதிரோ கார்மேக வண்ணனைத்தான்
உற்றுநீர் சொல்லுதிரோ ஒப்பு. (177)

எ.து. நீங்கள் பலகால் இவ்விடத்திருந்தவனைப் பராக்கிரமங்களே பேசகின்றீர். நீங்கள் அவனை அறிவதுமுண்டோ அதுவன்றியே கேட்டி......ருந்து சொல்லுகிறீரோவென்று அன்னமாகிய புள்ளரசன் கேட்ப விருட்சத்தின் மேற்பார்த்து அன்னத்தினைக் கண்டு யாது சொன்னான் தனமபுத்திரன்.

உருக்கரந்து வந்திங் குறைகின்றீ ராரோ
அரக்கரோ வானவரோ அன்பாற்-கரக்கமறக்
கூறுவது மற்றுனதே கூறுநீ ரென்றுரைத்தான்
தேறியுருத் தோன்றச் சிறிது. (178)

எ.து. நீர் உருமாறி வந்தீர் இராக்கதரோ, வானவர்களோ, வித்தியாதரரோ, விட்டுணு நாதரோ ஆரென்று சொல்லுமென்ன வயினதேவனும் நீங்கள் ஆரென்று சொல்லுங்கள். ஆராகிலென்! நீங்கள் பலகாலும் நாராயணசுவாமி கீர்த்திகளைச் சொல்லுகின்றீயோ என்னை முன்பும் அறிவீரோ வென்னத் தன்மபுத்திரன்
---------
146 - 148 மூன்று ஏடுகளில்லை

ப்பிறப்பு முற்றோ .. .. .. .. .. ..
முரம் பிடித்துக் கொண்டோ முணர்ந்து.
*** ***

அன்றியும்

தெய்வற்குந் தெய்வத் திருப்பாற் கடற்கிடந்தான்
எவ்வற்கும் நாராயண னெங்கோன்--மேவித்தன்
வைகுந்தஞ் சேர்த்தான் மனத்துக்கோ மாதவன் காண்
*வைகுண்டங் காட்டு மருந்து. (180)
-------
*வைகுந்தம். பா*பேதம். 150 வது ஏடு இல்லை.

எ.து. எங்களுக்கு இராச்சியமாவதும் ஸ்ரீ தேவியாவது நாராயணன்றன் திருவடிகளே கண்டாய் என்று பாண்டவர் சொல்லி ஸ்ரீ கருடனும் பெருகப் பிரியப்பட்டு நீங்கள் திருக்கேதாரத்தைக் கழித்து ஸ்ரீவைகுண்டம்புக விட்டுணு சுவாமி திருவடிகளைப் பிரசாதித்து விண்ணப்பஞ் செய்வான்.

பாண்டவர்கள் கண்டிமையத் திறம் பிழையாதவாறும் அவர்கள் செறி வயிராக்கியமும் அவர் ஒரு மாத்திரையும் மறவாமல் விட்டுணு கீர்த்தியை செய்திருக்கிறவாறும் சொல்லரிய பக்திமார்க்கங்களும் ஸ்ரீ கருடாழ்வான் விண்ணப்பஞ் செய்யக் கண்டு சந்தோஷித்துத் தம்பிமாரை நோக்கி யாது சொன்னான் தன்மபுத்திரன்.

இது திரேதாயுகத்தின்கண் இந்திராதி தேவர்கள் அசுரரைக் கொல்லவேணுமென்று, இவரிடத்திருந்து மனந்தளர்ந்து சுரோணிதபுரத்தை அழிக்கவென்னச் *சூகதனுடைய முகங்களில் ஓர் முகத்தில் ஒருமுகம் தம்மை அசுரர்க்குச் சொல்லி இந்திராதி தேவர்கள் எல்லாம் திரிநேத்திரனுக்கு அறிவிப்ப அவனும் பிரமாவின் சிரத்தைச் செயிர்த்துத் தர வேணுமென்று தேவர்கள் விண்ணப்பஞ் செய்யத் தேவ தேவனுடன்பட்டு பிரம சிரசு பேதித்தான். அதனால் முன்னாளிலே மந்தவ[ன] மிருந்தமையினால் மந்தன பர்வதமென்னும் பேராயிற்று என்று தம்பிமாருக்குச் சொல்லி இருக்குமளவில் சகாதேவனுக்கு யாது நிகழ்ந்ததோவெனில்,

விண்ணு மிக அதிர்ந்து மீன்பகலே தான்விழுந்து
கண்ணின் விழிசுழன்று கால் நடுங்கி--துண்ணென்
றுவாதசங் காட்டி யிருந்துயர மாயிற்றே
ச[கா]தேவன் என்பான் தனக்கு. (181)

அப்பொழுது * துடுக்கென்று தன்மபுத்திரனைத்தொழுது யாது சொன்னான் சகாதேவன்
-------------
*துற்கண்டு. எ.து. மூலபாடம்.

கண்ணீ ரொழுகும் புருவங் கடந்துடனே
எண்ணுங்காற் றோளு மிடந்துடிக்கும்--நண்ணியோர்
பொல்லாக் குறிகள் பலவும் புகுந்தானே . . . . . . . . . .
சொல்லா யிதென்றான் தொழுது. (182)

இப்படிச் சில துர்க்குறிகளுந் தோன்றிச் சூல பாசத்தராய் வந்து தோன்றி என்னை அணுகா நின்னார். அதுவுமன்றியே திவ்விய விபானமுந் தோன்றிற்று என்று தன்மபுத்திரனுக்கு விண்ணப்பஞ் செய்து வீமார்ச்சுனர் நகுலரைப்பார்த்து நமஸ்கரித்துச் சொல்லுவார். நம் சுவாமியாகிய தன்ம குந்திதேவியையும் இராச்சியத்தினையும் துறந்து மகா விந்தம் போந்தார் நினக்கு இவ்விடத்தே அபத்தையாயிறறு நீங்கள் மூவரும் தன்மபுத்திரனை இரட்சித்துக்கொண்டு போங்களென்று அவல்களையும் இரந்துகொண்டு பின்பு பஞ் சேந்திரியங்களைச் சாந்தமாக்கி நாராயணசாமியை எவ்வாறு உணரத் துதித்தானோ எனில்,

துதிப் பாடல்

பாரேழு முண்டுமிழந் தானே சரணம்
பாரேழு மீரடியா லளந்தானே சரணம்
பாரேழு முனைப்பணிய நின்றாய் சரணம்
பாற்கடல் மேற்றுயிலுங் கார்க்கடலே சரணம். 183

அராவந் தடிபணிய நின்றாய் சரணம்
அவுணர்கடம் போர்தொலைத்து நின்றாய் சரணம்
உத்தமனே கடலை அணை செய்தாய் சரணம்
சங்காழி அங்கயிலே வைத்தாய் சரணம். (184)

என்றிவ்வகை துதித்துப் பின்னும் யாது சொல்லித் துதித்தான் சகாதேவன்.

மாதவனே கோவிந்தா வென்பேனான் வாயினால்
மாதவனும் வந்தென் மனத்துளான்-மாதவனே
ஆரணனே அச்சுதனே அண்டர் தொழும்
நாரணனே என்றுரைப்பே னான். (185)

இவ்வகை துதித்து மோட்சமெய்தினான் சகாதேவன் என்றவாறு.

அப்பொழுது தன்மர்,வீமர்,அர்ச்சுனர்,நகுலர் தளர்ந்து வீழந்தலறிச் சிறிது தேறி எழுந்திருந்து யாது சொல்லிப் பிரலாபித்தாரோவெனில்,

பஞ்சவர்க ளென்னும்பேர் பாரிற் பழுதாக்கித்
துஞ்சுவதோ தேவர்சொல் லொன்னாத்--தஞ்சமே
போழ்ந்தோனா நீயொளித்துப் போவதோ தானென்று
வீழ்ந்தார்கள் சாதேவன் மேல். (186)

இப்படி நால்வரும் பிரலாபிக்குமளவில் வீமசேனன் யாது சொல்லிப் பிரலாபித்தானோவெனில்,

குருக்களிளங் களிறே கோளரவத் தோனைச்
செருக்கழித்த சேவகனே செப்பாயா--கருணை
ஆரணியத் தெம்மை யகல்வதோ வையாவெங்
கானகத் தூடுங் கலந்து. (187)

சன்மாந்திரத்திற் செய்த விதியின்படி போயகல்வ தோவையாவென்றும்மை ஐவர் என்று சொல்லுமதனை பிரிவித்தாய் என்றும் வீமசேனன் கிலேசிப்பத் தன்மபுத்திரன் தேறிப் பலவுஞ் சொல்லி வியாகுலந் தணிக்குமளவில் திருவடி தொழுது யாது சொன்னான் வீமசேனன்.

பொங்கு முகில்கள் பொருப்பதனின் மேற்பொழிய
எங்கும் பரந்தங் கிருகரையும்--கங்கைநீர்
சென்றுவயல் மண்டுந் திருநாடா சாதேவன்
இன்றுநம் மைப்பிரிவா னேன். (188)

அது கேட்டு யாது சொன்னான் தன்மபுத்திரன்,

நன்மை யுடையாரை யாரேனு நாடுங்கால்
புன்மை யுடையார் புறத்தாவர்--துன்னி
இருந்தா ருடன்பிரியா தேகுவரோ வென்றும்
திருந்தாருந் தோளினாய் செப்பு. (189)

எ.து. ஒருத்தர் வயிற்றில் பல புத்திரர் பிறப்பார்கள். ஒருவன் தானம் செய்வான், ஒருவனோ ஆராய்ந்து காரியம் விசாரிப்பன், ஒருவன் அறத்தின்வழி நிற்பன், ஒருவன் பரமாத்மா ஆவன். ஆதலால் அவர்கள் தன்வசம் கண்டாய் என்றும் இவன் நாம் எல்லாமிருக்க மோட்சமெய்திய காரணம் ஸ்ரீ நாராயணனை உள்ளபடி அறிவன். அதுவன்றியும் என்னாலும் சிறிதறியப்படுமென்றும் யாது சொன்னான் தன்மபுத்திரன்.

பாரதப் போர்வெல்லப் பலியிடுதும் யாமென்ன
பாரதப் போர்வெல்லாமல் பண்ணினான்--பாரதத்தில்
பட்டா ரவருடை பாவமது துடர .... .... .... .... .... .... ....
விட்டா னுடன்[வீ] விரைந்து. (190)

எ.து. நாம் பாரதப் போர் வெல்லப் பலியிடவேணுமென்று ஸ்ரீ வாசுதேவன் அருளிச் செய்ய நன்முகித்தக் களப்பலி செய்தான் இவனாதலால் அமர்க்களத்திற் பட்டார் பாவங்களிவனைத் துடர்ந்து விடாதென்று கருதிமுந்த அழைத்து அருளினான். அதாகவேணுமென்று தன்மபுத்திர னுரைத்துச் சகாதேவனுக்குச் சடங்கறுத்து அங்கு நின்றும் வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர்கள் என்றவாறு.

சகாதேவன் மோட்ச முற்றும்.

இப்பால் சகாதேவனுக்குச் சடங்கறுத்துத் துக்கமெய்தி தம்பிமாரைத் தேற்றி யாது சொல்லி நடந்தான் தன்மபுத்திரன்.

மந்தரமே மத்தாக வாசுகியே வான்கயிறா
அந்தமிலாச் சோமன் அணையாக-- சிந்தாக்
கடல்கடைந் தார்செய்த கதையவர்குச் சொல்லி
இடர்களைந் தான்தனம னிசைந்து. (191)

அன்றியும்,

பாஞ்சாலி துஞ்சியதும் பாரின்மேல் தம்பின்னன்
தான்போய் மரித்ததுவுந் தானினையா -நீஞ்சுபுனல்
மந்திரமென் றெல்லோரு மாதீர்த்த மாடுகின்ற
சந்திரவர் புக்கார்க டான். (192)

இவ்வகை நாராயணசாமி செய்த பராக்கிரமங்களும் சொல்லி இடர் களைந்தான்.

தன்மன் இசைப் பாஞ்சாலியையும் சகாதேவரையும் மறந்துபோய் இருநூற்று ஐம்பது யோசனை கடந்து சந்திரகிரி என்னும் பர்வதத்தைக்கண்டு அதன்மேலேறி அங்குள்ள தீர்த்தங்களையாடி அந்தச்சுனையிற் குவளையும் தாமரையும் மலர்ந்தவற்றைக் கண்டு தம்பிமாரைநோக்கி யாது சொன்னான் தன்மபுத்திரன்.

உயர்ந்த தடவரைமேல் ஒள்ளிணையார் தங்கள்
முயங்கி விளையாடுமாப் போல்-கயங்குவளை
கண்ணன்றன் மேனியோ காரிகையார் கண்மலரோ
எண்ணுங்கால் வண்ணமிது. (193)

கண்ணன்றன்கண்ணோ கமலமல ரிவைதான்
கண்ணன்றன் மேனியோ காற்கமலங்-கண்ணன்றன்
சேவடியோ விம்மலர்கள் செவாவாயோ விம்மலர்கள்
ஆவதுதா னம்போ ருகம். (194)

எ.து. இந்தத்தாமரை மலர் என்ன தவம் பண்ணிற்று. நாராயணன் திருவடிக்கு ஒப்பென்று சோடிக்கப்போனதின்று பேசியிருந்தார். அப்பொழுது தெய்வ கன்னியர் யாது செய்தார்.

வண்டுகளும் கிள்ளைகளும் மாமயிலும் பின்தொடரக்
கண்டுவரை யின்கட் காட்சியார் -ஒண்டொடியார்
செந்தளிர் போன்மேனிச் சிலம்பலம்புஞ் சேவடியார்
வந்தணைந்தா ராவிம் மருங்கு. 195

அரிசினமுங் குங்குமமு மாடைகளுமா மற்றும்
பரிசினங்கள் பாடேந்திச் செல்ல-வரிவையர்கள்
மாதீர்த்த மாடவருகின்றார் மன்னவ ராங்
கோதீர்த்தங் கொண்டார் குறித்து. 196

இவ்வகை வருகின்ற தெய்வக் கன்னியர்கள் பாண்டவரைக்கண்டு கண்ணுற்றுத் தீர்த்தமாடுதலும் தவிர்ந்து மற்றுமிவர்களை நோக்கி யாது சொன்னார் கன்னியர்கள்.

மண்ணுலகில் உள்ளீரோ வானவரோ தானவரோ
எண்ணற் கரிதாக இவ்வனத்தே-நண்ணிநீர்
வந்தவறென் கொலோ வாய்திறந்து மற்றுண்மை
எந்தமக்கு நீருரையீ ரீங்கு. 197

என்றிவ்வகையே நீர் ஆரென்று கேட்ட கன்னியர்களை நோக்கி யாதருளிச் செய்தான் தன்மபுத்திரன்.

வானவருந் தானவரு மல்லயாரு மண்ணுலகில்
ஆனகுரு குலத்திலா டவரோங் -கானகதி
லாபேதஞ் செய்யு மருந்துயரந் தாமுழன்று
மாபெந்தம் போந்தோம் வழி. 198

இவ்வகை நாங்கள் பாண்டவரோ மகாவிந்தம் போகின்றோம் என்று தன்மபுத்திரன் சொல்ல யாது சொன்னார் கன்னியர்கள்.

*வெஞ்சமத்தில் வென்றவிறல் வீமென வன்றான்
நஞ்சடர்ந் தாரோடெதிர்ந்தா னார்கொலே-பஞ்சவரில்
மெத்தமைந்த சொல்லில் தருமன்யா னென்று. 199
** *** *** *** ***
---------
*இப்பாடல் முற்றுமில்லை. 159-161 வரை மூன்று ஏடுகளில்லை.
163-வது ஏடு இல்லை.

உலகம் போல் எய்தாது நீங்கள் வந்திருந்தால் நாங்கள் உங்களுக்குப் பிரத்தியட்சம்போல நடக்கின்றோம் என்று தெய்வகன்னியர்கள் சொல்லக் கேட்டு யாது சொன்னான் தன்மபுத்திரன்.

செய்தற்கரிய தியாது முதவினீ ரிவ்வுலகில்
செய்தற்கரிய தெல்லாஞ்செய் தா- லுமையதற்
கண்ணுடையார் கண்ணன் கமலக்கழ லல்லால்
நண்ண வேறுண்டோ நமக்கு. 200

என்பது பிறர் உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் பிறிதில்லை. ஆதலால் வேறுஒரு புவனமே விரும்போம் ஸ்ரீவாசுதேவன் ஸ்ரீ பாதகமலங் காணவேணுமென்று தன்மபுத்திரன் சொல்லக் கன்னா யாது சொன்னார்.

