Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

குழந்தை - டொனால்டு பார்தெல்மே

தமிழில்: சி. மோகன்


குழந்தை செய்யத் தொடங்கிய முதல் தவறு, தன் புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிக்க ஆரம்பித்ததுதான். அதனால், அவள் புத்தகத்திலிருந்து கிழிக்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும், பக்கத்திற்கு நான்கு மணி நேரமென அவள் தன் அறையில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் தனியாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு விதி செய்தோம். அவள் ஒரு நாளில் ஒரு பக்கம் கிழித்த ஆரம்ப கட்டத்தில் இவ்விதி - மூடிய அறையில் இருந்து எழும் அழுகையும் கதறலும் பதற்றம் தந்த போதிலும் - நன்றாகவே செயல்பட்டது. உன் தவறுக்கான தண்டனையை அல்லது தண்டனையின் ஒரு பகுதியையேனும் ஏற்றுக்கொள்ளவே வேண்டுமென நாங்கள் நியாயப்படுத்தினோம். ஆனால், பிறகு அவளின் பிடிமானம் வளர்சியடைந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களைக் கிழித்தெறிந்தாள். அதன் காரணமாக, மூடிய அறையில் தனியாக அவள் எட்டு மணி நேரம் இருக்க வேண்டி ஆயிற்று. அதற்கேற்ப தொல்லை எல்லோருக்கும் இரண்டு மடங்காகியது. எனினும், அவள் அவ்வாறு செய்வதை நிறுத்துவதாக இல்லை. அதன் பிறகு, நாட்கள் செல்லச் செல்ல, அவள் மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கிழிக்கும் நாட்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதன் காரணமாக, தொடர்ச்சியாக பதினாறு மணிநேரம் வரை அவள் தன் அறையில் தனியாக இருக்கும்படி ஆயிற்று. வேளா வேளைக்கு உணவு கொடுப்பதற்கு இது இடையூறாக இருந்ததால் என் மனைவி கவலைப்பட்டாள். ஆனால் நாம் ஒரு விதியை உருவாக்கினால் அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டுமெனவும் பாரபட்சமோ தளர்வோ காட்டாமல் இருக்கவேண்டுமெனவும் நான் நினைத்தேன். இல்லையெனில் அவர்கள் தவறான கருத்து கொண்டு விடுவார்கள். அந்தச் சமயத்தில் அவள் பதினான்கு அல்லது பதினைந்து மாதங்கள் நிரம்பியவளாக இருந்தாள். அவ்வப்போது ஒரு மணி நேரம் போலக் கதறிய பின்பு அவள் தூங்கிவிடுவதென்னவோ உண்மைதான். அது கருணையின்பாற்பட்டது. அவள் அறை மிகவும் அழகானது. மரத்தினாலான அழகிய ஆடுகுதிரையும், நூறு பொம்மைகளும், பொதிக்கப்பட்ட மிருகங்களும் நிறைந்தது.

நேரத்தை பிரயோசனமாகப் பயன்படுத்தினால் புதிர் விளையாட்டு போன்று பல்வேறு காரியங்களை அந்த அறையில் செய்யலாம். துரதிருஷ்டவசமாக, நாங்கள் கதவைத் திறக்கும் சில சமயங்களில் மேலும் சில புத்தகங்களிலிருந்து மேலும் சில பக்கங்களை, அவள் உள்ளே இருக்கும்போது கிழித்திருப்பதை நாங்கள் கண்டோம். இந்தப் பக்கங்களையும் உரிய வகையில் கணக்கில் சேர்த்துக் கொண்டாக வேண்டும்.

குழந்தையின் பெயர் பார்ன் டான்சின். நாங்கள் எங்களுடையதிலிருந்து குழந்தைக்கு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல ஒயின் கொஞ்சம் கொடுத்தோம். மேலும் அவளுடன் சிரத்தையோடு பேசிப் பார்த்தோம். ஆனால், அது எவ்வித பயனும் அளிக்கவில்லை.