தாழ்வரைகள் பற்றித் தவஞ்செய்து தண்பொழில்சூழ்
ஆழமுடைப் பொய்கையதுபடிந்து-மாழையரின்
தங்கை ந...ததோய் வன்றோ குருவேந்தீ
ரங்கதலத் தோர்முயல்வா ராஙகு. 201

என்பது காமலோக மோட்சங்களைத் திறந்து விட்டாருமில்லை, ஈசுரனுக்குக் கங்காதேவியு முமையும் என்று இருவருள், பிர்மாவுக்கு சாவித்திரியும் சரஸ்வதியும் என்று இருவருளர். விட்டுணுவுக்கு ஸ்ரீதேவியும் தை தெளிந்து ஸ்ரீ வாசுதேவனைச் சிந்திக்க வேணுமென்று தங்களாத்மாவைத் தேற்றி யாது சொன்னார் பாண்டவர்

திருப்பாற் கடற்கிடந்த செங்கண்மால் சேர்வைத்
திருப்பான் வரப்பரிவாற் றம்முள்--விருப்பான்
மான்களிலும் பண்டங்கமல் லரொடு மன்றிறுத்த
கோன்பதத்தைப் போற்றினார் கொண்டு. (202)

என்பது ஸ்ரீ வாசுதேவன் ஸ்ரீ பாதகமலங்களைப் போற்றிக் கன்னியர்களுடன் மறுமாற்றம் சொல்லாமலிருப்பக் கன்னியரும் பொய்கையில் தீர்த்தமாடித் தெய்வலோகம் புக்கார்கள் என்றவாறு,

பின்னும் பாண்டவர் எவ்வணங் குறுகினாரோ வெனில்,

அனுமன்றன் னோனாம் பீமனவன் தம்பி
அனுமக்கொடி விசைய னார்தான்--அனுமனவன்
எங்குலத்து மூத்தோ னிசைய வெடுத்துரைமின்
நங்குலத்தோ ராகி நமக்கு. (203)

என்பது, எங்கள் குலத்துக்குச் சேட்டனாகிய அநுமான் தம்பி வீமசேனன் என்றும் அவன் தம்பி விசயனுக்கு அநுமக் கொடி உண்டென்றும் கேட்டிருந்தோம். அவர்களையும் நகுல சகாதேவரையும் தன்ம்புத்திரனையும் கூறு. நீங்கள் நங்குலத்தாரன்றோ எங்ஙனம் நீங்கள் மகாவிந்தம் போய் ஆரணியத்தூடே உழலவேண்டாமென்று உங்களுக்கு வேண்டும் தோத்திரம் பண்ணிச் சத்துருக்களையும் சயித்து உங்களை இராஜ்ஜியம் செய்விப்போம் மென்ற வானரங்களை நோக்கித் தன்ம்புத்திரன் சொல்லுவான்,

உமக்கு விரதமது வன்றொ சொல்லும்
உமக்கெதிர் யாவருந்தா முண்டோ--உமக்குத்
தொழிலன்றோ மாவிரதம் சொற்பழுது போகுமா
வழிநின்ற கீர்த்தியன்றோ மற்று. (204)

நீங்கள் சத்துருநாசஞ் செய்விக்கவும், கொண்ட விரதம் குலையாமல் நிற்கவும் உங்களுக்கே வருமிதனை நீங்கள் எங்களுடைய வழியான வீரராகையால் உங்களைக் காணப் பெற்றோம். நாங்கள் செய்த புண்ணியமன்றோ வென்றும் உங்கள் முன்னோர் ஸ்ரீ ராமன் கெடுத்துக் கொடுத்தாரன்றோ என்றும் நாங்களும் உங்களுக்கு வழியுறவாமையால் வீமசேனன் ஆவான். இவன் அர்ச்சுனன் ஆவான். இவன் தனம் புத்திர னாவானிவன் என்றும் நகுலரென்றும் மற்றச் சகாதேவனும் துரோபதையும் வழியிலே மோக்ஷமெய்தினார் என்றும் பின்னும் யாது சொன்னான் தன்மபுத்திரன்.

* வையமுழு தாண்டு மாவிந்தந் தானோக்கி
வெய்யகடுங் கானம் மேவினோம்--வையமினி 205
*** *** *** *** *** ***
-------
* இப்பாடல் முழுவதுங் கிடைக்கப்பெறவில்லை. 168, 169-வது ஏடுகள் இல்லை.

நாராயணன் ஸ்ரீ பாதகமலஞ் சேரவேணுமென்று மகாவிந்தம் வந்தோம். உங்களை இங்ஙனம் காணப்பெற்றோம் என்று சொல்லக்கேட்டு வானவீரருஞ் சொல்லுவார்.

எம் முன்னோர் ஸ்ரீ வாசுதேவன் பகை கெடுத்தாரென்று சொன்னீர். அந்தப் பராக்கிரமங் கேட்க வேணுமென்று வானரங்கள் கூறத் தன்மபுத்திரன் சொல்லுவான்.

*** *** *** *** *** ***

.. .. .. பாயக்கடி கிடங்.. .. .. .. .. .. ..
றுன்னிமலர் கவ்வித் தொடர்ந்தாள்--முன்னேயோர்
வாளை களித்து வயலுழக்கு நன்னாட்டில்
காளையர்கள் கண்டார் கயம். (206)

இவ்வகைத்தாகிய பொய்கையும் சமத்தடமும் பளிங்குத்தடமும், என்னும் பருப்பதமுங் கண்டு இதைக்கொண்டு இவை இற்றைக்கு எழுநூறு யோசனை இரவும் பகலுமாய்
ஒன்பது நாள் வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர் என்றவாறு.

* அக்கரமெல்லா மிங்கே இருந்தவங்கள் செய்தும்
அக்கமது செய்தும் மலையென்று - அக்கரவா
செக்கரங்கால் முன்னைநாட் செய்தவரங் [காட்டியதோ]
.................கரங்கள் கண்டா ரவர். (207)
----------
* இப்பாடல் இருந்தவாறே எழுதப்பெற்றது.

இவ்வகை யக்கர பருப்பதஞ் சென்றேறுதலும் தன் பொலிவுங் குளிர்ச்சியும் கண்டித் தொடர்பானவொரு பருப்பதங்களுமில்லை என்று தன்ம்புத்திரனுக்கு வீமசேனன் சொல்லுவான்.

தாமரை குவளை என்று சொல்லப்பட்ட புட்பங்களையு முடைத்தாய்ப் பிரமாவினிடம் போல இரா நின்றதென்று கேட்பத் தன்மபுத்திரன் சொல்லுவான்,

"யாற்கிலர்" {யாஜ்ஞவலக்யர்} என்னும் தேவர்கள் பிரமலோகத்தில் நின்றும் வந்து தவசு பண்ணுகிற இடம் காணிது வென்று சொல்லி அங்குள்ள தீர்த்தங்களையாடி ஒரு விருட்சத்தின் கீழிருந்து நாராயணனைத் துதிபண்ணி நாலவருக்கூடி இருக்குமளவில் நகுலனுக்கு யாது நிகழ்ந்ததோ எனில்,

மனமறுகி வாயுலர்ந்து நாச்சுழன்று மேன்மேற்
*கண்மழுங்கிக் காலுடனே தாழ்ந்து--[புனநடன]
ஒன்பான துள்ளத் தொருங்குறி காட்டிற்றே
தன்பால் நகுலன் தனக்கு. (208)

இவ்வகை வாராநின்றவிடத்துத் தன்மபுத்திரனை நோக்கி யாது சொன்னான் நகுலன்.
-------
** கனமழுங்கி மூ. பாடம்.

சிவந்ததுகி லுடுத்துச் செஞ்சாந்தம் பூசி
சிவந்தசெழு மங்கையர்க ளாகிச்--சிவந்திருவர்
சூலமொடு பாசம் பிடித்தெதிரே தோன்றினார்
காலனொடு கூற்றம் கலித்து. (209)

இவ்வகை தோன்றிற்று ஆகில் இது எனக்கும் காலமாயிற்று. எம்பெருமான் வீமார்ச்சுனரைக்கொண்டு மகாவிந்தம் எழுந்தருளுவாயாகென்று பின்னை வீமார்ச்சுனரை நோக்கிச் சொல்லுவான்.

தன்மபுத்திரனுக்கு இனி யுங்களை ஒழியச் சகாதேவனும் தூரத்தாராயினோம். நீங்கள் இரட்சித்துக்கொண்டு போமினென்று, தானுஞ் சிறிது பொழுது நாராயணசுவாமியை எவ் வண்ணம் துதித்தானோ எனில்,

கார்மேக வண்ணனே கண்ணபுரவா கச்சி
ஊர்மேவி நின்றாய் உலகளந்தாய்--சீர்மேவு
தாமரையாள் கேள்வா சரணே சரணென்று
நாவுரை செய்தா னயந்து. (210)

எ.து. புண்ணிய புருஷனே வேதப் பிரியனே அரிகரி, புருஷோத்தமனே அரிகரி அரங்க ஆரணா, அரிகரி தாமோதரனே, அரிகரி கருணாகரனே, அரிகரி குடவண்ணனே, அரிகரி, கேசவா, தன்மனே, அரிகரி பிஞ்ஞகன் துணைவா, அரிகரி திருமகள் தலைவா, அரிகரி என்று இன்னோரன்ன துதிகள் பண்ணியதைக் கேட்டுப் பாசசூலம் பிடித்து வந்தார் பயப்பட்டு யாது சொன்னார்.

அண்ண லடியா ரிடைக்கே அறியாதே
நண்ணினோ மென்று நம்தூதர்--எண்ணித்
தொழுதகப் போயினார் சுந்தரத் தேரனுக்கு
எழுபிறப்பி யாமடிமை என்று. (211)

கால தூதர் நாராயணன் அடியாரை நாம் தீண்டுவதோவென்று அகலப் போதலும் திவ்விய விமானங் கொண்டுவந்துபுட்ப வருஷம் பொழிந்து நகுலனைத் தேவகுமாரர் கொண்டு போயினாராகக் கருதுவது.

அப்பொழுது நகுலன் மோட்சமெய்தினமை கண்டு தன்மர் வீமார்ச்சுனர் மகிதலத்திடை வீழ்ந்து படலால் வீமசேனன் யாது சொல்லிப் பிரலாபித்தானோ வெனில்,

வாழை முழுமட லின்போத் ததனை
வெள்ளைக் குருகென்று மீனினங்கள்--துள்ளி
கரையேறிப் பாய்ந் துழக்கும்சூழ் நாடா
வரையேறி நீ கிடந்தாய் மாண்டு. (212)

அன்றியும்,
மேகக் குழலாள் பயந்த விரட்டையர்த......
........தந்த நெறி போதுமோ - சாகக்
கடவோமுன் னெங்கள் நெறிதானன் றோசெய்தீ
ரடைவோ முன்போ நீ. (213)

நீங்கள் இளையராயிருந்து மூத்தவர்க்கு முன்போகத் தகாதென்று பிரலாபிப்பானைப் பூர்வ விதிக்குத்......து மென்றுதன்மபுத்திரன் தேற்றவும் தேறாது பின்னும் யாது சொல்லிப் பிரலாபித்தார் வீமசேனன்,

ஒருவினை இருக்கப் பணிந்து இவன் முகத்தில் உண்டாகியதன்.....சொல்லுவாயாகவென இருடியை நோக்கி யாது சொன்னான்,

அச்சொல்லானதிவை யெல்லாம் முன்னாய்.......... அப்போது................வேந்து--என்பது யான விதியின் வலியென்ப தறியாதேவேழ..........கோஷமும் பிரமகத்தி தோஷமும் நீங்கும்படியும்....................என்று கேட்டால் பாவதோஷமும் பெறுமே என்று கேட்டால் பாவதோஷம் பெறுமே (உம)க்கியாது சொன்னான் மகாவிருடி வேங்கை............. யா, ழ பாண்டவர்கள் கீர்த்தி பகர நீ கேட்டறியிலீண்ட ......க, க மேய்ந்த சிகரச் செழுந்தார்க்குஞ் செவ்வாய்த் திருநாமம் நின்று ..... என்பது இவன் குணங்களும் மா ........மெழுதின் வடிவும் மென்மனம்..... விட்டகலாதே......... .... எறிக்காட்டினதும், என் நெஞ்கைவிட்டு நீங்க................... கிரியைகளும் நடத்தி அங்கு நின்றும் வடக்கு நோக்கி.....

நகுலன் மோட்சமுற்றும்.

எத்தனையு மாங்கே எழில்.

அப்பொழுது உனக்கு மோட்சமென்று இருடி அருள் செய்தான். அப்படியே நீர் வருவீராக.
அண்டர் பிரான்கள் என்ன அவனுக்கு விடை கொடுத்து வடக்கு நோக்கிப் போயினார் பாண்டவர்.

........................று) அப்பால் பிரளய தீர்த்தமென்னும் தீர்த்த மாடிக் குருசிக மென்னும் பர்வதங கண்டார்.

அங்குள்ள தீர்த்தங்களை யாடி பர்வதத்தின் மகிமையைக் கண்டு பிரியமெய்தி யங்கிருந்தார்.

மகாவிருடியைக் கண்டு மூவருஞ் சென்று நமஸ்காரஞ் செய்து நிற்ப மற்றவனும் சுவர்க்க சொல்லி மிக்கப் பணிந்துவிருந்தபொழுது ஆதித்தியனும் அத்தமன பர்வதஞ் சார்ந்தான. அப்பொழுது இருடி..... (சொ)ன்னான் தன்மபுத்திரன்

*வையகத்து வாழ்வா யெல்லாம் வாழ்வேந்தர் நங்
கோமான்........
வந்துரைத்தான் கைதைக் கரையருகே நின்றலருங்
கங்கை சூழ்நாடன் வரைமருவு தோளான்மனம்.
----------
*பிரதியிற் கண்டபடியே எழுதப்பெற்றது.

தாங்கள் பாண்டவரென்பது தங்கள் இராச்சியம், நீதி பரிபாலனமெல்லாஞ் சொல்லி அஃதெல்லாங் கேட்டு யாது சொன்னான் மகா இருடி

இந்தவரைமேல் இனிதிருக்கும் கன்னியர்கள்
அந்தமில் சீர் ஐய ..... .....
..... கின்றே நீர்போந்து கண்டங்கினி திருமின்
வாட்டங்கள் தீர மகிழ்ந்து. (214)


எனக்கே ......... சொன்னான் தினைத்தனையும் நன்றிகொள்முன் செய்தாற்குப் பின்னை...நொந்தாலு மாங்கதுதான் உன்கையிலே மீளநாங் கொள்ளே மிகை.

எ.து. அது கேளாய் மாமுனி வசனங்களுக்குப் பிரதி வசனமில்லை. அவர், தினைத்துணை நன்றி செயினு மதற்கு எத்தனை அன்புசெய்தது வெல்லுமாதலால் நாங்கள் கொள்ள வேண்டும் வரமாவது தெய்வமுனி.....யாது சொன்னான் தன்மபுத்திரன்.

நல்லானை நான்முகனை நாபின் கட்டேற்றுவித்த
வல்லானை மாயஞ்சி இருகமல பொற்பாதம்
சேர்த்துவ தெங்கள் செயல். (215)

என்பது, நாங்கள் இராச்சியம் பண்ணியும் பெண்ணாசை ஒழித்து ஸ்ரீ வைகுண்டநாதன் ஸ்ரீ பாதகமலங்களே சிந்துத் துப் போகின்றோம்.

எங்களுக்கு மகாவிந்தம் போகின்றதே எல்லாச் சுவர்க்கமும் என்று தன்ம்புத்திரன் சொல்ல மகா இருடியும் மகிழ்ந் திருப்ப ஆதித்தன் உதயஞ் செய்துருளானான். பாண்டவரும் இருடியை நமஸ்கரித்து விடைகொண்டு அங்கு நின்றும் வடக்கு நோக்கிப் போய் அக்குரோணிதல மென்னும் வனம்புக்கா ரென்றவாறு.

பாதங்கள் பரலுரைப்பப் பார்வேந்தர் பாண்டவர்கள்
காதம்பல சென்றார் கார்வரைமேல்-- நாதங்கொள்
மங்கையர்க ளோரிருவர் தம்மை யருநெறிக்க
ணங்கவர்கள் கண்டார்க ளாங்கு. (216)

இவ்வகைப் பிரவாள மென்னும் பர்வதங்கண்டு அங்குள்ள தீர்த்தங்களை ஆடியவிடத்துத் தவம் புரிகின்ற மகா இருடிகளைக்கண்டு கன்னியர்கள் இவரைக்கண்டு யாது சொன்னார்கள்.

ஐந்துமலர் வாளிஅமர் செய்யும்போர் வென்று
சிந்தையது காத்துத் தியானத்தைப்-- புத்தியினில்
கொண்டிருந்து நோக்குவார் கண்டாரக் கொற்றவர்கள
வண்டிருந்த பூங்குழலார் வந்து. (217)

இவ்வகை இருந்துள்ள கன்னியர்கள் பாண்டவரைக் கண்டு யாது சொன்னாரோவெனில்

ஆரோ வழியறியீர் வந்தீரோ வாதமிளைத்
தாரோ அருள்சேர்ந்த ஆடவர--சோராமல்
உள்ளவா றெல்லா மெடுத்துரைமி னென்றுரைத்தார்
கள்ளவிழு மீர்ங்குழலார் கண்டு. (218)

எனக்கேட்டுத் தங்கள் வரலாறெல்லாம் அவற்குறைப்ப இருடியும் கன்னியரும் நீர் பாண்டவராகில் உமக்கு வேண்டியது கேண்மின் என்னத் தன்மபுத்திரன் யாது சொன்னான்.

இலங்கை மலங்கத் தடக்கையில்வில் லேந்திச்
சலங்கொள் தசக்கிரீவன் றன்னை-- குலங்கொன்
வெங்கணையால் வென்றடர்த்த வாழியான் பாதமடைந்த
விடுங்க ளென்றே யருள். (219)

என்று இவ்வகை சொல்லி அங்கு நின்று விடைகொண்டு போந்து விருத்தகிரி என்னு மாலவரை யேறி அங்குள்ள தீர்த்தங்களை யாடி அங்கு நின்றும் போய் யாது கண்டார் பாண்டவர்.

நிற்ப, யாது செய்தான் பரமேசுரன்.

பாற்கடற்கே போமின்னீர் பஞ்சவர்கள் மற்றவன்றன்
சேக்கையது வென்று சிறந்துரைத்து--நோக்க
அருந்தார மெய்தினீ ரவ்வரைமே லாறி
இருந்துபோ மென்றா ரினிது. (220)

என்பது நீங்கள் வைகுண்டத்துக்குப் போகின்றீராகில் அதிதூரம் நடந்து பெருக்கத் தளர்ந்தீர். ஒளிர்மலையிலிருந்த இளைப்புத் தீர்ந்து பமென்னத் தன்மபுத்திரன் சொல்லுவான்.

நாங்கள் சாலநாள் உண்டு ஸ்ரீ வாசுதேவன் ஸ்ரீ பாதம் காணாதொழிகின்றது. ஈண்டன்புடன் போய்க் காணவேணுமென்கிற தாபமொழிய [ந்து] வேறொரு தாகமில்லை. எங்களுக்கு விடைதந்தருள வேண்டுமென்னத் [திரிநேத்திறனும்] விடைகொடுத்தருள ஆங்கு அவனைத் தெண்டன் பண்ணி அங்குநின்றும் போய்ப் பூசலிதமென்னும் பருபதமும், குமுதமென்ணனும் பருபதமும் , மாலுச்சியமென்னும் மகாவனமும் மண்ணகை என்னும் மாலியாறும் புட்பதலமென்னும் பருவதமும் இந்திரவியான மென்னும் பருபதமும் கடந்து செல்லாநின்றார். அவ்விடத்து யாது கண்டார்.

கலிபுகுந்து காசினியைக் கைக்கொள்ளக் கண்டு
நலியு மிவனென்று நடந்தார்--புலியொன்று
பொங்குசினப் போர்வையாற் றான்தீர வந்தே
அங்கு சினத்தோ டழன்று. (221)

இவ்வகை மகா வனத்தூடே போகின்ற பாண்டவர் மேலே ஒரு மகா மிருகம் நடந்து வந்து தன்மபுத்திரனைப் பிடிக்கக் கண்டு நெருப்பெழ விழித்து வீமசேனன் யாது செய்தானோ எனில்,

சினவேங்கை தன்மன்மேற் செல்வதனைக் கண்டு
கனவேங்கை யைப்பிடித்துக் கையால்--புனவேங்கை
பொன்று........... தாக்கும் புனல்னாடன் மற்றதனைக்
கொன்றுகளைந் தார்த்தான் கொதித்து. (222)

இவ்வகை அதன் காலிரண்டையும் பிடித்து நரசிங்கம் இரணியனைப் பிளந்தது போலப் பிளந்து, போடலும் யாது நிகழ்ந்ததோ எனில்,

ஆற்றற்கரிய விறல் வேங்கை யப்பொழுதே
தோற்றமுள வேதியனாய்த் தோன்றினான்--கூற்றனைய
வீமனையே நோக்கி மிளிர்ந்து முன்னின்றான்
காமனையே போலக் கரந்து. (223)

அதுகண்டு வீமசேனன் யாது சொன்னான்.

வேதியன் றானாகியநீ விண்ணின் மிசைஎழுந்தின்[று]
ஆதிகுருக்க[ள்] அடிபணிந்தாய்--பூதலமேல்
புல்லியனாய் வந்து புலியுருவங் கொண்டநெறி
சொல்லியிடர் வென்றான் துணிந்து. (224)

என்பது, நீ யாரென்று கேட்ப யாது சொன்னான் பிராமணன்.

ஆற்றல் மிகப்பெரிய அங்கிமான் புத்திரனென்
தோற்ற முடைய சுதனானென் - மாற்றரிய
மெல்லியலார் காரணத்தால் வெங்கான வேங்கை
ஒல்லையுழல் செய்தே னுழன்று. (225)

என்பது, நான் இராசவிருடி அங்கிமான் புத்திரன், என மாதா, பிதாக்களுடன் முனிவு, உண்டாகி அப்போ மாசென்னியனுக்குச் சுச்சயம் பண்ணிநின்ற காலத்து மகாவிருடி பத்தினி, விமலாக்கினி என்பாள் என்னைக்கண்டு, காமபூதயத்தளாய் ஏகாந்தமா-யிருப்பதொரு தடாகத்துப் புட்பங் கொய்ய நிற்ப மற்றவளும் வந்தென் கரதலங்களைப் பற்றிக்கொள்ளுதலும் யானும் உடன்பட்டு மனங் கூர்ந்து, பின்பு புட்பங் கொண்டு தாழ்ந்துசெல்ல மகாவிருடியும் கோபித்துத் தாழ்த்த தென்னென்று கேட்ப யானும் சேதியைச் சொல்ல, மகா விருடி சொல்லுவார்.

.....சொல்ல, மூவருமே போனார் பருவரைமேல்......

வண்டுசேர் தாரார் மகிழ்ந்து......

இவ்வகை வடக்கு நோக்கிப் பல பருபதத்தின் மேலேறி அங்குள்ள தீர்த்தங்களை ஆடிப் பின்னும் பல பருபதங்களும் கடந்து வீமலோகமென்னும் மாலியாறுங் கடந்து வடக்கு நோக்கி நூறு யோசனை போயினார் என்றவாறு.

மஞ்சு தவழ்மணி வரைவாய் மாமரங்கள்
கிஞ்சுகம்போல் நின்றலர்ந்து கேழ்கிளர - அஞ்சா
அளிக்குலங்கள் பாடியிட அச்சுதனென் றோதும்
கிளிக்குலங்கள் கண்டார் கிளர்ந்து. (226)
---------
189-வது ஏடு இல்லை.

இவ்வகை நாராயணன் கிருபைபோல மகா விருட்சங்கள் போதலர* அதன்மேலே வண்டினங்கள் இசையாடக் கோகுலங்கள் அதுகூவக் கிஞ்சுகங்கள் வாக்கியத்தால், கெழுமொழிகள் கிளைகூட்ட மயிலினங்கள் நடம் பயிலப்படியிருந்துள்ள *பாவத்தையும் தீர்த்தங்களையும் கண்டு பிரியமெய்தி அங்கு நின்றும் போய்ச் சிலாதலமென்னும் பர்வதங் கண்டார். அதன் பொலிவும் யாதோ எனில்,

சந்தனமும் குங்குமமும் சாதிகையு[ஞ் சுற்றுங்]
கந்தமலி யுஞ்சோலைக் கற்பகமும்-முந்திமிக
எங்குநிறைந் தோங்கி எழிற்சிறப்பாய் நின்றதே
விந்தமணிச் சோலை வளம். (227)

அந்தப் பருவதத்தேறி அதன் பொலிவும் நோக்கி அங்குள்ள தீர்த்தங்களையாடித் [தவியா] ஒரு விருட்சத்தின் கீழிருப்ப அப்பொழுது அர்ச்சுன்னுக்கு யாது நிகழ்ந்த்தோ எனில்,

பார்த்தனுக்கு வந்து பகலே இருளாகி
யாத்திரையும் செய்திங் கிடர்பலவாய்-மாத்திரக்கண்
வெவ்வேறிடந் துடித்து மெய்யும் விதிர்விதிர்த்
தவ்வாறு துன்னிமித்த மாங்கு. (228)

அன்றியும்,

முன்னைவினை ஒழிந்து மும்மடங்கா லாய்ந்து
பின்னும் பொல்லாக்குறிகள் பெயர்ந்துழல் வாய்துன்னிக்
கிளர்வுற்ற சோலைக் குருநாடன் கேட்கத்
தளர்வுற்றான் தார்விசயன் றான். (229)

இவ்வகை காலுங் கையுங் குறைத்து விழியுங் குரலும் வேறாய்ப் பின்பு இயம தூதரியாது.............. தாரு..........அரசேற்றிப் புட்பவருடம் சொரிந்து திவ்விய விமானம் ஏற்றிக்கொண்டு சங்குபேரிகை இடக்கை துந்துபி என்று சொல்லப்பட்ட பல்லியம் முழங்க ஸ்ரீ வைகுண்டம் புக்கான அர்ச்சுனன் என்றவாறு.

-------
192, 193-வது ஏடுகள் இல்லை.

அர்ச்சுனன் மோட்சம் முற்றும்.

அப்பொழுது தன்மபுத்திரனும் வீமசேனனும் அர்ச்சுனன் மேல் விழுந்து கிடந்து, பிரலாபிப்ப வீமசேனன் யாது சொல்லிப் பிரலாபித்தானோ எனில்,

மண்ணுலகில் வாழ்வோர்தம் மக்களென்று பெற்றெடுத்து
கண்ணதனா லேற்குங் காதன்மை--நண்ணுவார்
வாள்விசயன் ஒப்பாரோ வென்றுமன மழிந்து
தோளின்மிசை அயர்ந்தான் சோர்ந்து. (230)

அன்றியும்,

மஞ்சடுத்த மாளிகைமேல் மாத ரடிவருடப்
பஞ்சணைமேற் பள்ளிகொள்ளும் பார்த்தனே--அஞ்சா
விடலே[று] ஒப்பான் விசயனே இங்ஙன்
நெடுவரைமேற் பள்ளிகொண்டாய் நீ. (231)

இவ்வகைப் பிரலாபித்துப் பின்னும் யாது சொல்லிப் பிரலாபித்தான் வீமசேனன்.

அபிமன் முதலாய அதன்பின்னே மாண்டோ[ர்]
உபயகுல வேந்தருளாற்...........தாபமடி...........
என்றோ துரோபதையு மேலோரையு மிழந்தோம்
இன்றோ வினையோ மியாம். (232)

என்பது, அபிமன் முன்பு பட்டுவீழந்த பின்பு மாண்ட நங்குலத்திராசாக்களும், துரோபதைகுமாரரும் மாண்டார்கள். இன்றென்று தன்மபுத்திரன் ஸ்ரீபாதங்களைப் பூண்டுகொண்டு கிடந்து எம்பிமார் அர்ச்சுனர், நகுலர், சகாதேவர், நமக்கு முன்னே, மகாவிந்தம் சேர்ந்தார்கள். இனி நமக்கு யார் உத்தரகிரியையும், சாந்தியும், நடத்துவாரென்றும், எம்பிரான் அன்றி நாம் எங்ஙனே உயிர்வாழ்வோமென்று எல்லை இல்லாததோர் துக்கமெய்திப் பிரலாபிக்கின்ற வீமசேனனை நோக்கித் தனமபுத்திரன் தேற்றுவான்.

பூலோகத்தில் நாலாபக்கத்தாரில் விதியை வென்றிருப்பார் ஊரோதுபவராய், அநேகங் காலமிருந்த நம் மூதாதையாகிய ஸ்ரீ பீஷமனுக்கு மரணம் வந்தது கண்டால் பின்னை நிச்சயமுண்டோவென, நாம் கிலேசிப்பதெப்படி என்று தன்மபுத்திரன் தேற்றத் தேறியிருந்து தனமபுத்திரனை நோக்கி வீமசேனன் சொல்லுவான். அர்ச்சுனன் ஸ்ரீ வாசுதேவற்கு அந்தரங்கமானவன், இவன் நினைத்தது எம்மட்டாக இருக்கின்றது, ஸ்ரீ வாசுதேவ அநுக்கிரகமாய் ஆவதற்கும் வெல்லறகரிதாயிருக்கின்ற அர்ச்சுனன் மாண்டபடி எப்படியோவென்று கேட்பத் தனமபுத்திரன் சொல்லுவான்.

குருவாகிய துரோணாசாரியனையும், குரவனாகிய கன்னனையும், நம் குடிக்கு மூதாதையாகிய ஸ்ரீ விட்டுமனையும் கொன்றதினாலும், பூர்வவிதியினாலும், ஆகத்தகும் கண்டாய் என்று தம்பியைத் தேற்றி அர்ச்சுனனுக்குக் கிரியையும் நடத்தி, அங்கு நின்றும் போய், மைநாக பருவத்தையும், குமுதமென்னும் மாலியாற்றையுங் கடந்து யாது செய்தார்.

விசயனுந் தம்பியரு மெல்லியரு மாங்கே
விசையொழிந் தடுஞ்சுரத்தை விட்டு - விசையுடைய
தம்பியொடு மாங்கே தடவரைமேற் போயினான்
வம்பவிழுந் தாரா னவன். (233)

இவ்வகை தம்பிமாரையும் துரோபதையும் வனத்திடையே விட்டுத் தாங்களிருவரும் இனம்பிரிந்த யாளி, களிறுபோலப் போகாநின்றவிடத்து நூற்று ஒன்பது யோசனை சென்று அப்பால் சந்திராசலி என்னும் மாலியாறும் கண்டு அதிலே அர்ச்சுனற்கு உத்தரகிரியையும் நடத்தி மற்றும் வேண்டுவன செய்து பின்னும் நாற்பது யோசனை போய் ஏமபருவதத்தைக் கண்டார் என்றவாறு.

குன்றத்தின் தன்னுடைய சோதியாக் கோவேந்தர்
பொன்னொத்த மாமேனி போன்றார்கள் - மின்னொத்த
பாங்கா மிருகம் பறவைபல வெல்லாம்
(நீ)ங்கா வரைகளெல்லாம் நீர்த்து. 234

அவ்விடத்துக் கோகிலங்கள் நிலையை யாதாயிற்றோ வெனில்,

கண்ணனே என்றுங் கடல்கடைந்தா யென்றும்
அண்ணல் திருநாம மடையவே - வண்ணம்
கரியோனே என்றும் கருங்குயிலி னங்களெல்லாம்
பிரியமாய்க் கூறும் பெயர்ந்து. 235

இவ்வகை குயிலினங்களும் குருகினங்களும் மற்றுமுள்ள பறவை இனங்களெல்லாம் திருமால் திருநாமங்களே சொல்லிக் கூப்பிடா நிற்பக் கேட்டுத் தன்மபுத்திரனும் தம்பியும் பெருக்கச் சந்தோழித்துப் பின்னும் மாலியாறுகளும் பர்வதங்களும் கடந்து போயினார் என்றவாறு.

அப்பொழுது கின்னரமென்னும் பருபதமுங் கண்டார். அதெவ்வகையோ எனில்,

மாம்பொழிலின் பாடணைந்தும் வான்கமுகின் பாடுரிஞ்சிப்
பூம்பொழில்க டானெங்கும் பொய்கையாய்த்- தேன்பாய்ந்த
தென்றல்வந் தூடாடும் செழுவரையிற் சென்றார்கள்
மன்றல்தங்குந் தாரார்கள் வந்து. (236)

இவ்வகைப் பல பொய்கையு முடைத்தாய்ப் பருபதங் கண்டு அதிலுள்ள தீர்த்தங்களையாடி வடக்கு நோக்கிப் போகா நிற்ப, இவர் முன்னே ஒரு தனியாய்ப் பன்றி வந்து அடர்தலும் அதனைக் கண்டு யாது செய்தான் வீமசேனன் காலிரண்டும் பற்றிக் கழுத்தைத் திருகி மிகு, மாலுருமி யோடி முன்...................

* * * *
---------
199-வது ஏடு இல்லை.

.....மா, லுருவாய்த் திரி என்றான் தேர்ந்து என்பது. ஓகாரந்தன என்னும் மகாவிருடிக்குச் சீடன் நான், மீதென் என்னும் பேருடையேன் யான். சந்தன வனமென்னும் பர்வத மேறி ஆகுதிசெய்ய விருப்ப அவற்குப் புட்பமும், சமிதையும் எடுத்துவரும் வழியில் இரண்டு வராகம் தம்மிற் கருவித்துப் பொருகின்றன கண்டு பார்த்து நின்று வரவு தாட்ப. மகா இருடியும் கோபித்துத் தாழ்த்ததேனென்று கேட்ப யானும் புகுந்ததெல்லாம் சொல்லி நிற்ப நீயும் போய் இவ்வனத்தே கேழலாய்த் திரி என்று சபிப்ப யானும், சாபமோட்சம் என்னென்று கேட்பப் பாண்டு புத்திரன் வீமசேனன் மகாவிந்தம் வருவனவன் கையால் மாண்டால் உனக்கு மோட்சமென்று சொன்னான். அப்படியே பிரானே உன்னாலே மோட்சம் பெற்றேனென்று நமஸ்கரித்து நிற்ப, அவனுக்கு விடை கொடுத்து வடக்கு நோக்கி நூற்றுமுப்பது யோசனை சென்றார் என்றவாறு. அப்பொழுது ஆதித்திய பகவான் யாது செய்தான்.

சூரிய அத்தமன வருணனை

வையகத்து வெண்கதிர்கள் தான்சுருங்கி மாத்தாண்டன்
பையவே மேற்கடலிற் பாய்ந்தொளித்தான்- மைவரைமேல்
பாலாழி ஆயன் பதந்தேடும் பாண்டவர்கள்
காலாறு வண்ணங் கடிது. 237

என்பது ஆதித்திய பகவானுதய மத்தமிப்பத் தன்மா வீமரும் போய் ஒரு இருடி இருக்கின்ற ஆச்சிரமத்தில் சென்று புகுந்து இருடியை நமஸ்கரித்து நிற்ப அவனும் சுவாகதம் சொல்லி ஆசனங் கொடுப்ப இருந்து..... முன்பு விசேஷமெல்லாம் இருடிக் குரைப்ப அவ்வளவில் ஆதித்தியனும் உதயபர்வதத்தே தோன்றினான்.

....... ள, படாகம் போட்டு மண்டலம் விளங்க உறுத்தலும் பாண்டவரும் இருடியை நமஸ்கரித்து விடைகொண்டு,

.......... ச, சயிற்றிறம் என்னும் பருப்பதமும் கவுலிதமெனனும் பருப்பதமும் கடந்து இருநூற்றொன்பது யோசனை கடந்தவிடத்து வீமசேனனுக்கு யாது நிகழ்ந்ததோ எனில்,

நாயி றிரண்டாதி ஞாலம் பலவாகி
ஏயுந் தடந்தோளு மிடந்துடிப்ப- நாவறண்டு
+ஓரிக் குரலு மொருகோடி யாயிற்றே
மூரித்தோள் வீமன் முகம். 238

அப்பொழுது தன்மபுத்திரனை நமஸ்கரித்து யாது சொன்னான் வீமசேனன்.

-----------------
* வரவேற்கும் மொழி + ஒரிக்குரல் - நரிக்குரல்

*ஒன்னலர்கள் நம்மே லுளதாகக் தான்கூடும்
என்றனக்கு மின்னே இடந்துடிக்கும்- விண்ணதிரும்
வான்குறிகள் மீன்பகலே வீழ்ந்தெய்துந்
துன்னிமித்தம்.........சூழ்ந்து. (239}

இவ்வகை வீமசேனன் சொல்லி நிற்பத் தன்மபுத்திரனுக்கு மப்பரிசே நிமித்தம் எவ்வகையோவெனில்,

உனக்கிளைய வீமன் [உயி]ரிழந்து நீயும்
வனத்திடையெ ன்றி னி ழையு[ன்னா]
...............னத்துவன் (240)

* * * *
--------
* பிரதியிலிருந்தவாறு எழுதப்பெற்றது. 203-வது ஏடு இல்லை.