உண்மையான கெட்டிக்காரத்தனத்தை அவள் பெற்று விட்டாள் என்பதை நான் சொல்லியாக வேண்டும். வீட்டில் அவள் விளையாடிக்கொண்டிருக்கும்போது - தன் அறையிலிருந்து அவள் வெளி வந்திருக்கக்கூடிய அந்த அபூர்வமான தருணங்களில் - நீங்கள் அவளுக்கருகில் சென்றால், அங்கு அவளுக்கு முன் ஒரு புத்தகம் திறந்தபடி இருக்கும். நீங்கள் அதைப் பரிசோதித்தால் அது பார்ப்பதற்கு மிகச் சரியாகவே இருக்கும். அதன்பிறகு நீங்கள் உன்னிப்பாகக் பார்த்தால் சிறு முனை கிழிக்கப்பட்ட ஒரு பக்கத்தைக் காண்பீர்கள். இது, பட்டும் படாமலுமான சாதாரண பார்வையில் மிகச் சுலபமாகத் தெரிய வராது. ஆனால் அவள் என்ன செய்திருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். அவள் அந்தச் சிறு முனையைக் கிழித்து அப்படியே விழுங்கியிருப்பாள். அதனால், அவற்றையும் அவள் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் சேர்த்துக் கொண்டாயிற்று. உங்கள் திட்டத்தைத் தவிடு-பொடியாக்குவதற்கான தடைகளை ஏற்படுத்துவதற்காக எந்த ஒரு எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். நாம் குழந்தையிடம் அதிகக் கண்டிப்போடு நடந்துகொள்வதால்தான் அவள் மிகவும் மெலிந்து கொண்டே போகிறாள் என்றாள் என் மனைவி. ஆனால் குழந்தை இஜவ்வுலகில் இ ஜன்னும் நீண்ட காலத்துக்கு வாழவிருக்கிறாள்; இந்த வாழ்க்கையை, ஏராளமான விதிகள் நிறைந்த இவ்வுலகில், அவள் பிறருடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும்; விதிமுறைகளுக்கேற்ப இயங்க உன்னால் கற்றுக்கொள்ள இ ஜயலாது போனால் நீ ஜஇவ்வுலகில் வெறுக்கப்பட்டு ஒரு குணவிலியென தனித்து விடப் படுவாய். சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவாய் என நான் குறிப்பிட்டேன். தன் அறையில் தொடர்ச்சியாக எண்பத்தெட்டு மணிநேரம் தனித்திருக்கச் செய்ததுதான் இருந்ததற்குள் மிக நீண்ட காலம். கதவின் கொக்கியை இரும்புக் கொண்டி கொண்டு என் மனைவி நீக்கித் திறந்தபோது அது முடிவுக்கு வந்தது. அப்போதும் அவள் இன்னும் பனிரெண்டு மணி நேரம் உள்ளிருந்திருக்க எங்களுக்குக் கடமைப்பட்டிருந்தாள். ஏனெனில், அவள் அப்போது இஜருபத்தைந்து பக்கங்களுக்காக உள்ளிருந்தாள். நான் மீண்டும் கொக்கியில் கதவை இணைத்தேன். மேலும், ஒரு பெரிய பூட்டு போட்டுப் பூட்டினேன். அதை ஒரு காந்தத் தகடு கொண்ட மட்டுமே ஒருவரால் திறக்க முடியும். அந்தக் காந்தத் தடை என்னிடமே வைத்துக்கொண்டேன்.

எனினும், எவ்வித முன்னேற்றமுமில்லை. குழந்தை, தன் அறையிலிருந்து, ஜருட்பொந்திலிருந்து வெளிவரும் ஒரு வெளவாலைப் போல் வருவாள். அருகிலிருக்கும் 'குட்நைட் மூன்' அல்லது வேறு ஏதோ ஒரு புத்தகத்தை நோக்கி விரைவாள். தன் கையால் முரட்டுத்தனமாக அதன் பக்கங்களைக் கிழிக்கத் தொடங்குவாள். பத்து நொடிகளில் 'குட்நைட் மூன்' இன் முப்பத்து நான்கு பக்கங்கள் தரையில் கிடக்கும். அவற்றோடு மேலட்டைகளும். நான் சற்றே கவலைப்படத் தொடங்கினேன். உரிய மணியளவை நான் அவள் பற்றுக் கணக்கில் சேர்த்தபோது, அதன் பிறகு 1992* வரை அவள் தன் அறையை விட்டு வெளிவரப் போவதில்லை என்பதை அறிய முடிந்தது. மேலும், அவள் மிகவும் வெளிறிக் காணப்பட்டாள். வாரக்கணக்கில் அவள் பூங்காவுக்குச் சென்றிருக்கவில்லை. ஏறத்தாழ ஒரு தார்மீகச் சிக்கல் எங்களுக்கு ஏற்பட்டு விட்டிருந்தது.

புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிப்பது சரியானதே எனவும், அதைவிட, முன்னர் அவள் புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருந்ததும் சரியானதே எனவும் அறிவித்து இந்தப் பிரச்சனையை நான் தீர்த்தேன். பெற்றோராய் ஜஇருப்பதில் நிறைவளிக்கக் கூடிய விஷயங்களில் இஜதுவும் ஒன்று. ஏராளமான ஏற்பாடுகள் - ஒவ்வொன்றும் தங்கத்தைப் போல் சிறந்தது - உங்கள் கைவசமிருக்கின்றன. நானும் குழந்தையும் சந்தோஷமாக, தரையில் அருகருகே அமர்ந்து, புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்தோம். சிலசமயம் நாங்கள் தெருவிற்குச் சென்று காற்று விசைக் கண்ணாடித் தடுப்பானை - வெறுமனே கேளிக்கைக்காக - சேர்த்து நொறுக்கினோம்.

*******