...........போக்கிவிட்டுத் தனித்தோம் இதனிலும் சில உண்டோ துன்பமும் ஏன் என்று தன்மபுத்திரனைத் தேற்றிக் கொண்டு போமளவில் யாது செய்தான் யமராசன்.

புன்புனல்க ளாங்கே பொறியப்போ தெனவத்
தென்புலத்தோன் தூதாச் செறிந்தடர - அன்பினால்
கூசவகை யன்றிக் கொடுங்காலன் தோன்றிப்
பாசமங்கை யிற்பகிர்ந்து தான். (241)

இவ்வகை யமராசன் சூலமும் பாசமும் பிடித்துத் தூதா முன்னும் தான் பின்னுமாக வந்து வீமசேனன் உயிர் வவ்வ அதற்குச் சமைந்து தோன்றி யாது செய்தானோவெனில்,

சாரவருவன் தழல் விழியன் தாங்கரிய
மேருவரை போல மிகவடர்வன் - கார்வரிய
கூரெயிற்றைக் காட்டுங் கொடுஞ்சூலம் தான்சுழற்றும்
சீரையுற்ற வீமன்மேற் சென்று. (242)

இவ்வகை யமராசன் வந்தடர்தலும் யாது செய்தான் வீமசேனன்.

கனல்விழித்துச் சீறிக் கடுங்கோபங் கொண்டு
சினவெயிற்றுக் கால னெதிர்சென்றான் முனையிற்ற
வெற்றிகொண்டான் வீமன் வினைசெய்ய வேதுணிந்தான்
நெற்றிவிழி யான் செயற்கு நேர். (243)

என்பது, வீமசேனனும் +யுத்தம் தொடங்கி அனலெழ விழித்து ஆரவாரஞ் செய்து யமராசன் எதிர்செல்ல அவனும் அஞ்சி அகலநின்றும் பின்தொடர்ந்து முன்தொடர்ந்தும் சாலவும் தூரப்போகான சாலவு மணுகவாரான இவ்வகை நடந்து செல்ல இருவரும் யாது செய்தார்.
* * * *
--------
206-வது ஏடு இல்லை. * செயல்போல் மூ.பாடம்
+ உயிற்றந்துடங்கி மூ.பாடம்.

பிடிக்க நினைந்து பெருங்காலன் செல்லு
மடிக்கநினைந் தஞ்சா தணுகும்-வடிக்கண்ணார்
வினைகளெல்லா மறுத்துச் செறுத்துப் போய்
வைகுந்தஞ் சேர்ந்தினி வாழ். (244)

அது கேளாய் வீமசேனனே உனக்குப் பழவினைகள் பலவுமுண்டாதலால் அண்ணல் நாராயணசுவாமியைத் துதி பண்ணிச் சென்று வைகுண்டம் சேருதி என்று மகனுக்கு
ஞானஉபதேசம் பண்ணிப்போயினான் வரதராஜன்.

அப்பொழுது உபதேசம் தலைமேற்கொண்டு தன்மபுத்திரனை நமஸ்கரித்து பின்னை தேவனை ஸ்ரீ புருஷோத்தமனை அசுரா தேவனைத் துதிபண்ணினான் அது எங்ஙனமெனில்

எட்டெழுத்து மோதி இணைக்கரங்கள் தான்கூப்பி
மட்டவிழுந் தண்டுழாய் மாலென்றே- எட்டிசைக்கும்
நீயல்லாதில்லை நெடியோனே இன்றி யமன்
போயல்லல் செய்யாமற் போக்கு. (245)

அன்றியும்,

நரசிங்கமாகி நதைத் தவுணன் மார்பத்
துரைசுருங்க உள்ளக் குரலூன்றி - அரசவன்றன்
பாலனுக்கே அன்றளித்த பச்சைத் துழாய்முடியாய்
மாலவனே நீயேஎன் வைப்பு. (246)

அன்றியும்.

வெள்ளைச் சுரிசங் குடன்வந்த நேமிவலம்
புள்ளைக்கா டங்கும் புயல்வண்ணா - கள்ளத்தால்
வெண்ணையொளித் துண்டோனே வேழமருப் பொசித்தாய்
அண்ணலெனக் காவா யருள். (247)

இவ்வண்ணந் துதிபண்ணா நின்ற வீமசேனனைக் கண்டு ஸ்ரீ புருஷோத்தமன் அடியாருடன் நமக்குப் பணி அல்லவென்று காலன் விட்டகல தேவா வசுக்கள் யாது செய்தார்.

மேகம் நிழலெடுப்ப மின்னித்துளி தெளிப்ப
ஆகமதி மாருதக்கோன் வந்தசைப்ப - வாரி
மலர்தூவிப் பல்லாண்டு மங்கையர்கள் கூற
சிலர்துறந்து கொண்டெழுந்தார் சென்று. (248)

இவ்வகை வீமசேனனைத் தேவகுமாரரும், தேவ ஸ்திரீகளும்,புட்ப வருஷம் பொழிந்து பொற்சிவிகைமீது வைத்து நிறைகுடமும் நிறைவிளக்கும் முளைப்பாலிகையுங் கொண்டு .......போலக......

* * * *
கார்வரை மேல் வேந்தனும் கண்
டாற்றான் மிகவெறுத்துப் போந்தவினை - யாறறாமல்
அற்ற தறிந்தது கொல் பாவிஎன......
சுற்றமிழந் தேனன்றோ தொக்கு. (249)
-----
209-வது ஏடுமுதல் 215-வது ஏடுவரையுமில்லை.

என்பது. காந்தள் அலர்ந்தது கைவிரித்தல் போன்றது கண்டு, நான் சுற்றமிழந்து போகின்ற[து கண்டு] தற்குக் கைவிரித்தீரோ வென்று உற்றுப்பாராமல் அப்பால் போயினான் தன்மபுத்திரன்.

தாங்கரிய பெருந்துயரந் தானு ழன்று
பாங்கெலாம் சிந்தை பரந்தலைப்ப - நீங்கிப்
படர்கானந் தானகன்றான் பார்வேந்தன் முன்னே
இடராம் வினைகூர்ந் திட்டு. (250)

இவ்வகை செல்லாநிறபக் குயிலினங்கள் கூவுகின்றது கண்டு யாது சொன்னான் தன்மபுத்திரன்.

மானக் கதிர்வேல் மன்னவன்றன் முன்னே
கானக் குயிலினங்கள் கலந்தழைப்ப-மானத்தோ(டு)
எம்பியரை இங்கே வரக்கூவு மென்றுரைத்தான்
தம்பியர்போ கூறித் தளர்ந்து. (251)

என்றிவ்வகை குயிலினங்கள் கூவக்கேட்டுப் பெருந் துக்கமெய்தி என் சுற்றத்தாரை வரக் கூவாய் குயிலே என்று புலம்பி, ஆரணியத்தூடே போய்ப் பருபதங்களும், மாலியாறுகளும் கடந்து கலகமென்னும் பருபதத்தையுங் கண்டு போகாநிற்பச் சண்பக மலரந்ததுகண்டு அதனருகில் தும்பிகளைக் கண்டு யாது சொன்னான் தன்மபுத்திரன்.

வம்பவிழ்தார் சண்பகத்தின் மாமலரிற் றாதுண்டு
தும்பிகடா மங்கே தெரடர்ந்தோடத் - தம்பியர்கள்
தனகென் னிலைஎல்லா மியம்புமின்க ளென்றுரைத்தான்
மின்னுலகெண் கூர்ந்தளைவெல் வேந்து. (252)

இவ்வகை சொல்லிப் போகாநின்ற தன்மபுத்திரனுக்கு ஆதித்திய பகவான் யாது செய்தான்.

பார்வேந்தர் வந்து பணிந்திறைஞ்சிப் பாரின்மேல்
தார்வேந்தன் துக்கந் தனைக்காணா - நீரொத்த
பாற்கடலிற் றோன்றும் பரிதி ஒளிமழுங்கி
மேற்கடலிற்சென் றணைந்தான் வெற்பு. (253)

இவ்வகை ஆதித்தியனும் அத்தமன பருபதஞ் சார்ந்தான் தன்மபுத்திரனும் மகாதுயரத்தூடே ஒரு வடவிருட்சத்தின் கீழிருந்து நிததிரைகொள்ள அதன்மேல் வாழ்வதொரு மாநாகம் பல் வாயால் வளைத்து யாது செய்ததோ எனில்.

+பெரிது மிரையொன்று பெற்றோமென் றெண்ணி
அரசன்றன்... ... ... ... ... ...
....மன் கண்டான் கலிந்து.
* * * *
------
* இவ்வடி இருந்தபடி எழுதப்பட்டது. +இப்பாடல் முற்றுமில்லை.
218 - வது முதல் 223-வது ஏடு முடிய இல்லை.

என்பது தன்முன்னே வந்து நின்ற புருஷமிருகத்தினைக் சந்தோஷித்துப் பின்னை அதிசந்தாபத்தனாய விம்மிவிம்மித் துக்கமெய்தி நின்ற தன்மபுத்திரனை நோக்கி யாது சொல்லிற்று புருஷ மிருகம்.

எந்தோழ னெம்பியர்பேர் சொல்லி இடருறுநீ
வந்தாயிங் கேதோ வரவென்ன - முந்த
அறிந்தீர் போல்நின்றீ ரார்கொலோ வென்றான்
பரிந்தோ ராமிருகம் பன். (254)

என்பது, வீமார்ச்சுனர் நகுலர் சகாதேவர் பேர் சொல்லுகின்றாய். நீ யாரென்று நிருபிக்கப் போகின்தில்லை. பயப்படாதே. நின்னை உள்ளவாறெல்லாம் உரைப்பாயாகென்று புருஷமிருகம் கேட்பத தன்மபுத்திரன் சொல்லுவான்,

யான் குருவம்சத்துத் தன்மபுத்திரன் என்பதறியாயோ. நீ என் யாகத்துக்கு அத்தினபுரத்துக்கு வந்தாய், நீ என்னை அறியாயோ என்று தன்மபுத்திரன் கூறக் கேட்டுக் கனத்த வியாகுலமாய் யாது சொல்லிறறோ எனில்.
* * * *
----------
*225 முதல் 235 வரை ஏடுகள் இல்லை.

.........த் தொண்ணூறு யோசனை கடக்கில் அக்கோணம் என்னும் பருப்பதமுண்டு. மற்றதனைக் கடந்துபோய், ஸ்ரீ கேதாரத்தைக் காண்பாய் ஆகென்று பின்னம் யாது சொல்லிற்றே எனில்.

குருக்கள் குலபதியே கோவேந்தர் கோவே
திருக்கேதா ரத்தளவுஞ் சென்றால்-நெருக்கியோர்
புள்ளதனை யூர்கின்ற போற்றுகழல் மாயவனை
உள்ளவா றெல்லா முணர். (255)

இவ்வகை சொன்ன ஸ்ரீவாசிகம யாது சொல்லிற்றோ எனில்.

சிவனுடைய மெய்யடியென் செவ்வாய்ப் பவளத்
தவள நகைத் தையல் மாதே - இவளுடைய
சொல்மிழற்று மஞ்சொற் சிறு கிளியை[யான்]
கொல்லமுனிந்த சாபமது தான். (256)

என்பது யான பகவான் அடியேன்பால் பதிபரமேசுரி
ஒரு கிளி வளர்த்தாளதனைப் பெறுமயக்கத்தாலே கொன்றேன். பார்ப்பதி முனிந்து கிளியைக் கொன்றாய், நீயுங் கிளியுறுப்பெறுவாய் என்று சாபமிட, அன்றுமுதல் அப்படியே திரிகின்றேன். இப்பொய்கையும் என்னதே, யாவரும் என்னை நலிவாரில்லை, நானும் விட்டுணு லோகத்துப் போய் இப் பொழுது வந்தேன். நீயும் ஸ்ரீ கேதாரம் செல்வாய்ஆகென்று சொல்லக் கேட்டுத் தன்மபுத்திரன் சொல்வான்.

நீ, விட்டுணு உலகத்தினின்றும் வந்தாயாகில், நீ விட்டுணுவைக் கண்டறிவையோ வென்ன, ஸ்ரீ வாசிகம் யாது சொல்லிற்றோ வெனில்,

வண்டாருந் தண்டார் துழாயலங்கல் மாயவனைக் *கண்டேனவன் வடிவுசொல்லி யரற்றிவிழக்--கண்டுபுருஷமிருகம் தன்மபுத்திரனை முகத்தைத் துடைத்துப் பின்னும் யாது சொல்லிற்றோ எனில்,
---------
*கண்டென்வன வடிவு, குறைப்பாடல் மூ. பாடம்.

தன்மபுத்திரனே, உன் தன்மசீலம் தலையழிய இவ்வாறு செய்தாரை மூலமறகொள்கத் தவிர் என்று கொதித்து யாது சொல்லிற்றுப் புருஷமிருகம்,

மன்னாவுனக் கிளையார் வானடைய நீதான்போய்
இன்னாது செய்தார்மற் றியாவர்தான்--முன்னாளில்
பாருனக்கே யாக்கிப் பகைகெடுத்து நான்றருவேன்
நேருனக்கு முண்டோ[தா] நிலத்து. (257)

நின்னை இவ்வாறு செய்தார் யார் என்று சொல்லுவாய். அவர்களை என் எயிற்றுக்கிரையாக்கி நின் முடிசூட்டிச் சத்தலோகமும் இராசசியமும் செலுத்துவிப்பன், நீ ஏதும் இட ருறவேண்டாமென்று வடவாமுகாக்கினிபோலக் கன்னறு நின்று பின்னும் யாது சொல்லிற்றோ எனில்.


காற்றோ மலையோ கடலோ கனலோதான்
கூற்றோ உரையென்று கோபித்து- பற்றக்
கலியெனக்கு மானதோ கட்டுரையா யென்றான்
வலிதனக்கொன் றில்லா தவன். (258)

என்றிவ்வகை புருஷமிருகம் சொல்லகேட்டு யாது சொன்னான் தன்மபுத்திரன்.

பூந்தாவும் காவும் பொருப்பும் புடைகாத்த
மாந்தாதா என்பவனும் வானடைந்தான் - காய்ந்த
இரணியனைப் பிளந்த மாயனெம் பெருமான்
சரணகமே என்றனக்குச் சார்பு. (259)

என்பது, உன்னைப்போல தை*தாயவான்களும் சத்திய வான்களுமில்லை. யாங்கள், நாராயணன் பணி மறுக்கலாகாது, ஆதலால்,

நாராயணசாமி சரணார விந்தங்களே எமக்கு ராச்சியங் கண்டாய். பூலோகத்துக்கு ஸ்ரீமத் துவாரகாபதிக்கே இருந்து துஷ்டநிக்கிரகம் செய்து புலியும் புலவாயும் ஒரு துறையிலே நீரூட்டினாரும், மாந்தாதாவும் பலரும் மாண பெய்தினார். அவரும் சுகத்தே அனுபவித்துத் கன்மபூமியில் மரணமின்றியே இருந்தார் யாவருமில்லை கண்டாய். யான் இனிக் கன்மபூமியில் இருப்பனல்ல னென்று தன்மபுத்திரன்@ (+ பாலியபடியே, பஞ்ச இந்திரியங்களும் பேதியானின்றன. யான் சொல்லும் வண்ணம் ஏதென்று தன்மபுத்திரன் கூறக் கேட்டு யாது சொல்லிற்று ஸ்ரீ வாசிகம்.)

------
*மான்றோ தான் மூ,பாடம், + பால்லியபடியே மூ.பாடம்.
@ இதற்கடுத்த ஏடு இல்லை.

செங்கோல் திசைநடப்பத் தேர்நேந்தர் தற்சூழச்
சிங்கா தனத்திருக்கும் சேவடிகள்--துங்கமத
மத்தகத்து மேலிருந்த மன்னவனே மாலவனாய்
இத்திசைநீ வந்தவா றென். (260)

இவ்வகை நீ மகாவிந்தம் போந்த வழிகள்தோறும் அதி பலவான்களாகிய தம்பிமாரையும் இழந்து உன் உற்றாரையும் இழந்து இராச்சியத்தினையும் துறந்து பருப்பதங்களும் மாலி யாறுகளும் கடந்து வருந்தி நின் பாதங்கள் அத்திப்பழத்தை ஒத்திருந்தனவென்று பின்னும் யாது சொல்லிற்றோ எனில்,

தேவர்..........பணிகேட்பத் தேர்வேந்தர்[சூழக்]
காவலனாய்ப் பொய்கைதளைக் கைக்கொண்டு--யாவற்கு
மேலாக வீற்றிருப்பா யென்றுரைத்தான் மெய்வருந்த
மாலாகிச் செல்வானை வந்து. (261)

என்பது, இங்குனக்கு வேண்டினவெல்லாம் தலைக்கட்டிக் கோமேதகத்தால் மாடகூடப் பிரசாதங்களும், விசுவகன் மாவை அழைத்து இங்கே உண்டாக்கித் தருவென, இங்கே இருமென்று ஸ்ரீ வாசிகம் சொல்ல யாது சொன்னான் தன்மபுத்திரன்,

வேதனையும்வேத விதியினையு முன்னை வரும்
தீவினையுந் தீர்க்குந் திருமால்காண்-- போதுலவு
பொற்றா மரைப்பாத மல்லாது பூதலமேல்
மற்றேதும் வையா மனம். (262)

என்றிவ்வகை சொல்லி நீ முன்னம் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கேதாரமே போகின்றேன் என்று போமளவில் நாராயணசாமி பாதகமலம்.

* மேகங்களோ வென்றி வெய்யகதிர் விட்டெறிப்ப
......ள்ளதீந்து மழைதானு மன்றி - நாகங்கள்
மெய்யுயிர்க்கு மன்ற வியன்கானஞ் சென்றடைந்தான்
...........ற் தாயகக் கோ...... (263)

இவ்வகை ஆதித்த கிரணத்தால் வல்லிசாதிகள் வேறு பட்டு நாங்களும் நீ ....நரகத்திலே ஒடுங்குகின்ற கானததை ஒருவகையாற் கடந்துபோய்ச சேர்ந்து அங்குள்ள
தீர்த்தங்களையாடி அங்குநின்றும் போய்கோணம் என்னும் பருபதங்கண்டு,

காணி என்னும் மாலியாறுங்கண்டு யாது செய்தான் தன்மபுத்திரன்,

$சங்கு வீரமு மங்கேமாளிகைமேல் செங்கமலங்
காட்டித் திருமுகங்க ளங்கே அணிப்பாலிகை
...தன் மணப்பாறை மேலிருந்தான் வந்து. (264)

இவ்வகை இத்தின மருங்குண்டாகிய மணிப்பாறை மீதிருந்து இளைப்பாறி யங்குநின்றும் போய் தெய்வசாரமென்னும் மாலியாற்றைப் பாலனியாய் இருமருங்கும் நந்தவன மாயப்பதியாய்த் தோன்றத் தோர*பாங்காய், காணாது வீயாது சொன்னான்.

அரவுயர்த்தோன் வஞ்சனைக்கு மாற்றாது முன்ன
மிரவுபக லெம்பியரு நானும்-அருவி+......
வெங்கானம் போன்றதே என்றென்று மெய் @துற்றான்
தன்காலுடன் தளர்ந்து தான். (265)
-------
* ஈற்றடி இல்லை, 2-வது முதற்சீரில்லை குறைப்பாட்டு இருந்தவாறே எழுதப்பெற்றது.
$இப்பகுதி பாட்டிடை விரவியதுபோலக் காண்கிறது.
+நிறை மூலபாடம். @துற்றான் பாடம்.

இவ்வகை.......................பொக்கிஷத்துப் பின்னை வீமசேனனை நினைந்து யாது சொல்லிப் பிரலாபித்தானோ எனில்,

*நூற்றுவர்க ளென்று---------------------ம்
பெரும்போது தன்னை ஏற்றச்--செருக்களத்திலீடழித்து
நாற்றிசையும் தோற்றம் படைத்தருளுந் தோள் வீமா
[தோ] னாற்றம் கரைவாய் வின். (266)

என்பது, பின்னும் அருச்சுனனை நினைந்து யா[ங்ங]னம் பிரலாபித்தானோ எனில்

இத்தரை எல்லா மமர்களத்தி லாங்கே
எதிரெதிரே வில்லிறுத்த வேந்தாய்--அதிரதிரி
லோர்விசயன் முக்கணிறைவனொடும் போர்பொருத
தார்விசயா வென்றான் தளர்ந்து. (267)

அன்றியும்,

* மாற்றலர் பெரும்புகழாய்......மன்னவனே [மன்னவனே]
ஏற்றவெல் வேந்தர் இளங்களிறே--கூற்றனைய
சீற்றத்தாய் தேவற்காய்த் தானவரைக் கொன்றடர்[த்தாய்] (268)

-------
* இவ்விரண்டு பாடல்கள் அடிபிறழ்ந்தும் தளைகள் சிதைந்துமுள்ளது. இருந்தவாறே எழுதப்பெற்றது.

பூலோகத்துக் கன்னியரும் தெய்வலோகத்துக் கன்னியரும் நாகலோகத்துக் கன்னியரும், திரள்திரளாகப் பொய்கையின்கண் நீராடவந்தார். அப்பொழுது தன்மபுத்திரனுந்
துரோபதையை நினைந்து பிரலாபிப்பது கண்டு கன்னியர்கள் யாது சொன்னார்.

மானிடவர் வந்திங் கழுதா ரெனச்சொல்லி
கானமயில் போலுங் கன்னியர்கள் - ஆனதென்ன
அன்ன நடைமடவா ராங்கவனைக் கண்டார்கள்
இன்ன தெனவுணர்வீ ரிங்கு (269)

பஞ்சிதழி இணையார் பாரப் பணைமுலையார்
நஞ்சே அனையவிழி நன்னுதலார் - மிஞ்சுமயில்
சாயலார் பூங்குழலார் சார்ந்தார் தருமனைத்தம்
மாய முடனே அறிந்து (270)

மற்றும் சிலர் எங்ஙனம் வந்தாரோ எனில்,

நாமேதான் சென்றங்கே நன்றுசொல்லி நன்கணைந்து
தாமே யருகணைந்தார் தையலார் - பூமேவு
பொற்றா மரைமுகமும் பூண்முலையும் பொற்றோளும்*
நற்றா மரையடியார் நன்று. (271).

பின்னும் சிலர் எவ்வண்ணம் வந்தாரோ எனில்,

மாக்குன்றின் மீது மயிற்கணங்கள் வந்தாற்போல்
பூக்குன்ற மாலை புடைசரிய - நோக்கரிய
மையரிக் கண்மாதர் மன்னவர் கொல்லென்ன
பொய்கைதனிற் போயணைந்தார் புக்கு. (272).

அப்பொழுது தன்மபுத்திரனை நோக்கி யாது சொன்னார் கன்னியர்.

செய்ய..........றுமா னிடவர் வடிவாய்
எய்தற் கரியவிட மெய்தினாய் - மையுற்ற
கன்னியரே நாங்கள் கா.....யே புகுந்திங்[கு]
உன்னியவா றெங்கட் குரை. (273).

என்பது கன்னியர் வினவத் தன்மபுத்திரன் யாது சொன்னான்.

சேலெனுங்கட் கன்னியர்காள் செல்குதியோ எம்பியர்கள்
காலமே செய்யக் கதறுகின்றேன் - பாலனைய
மென்மொழியீர் நீங்கள் விரைந்து வினவுங்கால்
என்மொழிகேட் டென்(ன) பயன். (274).

என்பது, நான் என் தம்பிமாரையும் துரோபதையும் இழந்து புலம்புகின்றேன், நீர் என் மொழி கேட்டென்ன பயனென்று தன்மபுத்திரன் சொல்லக் கேட்டு யாது சொல்லுவார்.

நீயாருன் தம்பியார் நேரிழையார் நீவனத்தில்
பேயாக நின்றரற்றும் பேதைமைஎன் - வாயார
உள்ளவா றெல்லா(ம்) உரைஎன்றா ரோங்கோத
வெள்ளமாங் கண்படவார் மீட்டு. (275)

எனக் கேட்டுக் கன்னியற்கு மறுமாற்றம் கொடாதே மதிமயங்கி இருந்து சிறிது தேறிப் பின்னை யாது சொன்னான் தன்மபுத்திரன்.

பாண்டவரில் மூத்தவனான் பாவைமீர் கேட்பீரே
லாண்டகையான் வீமாருச்சுனருங் - காண்டகுதோள்
வீரா விரட்டையரு(ம்) மென்சொற் றுரோபதையும்
சேர விழந்[*யானி]திருந்தேன் றேர்ந்து. (276)


******************
சேர்ந்துகல விக்கடலில் செக்கானஞ் சூழ்ந்ததிரு
முற்றா முலைத்தடத்து மூழ்கினார் நின்றார்பால்
கற்றார்க ளன்றோ கலந்து. (277)

------
249-வது ஏடு இல்லை. *து-மூ. பாடம், யானி மூ. பாடம்.


என்பது, இந்திரியங்கள் துறந்தார் யாவருமில்லை பூமி பாரந் தாங்குகின்றதும், அநேகந் தன்மதானம் செய்கின்றதும் அநுட்டான தர்ப்பணம் செய்கின்றதும், வேள்வியாகம் செய்தும், மகாதானம் செய்தும், வருந்துகின்றார். எங்களைப் போலும் தெய்வமாதர்கள் தனத்தட மூழ்கவும் ஆடல்பாடல் காணவும் கண்டாயென்றும், அதுவுமன்றியே சர்வ லோகத்துக்குஞ் சுவாமியாகிய பரமேசுரனுக்கு இரண்டு மாதர்களை நீங்கி இருக்கமாட்டாது பாதத்திலும் சேடர்முடியிலும் வைத்திருக்கின்றார். ஸ்ரீ நாராயண பகவான் திருமார்பிலே ஸ்ரீ தேவியையும் ஸ்ரீ பாதத்திலே பூமி தேவியையும், கொண்டிருக்கின்றார். பிரமாதி தேவர் வாகேஸ்வரியை நாவிலே தரித்தும், சரசுவதியை அங்கையிலே தரித்துமிருக்கின்றார். தேவேந்திரனு மெண்ணற்கரிய தேவிகள் சேவிப்பவிருக்கின்றான். நீ சங்கு சார்க்கந் துறந்தோமென்கிற,

***************
---------
251-வது ஏடு இல்லை.

பொங்கு புனலாற் தாய்.................
எங்கு மிருண்ட வனமுளதாய் - அங்கே
சிங்கமொடு புல்வாய் செறித்துநில......தான்மேயு
மங்கு மலைக்கண்டா னவன். (278).

இவ்வகை, தொண்ணூறு யோசனை சென்று புத்தகிரி என்னும் பருப்பதங் கண்டு அதன்மேலேறி[யப்பட்ட] அங்கே காணப்பட்ட பகவத் கோயில் கண்டார், எங்ஙனம் துதித்தாரோ வெனில்,

தேடிவந்தேன் தாள்வேண்டி நிலமகன் பாரங் (குறைய)
விடாய் தீர்த்த கொம்பே - நெடியவரையில்
கஞ்சனுயிர் பிளந்தான்[றன்] தங்காய் கடுவினையேன்
நெஞ்சிலிடர் தீர்த்தருள்வாய் நீ. (279).

அன்றியும்,

*பொருகலையே மேற்கொண்டு போர்புரிந்து செங்கை
வருமயிடன் றன்சிரத்தை வாட்டித் - திருவடியை
மற்றதன்மேல் வைத்துகந்தான் தங்காய் வருந்தியவென்
குற்றமெலா(ம்) நீயே குறி (280).

என்று துதிக்க எங்ஙனம் தோன்றினாள்.

*வாளொருகை தண்டொருகை வன்சூல-வில்லொருகை
நீளொலி சங்கினொடு நேமியுங்கையால் மருங்குற்ற செவ்வி
மதிகாட்டி ஆங்கேயருள் கொடுத்தாராயினு மாங்கு (281)

இவ்வகை பிரத்தியக்ஷங்கண்டு மற்றவன் திருநாமம் நூறெட்டுந் துதித்து நிற்ப அவளுவேண....(தன்மபு)த்திரன் வேண்டிக்கொள்வான். ஸ்ரீ நாராயணன் ஸ்ரீபாதகமலங்களை .........யீண்டு........வரந்தருவாயென்னப் பிரசாதம் செய் தருளினான். அப்பொழுது,

*அங்கவள.... வாந்த..........
.......பொழுதே செங்கட்புலியுழலுந் திண்காட்
டிறத்துங்க மால் பொற்பாதஞ் சிந்(தித்து)
பொதி என்னு மந்தி. (282)

இவ்வகை நற்பொதி என்னும் மாலியாறுங் கடந்தேறியப்பால.....கடந்து போகா நிற்பக் கெதவாகினி என்னும் பெரியாறு மண்ணும் விண்ணும்.....நின்றவிடத்து மாலியாற்றைக் கண்டு போக அரிதென்று தம்பிமாரை நினை.... கண்(ண)னைத் துதி பண்ணா நின்றளவில் அத்தன்மராசன் யாது செய்தான்.

------------------------------
*குறைப்பாட்டு சுவடிப்படி எழுதப்பெற்றது.

"என்னுருவம் தான்கொண்டு சென்றா லப்பொழுது
மன்னவனு மாங்கே மயங்குமெனத்-தன்னுருவம்
பொல்லாச் சுணங்கனாய்ப் போகும்படி துணிந்தான்
எல்லா[*எங்கு] மவ னிற்கு மிறைவன்." (283)

தன்மபுத்திரன் மனது சோதிப்பது பொருட்டாகத் தன்மராசனும் தன்னுருவம் மாறிப் பெற்ற வடிவில் ஒரு புழுத்த நாயின் வேஷங்கொண்டு சென்று யாது செய்தான் தனமராயன்.

மினினிவரும் பூணகையார் மைந்தர்தம் கோமான்
தன்னிலமை சோதிப்பான் றான்வேண்டிப் - பொன்னிகராம்
தன்னுருவம் நீங்கித் தனியே ஒருநாளில்
மன்னவன்பாற் சென்றான் மகிழ்ந்து (284)

இவ்வகை தன்(ம) சரீரமெல்லாம் சொரி குருதியும்,வழும்புமாகிய நாய் இந்தத் தன்மபுத்திரனை அணுக வந்து வால் குழைத்து நின்று சுணங்குதான் யாது சொல்லிற்றோவெனில்

சிரங்கனாய் வந்தவெனைத் தேர்வேந்தே என்னை
இரங்கியினி ஏறவிடாய் என்று--தரங்கம்
பரந்துபுனல் சூழ்நாட னத்திசேர் தி.....
இரங்கவுரை செய்ததே இங்கு. (285)

என்பது, என இந்த ஆறு கடக்கின்றாயா [என்னைக்] கொண்டு போவாயாகென்று வால் குழைத்துச் சேவைசெய்து தன்மபுத்திரன் இரங்கும், .................து நிறபமற்ற தன் சரீரமெல்லாம் புழுநெளியக் கண்டிரங்கி என்னே உனக்கிது வந்து ......தி நிற்பமாலியாறும் சிறிது வற்றினது கண்டு தன்மபுத்திரன் போகத துணிதலும் சுணங்கனுமதுகண்டு ஊளையிட்டு நின்று யாது சொல்லிறறோவெனில்,

--------
*எங்கு மூ. பாடம்

*தலையும் புழுத்தென சரீரமும்புண் ணெங்கு
மலைகின்(றேன்) (வே)ண்டின்-றலைபுனல்சேர்
ஆற்றங்கரை கடக்க அய்யாகொண் டேகென்று
சாற்றின் வெவ்................... (286)
------
* குறைப்பாடல்.

என்பது, நானிந்த வடிவின்கண் சால நாள் திரிகின்றேன். இந்த மாலியாறு கடக்க மா[ட்டாமல்].....ப்பாத்தும் போக விரகன்றி உழலுகின்றேன். நீ என் புண்ணிய [கிருத்தத்]தாலே வந்து தோன்றினாய் என,

வழுவு மொழுகும் சுரோணிதமும் மேனி
முகமெல்லாமிகுந் தூரத் தா--னேதும்
நெஞ்சில் நினையாதே நெடுமுடியின் மீதுவைத்தான்
பஞ்சவரில் மூத்தான் பரிந்து. (287)

என்பது, இவ்வகை முடுவலைத் தலையில் வைத்து வழும்பும் சுரோணிதமும் தலையும் முகமும் வழிந்தொழுகத் தலையிலும் முகத்திலும் புழுவூர்தற்குச் சலியாதே போகலும், இப்படிப் போகின்ற தன்ம்புத்திரனை நோக்கி யான் முன்பு செய்த பாவங்களாலே இப்படி அனுபவிக்கின்றேன் என்று முடுவல் யாது சொல்லிற்றோ எனில்,

பாரை ஒளித்துரைப்பன் பாப்பாரைத் தீங்குசெய்வன்
ஊரை உறக்கத்தே தீயிடுவன்--ஏரி
கரையுடைப்பன் கூவல்குளம் காணிஎன்றுந் தூர்ப்பன்
உரையெடுத்துச் சொல்வதே உற்று. (288)

அன்றியும், பல மிருகங்கள், கொல்வன பசுவை வதை செய்வன்,

சீலமனிதர் சீவன் செகுப்பன் வலைபிணித்து
வான்பறவை கொல்வன் மரங்குறைப்பன்--மூத்தாரைத்
தான்பிறகு பேணேன் தலத்து. (289)

என்பது, மிருகங்களைக் கொல்வன் குராற் பசுவைக் கொல்வன் கொடிய பல குற்றங்கள் செய்வேன், மனுஷரைக் கொல்வேன் வரை பிணித்து பறவைகளைக் கொல்வேன் வாழை மரங்களைக் குறைப்பேன், குரவரைப் போணேன், ஆதலால் மிகவும் பாவங்கள் செய்வேனென்று பின்னும் யாது சொல்லிற்றோ எனில்,
படுகுழிகள் கல்லிடுவன் பாவையுரை கொல்வன்
பொடியபல குற்ற மேற்கொள்வன்--இடுவதனை
இச்சி யே (ன்) ஆர்க்குமிசைவு கொண்டே (ன) னெஞ்ஞான்றும்
நச்சியர்க் கீயேன் நயத்து. (290)

இவ்வகை முடுவல் சொல்லக் கேட்டுத் தன்மபுத்திரன் சொல்லுவான்.

யாவராயினும் தான் செய்த பாவங்களைச் சொன்னால் பாவங்கள் நீங்குமென்று மகா இருடிகள் சொல்ல யான கேட்டறிவன் ஆதலால் நீயும் செய்த பாவம் சொன்னாய். உனக்கு நரகமில்லை நானுமுன்னை நட்டாற்றில் இழிய விடுகிலேன், கரையேற்றிவிடுவே னென்று பின்னும் சொல்லுவான்,

எல்லாக் கொலைசெய்தா யாகிலும் யானுன்னைப்
புல்லாக் கரையிற்போய் விடுவன் -- சொல்லா
அது பெரிதே சொன்னாயின் றாற்றில்விடே னென்றான்
மதிகுல..... வெண்குடையான் †தான். (291)

----------
*குராற்பசு- கபில நிறப்பசு. † மகிழ்ந்து மூ.பாடம்.

எல்லா வினை செய்தாயாகிலு முன்னை நான் நீரில் இழிய விடேன், கரையிலேற விடுவேனென்று தன்மபுத்திரன் சொல்லக் கேட்டுச் சுணங்கனும் யாது சொல்லிற்றோ எனில்,

எல்லையதைக் கடப்ப னென்று மிருநிலத்தில்
சொல்லு... பொய்யேயாய்ச் சூழறிவு-- மில்லாக்
கயவருடன் பகர்ந்து கைப்பிடியேன் கண்டாய்
இயல்வதே யார்க்கு மிடேன்றான். (292)

இப்படிப் கலகாலுஞ் சுணங்கள் சொல்லவும் மற்று அதன் கட்டுரை கேளாதே வடகரை ஏறினான் தன்மபுத்திரன், அப்பொழுது யாது நிகழந்ததோவெனில்,

சிரங்கநாய் தான் தவிர்ந்து தெய்வ வடிவாகி
இரங்கியோ ரின்பத்த னாகித்-- தரங்களாய்ப்
பூமாரி தூவிப் புகழ்ந்தேற்றிப் போய்நின்றான்
கோமான்றன் *நா[யை]க் குறித்து. (293)

இவ்வகைத் தனமராசனும் சுணங்கனுருமாறித் திவ்விய ரூபத்தனாய் யாதருளிச் செய்தான்,

நீ யென் புத்திரன் என்பதற்கும் சத்தியவான் என்பதற்கும் நீயே அன்றி இல்லைகண்டாய் என்று தன்மபுத்திரனுக்குப் பிரதி உபகாரம் செய்தற்கரிதென்று சொல்லி நீ உன் சரீரத்துடனே சுவர்க்கலோகம் புகுவாய் என்று வரம் கொடுத்துப் போயினான் தன்மபுத்திரன.

மண்முழுதுந் தானாண்டு மாயன் பணியினால்
விண்முழுதுங் காணத் தவமேவினான், (294)
* * * * * *

---------
261 - வது ஏடு இல்லை * கை மூ.பாடம்,

..........உரைக்குமளவில் இராத்திரி சேடங்கழிய ஆதித் தன் யாது செய்தான்.

குவளைமலர் வாய்திறப்பக் கோகிலங்க ளார்ப்பத்
தவளநிறச் சங்கொலி நின்றேங்க --*அருவரைவாய்ப்
பொங்குதய மால்வரைக்கே போந்துதித்தான் மார்த்தாண்டன்
*செங்க[திர்]த் திரள் வீசிச் சிவந்து (295)
---------
* அரி மூ பாடம் * செங்கத்திரள் - மூ.பாடம் கடற்களித்து மூ. பாடம்.

இவ்வகை கண்டு தன்மபுத்திரனும் மகா இருடியை விடைகொண்டு வடக்குநோக்கிப் போயினார் என்றவாறு.

தெய்வக்கட [களிற்று]த் தேர்வேந்தனைத் தொடர்ந்து
கவ்வைத் துயரங் கருத்தழிய-- அவ்வகையே
துன்னிமித்த மெல்லாம் தொலைத்துவந்த மன்னனுக்கு
நன்னிமித்தம் காட்டும் நயந்து. (296)

இவ்வகை தன்மபுத்திரனும் நிமித்தங்கண்டு பிரியமெய்தித் தொண்ணூறுயோசனை சென்று சங்கொடி என்னும் பருபதத்தினையும் கடந்துபோய்; ஸ்ரீகேதாரமும் முப்பது யோசனை எனச் சென்று, ஒரு வடவிருட்சத்தின் கீழிருந்து தம்பிமாரை நினைந்து யாங்(க)ஙனம் புலம்புவான்.

வீமா விசயா விறனகுலா சாதேவா
வேமாறென் னுள்ளமெலாம் வெம்பினே-- னாவாவென்
ஒன்று மறிகிலே னூழிவினை யார்செயலை
இன்று மறிகிலேன் யான். (297)

இவ்வகையிருந்து புலம்பிடவும் நன்னிமித்தம் பலவுந் தோன்றிப் புண்டரீகாக்ஷன் புருஷோத்தமன் ஸ்ரீ கேசவன் அரங்கவாணன், சர்வசந்தோஷன், ஆப்பிரியன், கருடவாகனன், ஸ்ரீராமன், அச்சுதன், அநந்தசயனன், கருணாகரன், கார்முகில்வண்ணன் என்று துதிபண்ணி இனிது சொல்லி நடந்து ஸ்ரீ கேதாரத்தை எவ்வண்ணம் கண்டானோ எனில்,

சுற்றுமதி லொருபால் சுற்றும்பொழி லொருபாற்
சுற்றுநதி யொருபால் சூழ்வனமாய்-மற்றதன் பின்
செங்கமலக் கண்ணன் திருமேனி காட்டிற்றே
அங்கமலப் பொய்கையெல்லா மாங்கு. (297)

இவ்வகைத்தாகிய கேதாரமாவது நான்கு திசையும் கமுகும், தெங்கும், கதலியும் மிடைந்து, மல்லிகை, சண்பகம், கேதகை தாமரை நெய்தல், தாதவிழ கழுநீர்மிடைந்து மூவாயிரந் தீர்த்தங்களை உடைத்தாகிய திருக்கேதாரத்தைக் கண்டு சம்பிரமித்து வந்த திருக்குமரி யாது சந்தோஷித்து ஒரு விருட்சத்தின் கீழிருந்து நாராயண துதி பண்ணினான். அப்பொழுது ஸ்ரீ சுதன யாது செய்தருளினான்.

சேமத்துத் தானிருத்திச் செங்கமலக் கண்ணன்பால்
சாமத்தே பேணித் தனிநெடுமால்-நாமத்தை
எப்பொழுது மெண்ணி இனிதமர வேத்தினான்
அப்போதருள் புரிந்தா னாங்கு. (299)

என்பது, ஸ்ரீ சுதன் போய் ஸ்ரீ வைகுண்டம் புக்கு நாராயணசுவாமியை நமஸ்கரித்துத் தன்மபுத்திரன் திருக்கேதாரத்துக்கு வந்தானென்று விண்ணப்பம் செய்யத் தேவதேவனும் மகாப்பிரியனாயவன் சரீரத்தோடும் வந்து நம்மைக் காணவேணுமென்று திருவுளம்பற்றி அருளி திவ்விய ஸ்ரீ ஆதிதேவர்களும், சத்த இருடிகளும், தும்புரு நாரதர்களும், அசுரர்களையும் அருளிப் பாடிட அவர்களும் வந்து பணி ஏதென்று தொழுதுநிற்ப அருளிச் செய்வார்.

நீங்கள் போய்த் தன்மபுத்திரனை அழைத்துக்கொண்டு வாருங்களென்று அருளிச்செய்ய விடைகொண்டு போந்து ஸ்ரீ கேதாரம் புக்குத் தன்மபுத்திரனைக் கண்டு தேவர்கள் யாது சொன்னார்.

தேர்வேந்தர் வேந்தே திருக்கேதா ரம்புகுந்தாய்ப்
போர்வேந்தே முன்னாட் பொருக்களத்தில்-தார்வேந்தர்
துஞ்சிடப்போர் வென்றவனே துன்புவியில் நீராடி
நெஞ்சிலிடர் தீரென்றார் நின்று. (300)

என்பது தன்மபுத்திரனே நீயுன் மித்துருவான தவத்தாரையும் குருக்களையும் மூத்தோரையுங் கொன்ற பாவம் கழியவும் நீ உன் தம்பிமாரையும் இழந்துபடுகிற துயரமும் தீரும். இந்தத் தீர்த்தத்திலே விரும்பியாடுவாயா கென்று விமானங் கொண்டுவந்து நின்று சொல்லத் தன்மபுத்திரனும் மேல் நோக்கிப் பார்த்துத் தேவர்களையும் விமானத்தையுங் கண்டு தரிசன மோட்சம் பண்ணிப் பெருக்கப் பிரியப்பட்டுத் தீர்த்தம் புக்கு யாது செய்தான்.

வானவர்கள் சொல்லியமா தீர்த்தமற் றதனைத்
தானாடுவே னென்று தார்வேந்தன்-தேனாரும்
பூந்துழாய் மார்பன்றன் பொற்கமல பாதமே
சார்ந்தாடுவே னென்றான் தான். (301)

என்றிவ்வகை தீர்த்தத்திற்புக்கு நாராயணசுவாமி ஸ்ரீ பாதங்களே சேர்வேனென்று மனத்திற்கொண்டு தீர்த்தமாடினான். அப்பொழுது, சரீரம் யாது நிகழ்ந்ததோ எனில்,

ஊனுடம்பு நீங்கி ஒளிவயிரம்போ னிறமாய்
ஞானமுட னான தனித்தவனாய்-வானிடையே
தென்றற் றேர்கொண்டு திருமாலரு கெலாம்
மென்றற் றேறினா ருற்று. (302)

இவ்வகை தீர்த்தமாடித் திவ்விய ரூபம் பெற்றான் தன்ம புத்திரன் என்றவாறு.

அப்பொழுது தேவர்களும் சம்பிரமித்துப் பிறிதாய் தன்மபுத்திரனை மாருதத் தேரேற்றிக்கொண்டு யாது செய்தார்.

பூப்பணிகள் தூவிப் புரிசங்கம் பேரிகைக
ளார்ப்பரிக்கக் கவரி யருகிரட்டப் - பார்த்திபன்றான்
தானவருந் தென்னே யென்று மறையோரு
[வானவரும்] மந்தரமேல் வாழ்த்தினாராங்கு. (303)

*அன்றியும்
--------
இதன்பின் 268, 269 ஏடுகள் இல்லை..

+மன்னு மடந்தையர்பல் லாண்டிசைப்ப வந்தங்கே
துன்னியபாடல் தொடர்ந்தசைப்ப-அன்னியமொன்
றில்லாமை காட்டி யிருவுசும்பு மாற்றதே
எல்லாருங் கூட்டி இசைந்து. (304)
---
+ மண்ணுமடந்தை மூ. பாடம்
இவ்வகை சங்கு பேரிகை தாரை முழங்க அனைவரும் புட்பவருடம் பொழியப் பல்லாண்டிசைப்பப் பூரணகும்பமும் முளைப்பாலிகையும் கொண்டெதிர் நிற்பத தெய்வ ஸ்திரீகள் எதிர்கொண்டு வெண்சாமரை அருகிரட்ட, வெள்ளி வெண்குடைமேல் நிழற்ற, தெய்வப் பிராமணர் சாத்திரம் சொல்ல, மகாராசா தொழுதேற்றிச் செல்லாநின்ற தன்மபுத்திரனை நோக்கித் தேவர்கள் யாது சொன்னார்.

வண்டு முரலும் பொழில்சூழ் வளநாடா
கண்டா யியக்கர் கடிநகர்தான்-கொண்டிதனை
யாண்டிருந்து நீயிங் ககலா திருமென்றார்
வெண்........ (305)
* * * *


அடியார் வந்தாலி.......
இருக்கை யிதுவாகுமென்னா வுருத்திரர்வந்-தாங்கே
தீங்கொண்ட [*வனின்] னகரங் காட்டினார்
பாங்கோ யெனஉரைத்தற் பாற்று. (306)

அதுகேட்டுத் தன்மபுத்திரன் சொல்லுவான்

சங்கநிதி, பத்மநிதிதன்னை நீர் தந்திடினும் அங்கேழுலகம் அவை பெறினும் இங்கிரேன். எம்பிரான் வைகுந்தம் என்னும் சொல் அலாது நம்பிடேன் நானென்று சொல்லத் தேவர்களும் சந்தோஷித்து அங்கு நின்றும் கொண்டுபோய்த் தன்மராசனுக்குக் காட்டி யாது சொன்னார்.

இவன்கா ணிடுமுரசு முன்னுயர்த்த கோமான்
இவன்கா ணிலத்தரசர் வேந்தன்-இவன்காண்
குந்தி மகனாய்க் குருகுலத்தார் கொற்றவனாய்
வந்தவன்காண் மாபெந்த மாங்கு. (307)

அன்றியும்

அரவுயர்த் தோன்றன்னை அமர்க்களத்தே கொன்று
பரவுபுகழ் சூரியமும் பண்ணிக்-கரவாத
கற்பகம்போல் வண்மையினான் கார்மேகம் போற்கொடையான்
நிற்பனவே செய்தா னிலத்து. (308)

இவன் காண் தன்மபுத்திரனாகின்றான். மற்றிவன்றன் மனோபுத்தி யறிந்துன்பாடே யிருத்திக்கொள்வாயா கென்று மிவன் ஸ்ரீ வைகுண்டத்தே போவதற்குப் பெரிதுங் கருணையுண்டாகச் சொல்லுகின்றான் இவன் வைகுண்டம் பெறுமாகிலும் நிரூபித்தருள வாயாகென்று தேவர்கள் உரைப்பத் தன்மபுத்திரனைத் தன்னருகே இருக்கப் பணித்துப் பின்னும் யாது சொன்னான் தன்மராசன்.

--------
*இப்பகாக்குறியில் உள்ளது ஏட்டின்படியே

நன்மையும் தீமையும்நாடி இவன் பயந்த
தன்மமெலாந் தாரணியின் மேலாய்-இன்னதாம்
என்றெண்ணி யானறியக் கூறென்றோ னேந்தியதோள்
குன்றம்போல் வேலான் குறித்து. (309)

தன்மராசனும் சித்திரபுத்திரனை நோக்கி, இவன் செய்த தன்மபாவமெல்லாம் சொல்லுவாயாகென்ன யாது சொன்னான் சித்திரபுத்திரன்,

சண்பகத்தின் போதளைந்து தென்றல் தேரூர
பண்பயிற்றும் நன்னாள் பண்டொருநாள்-நண்புகெட
வல்லாது பேசிஅசுவத் தாமா வதனென்
றில்லாது சொன்னா னிவன். (310) (310)

என்பது,

துரோணாசாரியன் னுயிர்த்த...........
* * * * *
"சீடத்தான் சென்றார் கொதித்து"
--------
272-வது ஏடு இல்லை.

இவ்வகை தன்மபுத்திரனைக் கொண்டுசென்று நாகராசனுக்குக் காட்டி யாது சொன்னார் கிங்கிலியர்,

மன்னவன் பொற் சிங்காதனத் திருப்பமாநிலத்து
மன்னரெல்லாம் வந்துதொழ மண்ணாள்-மன்னவர்கள்
செந்தாமரைக் கரத்தா லிங்கிவன்றன் சேவடியைப்
பைந்தாமஞ் சூட்டினா ராங்கு. (311)

இவ்வகைப்பட்ட தன்மபுத்திரன் இவன்காணென்று கிங்கிலியர் சொல்லக்கேட்டு அவர்களை நோக்கி யாது சொன்னான் நாகராசன்,

என்ன பிழையினால் வந்தானிவ னென்றும்
மன்னன் வினவவ்வர் வந்துரைப்பார்-முன்னோர்
பிழைமாற்றத் தாலவர்க்கப் போநரகங் காட்டும்
தொழில்மார்க்க மென்றார் தொழுது. (312)

இவ்வகை பூலோகத்திலே ஒரு பொய்யுரைத்தான் என்று இவனுக்கு ஏழு நகரமுங் காணவேணுமென்று தன்மராசனை நிருமித்து நின்னைச் சார்வாய் விட்டான் ஆதலால் இவனுக்கு ஏழு நரகமுங் கா[ங்கு]ட்டுவித்து வரப்பணியாகென்று தன்ம புத்திரனைக் காட்டிக் கொடுத்துப் போயினார் கிங்கிலியா என்றவாறு.

இப்பால் நாகராசனும் தன்னுடைய கிங்கிலியரை அழைத்துக் கால தூதர்களையுங் கூட்டிக்கொண்டு தன்மபுத்திரனுக்கு ஏழு நரகமுங் காட்டி வருகவென்று சொல்ல அவர்களும், இவனைக் கொண்டுபோய்ப் பொய் மொழி சொன்ன இவனை வெட்டும் என்பாரும், ஈர்வாளால் அரியும் என்பாரும் அக்கினியில் இட்டுப் புரட்டு என்பாரும், படுகுழியிலே நிறுத்திக் கழுத்தளவு வணல்* தூர்த்துத் தலை இலக்காக எறியும் என்பாரும், செக்கிலிட்டுத் திரியும் என்பாரும், பலவுஞ் சொல்லி முதல் நரகில் கொண்டு சென்று காட்டிச் சொல்லுவார்.

பிணிப் பீ என்னும் இது நூறு யோசனை ஆழமும் அகலமும் உடைத்தாயது கண்டாய். இதில் பொய் மொழி சொன்னாரும், மன்றிடைப் பொய்த்தாரும், அவ்வியம் பேசினாரும், கண்டாய் பருந்தினாலும், கழுகினாலும் தின்னப்படுகின்றா ரென்றுங் காட்டி அங்கு நின்றுங் கொண்டு.......
* * * *
-----
அடுத்து 75 வது ஏடு இல்லை.


........(நிரயத்) தழுந்துகின்ற பாடுகண்டாய் என்று காட்டிச் சொல்லத் தருமபுத்திரனும் நாராயண துதிபண்ணி அரிகரி எம்பெருமானே இப்பொல்லா நரகம் யான் காண்பதோ என்று பின்னும் யாது சொன்னான்.

திண்ணந் தடிகளால் மோதிச் செறிநரகத்
துண்ணின் றெழுந்தசை கையுண்டுவரா-கண்ணனே
மண்ணளந்தாய் மாபலிபால் மண்ணிரந்த பொற்பாதம்
†கண்ணுறங்கால் (313)

என்பது நான் படுகின்ற வேதனைகள் திருவுள மறிந்திலவோ, இந்நரகம் கண்ட கண்ணில் நின்னுடைய ஸ்ரீபாதங் காண்பதோ அரிகரி என்று சொல்லி நிற்ப அங்கு நின்றும் கொண்டுபோய்

நாலா(வது) நரகம் அருகு அணுகி (என்பது) நானூறு யோசனை ஆழமும் அகலமும் உடையது கண்டாய் இது தன் மித்துருவாம் தவத்தாரைக் கொன்றும், மாறுபூமி கொண்டுபடுகின்ற பாடு இதுகாண் என்று காட்டத் தன்மபுத்திரன் யாது சொன்னான்.

செம்புருக்கி வார்த்துச் செவியாலும் வாயாலும்
அம்புகள்கொண் டாங்கே அழுந்துண்பார்-கொம்பிற்
*றழுவேறி நிற்பாருங் காணே னரகம்
*புழுவேறி மேலூரப் பார்த்து. (314)

----------
† காணுங்கால் மூ.பா. அன்று.
* இவ்வடிகள் உண்மை உருவம் திருத்தப்பெற்றது.


என்பது, நாதனே, நாராயணனே அபயமென்று துதி பண்ணி நிற்ப அங்கு நின்றுங் கொண்டுபோந்து அஞ்சா நரகம் புட்பகாண மென்பது ஐநூறு யோசனை யாழமும் அகலமும் உடையது கண்டாய். இது, பிறதார பாவம் பண்ணினாரும் சிறியத்தால் கொடுத்துப் பெரியத்தாலே வாங்கினாரும் துலாக்கோல பொய்த்தாரும், தன்மதானம் இகழ்ந்தாரும் கொடுப்பது விலக்கினாரும் தன்னுடைய பத்தாவிருக்கப் பிறரோடு பயன்கொண்டாரும், பசுக்களைக் கொன்றாரும், படுகின்றாரென்று காட்டி நிற்பத் தன்மபுத்திரனும் நாராயணன் துதிபண்ணி நின்று, சிலரைக் கடாவின் காலிலே கட்டியிழுப் பாரும், செம்புருக்கி வாயில் வார்ப்பாரும் இருப்பு நாராசம் ஏற்றுவாரும், மற்றதனைக் காய்ச்சித் தழுவுவாரறும் ஆகப்படுகின்ற வேதனைகண்டு அரிகரி புருஷோத்தமனே இவர்கள் படுகின்ற வேதனை என்னே! என்றும் இவர்கள் என்ன பாவம் செய்தாரென்று கேட்பத் தூதுவர் சொல்லுவார் மாதாக்களை வைதாரும் இல்லிடம் வழுவினாரும் வம்சங்களை அழித்தாரும் பிராமணர் தவசிகளைக் கொன்றாரும் மற்றவர் திரவியங்களைப் பறித்துக்கொண்டாரும் இவர்காண என்று தூதர் சொல்லத் தன்மபுத்திரன் சொல்லுவான்.

ஏற்றின்தன் காலாலே கட்டியிழுத் தெங்கும்
சாற்றியவர்கள் சதை யறிந்து -பாறினங்கள்
தின்றிட்டுத் தான்மருவுஞ் சேணரகம் காணாதே
இன்றருள்செய் மாலே எமக்கு. (315)

என்பது. இந்நரகத்தில் கிடந்து படுகின்றவர்கள் துக்கங்களைக் கண்டு நாராயண துதிபண்ணி நிற்ப அங்கு நின்றுங் கொண்டுபோந்து ஆறாநரகம் ஆறுயோசனை ஆழமும் அகலமும் உடையது கசவானக மென்பது காட்டக் கண்டு தன்ம புத்திரன் யாது சொன்னான்.


கழுத்தளவு கும்பியிலே கையெடுத்து நிற்பார்
புழுக்கள் செவியாற் புகவே-வழுக்கி
விழுநரகங் கண்டு மெய்சோர்வன் மாலே
வுழுநரகம் [*காண்பதோ புக்கு.] (316)

* * * *
------------
279-வது ஏடு இல்லை. * காண்பதோ புக்கு எ-து மூ.பா. அன்று.
281-வது ஏடு இல்லை.

.......(நரக)த்திலே வாயளவு கும்பியிலே நின்றழுந்துகின்ற துரியோதனனைக் கண்டு போவதோ இவனுக்கு இதுவும் அடுக்குமதோ நாராயணனே இவனை இப்படிக்கண்டு நான் போய் சுவர்க்கலோகத்தில(தே)இருப்பேனா இவனைக் கொண்டன்றி இவ்விடம் விடுகிலேன் என்று தன்மபுத்திரன் சொல்லா நிற்பக் காலதூதரும், கிங்கிலியரும், இராக்கதரும் பார்த்துச் சொல்லுவார்.

"இன்னா செய்தாரை ஒறுத்த லவர்நாண
நன்னயம் செய்து விடல்"

நன்மாற்றம் முன்னோர் கூறுவதுமுண்டு குறித்தினநு
தாள் கண்டோமாறில பெரும்புகமாள வந்து,

என்பது முன்னந்தன்னை இகழ்ந்தது பாரா நன்மை செய்யக் கருதி.......

.............அன்றி யான் உன்னைச் செய்தனவாக எண்ண வேண்டாம் என்று நானிப்படி நரகத்தழுந்து மதுகண்டும் போமதுனக்குப் போதாது, நீ என்னை நரகத்தினின்றும் வாங்காது போகில் உனக்குச் சாலத்தோஷ முண்டென்று துரியோதனன் சொன்னதற்குச் சாலவும் பிரியனாய் நீ சொல்லியதெல்லாம் உள்ளத்தன்றோ என்று துரியோதனன் அழுந்துகின்ற
நரகத்துக்கு [வக்கடவ] தூதரை நோக்கி யாது சொன்னான் தன்மபுத்திரன்.


தான்செய்த தன்மத்தி லேபாதி தானீந்து
வான்செய் நரகத்தில் வாங்கினான்-தேன்பாய்த்
தூயமலர் பாத்துண்ணுந் துங்கவரை நன்னாடன்
தீயவனைக் கொண்டணைந்தான் சென்று. (317)

இவ்வகை நரகத்தில் நின்றும் விடுவித்துக்கொண்டு நிற்பத் துரியோதனனும் தன்மபுத்திரனை நமஸ்காரம் செய்து நிற்ப இருவரும் கூடிப் போந்து நரகராசனைக் காணவவனும் யாது சொன்னான்.

திருக்கண்ட கண்பழுது சேராதெனுஞ் சொற்
குருக்கள் குலபதிபாற் கண்டோம்-நெருக்கிச்
செருநரகம் செய்தானைத் தீவினைசெய் யாத
அருநரக வாங்குவித்தா னாங்கு. (318)

இவ்வகை அவன் செய்த குறைகளெல்லாம் காணாதே நன்மை செய்து தெய்வலோகத்தும் தன்னுடைய புகழ் நிறுத்தினான் தன்மபுத்திரன் என்று நரகராசனும் பிரியப்பட்டுச் சொல்லுவான்.

இலக்குமி சேர்ந்த விடமெல்லாம் ஸ்ரீயுண்டானாற்போல
தன்மபுத்திரன் நரகங் கண்டது துரியோதனனுக்.......
* * * *
.. --------
284-வது ஏடு இல்லை. * குருக்கள் குலபதி-கவுரவர் தலைவர்.

............(அடைந்ததி)ற் பாதி கொடுத்து நரகத்தில் நின்றுவிட்டுப் போந்து நின் திருவாசல்புறத்தே வந்து நின்றார்களென்று விண்ணப்பஞ் செய்யத் தன்மராசன் யாதருளிச் செய்தான்,

கங்கைக் குருநாடர் காவலா காவலன்றான்
அங்கு[ரை]த்தான் செய்த வதுகேட்டு-இங்கிவரை
அர்ச்சித்து நற்றீர்த்த மாட்டுமின்க ளென்றுரைத்தான்
பொய்ச்செத்த மில்லான் புரிந்து. (319)


என்பது தேவர்கள் எல்லாரும் ஆடுகின்ற தீர்த்தத்திலே பஞ்ச (கவ்விய) மாட்டுவித்து இருவரையும் கொண்டுவாருமென்று தன்மராசன் அருளிச் செய்யத் தேவர்கள் யாது
செய்தார்.

தக்க விருவரையுந் தாம்புனலிற் றான்கொண்டுபோய்
மிக்க பெருந்தீர்த்த மிகவாடி- ஒக்கத்தான்
மாருதத்தே ரேற்றித் தருமன்மருங் கணைந்தார்
பாரதத்தை யாதரித்தார் பண்டு. (320)

இருவரையும் பஞ்சதீர்த்த மாட்டுவித்துத் தேரிலேற்றிக் கொண்டு தேவர்களும் இருடிகளும் சூழ்ந்துகொண்டு வந்து தன்மராசனுக்குக் காட்ட இருவரும் தன்மராசனை அடி வணங்கி நிற்பத் தன்மராசனும் பெருக்கச் சந்தோஷி[க்க] தன்மபுத்திரனைக் கருவிழியால் பெரிதும்நோக்கத் தேவர்களையும் இருடிகளையும் நோக்கி யாது சொன்னான் தன்மராசன்.

பூவினொடு புனைந்த நார்போலப் புற்றரவம்
மேவியிடு மாணிக்க மேபோல-மேவிக்
கருமமது காந்தாரி காதலற்காய்த் தேவர்
தருமன் நரகுகண்டான் றான். (321)

அன்றியும்,

பாலோ டளாயநீர் பாலானது போலச்
சாலமிகு தன்மன் றன்னருளால்-ஞாலநிகழ்
காந்தாரி காதலற்கே காரணமாய் நிகழ்நரகம்
போந்தேற லாய்த்தே புரிந்து. (322)

இவ்வகை தேவர்களும் இருடிகளும் கேட்பத் தன்ம புத்திரனுக்குக் கருணை செய்து, இனிமை சொல்லி தெய்வலோ
-----------
* போய் மூ. பாடம்.

*கததுக்குந் தன் புகழ நிறுத்தினான் என்று பிரியமெய்தித் தேவர்களை நோக்கி இவனுக்கு இராசவிருடியென்று அபிஷேகஞ் செய்வீராமின் என்று தன்மராசன் பணிப்பத் தேவர்களும் இருடிகளும் சங்கு பேரிகை கடல்போல முழங்க யாது செய்தாரோவெனில்,

சென்றாடு தீர்த்தமது செல்லப் பணிக்குமவர்
முன்னாள்வந் தாட்ட முயன்றதுபோல்-நன்றா
மிகல் வானவர்கள் இராச விருடியே. (323)
* * * *

எல்லாருந் தான் காட்டுஞ் சொர்கத்தில் எல்லாரும் வணங்க இனிதிருமின் மன்னவனே யென்னெ(ன்றான்)ஈங்கு என்பது, உன் மித்துருவாம் தவத்தாரை எல்லாம் உனக்காகத் தந்தோ யானொருவன் செய்த நன்மை உன் சுற்றத்தார்க் கெல்லாம் சுவாக்கமெய்தலானது இவர்களெல்லாம் (பூலோகத்தவர்கள்) பணிகேட்ப இந்த லோகத்தே இருப்பாயாகெனயாது சொன்னான்.

மெய்யே யானவைவேண்டேன் விரும்பேன் சுவர்க்கங்கள்
பொய்யெல்லாம்...........புறம்பே-கையால்
சிலைஎடுத்தான் தென்னிலங்கை செற்றான்புள் ளூர்ந்தான்
மலை எடுத்தான். (324)

* * * *
ஆதிமுதல்வன் னருமறையோ னான்முகத்தோன்
வேதியன் றன்முகப்பே மேவினார்-கோதில்லா
...........யும் வளநாடர் கோமானோ டெல்லை
வாழ்.............னோர் இசைந்து. (325)

-------
288-வது ஏடு இல்லை.
290-வது ஏடு இல்லை. தன்னைமதித்தூ என்பது மூ. பா. அன்று.


இவ்வகை இவர்களெல்லாம் (தன்மராச)னைக் கொண்டுபோய்ப் பிரமலோகம்புக்கு பிரமாவுக்குக் காட்டுமளவில் பிரமாயெ(வ்வாறு கூறினா)ரோ எனில்,

கற்றைச் சடைக் கவரிக் காரிகையார் தாமிரட்டச்
சுற்றெங்கும் வானவர்கள் தாம்சூழ-வுற்றொளிரும்
செம்பொன் மணிப்பீடத் தேவியரோ டங்கிருந்தான்
அம்பொன்மி னான்மு[க*வனாங்கு]. (326)
-----
* சேர்க்கப்பெற்றது.

இவ்வகை தேவர்குழாஞ் சூழ இருடிகணங்கள் தோத்திரம் பண்ணத் தெய்வ கன்னியர் (வெண்குடை) கவிப்ப பொற்சிங்காதனத்தின் மிசை இருந்த பிரமாவைத் தேவர்களும் நமஸ்கரித்து, *தன்மராசனுக்குக் காட்ட தன்மபுத்திரனும் தண்டம்பண்ணி நமஸ்காரம் செய்து நிற்ப பிரமாவும் பெருக்க சந்தோஷித்துத் தன்மபுத்திரனை நோக்கி யாதருளிச் செய்தாரோவெனில்,

வேண்டுமரு ளெய்தலும் விண்ணொடுமண் ணாண்ட
ஆண்டகையா[ய்] இங்கே யமர்ந்திருநீ-தூண்ட
வரால் பிழைத்துச் சோலைவயலுழக்கும் நன்னாடா
தராதலத்தார் கோவே தரித்து. (327)

என்பது மனுஷனாயிருந்து நீ தெய்வலோகத்துக்குள் சரீரத்தோடே வந்து சுவர்க்கலோக மெய்தினாய். எம் ராஜ்யமுங் கண்டாய். அதுவுமன்றி மகாதானம் பண்ணினாரும் இவ்வுலகம் காணமாட்டார். நீ செய்த தன்ம தானங்களாலும் தவசினாலும், என்னையும் இவ்வுலகத்தையும் காணப்பெற்றாய். நீயும் புண்ணியகிருதன் கண்டாய். நீ இவ்வுலகத்தே தேவர்கள் எல்லாம் பணிகேட்ப வீற்றிருப்பாயா கென்று பிரமா அருளிச் செய்யக்கேட்டுத் தன்மபுத்திரன் யாது விண்ணப்பஞ் செய்தானோ எனில்,


மண்ணுலகும் விண்ணுலகுந் தானாகி மற்றுமெல்லா
மெண்ணுலவா தென் னுள்ளத் தேயிருந்த-கண்ணன்றன்
நற்பாதந் தானடைந்தால் நான்முகனே உன்னுடைய
பொற்பாதங் காண்பரிதோ புக்கு. (328)

இவ்வகை நாராயணசாமி பிரசாதமே எனக்குக் காணவொண்ணா தனவுமுண்டோ-வென்று நமஸ்கரித்து நிற்ப பிரமாவும் அப்போது கருணைஎய்தித் தேவர்களை நோக்கி யாதருளிச் செய்தான். நீங்கள் எல்லாரும் கூடித் தன்மபுத்திரனுக்கு பிரமரிஷியென்று அபிஷேகம் செய்வீராமின் எனறும் இன்னும் யாதருளிச் செய்தார் பிரமா.

வேத விதிகடந்த வண்ணத்தால் வேல்விந்தை
பாதிமறை யிருடியாக வென்று-ஓதியநூல்
மாதவத்தீ ரெல்லாம் வகுத்துரைமி னென்றுரைத்தார்
போதகத்தில் வீற்றிருந்தார் பூண்டு. (329)

இவ்வகை பிரமா அருளிச் செய்ய பிருமா இருடிகளும் தெய்வ இருடிகளும் கூடி பிரும இருடி என்று உபதேசமுங் கொடுத்துக்கொண்டு சென்ற பிரமாவுக்குக் காட்ட பிருமா
யாதருளிச் செய்தார்

வானவருந் தானவரும் வந்துபணி கேட்பக்
கோனவனா விவ்வுலகங் கொண்டருளீர்-ஏனல்
தருமணிகோட் டாற்கிளைக்கு[ம்]* மண்புறவில்நாடா
தருமா வெனவுரைத்தார் தான். (330)

எல்லாரு மேத்தி இறைஞ்சியிடுஞ் சேவடிகள்
அல்லால் பலகருத் தென்னாதலால்-நல்லானை
ஞாலமது வுண்டுமிழ்ந்த நாயகனை யல்லாதொன்
றாலது வேண்டே னரசு. (331)

என்பது, வேதியனே, விண்ணவர் பெருமானே, வெண்டாமரை அகத்தானே, பொன்மேனியானே, நான்முகனே, நாமடந்தை கேள்வனே, நாதா நாதனே, ஆதிபிரமனே,யானே எவ்வுலகமும் வேண்டேன். ஸ்ரீவைகுண்டநாதன் மலரடிகளே எனக்கு சுவர்க்கலோகமென்று நின்னுடைய நற்றாதை சேவடிகள் சூடுதற்குப் பெரிதுந் தாகமுடையேன், கடுகிற் பணித்தருளி விடைதருவாயாகென பிருமாவும் இதற்
குடன்பட்டுத் தேவர்களை நோக்கி ஸ்ரீவைகுண்டம்........
* * * *

-----
* தன்புறவில் நாடா என்றிருக்கலாம். 295-வது ஏடு இல்லை.

.......அத்தன்மபுத்திரனுக்கு நாராயணசாமியைக் காட்டு மின்களென்ன மற்றவனை விடைகொண்டு மாருதத் தேரேற்றிக் கொண்டுபோய் ஸ்ரீ வைகுண்டம் சென்றெய்த யாது நிகழ்ந் ததோ எனில்,

மாடங்கள் தோறும் மணிவிளக்கும் பாலிகையும்
ஆடற் பதாதைகளு மங்கங்கே-நீடிய......
பேரிகையுஞ் சங்கும் பெருவிழாத்தான் வையத்தார்
மூரிநெடுந் தேர்வேந்தன் முன். (332)

இவ்வண்ணமே அலங்கரித்துத் தெய்வமாதர்கள் பல்லாண்டிசைப்ப மணிநெடுந்தோ மேல்கொண்டு பவளச் சாமரை அருகிரட்ட வெள்ளி வெண்குடை மேல்நிழற்ற,
ஒற்றைச் சங்கு முன்னூத, வைஷ்ணவரெல்லாம் தன்மபுத்திரனை எதிர்கொண்டு சென்றார். அப்பொழுது நாராயணசாமியும் தன்மபுத்திரன் வரவு பார்த்து ஸ்ரீ கருடவாகனன்மேல் கொண்டு பிரமத்தினாலே பார்த்துநின்ற நாராயணசாமியைத் தன்மபுத்திரன் யாங்கனம் கண்டானோ எனில்,


நீலத்தடவரை மேல் நீண்டிருந்த கொற்றவரும்
கோலச்செந் தாமரைப்பூங் கொள்கையெலாம்-ஞாலக்
+கங்கையகல காண்மார்பங் கருதுந் திருநாபிச்
*செவ்வாயு மாங்கே நிகழ்ந்து. (333)
------
* இவ்வடிகளிரண்டும் பிரதியிலிருந்தபடியே.

என்பது, செந்தாமரைப் பூவே போன்ற மார்புக்கும் ஆலிலையே போலப் புலம்பிடாநின்றன. புருஷோத்தமனை அணுகச் செல்லா நின்றபொழுது புருஷோத்தமனைத் தேவர்கள் கண்டு யாது சொன்னாரோ எனில்,

ஈசனுக்கும் எங்களுக்கும் எல்லோர்க்கும் ஏற்றிநின்ற
வாசவனுங் காணாத மாயவனை-நேசத்தால்
நல்லதரு மன்பொருட்டா லேநற் றவத்தா
லெல்லோருங் காண்பதுவே இன்று. (334)

என்பது, ஈசுரன் முதலாகிய இந்திராதி தேவர்களாலும் காண்பதற்கரிய ஸ்ரீபாதங்களைத் தன்மபுத்திரன் பொருட்டாக அடியோங்கள் திருவடி தொழுதோம். இவன் மகாவிந்தம் போந்தது நம்முடைய புண்ணியமாயிற்றோ என்று தேவர்கள் எல்லாம் பெருக்கச் சந்தோஷித்து விடை என்று நமஸ்கரித்துப்போயினர் என்றவாறு.

இப்பால் ஸ்ரீ பாதத்தின்கீழே அஞ்சலிசெய்து நின்ற தன்மபுத்திரனை நோக்கி எல்லாப் பிரியங்களும் அருளிச் செய்து வரவணைத்துத் தடவி இரண்டு ஸ்ரீ பாதங்களையும் இவன் தலைமேல் சூட்டித் தன்னடியார் எல்லாரையும் (வரவழைத்துக் கூட்)டி மற்றிவனைப் பூசிக்கப்பண்ணி நின்னை என்னோடும் இருந்து போமென்று நினைந்தருளத் தன்மபுத்திரனை நோக்கி யாதருளிச் செய்தார் நாராயணசாமி,

எனக்கினியா ரெல்லாரு மியைந்ததற்குத்[தக்க]
மனக்கினிய வான்சுவர்க்கந் தன்னை-வனத்தினிய
தேனிருந் தங்குண்ணும் செழுவண் டரற்றற்குத்
தானிசைந்து காட்டினான் றான். (335)

என்பது. இவர்கள் கண்டாய நமக்கானதான பக்தர்கள் இவர்கள் பல்லாண்டிசைப்ப முத்து, மாணிக்க, வயிடூரியங்களால் அழுத்தப்பெற்ற....

...மாட கூடப் பிரசாதங்களால் குறைவற இருந்த தன்னடியாரைத் தன்மபுத்திரனுக்குக் காட்டி வாரா நிற்பச் சிலா யாங்கனமிருந்தாரோ எனில்,

வெண்சாமரை இரட்ட மெல்லமளி மேலிருந்து
பண்சார் மொழியார் பலவிருப்பக் கண்டார்கள்
போற்றிசைப்ப வாழ்வளித்த புண்ணியமால் தன்மனுக்கு
நாற்றிசையுங் காட்டினா னாங்கு. (336)

இவ்வகை ஸ்ரீ வைகுண்டத்தை நாலு வாசலுங் காட்டி நின்றபொழுது யாது கண்டாரோ எனில், பெரிய கோபுர வாசலாய ஆகாசத்தை அளவிடா நின்றது மாணிக்கமே தூணாக நின்றது. முத்தாலும் வயிடூரியத்தாலும் கோமேதகத்தாலும் மேவப்பெற்ற கோயில்களையுடையது நூறாயிரம் தெய்வ ஸ்திரீகள் அடிவருடத் தும்புரு நாரதா வீணை சேவிப்பத் தெய்வ கன்னியர் கவரி பணி மாறவும் அனேகங் கோடி நவமணிகளால் அழுத்தப்பட்ட சிங்காதனத்தின் மேல், இந்த மகாபெலியைக் காட்டியவன* கோயில் வாசல் குறுகிடும் அளவில் மகாபெலியைக்கண்டு யாது செய்வான்.
------
*தக்க என்பது சேர்க்கை. 299, 300 இவ்விரண்டு ஏடுகளில்லை.

மண்ணிரந்து மாயவற்கு மண்முழுதுந் தானீந்த
அண்ணலிருந்தங் கதி பதிகே - மண்ணளந்து
கொண்டல்மால் செல்லக் குலைந்தெழுந்து மப்பொழுது
கண்டு பணிந்திட்டான் கலந்து. (337)

எ.து. மகாபலியை புருஷோத்தமன் தன்மபுத்திரனுக்குக் காட்டுவது பொருட்டாகப் புருஷோத்தமன் ஸ்ரீ நாராயணசுவாமி எழுந்தருளுமளவில் மகாபலி அஞ்சலியத்தனாய
எதிர்வந்து யாது விண்ணப்பஞ் செய்தான்.

பூவைப்பூ வண்ணன் புருஷோத் தமன்பாதம்
சேவித்து மாபலிதான் செப்புவான்-கோவெந்[கோவர்த்]
தனமெடுத்துக் கோநிரையைக் காத்தாய் இங்கேனோ
மனமெடுத்து வந்தருளு மாறு. (338)

என்பது, தம்பிரானே அடியேன் கொட்டில் வாசலிலே ஸ்ரீ நாராயணசாமி எது காரியம் இன்னதென்றறியாதே அடியேனுக்குச் சாலப் பயமாய் இரா நின்றது அருளிச் செய்வாய் ஆகென்று அடிபணிந்து, மகாபலி (போற)றி செய்து நிற்பத் தன்மபுத்திரனைக் காட்டி நாராயணசாமி யாதருளிச் செய்தாரோ எனில்,

இவன்கண்டாய் கங்கை வளநாடான் தரும[ன்]
இவன்கண்டாய் பஞ்சவரில் மூததா-னிவன்கண்டாய்
பொய்யுரையா நாவெனக்குப் பூபதியாய்
மெய்யுரையால் மேவியதோர் வேந்து. (339)

பெருந்தேவனார் பாரதம் முற்றும்.




பெருந்தேவனார் பாரதம்.
பாட்டின் முதற்குறிப்பு


பாட்டு எண் - பாட்டின் முதற்குறிப்பு
207 அக்கரமெல்லா
282 அங்கவள........வாந்த
33 அங்குட்டமான
306 அடியார்வந்தாலி
211 அண்ணலடியா
165 அத்தியூர் வாழ் 64
232 அபிமன முதலாய
149 (அம்)மலைகள்
அரசுதுறந்தாரணிய
112 அரசுதுறந்தாரணியம்
114 அரவமுருமாறி
70 அரவுயர்த்தோன்
307 அரவுயர்த்தோன் தன்னை
265 அரவுயர்த்தோன் வஞ்சனைக்கு
184 அராவந்
196 அரிசினமுங்
132 அருணனவ
31 அருந்தவத்தோன்
163 அல்லும் பகலு
143 அறுவரும்
203 அனுமன்றன்
225 ஆதிமுதல்வன்
12 ஆயாபுகழ்த்
104 ஆர்மிகவெடுத்
218 ஆரோவழியறியீர்
49 ஆழிநீர்வண்ண
225 ஆற்றல் மிகப்பெரிய
223 ஆற்றற்கரிய
49 இடும்பனையும்
40 இதுவெனக்குக்
267 இத்தரை எல்லா
25 இந்த இவள்
55 இந்தமறையோன்
214 இந்த வரைமேல்
28 இப்படி எல்லாம்
219 இலங்கை மலங்க
339 இவன் கண்டாய்
307 இவன் காணிடி முரசு
35 இம்மானை
334 ஈசனுக்கும் எங்களுக்கும்
18 ஈரொன்பதின்
204 உமக்கு விரதமிது
193 உயர்ந்த தடவரை
178 உருக் கரந்து
176 உரு.......வனிங்
158 உள்ளவா
240 உனக்கினைய
302 ஊனுடம்பு நீங்கி
148 எங்கோன்க
111 எஞ்சாதெதிர
245 எட்டெழுத்து
108 எண்ணான்கு
எண்ணுங்கால்
254 எந்தோழ
136 எந்நாட்டு
93 எம்பெருமா
291 எல்லாக் கொலை
331 எல்லாரு மேத்தி
292 எல்லையதைக் படப்ப
29 எழு கடலினுட் பெய
4 என்மேலிருந்த
312 என்ன பிழையி
56 என்னாலறியப்
153 என்னுடனே
283 என்னுருவம்தான்
36 என்னை நீ யஞ்சா
335 என்கினியா
21 எனக்கு மெனக்
137 ஏந்திழையி
91 ஏழ பொழிலு
80 ஏறாகி எவ்வுலகு
315 ஏற்றின கண
217 ஐந்து மலர்
45 ஐயாரு நாளங்
23 ஐயிரண்டு
121 ஐவீருங் காக்கின்ற
96 ஐவீருஞ் சேரு
42 ஐவோரு முந்தன்
132 ஒட்டி வந்த
177 ஒல்லை நீ
239 ஒன்னலர்கள்

319 கங்கைக் குரு
50 கங்கை மகன்
175 கடலடைத்த
7 கடல........ந்தரடி
105 கணவன் (முதலை வருமே)
235 கண்ணனே
194 கண்ணன்றன்
182 கண்ணீரொழுகும்
107 கரி முகவன்
65 கருடனவன்
16 கருமம் நினைந்து
9 கருமம் பெரிதுண்டு
3 கருமம் பிடர
128 கரும்புங் கதலியுங்
120 கரு வேந்தி
106 கலி புகுந்த
221 கலி புகுந்து
168 ...கழல பணிந்தாள்.
316 கழுத்தளவு
326 கற்றைச் சடைக்
243 கனல் விழித்துச்
44 காணடா வனத்தை
48 கார்மேகமெங்கும்
210 கார்மேக வண்ணனே
123 கார்மேக வண்ணன்
249 கார்வரை மேல்
258 காற்றோ மலையோ
84 குந்தியு மாதவனுங்
38 குருக்களில்
187 குருக்களிளங்
116 குருக்கள் குடிப் பிறந்தார்
88 குருக்கள் குடி முதலாங்
255 குருக்கள் குல பதியே
295 குவளை மலர்
146 குன்றகத்தின்
234 குன்றத்தின்
59 கையால் நடந்து
95 கொல்லை வர*கு
22 கொற்றமுரசு
131 கோகுலங்கள்
82 கோத்திரரைக்
43 கோவர்த்தனமெடுத்து
99 சங்கரன்றன்
169 சங்கினொடு
11 (ஸ்ரீ) சங்குவாய்
264 சங்குவீரமு
310 சண்பகத்தின்
227 சந்தனமும்
126 சாகரங்க -
242 சாரவருவ்ன
285 சிரங்கனாயவந்த
293 சிரங்கநாயதான
209 சிவந்ததுகி
256 சிவனுடைய
222 சினவேங்கை
101 சீராருந்
289 சீலமனிதர்
297 சுற்றுமதி
140 செங்கோல்
260 செங்கோல்திசை
75 செந்தாமரை
314 செம்புருக்கி
72 செம்பொன்
200 செய்தற்கரிய
273 செய்ய....றுமானிடவர்
323 சென்றாடு
298 சேமத்துத்
277 சோந்து கலவிக்
274 சேலனுங்கட்
320 தக்கவிருவரையுந்
89 தங்கள் நினை
119 தங்கள் பணி
52 தங்கோன மணியிற்
15 தடத்தருகே
113 தருமந்தானிறகத்
13 தருமனும் தம்பியரும்
122 தருமனமுக
286 தலையும் புழுத்தென்
77 தனமனைத்தான
250 தாங்கரிய
201 தாழ்வரைகள்
317 தான செய்த
17 திங்களவே
313 திண்ணந்தடிகளால்
318 திருககண்ட
202 திருப்பாற
81 திருமுகங்கள்
296 தெய்வக் கடகளி
100 தெய்வமிதனை
152 தெய்வமுனி
180 தெய்வறகுந்
279 தேடிவந்தேன
300 தேர்*வேந்து
261 தேவர்.....பணிகேட்
150 தேவாசுரன்
109 த.தென்கொலோவிண்ண
65 நரகுலமீது
216 நரசிங்கமாகி
215 நல்லானை
189 நன்மையுடையாரை
309 நன்மையும்
92 நன்றியது பயக்கு
271 நாமேதான் சென்றங்கே
238 நாயிறிரண்டாதி
130 நாரத்தை புன்னை
124 நிருபதிகள்
275 நீயாருன தம்பியார்
333 நீலத்தடவரை
147 நீளவரையால்
266 நூற்றுவாக
90 நெய்தற்றடமும்
2 நெய்பெய்தழல்
125 நெறியினொடு
118 நோந்த சிலையழியா
186 பஞ்சவாக
138 பஞ்சவர் நீராகில்
270 பஞ்சிதழி
162 படாசடைகள்
64 (படி) முழுதும்
290 படுகுழிகள்
57 பண்டுனவழி
30 பண்டைமுனி

192 பாஞ்சாலி
276 பாண்டவரில்
110 பாண்டவருஞ்
216 பாதங்கள்
115 பாம்பைக்
206 ...பாயக்கடிகிடங்..
19 பாரதப் போர் பயிந்று
190 பாரதப்போர் வெல்ல
183 பாரேழுமுண்டு
288 பாரை ஒளித்துரை
228 பார்த்தனுக்கு
253 பார்வேநர்
94 பாலைநிலமும்
322 பாலோடளாயநீர்
220 பாற்கடறகே
244 பிடிக்க நினைந்து
166 பிறை கவ்வி
8 புகுந்தாலித்தங்
129 புண்டரீகம்*
241 புனபுனலக
259 பூந்தாவும்
78 பூபதியைப்
303 பூப்பறிகள்
79 பூவலயமாண்டு
321 பூவிணொடு
338 பூவைப்பூவண்ணன்
278 பொங்குபுனலாற்
188 பொங்குமுகில்கள்
157 பொய்கையொரு

280 பொருகலையே
61 பொருள் சுமந்த
141 போதுமினி
179 *பபிறப்பு முற்றோ
231 மஞ்சடுத்த
58 மஞ்சாடு சோலை
226 மஞ்சுதவழ
51 மணிவண்ணற்குத்
156 மணிவாரிப்
337 மண்ணிரந்து
135 மண்ணிற பிறந்த
174 மண்ணுண்டு
197 மண்ணுலகில் உளவீ
230 மண்ணுலகில் வாழ
328 மண்ணுலகும்
294 மணமுழுதுந்
191 மந்தரமே
208 மனமறுகி
54 மன்னா கடுகி
133 மன்னவாமாமுனியே
311 மன்னவன்பொற்
86 மன்னரெழுந்ததருள மாநகரத்
85 மன்னரெழுந்ததருள மாநகரியோ
257 மன்னாவுனக்
73 மன்னுங் குருநாடன்
304 மன்னுமடந்
103 மறப்பதனறி
14 மறுதிறததுவான
142 மறறின மலர்ப்

272 மாக்குன்றின்
332 மாடங்கள் தோறும்
11 மானியமாவலி
27 மாதவத்தோர்
127 மாதவனை கேசவனை
185 மாதவனே கோவிந்தா
74 மாதவன்றன்
145 மாமுனிவன்
236 மாம்பொழிலின்
10 மாயனழைத்தான்
39 மாயனிருந்த
69 மாயன் பணித்த
155 மாயூர பர்வத
159 மாரி பெருக
63 மாலவனுந்
172 மாலை நினைந்
5 மாற்றரசா
268 மாற்றலர்
251 மானக்கதிர்
161 மானத்தை
269 மானிடவர்
284 மின்னிவரும
229 முன்னைவினை
151 மூங்கில்
26 மெய்கள் விதிர்
324 மெய்யேயானவை
213 மேகக்குழாள
263 மேகங்களோ
114 மேகநாதன்

248 மேகம் நிழலெடுப்ப
134 மேகம் பொழிந்த
98 மேற்கடலிற்
76 மைந்தரிவா
102 வஞ்சமுலைப்
195 வண்டுகளும்
171 வண்டுசெறி
305 வண்டுமுரலும்
47 வண்டுவரைதன்னி
53 வண்டுவரை மூழை
252 வம்பவிழ்தார்
170 வராகமொடு
62 வலிய கொடுக்கினும்
60 வழக்கைப்
154 வழியிற் சில
287 வழுவு மொழுகும்
173 வாங்கு கடற்
212 வாழைமுழுமட
281 வாளொருகை
66 வாள விசயன
6 (வானம்) மழைபொழிய
198 வானவருந் தானவருமல்லயாரு
330 வானவருந் தானவரும் வந்து
301 வானவர்கள்
68 வானவர் தம்
164 வானவற்கும்
160 வானின்ற
233 விசயனுந்
47 விண்ணவறகாய்த்
181 விண்ணுமிக
1 விதியாறதன்மேல்
34 வில்வளைய வாளி
37 வில்வேடன்
24 விளையாடு போதின
139 வீமனிவன
20 வீமன விசய
297 வீமா விசயா
199 வெஞ்சமத்தில
336 வெண்சாமரை
247 வெள்ளைச் சுரிசங்
97 வெள்ளை நிறச்
வையகத்து வாழ்வா
237 வையகத்து வெண்கதிர்
205 வையமுழு.....
83 ..ழிகளெல்லா மிகுத்திடி
167 ....ளகருவரை
--------------


This file was last updated on 30 march 2015.
.